பிளாக் மெயில் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கோடீஸ்வரர் அசோக்(ஸ்ரீகாந்த்) தன் மனைவி அர்ச்சனாவுடன் (பிந்து மாதவி)தன் மகள் அனு உடன் காரில் ஊட்டி செல்கிறார். அப்பொழுது எதிரே வந்த ரமேஷ் திலக், கார் மோதுவது போல வருவதைக் கண்டு தவிர்க்கிறார்.

அவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வாக்கு வாதத்தில் இறங்க , அப்போது காரில் இருந்த குழந்தை அணு, திடீரென மாயமாகி விடுகிறார் .

அந்த குழந்தை கடத்தப்பட்டதா? காணாமல் போய்விட்டதா? என்னவென்று தெரியாமல் அசோக்கும், அர்ச்சனாவும், வருந்துறார்கள் .

அதே சமயம் (மணி) என்கிற ஜி.வி பிரகாஷ் ,வேட்டை முத்து குமார், என்கிற சிதம்பரத்திடம், மெடிக்கல் ஷாப்புக்கு மருந்துகளை கொண்டு போய் கொடுக்கும் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

ஜி. வி .பிரகாஷின் காதலியாக தேஜஸ்வினி ,ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

காதலியை பார்க்க ஜி.வி .பிரகாஷ் செல்லும் பொழுது இவர் வேன் காணாமல் போகிறது.

அதில் விலை உயர்ந்த போதை மருந்து இருக்கிறது. அதனால் சிதம்பரம் வெகுண்டு எழுந்து அந்த போதை மருந்து கிடைக்கும் வரை உன் காதலி, என் கட்டுப்பாட்டில் தான் இருப்பார் என்கிறார், ஜி. பி .பிரகாஷ் அந்த வேனை தேடி, தன் நண்பர் ரமேஷ் திலக் உடன் தேடுகிறார்கள்.

மற்றொருபுறம் (அருண் )என்கிற லிங்கா ,பிந்து மாதவியின் முன்னாள் காதலர், இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை காட்டி இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறாய். எனக்கு இரண்டு கோடி பணம் வேண்டும் என்கிறார். பிந்து மாதவி என்னால் முடியாது என்று சொல்ல, அவரை பிளாக்மெயில் செய்கிறார் .

சரி நான் குழந்தையை கடத்தி உன் கணவனிடம் பணம் வாங்கிக் கொள்கிறேன் எனகிறார்.

இப்படி அருண் குழந்தையை கடத்தினாரா?

ஜீவி பிரகாஷ் தனக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்பதற்கான குழந்தையை கடத்தினாரா? குழந்தை எங்கே? சென்றது என்பதுதான் மையக்கதை .

ஒரு குழந்தை கடத்தலை வைத்து இப்படி ஒரு சுவாரசியமான படத்தை கொடுக்க முடியுமா என்றால் அது இயக்குனர்

மு .மாறன் அவர்களால் முடியும் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

மு.மாறன். இவர் இயக்கிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்கள், செம விறு விறுப்பை தந்திருந்தன. அதேபோல, ‘பிளாக்மெயில்’ படமும் சமூக அவலங்களை தழுவிய திகில் கலந்த திரைக்கதை கொண்டதாக அமைந்துள்ளது.

இயக்குனரின் திறமை பல இடங்களில் பளிச்சிடுகிறது. அவரின் திரைக்கதை யுக்தி, சபாஷ் போட வைக்கிறது. ஏதோ ஒரு படம் எடுத்தோம் ரசிகர்களுக்கு கொடுத்தோம் என்று இல்லாமல் ,தன் உதவி இயக்குனர்களுடன் இணைந்து, மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு வியக்கத்தக்க படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் மு .மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த படம் முற்றிலும் க்ரைம் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. குழந்தை கடத்தல் கதையின் தொடர்ச்சியாக விறுவிறுப்பான படமாக உருவாகியுள்ளது.

செம த்ரில்லர் படம்: 2 மணி நேரத்தில் செம க்ரிப்பான ஒரு த்ரில்லர் பம் படத்தின் 10வது நிமிடத்தில் ஆரம்பிக்கும் டென்ஷன் படம் முடியும் வரை பரபரப்பாக ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் ரசிகர்களை சீட் எட்ஜுக்கு கொண்டு வரும் வகையில் இயக்குநர் பக்காவாக இயக்கியிருக்கிறார்.

பிளாக்மெயில்’ எனும் தலைப்பே படத்தின் கதையின் மையத்தைக் குறிக்கிறது தனியுரிமை மீறல், தாக்குதல், போன்றவற்றை சொல்லி இருக்கிறது.

ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத மூன்று பேர், ஒரு பிளாக்மெயில் எனும் சிலந்தி வலைக்குள், மாட்டிக் கொள்கிறார்கள் ஸ்ரீகாந்த், ஜி.வி. பிரகாஷ் ,பிந்து மாதவி, மூவரும் அந்த பிளாக்மெயில் செய்தவனை, தேடுகிறார்கள் யார் அவர்?. அந்த மூவரில் ஒருவரா, அல்லது வேறொரு நபரா? எதற்காககுழந்தை கடத்தப்பட்டார்.? போன்ற பல கேள்விகளுக்குச் சில திடீர், பகீர் திருப்பங்களோடு பதில் சொல்கிறது, படம்.

எல்லோருமே அவரவருக்குக் கொடுக்கபட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மற்ற கதாபாத்திரங்களோடு ஏதோவொரு `லிங்க்’ இருப்பதாக, ஏதோவொரு சூழலில் சந்திப்பதாகவே திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போது, கதையின் களம் கோவை என்றாலும் சென்னை ,வி.ஆர் மாலிலும் படமாக்கி இருக்கிறார்கள்.. ஆனாலும், விறுவிறுவென வேகமாய் நகரும் திரைக்கதையும் பதில் தெரியாத கேள்விகளும் நம்மைச் சீட்டோடு கட்டிப்போடுகின்றன.

நடிகர் & நடிகைகள்
ஜி.வி .பிரகாஷ் ,

வேன் டிரைவர் மணி என்ற கதாபாத்திரத்தில், அற்புதமாக நடித்திருக்கிறார். மெடிக்கல் ஷாப்புக்கு மருந்துகள் சப்ளை செய்யும் அந்த வேனுக்குள் சிதம்பரம் போதை பொருளை கடத்துகிறார்.

என்பதை அறியாத வெள்ளந்தியாக சிக்கலில் மாட்டும் கதாபாத்திரம்.

இதை அறிந்த ஒருவர் இந்த வேனை திருடி செல்கிறார். தன் காதலியை ,ஜீ .வி பார்க்கும் செல்லும் பொழுது அந்த வேன் காணாமல் போகிறது. இதனால் சிதம்பரம் ,ஜீ.வி.யின் காதலி ரேகாவை பிடித்து வைத்துக் கொள்ள கலங்கிப் போகிறார் .

இப்படி பலவிதமாக நடிப்பாற்றலை ஜி.வி பிரகாஷ் கொடுத்திருக்கிறார்

கதையின் நாயகனாக எல்லா த்ரில்லர் பட ஹீரோக்களைப்போல இவரும் இறுக்கமான முகத்துடனேயே வலம் வருகிறார். கோபம், குழப்பம், விரக்தி என எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் தேஜு அஸ்வினி. இவர் தனது இயல்பு மிக்க நடிப்பால் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்து வருகிறார்.

ஸ்ரீகாந்த், அசோக் என்ற கோடீஸ்வர கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தி ருக்கிறார்.

சிக்கலில் இருக்கும் மனைவியை மீட்கவும், காணாமல் போன குழந்தையை மீட்கவும் ,அவர் துடிப்பது சிறப்பு. ஸ்ரீகாந்துக்கு ஒரு சபாஷ் போடலாம்

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பிந்து மாதவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தாய் ,தன் குழந்தையை தொலைத்து விட்டு எப்படி தவிப்பாரோ? அந்த உணர்வையும் முன்னாள் காதலர்! தன்னை பிளாக்மெயில் செய்யும் பொழுது எப்படி துடிப்பாரோ? தன் கணவன் இடம் எப்படியாக உண்மையாக நடந்து கொள்ள வேண்டுமோ என்பது எல்லாம் சிறந்த பண்பட்ட நடிப்பால் தான் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். வேட்டை முத்துக்குமார்,
சிதம்பரம் என்ற கேங்ஸ்டர் ஆக வரும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் .

50 லட்சம் பணம் கேட்டு ,ஜி.வி. பிரகாஷை, பிளாக் மெயில் செய்வது தனி ரகம்.
ரெடின் கிங்ஸ்லி, இவர் வரும் காட்சிகளில் செம கலகலப்பு. சிதம்பரத்துடன் ஏட்டிக்கு போட்டியாக பேசி கலாய்த்து செல்வது படத்தின் இறுக்கத்தை கொஞ்சம் குறைக்கிறது . மற்றும் ரமேஷ் திலக், ஹரி பிரியா என பலதுறை திறமைசாலிகள் இணைந்து ஒரு பெரிய கூட்டணியாக திரையில் நடித்திருக்கிறார்கள
இவர்களின் பங்களிப்பும் படத்தின் கதையமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது

தொழில் நுட்ப கலைஞர்கள்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். திகில் மற்றும் அதிரடி படங்களுக்கு ஏற்ற விதமாக இசை அமைக்கும் இவரது பாணி, ‘இப்படத்திற்கு சிறந்த இசை தந்துள்ளார் இவர் இதற்கு முன் ‘விக்ரம் வேதா’, ‘காட்’ போன்ற படங்களில் தனது இசையின்மூலம் மிரட்டி இருக்கிறார்

இமானை, ஒரு பாடல் பாட வைத்து, ரசிக்க வைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் எனும் மேட்டரைக் கூட்ட ஓவர் டியூட்டி பார்த்திருக்கிறார், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். `

தயாரிப்பாளர்கள் தேவிகா மணி அமல்ராஜ் மற்றும் ஜெயக்கொடி அமல்ராஜ் வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவு கோகுல் பினாய் ,இரவு நேர காட்சிகளும் படமாக்கிய விதமும் படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறது.

ஆர்ட்டைரக்டர் எஸ்.ஜே. ஜெயராம்
சண்டை பயிற்சி ராஜசேகர்
கிளைமாக்ஸ் காட்சியில் அனல் தெரிகிறது.
நடனம் பாபா பாஸ்கர், மற்றும் சாய் பாரதி
பாடல்களை சாம். சி எஸ் .அவர்களும்
ஏக் நாத் ,மற்றும் கார்த்திக் நேத்தா எழுதி இருக்கிறார்கள்
காஸ்ட்யூம் டிசைனர் திலக பிரியா, மற்றும்
சண்முகம்,
வினோத் சுந்தர்,
என இப்படத்திற்காக
உழைத்த ஒப்பனையாளர்,
மற்றும் டி. ஐ, செய்தவர்கள்
கலர் கரெக்ஷன் செய்தவர்கள்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக பாராட்டலாம்.
இப்படத்தை திரு. தனஞ்செயன் அவர்கள் வெளியிடுகிறார்
நல்ல படத்தை கண்டறிந்து, வெளியிடும் அவருக்கும் வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர்கள் திரு.சுரேஷ்சந்த்ரா&
திரு. அப்துல் நாசர் அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்ததற்காக அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் “பிளாக் மெயில் “என்றாலே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும் டைட்டில் அதற்கு ஏற்ப இயக்குனர் சரியான கதையை தேர்வு செய்து, அதற்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து, தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து, இரண்டு மணி நேரம் நம்மை சீட்டு நுனியில் கட்டி போடும் திரை கதையை கொடுத்து பக்காவான கமர்சியல் படமாக காதல், எமோஷனல்,
என கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை பாராட்டாமல் வேறு எந்த படத்தை பாராட்டுவது
வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் ‘பிளாக் மெயில்”