யோலோ திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

தேவ், நாயகனாக அறிமுகமாகும் படம், ‘யோலோ” எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர் யோலோ “என்றால் . ‘(யு ஒன்லி லிவ் ஒன்ஸ்’ )என்பதன் சுருக்கம்

கதை களம்

தீக்ஷிதா, வை பெண் பார்க்க பிரணவ் ,தன் அண்ணி அண்ணனுடன் வருகிறார். அப்பொழுது அவரது அண்ணி தீக்ஷதாவுக்கு ,சிவா என்ற ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது .என்று குண்டை தூக்கி போடுகிறார் இவரின் அப்பா படவா கோபி, அம்மா சுபாஷிணி, அதிர்ந்து போகிறார்கள் .
ஆனால் தீக்ஷிதா இதை மறுக்கிறார் எனக்கு தெரியாமல் எப்படி திருமணம் நடந்திருக்கும் என்று கேட்கிறார்?

பிரணவ் , அண்ணி சரி குறிப்பிட்ட இந்த நாளில் நீ எங்கிருந்தாய்? உன்னுடைய பாஸ்போர்ட் எடுத்துட்டு வா என்று சொல்ல கொண்டு வந்து காட்டுகிறார். அதில் அவர் பெங்களூர் போய் இருந்தேன் என்று சொல்வது பொய் என்று காட்டுகிறது .

அதன்பிறகு சிவாவை தேடி, தீக்ஷிதா போகிறார் யூடியூபரான சிவா, தனக்கும் திருமணம் நடந்தது தெரியாது என்கிறார். வழக்கறிஞரிடம் சென்று கேட்கிறார்கள்.
அவர் ஆதாரத்தை எடுத்துக்காட்டுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது ?

சிவா நடத்தும் பிராங்க் ஷோவால்,பாதிக்கப்பட்ட அம்சா கோமா ஸ்டேஜ்க்கு போகிறார்.
அவரை சின்ன வீடாக வைத்திருக்கும் பி கே ஜீவல்லரீஸ்
உரிமையாளர் இருபது ஆண்டுகளாக தன் வீட்டிலேயே வளர்த்து வரும் அகிலனை விட்டு சிவாவையும், அவர்கள் குரூப்பையும் தட்டச் சொல்கிறார். அப்பொழுது அங்கு வரும் சுவாமிஜி உண்மையை கண்டுபிடிக்கிறார். அது சிவாவும், தீக்ஷாவும், இல்லை அவர்களுக்குள் மதன், ஐஸ்வர்யா, அமானுஷ்யமாக வந்து போகிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் .
பேஸ் ரீடிங் பெருமாள் போலீஸ் அவ்வப்போது வந்து காப்பாற்றுகிறார்
சிவாவும் ,தீக்ஷிதாவும் ,வழக்கறிஞர் மூலம் விவாகரத்து பெறுகிறார்கள்.
அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை
காதல், உடல், அமானுஷ்யம், உணர்ச்சி, நட்பு, சந்தேகம், நம்பிக்கை என வைத்துக்கொண்டு இளமை யாக படத்தில் விளையாடி இருக்கிறார் இயக்குநர் சாம் .
ஜாலியா வாங்க சந்தோசமாக போங்க இதுதான் இயக்கத்தின் தத்துவம்
அது சிறந்த படைப்பாக இளைய தலைமுறை கொண்டாடும் படைப்பாக கொடுத்திருக்கிறார். அழகான ஆறு பாடல்கள், படம் பார்ப்பவர்களை மெய் மறக்க வைக்கிறது .
இயக்குனர் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து படமாக கொடுத்து இருக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள்.
தேவ் , நடிப்புப் பசிக்கு தீனி போட்டா விட்டாலும் இயக்குனர் அழகில் அதகளம் பண்ணியிருக்கிறார் தேவிகா ,அழகான தேர்வு ஆளை மயக்கும் முகம், பார்த்தவர்கள் பரவசப்படும், இளமை
இந்த இருவருக்காகவும் , களம் அமைத்துக் கொடுத்துள்ளார் இயக்குநர்.
எந்தக் கேரக்டராக இருந்தாலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் படவா கோபி, அதேபோல்தான் சுபாஷிணி கண்ணன். இந்த இருவருக்குமே மிக ஆழமான கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குனர் .
வெற்றி வசுந்தராவாக வாழ்ந்திருக்கிறார்கள்.

படத்தில் வில்லன்

மதன், அப்பா தான் சிவாவின் பழிவாங்கல், புதுமை ரத்தக்களறிக்கெல்லாம் அதிகவேலையே இல்லை. சம்பவங்களும் சூழ்நிலைகளும்தான் வில்லன். காமெடிக்கு தனி டிராக்கெல்லாம் போடவில்லை. படத்தினூடே, காட்சிகள் வாயிலாகவே ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் ரசித்துச் சிரிக்கவும் வைக்கிற காமெடிகளை மட்டுமே மிகையில்லாமல் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்

இந்த வித்தியாசமான படத்தை ,MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்து, திரைக்கதையில் பங்கு பெற்றும், பாடல் எழுதியும் ,படம் கொடுத்திருக்கிறார், மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக வந்துள்ளது “யோலோ” .
மற்றும் இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார்

வி.ஜே .நிக்கி,
யுவராஜ் கணேசன்,
நித்தி ,பிரதீப்,
தீப்ஸ், பிரவீன் கிரி துவாரகீஸ் ,
கலைக்குமார், சுபாஷினி கண்ணன்,
சுவாதி நாயர், திவாகர், .பூஜா,
தீபிகா ,சிக்கந்தர்
என எல்லோரும் தங்கள் பங்குக்கு கலகலப்பாக சிரிக்க வைத்திருக்கிறார்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

சக்சேனா சேவியர், இசையில் ஆறு பாடல்கள் அற்புதமாக வந்துள்ளது பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

சூரஜ் நல்லுசாமியின்,
ஒளிப்பதிவு கண்களுக்கு குழுமை லொகேஷன்கள் அற்புதம் இரவு நேர காட்சிகளில் கேமரா பட்டையை கிளப்புகிறது.
ஏ.எல். ரமேஷ் 2 மணி நேரம் படத்தை மிகவும் கிரிப்பாக சார்ப்பாக செதுக்கியிருக்கிறார்
இந்த படத்தின் கதையை ராம்ஸ் முருகன், எழுதியிருக்கிறார் ஒரு வித்தியாசமான காதல் கதையை இன்றைய காலகட்டத்திற்கு இளைஞர்கள் விரும்பும் வண்ணம் கொடுத்திருக்கிறார்
இந்த படத்தின் திரைக்கதையை, இயக்குனர் சாம், மகேஷ் செல்வராஜ், மற்றும் பண்பு செல்வம் ,ராம்ஸ் முருகன், வடிவமைத்தி ருக்கிறார்கள். திரைக்கதை சீராக போகிறது.
ஆர்ட் டைரக்டராக, எம். தேவேந்திரன் பணி புரிந்திருக்கிறார் அற்புதமான ஆர்ட் ஒர்க் ,சிவாவின் அந்த ஸ்டுடியோவில் பேய் போல நிறைய பேருக்கு மேக்கப், பிராங் ஷோ,நடத்தும் பொழுது பேய் பறந்து வருவது போலவும், படவா கோபியின் வீடு, மற்றும் நாயகியின் வீடு, கல்யாண அரங்கம் என எல்லா இடங்களிலும் படத்தின் ஆர்ட் டைரக்டர் பேசப்படுகிறார்.

டேஞ்சர் மணியின் சண்டைக்காட்சி அனல் தெரிகிறது.

நடன பயிற்சி கலைக்குமார், மற்றும் ரகு, அமைத்திருக்கிறார்கள் பாடல்கள், நடனம் சிறப்பாக இருக்கிறது.

இந்த படத்தின் இனிமையான ஆறு பாடல்களை கவிஞர் முத்தமிழ்,

சூப்பர் சுப்பு ,சதீஷ் காந்த் ,சக்சேன சேவியர் , தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் எழுதி இருக்கிறார்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்தாக இருக்கிறது.

காஸ்ட்யூம் நடராஜ், தீக்ஸ் தாவின் உடை, மற்றும் சிவாவின், உடை நண்பர்கள் எல்லோருக்கும் காஸ்ட்யூம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது காஸ்ட்யூம் டிசைனராக,

மீனாட்சி ஸ்ரீதரன் பணிபுரிந்து இருக்கிறார். மற்றும் இப்படத்திற்கு பணிபுரிந்த ஒப்பனையாளர், டி ஐ செய்தவர்கள், கலர் கரெக்ஷன் செய்தவர்கள், திரைக்குப் பின்னால் உழைத்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு தரமான படத்தை கொடுத்ததற்காக

இப்படத்தின் மக்கள் தொடர்பாளர்கள் சதீஷ் & சிவா(AIM)

மொத்தத்தில் இந்த படம் இளைஞர்கள் கொண்டாடும் வண்ணம் காதல் படமாக வந்திருக்கிறது காதலர்களுக்கு ஏற்ற படமாக இந்த படம் அமையும்