சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் சுதா சுகுமார் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள . இப்படத்திற்கு டி. இமான் இசையமையில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் நடித்த தமிழ்ப் படங்களில் முதல்முறையாக யு சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கதை களம்
காளகம்மாபட்டி அங்கு பல ஆண்டுகளாக பிரிந்து கிடக்கும் கிராமம் ஒரு கிராமத்தில் இருப்பவர் இன்னொரு கிராமத்துக்குள் போகக்கூடாது
கிராமம், ஜாதி பிரச்னை, கடவுள் நம்பிக்கை என என ஆரம்பமே களை கட்டுகிறது
கலெக்டர் கிருஷ்ணம்மாள் (அபிராமி) அந்த ஊரை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார். அது நடந்ததா ?
மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? அவர்களை ஒன்று சேர்க்க போராடும் காளி வெங்கட் முயற்சி வெற்றி பெற்றதா?
இப்படி மாறுபட்ட முயற்சி. காளிவெங்கட், அர்ஜூன் தாஸ் கேரக்டர், நடிப்பு, இடைவேளை, கிளைமாக்ஸ் பிளஸ். கடவுள் விஷயத்தில் சண்டை போடும் இரண்டு தரப்பு மக்களின் கதை, அதை அழுத்தமாக, புதுமாதிரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த பாம் சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது. காளி வெங்கட் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலக்கல். பிணமாக உயிர்ப்புடன் நடித்து இருக்கிறார்
கடவுள் பெயரால் மனிதர்கள் மோதிக் கொள்வதை விட்டு அன்பு என்னும் மனிதம்மூலம் ஒன்று சேர வேண்டும் என்பதே கதைக்களம்
அதை சொன்ன விதத்தில் படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது .
இரண்டு கிராமமும் கிளைமாக்ஸில் ஒன்று சேரும்போது கிடைக்கும் கைதட்டல் படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது.
கடவுளுக்காக இரண்டு குழுவை சேர்ந்த மக்கள் போட்டியிடும் போட்டியைப் பற்றிய ஒரு அருமையான கதை. நகைச்சுவை, எமோஷன் கலந்த ஒரு படம், அருமையான ரைட்டிங், பேமிலி ஆடியன்ஸ் மற்றும் வில்லேஜ் ஆடியன்ஸுக்கு மிகவும் பிடிக்கும்.
மனித நம்பிக்கையையும் மத நம்பிக்கையையும் இணைத்து, இரண்டிற்கும் பின்னால் உள்ள பகுத்தறிவை கேள்விக்குள்ளாக்கும் ஒரு எளிய, நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட கதை. நகைச்சுவை, கதைசொல்லலுக்கு நன்றாக உதவுகிறது. விஷயங்களை புரிந்துகொள்ள நேரம் எடுக்கும், ஆனால் படம் சொல்ல வரும் மெசேஜ் அழகாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் &நடிகைகள்
அர்ஜுன் தாஸ் –
மணிமுத்து ,என்ற வேடத்தில் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தாமல் சாந்தமான மனிதராக நடித்திருக்கிறார்.
இதுவரை நாம் பார்த்ததைப் போலல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.
இந்த ஆண்டு காளி வெங்கட்டிற்கு மற்றொரு மறக்கமுடியாத கதா்பாத்திரம் கதிர் என்ற கதாபாத்திரத்தில் மனுஷன் வாழ்ந்து இருக்கிறார் இது போன்ற கதாபாத்திரங்களை மற்ற நடிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் காளி வெங்கட் துணிந்து சதம் அடித்திருக்கிறார் அவர் இறந்த பிறகும் நடித்த நடிப்புக்கு நிச்சயம் விருது கிடைக்கும்.
நாயகியாக ஷிவாத்மிகா நடித்துள்ளார்.
பிரபா என்ற கதாபாத்திரத்தில் அண்ணன் காளி வெங்கட், இறந்துவிட்டது நம்ப முடியாமல் ஊர் சொல்வதையும் ஏற்க முடியாமல் ஊரை விட்டு வெளியே போகலாம் என்று சொல்லும் அர்ஜுன் தாஸ் சொல்ல ஏற்க முடியாமல் படம் முழுவதும் ஒரு அழுத்தமான நல்ல கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அபிராமி, கிருஷ்ணம்மாள் என்ற மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்புடன் அந்த கிராமத்து படிக்காத மக்களே ஒன்று சேர்க்க துடிக்கும் அந்த கதாபாத்திரம் படத்தின் உயிர் நாடி நாசர், அரசியல்வாதியாக செங்கண்ணன் என்ற எம்எல்ஏவாக அந்த கிராமத்தை பிரிப்பதிலேயே முயற்சி செய்யும் நையாண்டி நடிப்பு எம் ஆர் ராதாவை ஞாபகப்படுத்துகிறார்
சிங்கம் புலி,
பிரிந்து கிடக்கும் ஊர் தலைவரில் இவரும் ஒருவர் காமெடி அதிகம் இல்லை என்றாலும் இவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்
பால சரவணன்
youtube நடத்தும் பாண்டியாக அந்த ஊருக்குள் வந்து ஆயிரம் சப்கிரைபர் வேண்டும் என்று தவிப்பதும் காளி வெங்கட் பிணத்தை பார்த்து ஆயிரம் சப்கிரைபர் கிடைத்தவுடன்
கொண்டாடி மகிழ்வதும் காதலியை கரம் பிடிப்பதும் பால சரவணன் இந்த படம் சிறந்த படமாக அமைந்திருக்கிறது.
இவ ர்களுடன் ஊர் மக்கள் ,ராட்சசன் சரவணன் ,மற்றும் விலங்கு சீரியலில் நடித்தவர் ,
என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
தொழில் நுட்ப கலைஞர்கள்
இப்படத்திற்கு கதை ,திரைக்கதை, எழுதியிருக்கிறார் மணிகண்டன் மாதவன் , ஒற்றுமையை வலியுறுத்தி அற்புதமான கதையாக திரைக்கதையை சீராக்கி கொடுத்திருக்கிறார்.
அவருடன் இணைந்து இயக்குனர் விஷால் வெங்கட், மற்றும்அபிஷேக் சபரி கிரீஸ் , எழுதி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் ,கதைக்கு தேவையான கலர் கரெக்ஷன் கொடுத்து படமாக்கி இருக்கிறார்.
ஜே.கே பிரசன்னாவின், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமார், கிராமத்து திருவிழாவை அற்புதமாக அரங்கம் அமைத்திருக்கிறார்.
காஸ்ட்யூம் டிசைனர்களாக பிரியா ஹரி, பிரியா சரன் ,பணியாற்றி இருக்கிறார்கள் சிறப்பு. நடன பயிற்சி அப்சர், அமைத்திருக்கிறார் மான்ஸ்டர் முகேஷ் , சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார்.
டி இமான் ,இசையில் உனக்குள் ஒரு கடவுள் உண்டு ,என்ற பாடலை சித்ரா பாடியிருக்கிறார் .படம் விட்டு வெளியே வந்த பிறகும் அந்த பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ,பாடியுள்ள பாடல் மது பாலகிருஷ்ணன், பாடியுள்ள பாடல்
ஹரிச்சரண் ,
ஸ்வேதா மோகன்,
தர்ஷினி ராஜ்குமார்,
மேக்னா சுரேஷ், பாடியிருக்கிறார்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் போன்று இனிக்கிறது.
பாடல்வரிகளை மணி அமுதவன், சந்துரு .கே, ரெகன்டுமௌலி,
ஜெயரா ,எழுதி இருக்கிறார்கள்.
ரஷீத்தின், படத்தொகுப்பு சூப்பர் .
இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர்கள் சதீஷ் &சிவா(AIM)
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த பாம் “காமெடியும், கடவுள் பெயரால் பிரிந்து கிடக்கும் மனிதர்களையும், மூடநம்பிக்கை
எவ்வளவு மோசமான செய் என்று சொல்லும் ஒரு அற்புதமான படைப்பு வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
