சக்தி திருமகன், அரசியல் ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்டது. 1989-ல் கதை தொடங்குகிறது. பழங்குடிப் பெண் கொலை செய்யப்பட, போலீசார் விசாரணையை தொடங்குகின்றனர். அப்போது தொழிலதிபரின் அழுத்தம் வருகிறது. தொழிலதிபரின் அழுத்தத்தால் வழக்கு திசை மாறுகிறது. அந்தப் பெண்ணின் குழந்தை குப்பையில் வீசப்படுகிறது.
அந்த குழந்தை சக்தி திருமகனாக வளர்ந்து, ஒரு சிறு வேலை கிட்டதட்ட டீ வாங்கி தருவது போன்ற வேலையிலிருந்து ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்குகிறார்.
தமிழகத்தில் கவர்மெண்ட், தமிழக அரசியல் யாருக்கு எது வேண்டுமானாலும் போன் காலிலேயே முடித்து, அதற்கான கமிஷனை எடுத்துக்கொள்கிறார். அதை வைத்து ரூ 6000 கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறார்.
ஆனால், பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது போல் மத்திய அமைச்சர் ஒருவரிடம் விஜய் ஆண்டனி காட்டிய வேலை ஒன்றால் சிக்குகிறார்.
அதை தொடர்ந்து அரசியல் சாணக்யன் என்று சொல்லப்படும் ஒருவரிடம் விஜய் ஆண்டனி சிக்க, அனைத்து தரப்பும் அவரை ரவுண்ட் கட்ட, இதிலிருந்து விஜய் ஆண்டனி எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை
சமீப காலங்களில் விஜய் ஆண்டனி தேர்வு செய்து நடித்த ஸ்ட்ராங் ஆன கண்டெண்ட் உள்ள படம் இது.
பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சுவாரஸ்யமான அரசியல் த்ரில்லர். படம் கிரிஸ்ப் ஆகவும் வேகமாகவும் நகர்கிறது.
படத்தின் முதல் பாதி வலுவாகவும், நம்மை கட்டிப்போடும் வகையில் உள்ளது. பல மாநில மற்றும் மத்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் ஆலோசகர்கள், அரசியல் யூடியூப் சேனல்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமை படத்தில் தெரிகிறது.
நமது அன்றாட வாழ்வில் மோசடி மூலம் மக்கள் எப்படி அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறது
விஜய் ஆண்டனி
இந்த மாதிரியான அண்டர்ப்ளே செய்து தன் காரியத்தை சாதிக்கும் கேரக்டர் என்றாலே அல்வா சாப்பிடுவது போல, வழக்கம் போல் நிதானமான நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார்.
முதல் பாதி முழுவதும் அரசியல் களம் சூடு பறக்க அவர் நடத்தும் ஆட்டம் செம விறுவிறுப்பான ஆட்டம்.. ஒரு மீடியட்டர் பெரிய பெரிய MP, MLA வால்
கூட முடியாத விஷயத்தை எப்படி முடிது வைக்கிறார் என்பதை காட்டிய விதம் பிரமிப்பு.
அதற்கு விஜய் ஆண்டனி காட்டிய மாஸ் செம மாஸ்.
ஸ்டேட் முதல் செண்ட்ரல் வரை தங்களுக்கு வேலை நடக்க மீடியட்டர்கள் எந்த அளவிற்கு பயன்படுகிறார்கள், அவர்கள் ராஜதந்திரம் என்ன என்பதை ப்ளு ப்ரிண்ட் போட்டு தனது வைரம் போன்ற நடிப்பால் ஜொலிக்கிறார்.
கிட்டு வாக அவர் வரும் காட்சிகளில் விஜய் ஆண்டனி: … செம காஸ்ட்டிங்!
ஆபிசர் ராம் உடன் அவர் போடும் டீல் . அட்டகாசம்! பிற்பாதியில் திரைக்கதையும், வசனங்களும் அபயசங்ஙரை மிரட்டி உருட்டுவதும், செக் வைப்பது ,விஜய் ஆண்டனிக்கு ஹின்ட் கொடுப்பதுமாக… செம ரேஸ் ஸ்க்ரீன்ப்ளே!
‘சில மணி நேரங்களிலேயே மாநிலத்தையே ஏன் இந்தியாவை கிடுகிடுக்கும் திட்டத்தைத் தீட்டி, அதைக் கடைசி திருப்பம் வரை கச்சிதமாகச் செயல்படுத்ப்படும் நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார்.
அதோடு சமகாலத்தில் நாம் பார்த்த அரசியல் பிரபலங்கள், அரசியல் நிகழ்வுகள் என அனைத்தையும் காட்டியது பல காட்சிகள் நாம் கனேக்ட் செய்வது போல் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் படம் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல பாஸ்ட் கட் செய்துள்ளனர்
கதாநாயகியாக த்ரிப்தி நடித்துள்ளார் இவர் ஒரு விளம்பர பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் முதல் படமாகஅமைந்தது
சிறந்த நடிப்பு.
இயக்குனர்
அருவி, வாழ் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் நம்பிக்கையான இயக்குநர் எனப் பெயரெடுத்த அருண் பிரபு புருஷோத்தமன் சக்தித் திருமகன் மூலம் மீண்டும் அந்த நம்பிக்கையை உறுதிசெய்துள்ளார். ஊழலுக்கு எதிராக தமிழ் சினிமா நிறைய திரைப்படங்களை உருவாக்கிவிட்டது. ஆனால், அக்கதைகள் அன்றைய காலகட்ட அரசியல் சித்தாங்களுடன் கூடிய வெளிப்படையான அநீதிகளைப் பெரிதாக முன்வைக்கவில்லை.
அந்தக்குறைகளை நீக்கி, அப்பட்டமாக இன்றைய இருதுருவ அரசியலை முன்வைத்து மிகப்பெரிய அரசியல் ஆலோசகர்களால் நாடு என்னென்ன நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதையும் அரசு அதிகாரங்களில் உள்ளவர்களின் ஊழல்களால் தனிமனிதர்கள் சந்திக்கும் அவலமும் காட்சிக்குக் காட்சி தந்திருக்கிறார்
அரசியல் பற்றி தெளிவான பார்வை எத்தனை ஆராய்ச்சி எத்தனை கட்டுரைகள் படித்திருக்க வேண்டும் ஒவ்வொரு விஷயமும் புட்டு புட்டு வைக்கும் பொழுது விழிகளில் வியப்பு! ஆச்சரியமாக வியந்து பார்த்துக் படம் பார்த்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!
சமுதாய சிக்கல்களை கூர்மையான பார்வையில் அணுகும் திறமை கொண்ட இயக்குநராக அறியப்படும் அருண் பிரபு, .
தமிழ் சினிமாவில் நெ 1இயக்குனர்ஆகவும்இந்தியாவில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் இயக்குனர் ஆக வருவார், வரவேண்டும்.
படத்தின் ஹை லைட்
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தொடங்கி, அரசு அலுவலகங்களில் இருக்கும் அடித்தட்டு ஊழியர்கள் வரை, ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பையும் கரைத்துக் குடித்திருக்கும் கிட்டு,
கதாபாத்திரம் தமிழ் சினிமா காணாதது ..
கிட்டு ,200 கோடி ரூபாய் கமிஷன் பணத்திற்காக, மிகப்பெரிய அரசியல் மற்றும் பண விளையாட்டை விளையாட ஆரம்பிக்கும் போது… ‘தயங்குவது எதார்த்தம்.
மாஸ்டர் மைண்ட் கதாநாயகனாக அலட்டல் இல்லாமல் வந்து, ஆங்காங்கே ஆக்ஷன், என்று அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனிக்கு
ஹேட்ஸ் அப்.
பிரபல தொழிலதிபராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் அரசியல் சாணக்கியர் நடிப்பு நன்றாக இருக்கிறது
அரசியலில் நரித்தனம், அதற்கேற்ற உடல்மொழி, ஆங்கில உச்சரிப்பு என அபயங்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வில்லனிஸத்தைக் கொடுத்திருக்கிறார், பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் ‘காதல் ஓவியம்’ புகழ் கண்ணன்.
நாயகனுக்கு துணையாக செல் முருகன், கலகலப்போடு அரசியல் பாடம் எடுப்பவராக வாகை சந்திரசேகர், விசாரணை அதிகாரியாக கிரண் குமார், அதிகாரமிக்க பெண்மணியாக ஷோபா விஷ்வநாத், கண்ணீரும் கம்பலையுமாக கதாநாயகனின் மனைவியாக த்ருப்தி ரவிந்திரா ஆகியோர் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.
பரபர திரைக்கதைக்கு ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, தின்ஸா கூட்டணியின் படத்தொகுப்புபடத்தின் வெற்றி
விஜய் ஆண்டனியின் இசையில், பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து, கதைக்கருவிற்கு வலுசேர்க்கின்றன.
பின்னணி இசையால் பிரமாண்டம், எமோஷன், ஆக்ஷன், காதல், ஹீரோயிஸம் என எல்லா பாத்திரங்களையும் நிரப்பியதோடு, பரபரப்பையும் கை பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறார் விஜய் ஆண்டனி
சண்டை பயிற்சி ராஜசேகர் அனல் தெரிக்கிறது .
ஆர்ட் டைரக்டர் ஸ்ரீராம்.
காஸ்டியூம் டிசைனராக
அனுஷா மீனாட்சி.
ஒப்பனை சீராளன் மணி.
என ஒரு வெற்றிப் படத்துக்கு எல்லோரும் உழைத்திருக்கிறார்கள்
ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் மீது இயக்குனர் ஒரு கல்லை எடுத்து எறிந்து இருக்கிறார்.
மக்கள் விழித்துக் கொண்டால் நாடு நலமாகும்.
நல்லதே நடக்கும் வெற்றி பட்டியலில் சக்தி திருமகன்.
மக்கள் தொடர்பாளர் ரேகா இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
