கிஸ் திரை விமர்சனம்

கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள கலகலப்பான படம் கிஸ்”. ஃபேண்டஸி உடன் கூடிய காதல் திரைப்படமாக “கிஸ் உருவாகி இருக்கிறது. நேர்த்தியான நடிப்பால் கவின் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். விஜய் சேதுபதி அவர்கள் வாய்ஸ் மூலம் ஓபனிங் ஆகிறது “kiss”

காதலே பிடிக்காத அரசன் சேந்தன்,அல்லி இருவரின் காதலை பிரிக்கிறார். சேந்தன் தன் காதலிக்காக ஒரு புத்தகம் எழுதுகிறார். நிகழ் காலத்தில் அந்த புத்தகம் கவினை தேடி வருகிறது. கவின் முத்தம் கொடுப்பவர்களை கண்டால் ஈ.எஸ்.பி மூலம் அந்த முத்தம் கொடுப்பவர்களுக்கு எதிர் காலத்தில் என்ன நடக்கப் போகிறது! என்பதை கவின் அறிந்து கொள்ளும் பவர் அவருக்கு இருக்கிறது.

நாயகி பிரீத்தி அஸ்ராணி (சாரா வில்லியம்ஸ்) ஒரு கட்டத்தில் கவின், ப்ரீத்தி காதலிக்க இருவரும் முத்தம் கொடுக்க நேரிடுகிறது.

அப்போது கவின் ஈ.எஸ் .பி என்ற பவர் மூலம் காதலி சாரா, இறப்பது போல காண்கிறார்.

இதனால் தன் காதலியின் உயிருக்கு காரணமாக நாம் ஆகி விடக்கூடாது, என்று கவின் அவரை பிரிகிறார் .

ஆனால் பிரீத்தி கவினை மறக்கமுடியாத சூழலுக்கு தள்ளபடுகிறார்.

அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை கதை

நடிகர் & நடிகைகள்

கவின்

நெல்சன் என்ற கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
காதல், காமெடி என கலக்கி இருக்கிறார். அம்மாவுக்கு துரோகம் செய்த அப்பாவை வெறுப்பது,

முத்தம் கொடுக்கும் காதலர்களுக்கு தனதுஈ.எஸ்.பி பவர் மூலம் என்ன நடக்கப் போகிறதோ? என்று அஞ்சுவது, தன் காதலியை பிரிய மனமில்லாமல் தடுமாறுவது என்று நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

ப்ரீத்தி அஸ்ரானி

(சாரா வில்லியம்ஸ்) என்ற கதாபாத்திரத்தில் அழகான தேவதையாக ஜொலிக்கிறார் .

கவினுக்கு செம மேட்ச் ஆக வந்து நடனத்தில் கலக்கும் இவர் வரும் காட்சிகள் சிறப்பு.

விடிவி கணேஷ்,

வரும் காட்சிகளில் கலகலப்பை ஏற்படுத்துகிறார். தேவயானி மாடர்ன் ஸ்டைலிங் அம்மாவாக வந்து அழகான நடிப்பை வழங்கி இருக்கிறார். ஆர்.ஜே.விஜய் சாம் என்ற வேடத்தில், படம் முழுக்க கலகலப்பாக காமெடியாக, நடித்திருக்கிறார். கவின் நண்பராக இருவரும் வரும் காட்சிகள் கலகலப்பை தருகிறார்கள்.

பிரபு ,தமிழ் பேராசிரியர் ஆக படத்தில் திருப்பு முனையாக வந்து போகிறார்.
சக்தி நடிப்பு நன்றாக இருக்கிறது. ப்ரீத்தி அப்பாவாக வரும் கல்யாண் நடிப்பு சூப்பர். நடிகை கௌசல்யா நீண்ட நாட்களுக்கு பிறகு என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேன், பாடல்கள் அனைத்தும் துள்ளாட்டம் போட வைக்கிறது. இளைஞர்களுக்கு செம ட்ரீட்.

கதை ,வசனம் ,எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ் கிருஷ்ணன். நடன மாஸ்டராக இருந்து, நடிகராக வலம் வந்த இவர், இயக்குனராக மாறியிருக்கும் அறிமுக இயக்குனருக்கு வாழ்த்துக்கள். படம் முழுக்க இளமைத் துள்ளல், கலகலப்பான காட்சிகள் ,பேண்டஸி கலந்து ஒரு நல்ல காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.
இடைவேளை டுவிஸ்ட் சூப்பர் . படத்தை முடித்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அவர்கள். இணை தயாரிப்பாளர் ஜாவித் ,அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு, கண்களுக்கு குளுமை , பாடல் காட்சிகளில் கேமரா நன்றாக படம் பிடித்திருக்கிறது.

ஆர்.சி. பிரணவ் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளது.

சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹயன். மற்றும் தினேஷ் சுப்பராயன், &ராம்போ விமல் . காஸ்டியூம் டிசைனராக விபின், பூர்த்தி பணி புரிந்திருக்கிறார்கள். வசனம் நன்றாக இருக்கிறது. வசன உதவி முகில்,சவரிமுத்து

ஒப்பனை: சக்தி வேல்
பாடல்களை எழுதியுள்ள விஷ்ணு, ஆஷிக்,ஏ.ஆர் வேணு செல்வன்.

படத்தின் ஹை லைட்ஸ்

ஒரு ஃபேண்டஸி கலந்த காதல் கதையை, ஈ.எஸ்.பி என்ற பவர் மூலம் நாயகனுக்கு காட்டி, கதை சொல்லி இருப்பது ரசிக்க வைக்கிறது.

வி.டி.வி கணேஷ் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் கலகலப்பாக கைதட்டி மகிழ்கிறார்கள்.

கவின் அப்பாவின் காதலை ,அவர் மனைவி தேவயானி, ஏற்றுக் கொள்ளும் அந்த காட்சிகளில், கவின் தன் அப்பா மீது எந்த தவறும் இல்லை என்று புரிந்து கொள்ளும் காட்சி மிக உருக்கமான காட்சி.

நாய்கள் காதல் செய்யும் பொழுது, கவின் தன் பவர் மூலம் அறிந்து, அந்த நாய்களுக்கு ஆபத்து ஏற்பட போகிறது. என்று அதை காப்பாற்ற நினைக்கும் அந்த காட்சி மனிதநேயம் உள்ள காட்சி.

ப்ரீத்தி அஸ்ராணி அழகான தேவதை என்றாலும் அமைதியான நடிப்பால் , நடனத்தில் படம் முழுக்க நம்மை கவர்கிறார்.

படத்தின் கதைக்கு நடன காட்சி தேவை என்பதாக படம் முழுக்க வரும் நடனம்
கவின் நடனம் பார்ப்பவர்களை மெய்மறக்க செய்கிறது.

படத்தின் தலைப்பு கிஸ் ,என்று இருந்தாலும் படத்தில் எந்த ஒரு ஆபாசமும் மோசமான காட்சிகளும் இல்லாமல் கவித்துவமாக, கதையை கொண்டு சென்றதற்காக இயக்குனருக்கு சபாஷ் போடலாம். இந்த கதையை தேர்வு செய்த கவினுக்கு சபாஷ் போடலாம் .படத்தை தயாரித்த திரு .ராகுல் அவர்களுக்கு சபாஷ் போடலாம்.

அரசனாக இருந்து காதலிப்பவர்களை தண்டித்த ஆலாலகண்டன்
சாபம் வாங்க,
விமோசனமாக கவின் தான் செய்த தவறுகளை திருத்தி ஒவ்வொருவரையும் வாழ வைப்பதாக காட்டியுள்ள காட்சிகளில் ஜீவனும்,
உயிரோட்டமும் இருந்தது.
படத்தின் வெற்றிக்கு அந்த காட்சிகள் பலமாக அமைந்தது என்று சொல்லலாம்.
முதல் பாதி, கலகலப்பை ஏற்படுத்திய இயக்குனர் பின் பாதியில் ,
உருக்கமான காட்சிகளை வைத்து படத்தை வெற்றி வானில் பறக்க செய்திருக்கிறார்.

இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் கள்:திரு சுரேஷ் சந்த்ரா & அப்துல் நாசர் அவர்கள்
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த
இந்த முத்தம், அன்பு முத்தம். வெற்றிக்கு உரிய முத்தம்.