அந்த ஏழு நாட்கள் திரை விமர்சனம்

புதுமுகங்கள் அஜிதேஜ் ,மற்றும் ஸ்ரீஸ்வேதா, நடிப்பில், எம். சுந்தர் இயக்கத்தில், ஒரு காதல் மற்றும் த்ரில்லர் கலந்த கதைக்களத்துடன் உருவான படம் “அந்த ஏழு நாட்கள்”

பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்தள்ளது. தயாரிப்பாளர்: முரளி கபீர்தாஸ் (பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ்)

கதை களம்

அஜிதேஷ்(ஆதித்யா) ஒரு வானவில் ஆராய்ச்சியாளர். அவரது அப்பா நமோ நாராயணா ஒரு எம். எல். ஏ, இன்ஸ்பெக்டர் ராஜதுரை(வம்சி )ஒரு கண்டிப்பான காவல் துறை அதிகாரி இவரது மகள் (ஸ்ரீ ஸ்வேதா) நிலா இவர் வழக்கறிஞர் சுபாஷிணி கண்ணன் இடம் உதவி வழக்கறிஞராக பணிபுரிகிறார்.

அங்கு வரும் நாயகன் நாயகி மீது காதல் கொள்கிறார்.

இருவரும் காதலிக்க, ஒரு நாள் நாயகன் 300 வருடங்களுக்கு பிறகு வரும் சூரிய கிரகணத்தை, ஆராய்ச்சி செய்யும் பொழுது அவருக்கு ஒரு வினோத சக்தி கிடைக்கிறது.

அது ஈஎஸ்பியாக மாறுகிறது அதன் மூலம் பிறர் கண்களை பார்த்து அவர்கள் எத்தனை நாள் உயிரோடு வாழ்வார்கள். என்பதை அறியும் சக்தி கிடைக்கிறது .

இதை தனது காதலி நிலாவின் கண்களை பார்த்து அவர் ஏழு நாட்கள் தான் உயிரோடு வாழ வாய்ப்பு இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்.

இதற்கிடையில் அமைச்சரான இயக்குனர் .கே. பாக்யராஜ் தன் மகளை நாயகனுக்கு மணமுடிக்க விரும்புகிறார். இதனால் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை கண்டு இருவரும் வீட்டை விட்டு ஓடி தோழியின் வீடாண, கொடைக்கானலில் போய் தங்குகிறார்கள்.

அதன் பிறகு அந்த ஏழு நாட்களில், நாயகிக்கு என்ன நேர்ந்தது? காதலன் தன் காதலியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே கதைக்களம்.

நடிகர் & நடிகைகள்

அறிமுக நாயகன் அஜி தேஜ் ஆதித்யா என்ற கேரக்டரில் முதல் பாதி காதல், என்று கலகலப்பை ஏற்படுத்துகிறார் . பிற்பகுதியில் தன் காதலியை காப்பாற்ற போராடும் ஒரு காதலனாக நடித்துள்ளார் .

கடைசி இருபது நிமிடம் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

நாயகி ஸ்ரீஸ்வேதா, நிலா என்ற கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் அவருக்கு நோய் வந்த பிறகு அவரிடம் பல பரிமாற்றங்கள் தெரிகிறது. நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக நமோ நாராயணா, அமைச்சராக, இயக்குனர் கே.பாக்யராஜ், வழக்கறிஞராக சுபாஷிணி கண்ணன், நாயகியின் அப்பா கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக, வம்சி சுப்ரமணியம், நாயகன் நண்பனாக (ஹரி) என்ற கதாபாத்திரத்தில் ஆதித்யா 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பழங்குடியினராக தலைவாசல் விஜய்,

இவர்கள் எல்லோரும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் முரளி கபீர் தாஸ் ,நல்ல விழிப்புணர்வு மிக்க படத்தை கொடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோ ஹெட் செல்வக்குமார் அவர்கள்.

கதை ,வசனம், எழுதி இயக்கி இருக்கிறார்.

எம் .சுந்தர் .இன்று நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்படும் ஒரு கருப்பொருளை கதையாக்கி, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை தந்திருக்கிறார் பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் இசையில் “ரதியே ரதியே பாடலும், என் கண்ணை காணாதே” பாடலும்,புயலே என்ற மூன்று பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னனி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளராக கோபிநாத் துரை, பணி புரிந்திருக்கிறார் பாடல் காட்சிகளையும், கொடைக்கானல் அழகையும், கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் சிறப்பாக,படம் ஆக்கி இருக்கிறார்.

படத்தொகுப்பு மற்றும் வி.எப்.எக்ஸ் காட்சிகளை முத்தமிழன் ராமு, சிறப்பாக எடிட் செய்துள்ளார். வி. எப்.எக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைத்திருக்கிறார்.

மோகன் ராஜா எழுதியுள்ள பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.

ராகேஷ் ராக்கி சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார் கிளைமாக்ஸ் சண்டை காட்சி 20 நிமிடம் செம விறுவிறுப்பு.

ஆர்ட் டைரக்டர் தினேஷ் குமார் அரங்க அமைப்புகளை அற்புதமாக செய்திருக்கிறார்.

ஒப்பனையாளராக மணி, நன்றாக பணிபுரிந்து இருக்கிறார்.

காஸ்ட்யூம் டிசைன் மாலினி பிரியா.
கோ. டைரக்டர் விஷ்ணுப்பிரியன்

என அனைவரும் இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர்கள் திரு.
சுரேஷ் சுந்தரா &
திரு .அப்துல் நாசர்
அவர்கள்.

படத்தின் ஹை லைட்ஸ்

: படத்தில் நடித்த நாயகன், நாயகி இருவரும் கடைசி 20 நிமிடம் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

300 வருடங்களுக்கு முன் தலைவாசல் விஜய் ஒரு டெலஸ்கோபில்
மூலம் நடந்த விஷயம் நாயகனுக்கும் ஏற்படுவது திரைக்கதையின் புத்திசாலித்தனம்.

நாயகன் நாயகி தப்பிச்செல்லும் பொழுது வித்தியாசமான முறையில் தப்பி செல்வது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

காதலிக்க மறுக்கும் நாயகியை, காதலன் எப்படி உருகி உருகி காதலிக்கிறார். காதலிக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் தன் கண்களையே இழப்பதற்கு தயாராகும் அந்த காதல் புனிதமாக காட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மருத்துவர்கள் செய்யும் தவறு நாயகி பாதிக்கப்பட்டு பின்னர் நாயகிக்கு, அவர்களாலேயே விமோசனம் கிடைப்பது அருமையான கதை அமைப்பு.

நடராஜ் வைத்தியர், கொடைக்கானலில் ஐந்து நாளில் இறந்து போய் விடுவார் என்று நாயகன் சொன்ன பிறகு, அவரே நாயகனுக்கு உதவுவது, திரைக்கதையில் கிடைத்த வெற்றி.

கொடைக்கானலில் நாயகியை பாதுகாக்க நாயகன் வீட்டில் இருக்கும் ஆணி, மற்றும் விபரீதமான பொருட்களை, அகற்றுவதும், பூச்சி, பாம்பு ,வந்து விடக்கூடாது என்று மருந்து தெளிப்பது, மருத்துவரிடம் சென்று மெடிக்கல்
செக்கப் செய்வது, என்று காதலின் உன்னதத்தை காட்டப்பட்டிருக்கிறது.

நாயகியை பார்த்து, நாயகன் நிலா மொட்டை மாடிக்கு வருமா என்று கேட்கும் காட்சிகள் படத்தின் கலகலப்பு .

இயக்குனர் பாக்யராஜ் மகள், யார் என்று கிளைமாக்ஸில் காட்டப்படும் பொழுது ஒரு இனிய அதிர்ச்சி .

சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க கூடாது என்று ஆராய்ச்சியாளர் சொன்ன பிறகும் நாயகன் அதை செய்துவிட்டு அவர் வினோத சக்தி மூலம் வெளிப்படுவதும் மற்றவரின் இறப்பை கண்டறிவதும், என படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

படம் அரை மணி நேரம் காதல் கலாட்டாவாக போகிறது. அதற்கு பிறகு சூரிய கிரகணம், இ .எஸ். பி பவர் ,மற்றும் காதலியின் தனிமை, காப்பாற்றத் துடிக்கும் காதலன், என படம் ரெக்க கட்டி பறக்கிறது .

இசைஞானி இளையராஜா, அவர்கள் சம்மதத்துடன் “வா வெண்ணிலா.
பாடலை ஆங்காங்கே தெளித்து காதலர்களுக்கு மரியாதை செய்துள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் இந்த “அந்த ஏழு நாட்கள் ”
தலைப்புக்கு ஏற்ற படமாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும்.