அனந்தன் காடு திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -/5

பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘அனந்தன்காடு இப்படத்தை ,
மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரித்துள்ளார் .
பான்-இந்தியா த்ரில்லர் படமாக தமிழ், மற்றும் மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி, இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றி பட்டியலில், இப்படம் இடம் பிடிக்கும். வாழ்த்துக்கள் 🌸

கதை களம்

🧶கதைக்களம்: 1980–90களின் சமூக மற்றும் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டது .
ஆர்யாவின் வித்தியாசமான கதாபாத்திரம், சாதாரண ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல், மர்மமும் பதற்றமும் நிறைந்த கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருக்கிறார்.

இலங்கையில்
தமிழர்கள், தங்கள் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் பொழுது, வெற்றிவேல் குமரன்,
சிங்கள ராணுவத்தால் ,தன் தாயை, தங்கையை, தம்பியை, என மொத்த குடும்பத்தையும் இழக்கிறார்.

அதன்பிறகு இந்திய பகுதியில் உள்ள “அனந்தன் காடு” என்னும் பகுதிக்கு, வந்து மணி ,என்ற பெயரில் மறைந்து வாழ்கிறார் .

அங்கு அந்த குப்பத்தில் , வாழும் முரளி, ஜான்சன், கிருஷ்ணன் குட்டி,
தங்கம் என்ற நான்கு பேர் கூலிக்கு கொலை செய்யும் குற்றவாளிகள்.
இவர்களை, கேரள முதல்வர் கே கே மேனன், தன்னுடைய பகைக்காக ,
வீரப்பன் பெருமாள் முதலியாரை கொலை செய்ய சொல்கிறார். இந்த நான்கு பேரும் முதலியாரை கொன்ற பிறகு, முதல்வர் மேனன் அந்த நான்கு பேரையும் தீர்த்துக்கட்ட சூழ்ச்சி செய்கிறார்.

முதல்வருக்கு துணையாக, தெலுங்கு ஐ .ஜி ராவ், உடனிருந்து இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார்.

மறைந்து வாழும் மணி, (ஆர்யாவையும்) தேடுகிறார்கள்.
இந்த நான்கு பேரின் உயிருக்கு ஆபத்து என்றவுடன் மறைந்து வாழும் மணி, முதல்வர் பேரனை கடத்தி வந்து, முதல்வருக்கு டிமாண்ட் வைக்கிறார்கள்.
அது நிறைவேறியதா?
இந்த நான்கு பேரின் நிலைமை என்ன ஆனது ?மறைந்து வாழும் ஆர்யாவின் நிலை என்ன ஆனது? முதல்வரின் சூழ்ச்சி நிறைவேற்றப்பட்டதா?
தங்கம் ,முரளி, ஜாக்சன், கிருஷ்ணன் குட்டி இந்த நான்கு பேரும் சூழ்ச்சியில் இருந்து மீண்டு வந்தார்களா? இதன் பிறகு ஈழத்தமிழரான, வெற்றிவேல் குமரன் இந்த நான்கு பேருக்காக என்ன முடிவு எடுத்தார்? என்பதை படம் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், எமோஷனல் கலந்து சொல்லி இருக்கிறது, படம் முழுக்க
காட்டுப் பின்னணி, மர்மம், அரசியல் மற்றும் குற்றச்சம்பவங்கள் கலந்த கதையாக பரபரப்பாக சொல்ல பட்டுள்ளது.

🧶பிரபல எழுத்தாளர் முரளி கோபி கதை எழுதி இருக்கிறார். மலையாள சினிமாவில் ஆழமான கதைகளுக்குப் பெயர் பெற்ற முரளி கோபி இந்தப் படத்தின் கதையை எழுதியது பர பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த கதை , அரசியல், அதிகாரம், பழிவாங்குதல் மற்றும் உயிர்வாழ்தல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக வைத்து எழுதி இருக்கிறார்.

🧶இப்படத்தை
மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைக்கதையைத் திரையில் அதே தரத்தில் கொண்டு வருவது சவாலான விஷயம். இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார்
ஈழத் தமிழர்கள் பட்ட வேதனைகளை அருமையாக படமாக்கி இருக்கிறார்.
ஒரு முதல்வர் நல்லவராக இல்லையென்றால் அந்த நாட்டு மக்கள் எவ்வளவு துன்பத்திற்கு ஆள் ஆவார்கள், என்பதை அக்கறையோடு, சமூக நலனோடு, பேசியிருக்கிறார்.
கார்த்தி, என்ற பெண்மணி கதாபாத்திரம் காவல் துறை அதிகாரியிடம், ஏழை குப்பத்து பெண்கள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும்? என்பதை பேசியிருக்கிறார்.
சீரான இயக்கம், தெளிவாக கதை, சொல்லி இருப்பது வரவேற்பு குறியது.

இயக்குனர் .எந்த சமரசமும் செய்யாமல், அந்த திரைக் கதையின் ஆழத்தையும் வலிமையையும்
தந்து இருக்கிறார்.
ஆர்யா கதாபாத்திரம், எமோஷனலாகவும், வலுவானதாகவும் உள்ளது .
இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் மற்றும் எழுத்தாளர் முரளி கோபி கூட்டணி மீண்டும் இணைந்த படம் இதுவாகும். இவர்கள் முன்பு புகழ்பெற்ற Tiyaan படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியாக மாறி இருக்கிறது.

🧶மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகம் பணியாற்றியுள்ளனர் இதனால் படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பு கிடைத்துள்ளது.
அரசியல் பின்னணியில் உள்ள ஆக் ஷன் கதை இது. ஆனால், அரசியல் கதை இல்லை.

🧶 இசை, காந்தாரா படக்குழு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இவர் காந்தாரா படத்தின் இசைக்காக பெரிதும் பாராட்டப்பட்டவர்.
இந்தப் படத்தில் பின்னணி இசையில், மிரட்டி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளில், உருக்கத்தை இசையால் கொண்டு வந்திருக்கிறார்.

ஆர்யா

🧶ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான படம் இது.
அவருக்கு காதல், காமெடி ,நடனம் என்று எதுவும் இல்லாமல் தனித்த பாணியில் ஆக்சன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார்.
ஈழத் தமிழராக, வலி வேதனைகளை சுமந்து ,கண்களில் ஒருவித கலவரம், பதட்டத்தோடு, படம் முழுக்க பவனி வருகிறார் ஆர்யா. தயாரிப்பாளராகவும் இருப்பதால், அதிக சுமையோடு இந்த படத்தை எடுத்து, நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
ஆர்யாவின் தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்முரட்டுத்தனமான, இயற்கை சூழலுக்கு ஏற்ற தோற்றத்தில் ஆர்யா காணப்படுகிறார்
காட்டின் அமைதிக்குள் மறைந்திருக்கும் அவர் யார்?
நடிகர் ஆர்யா இதில் ஒரு தமிழர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
அதுவே சிறப்பு.
திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு, கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் நடைபெறும் கதை இது. எனவே படத்தில் தமிழ், மலையாள மொழிகள் இயல்பாக இடம்பெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞனாக நடித்திருக்கிறார்
ஆர்யா.
வெறித்த பார்வை, உறவுகளை இழந்த சோகம், குப்பத்து மக்களின் சராசரி வாழ்க்கையில் போலீஸ் அராஜகம்,
தமிழ் இனத்தின் இளைஞர்களை காட்டி கொடுத்த
பெருமாள் முதலியாரைக் கொல்லும் போது ஆவேசம்.

முதல்வர் பேரன் மாதவனை, கராத்தே கிளாஸில் இருந்து கனிவோடு கூட்டி வரும் அந்த மனிதநேயம்.
மனித மிருகம் ஐ ஜி ராவ் ,கார்த்தி என்ற பெண்மணியை, சிகரட்டால் உடம்பெல்லாம் சுட்டு சித்தரவதை செய்யும் அந்த காட்சியில், காட்டுக்குள் ராவை புரட்டி எடுக்கும் ஆவேசம்.
என படம் முழுக்க ஆர்யா இந்த படத்தில் ஒரு மௌன புரட்சி செய்திருக்கிறார்.

🧶🧶மற்றும்,இந்திரன்ஸ், சுனில், நிகிலா விமல், போஸ் வெங்கட், அஞ்சலி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

🧶அதுவும் தெலுங்கு ஐஜி ஆக வரும் ராவ் வேடத்தில் ,சுனில் மிரட்டி இருக்கிறார். கார்த்தி, என்ற பெண்ணை கொடுமைப்படுத்துவது, சூழ்ச்சி செய்து நான்கு பேரை தீர்த்து கட்டுவது, கிளைமாக்ஸ் காட்சியில் ஆர்யா கையால் அடிபட்டு விழுவது, என படமுழுக்க இவர் ராஜ்ஜியம் தொடர்கிறது.

🧶போஸ் வெங்கட், ஈழத்தமிழர் திருப்பாச்சி, என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.

🧶இந்திரன்ஸ், கிருஷ்ணன் குட்டி, என்ற கூலிப்படைத தலைவனாக, நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார்.

.🧶நிகிலா விமலும் முக்கிய வேடத்தில்
நடித்திருக்கிறார்.

🧶யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார் .
.காட்டில் படப்பிடிப்பு நடத்துவது சவாலாக படமாக்கி இருக்கிறார். வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை சூழல் காரணமாக படக்குழு பல சிரமங்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் ஒளிப்பதிவாளருக்கு மிகவும் சிரமமான சவாலான பங்கு இருக்கிறது என்பதை உணரலாம்.

🧶படத்தொகுப்பு:
ரோஹித் வி.எஸ். வரியத்
படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு, பக்க பலமாக அமைந்திருக்கிறது. காட்சிகள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் செதுக்கியிருக்கிறார்.

🧶கலை இயக்கம்:
ரஞ்சித் கோதேரி
காட்டுக்குள் வீடு, அனந்தன் காடு, குப்பத்து மக்களின் குடிசைகள், ஆரம்பக் காட்சியில் வரும் ஈழத்தில் நடக்கும் சண்டை காட்சி, என ஆர்ட் டைரக்டர் அற்புதமாக, வடிவமைத்திருக்கிறார்.

🧶நிர்வாகத் தயாரிப்பாளர்:
ஜெயின் பால்

🧶சண்டைக் காட்சிகளை
ஆர். சக்தி சரவணன்
அமைத்திருக்கிறார். ஒவ்வொரு சண்டை காட்சிகள் அனல் தெரிகிறது. ஈழத்தில் நடக்கும் ஆரம்ப கால சண்டை காட்சியும், பெருமாள் முதலியாரை கொல்லும் பொழுது காளை மாடுகள் மிரட்டல், அதிரடியான அந்த சண்டை காட்சி , ராஜஸ்தானில் நடக்கும் சண்டைக் காட்சி என,செம விறுவிறுப்பு.

விஎஃப்எக்ஸ் இயக்கம்:
பினோய் சதாசிவன்

🧶ஒப்பனையாளர்
பைஜு எஸ்
படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் ஒப்பனை, கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

🧶ஒலி வடிவமைப்பு:
அருண் எஸ். மணி

🧶ஒலி கலவை
விஷ்ணு பி.சி

🧶பாடல்களை
பழனி பாரதி • முரளி கோபி
எழுதி இருக்கிறார்கள். வீரமான பாடலும், சோகமான பாடலும், பார்க்கும் பொழுது இதயம் கனக்கிறது.

🧶ஆடை வடிவமைப்பாளர்
அருண் மனோஹர்
அனைவருக்கும் ஏற்ற உடைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

மக்கள் தொடர்பாளர்கள்.

🧶திரு. ரியாஸ் அகமது அவர்கள்.
திரு.பாராஸ் ரியாஸ்
அவர்கள்

மொத்தத்தில் இந்த “அனந்தன் காடு”
ஈழத் தமிழர்களின் வேதனை, வலிகளை, அழுத்தமாக பதிய வைத்திருக்கிறது.
துரோகம், சூழ்ச்சி
செய்யும் அதிகார வர்க்கம், போடும் ஆட்டம் சாதாரண ஏழை மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை அருமையான கதைக்களத்தோடு சொல்லி இருக்கிறது நிச்சயம் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்🌷