சங்கராபுரம் என்ற ஊரில், அகிம்சையே சிறந்த ஆயுதம்” என்று சித்தாந்தங்களை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வரும் ராஜ்கிரண்(சிவநேசன் )தனது ஊரில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.
அதிகாலை 3 மணிக்கு எழுந்து தனியாளாக சென்று அவரே மாவு அரைத்து, அவரே சட்னிக்கு எல்லா பொருட்களையும் அரைத்து ,சுவைபட இந்த ஊருக்கு இட்லி கொடுப்பதால் அந்த ஊரில் அவர் புகழ் பெற்று விளங்குகிறார்.
அந்த இட்லி கடைதான் அந்த ஊருக்கே அடையாளமாகவும் விளங்குகிறது. ராஜ்கிரணின் செல்ல புதல்வன் தனுஷ்(முருகன்) தனது தந்தையை போலவே தானும் ஆகவேண்டும் என்பதற்காக கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு,
தனது வாழ்க்கை அடுத்தகட்டத்திற்கு போக வேண்டும் என்று தந்தையின் விருப்பத்தை மீறி, வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்.
சொந்த ஊரை விட்டு தனுஷ் ,செல்வது ராஜ்கிரணுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தனது மகனின் ஆசைக்காக அவர் சரி என சொல்ல ஊரில் இருந்து புறப்படுகிறார்.
அங்கிருந்து கதை பேங்காக் செல்கிறது.
அங்கு நடக்கும் சுவராசியங்கள் தனுசை ,அருண் விஜய் (அஸ்வின்) வெறுப்பது , என கதையின் போக்கில் சூடு பறக்க. சத்யராஜின் ஏஃப்சி நிறுவனத்தில் மூத்த செஃப் ஆக அஹிம்சை வழியில் இருக்கிறார் தனுஷ்.
சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டேவும், தனுஷும் காதலிக்க, அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இது ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தனுஷின் தந்தை ராஜ்கிரண் இறந்துபோகிறார்.
இது படத்தில் மிக முக்கியமான திருப்பமாக அமைகிறது. மன அழுத்தத்துடன்
அப்பா இறந்த செய்தியை கேட்டவுடன் பாங்காக்கில் இருந்து உடனடியாக தனது ஊருக்கு வருகிறார் தனுஷ். தந்தையின் மரணத்தின் துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கும் தனுஷுக்கு அடுத்த அடியாக அவருடைய அம்மாவும் இறந்துபோக, சுக்குநூறாக உடைந்து போகிறார்.
தனுசுக்கு ஆதரவாக நித்யா மேனன்(கயல்)இருக்க, மறுபக்கம் என்ன நடந்தாலும் திருமணம் நடக்கவேண்டும், இது நம் குடும்பத்தின் கவுரவ பிரச்சனை என சத்யராஜ் கூற, என்னால் திரும்பி வரமுடியாது என தனுஷ் சொல்கிறார். திருமணமும் நடக்காமல் போகிறது.இந்த காட்சிகள் மிகவும் எதார்த்தம் நிறைந்த காட்சிகளாக இருப்பதால் ரசிகர்கள் கதையோடு பயணிப்பது சிறப்பு..
அருண் விஜய் தங்கையின் திருமணம் நின்றுபோன கோபத்துடன் தனுஷின் ஊருக்கு வருகிறார்,
தன் அப்பாவை மறக்கமுடியாத தனுஷ் தனது தந்தையின் இட்லி கடையை எடுத்து நடத்த தனுஷ் முடிவு செய்கிறார். அவருக்கு துணையாக நித்யா மேனன் நிற்கிறார்
அந்த காட்சிகள் படத்தின் ஆணி வேர் ஆக உள்ளது
அங்கு வரும் அருண் விஜய்,தனுஷை அடித்து உதைக்கிறார்.
அந்த இண்டர் வெல் பிளாக் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.
இது பிரச்சனையாக மாறுகிறது. அருண் விஜய் Vs தனுஷ் என்கிற சூழல் ஏற்பட
ஆவேசத்தின் உருவமாக அருண் விஜய் ,நித்யா மேனனை அடையத் துடிக்கும் மாரி சாமியாக சமுத்திரக்கனி ,
மகனைக் காப்பாற்ற துடிக்கும் தந்தையாக சத்தியராஜ் , இப்படி நாலா புறமும் எதிரிகள் சூழ, அகிம்சையேசிறந்த ஆயுதம்” என்று அப்பாவின் கொள்கையை கையில் எடுக்கும் தனுஷ் எப்படி இந்த எதிரிகளை முறியடித்தார்? என்பது மீதி கதை.
நாயகன்& இயக்குனர்
இயக்குநர் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழகான, மிகவும் எமோஷனலான திரைக்கதையோடு நமக்கு வழங்கியுள்ளார்.
எல்லா காட்சிகளும் நமக்கு மனதோடு ஒத்துப் போகிறது.
இயக்குனர் நினைத்து இருந்தால் மீராவோடு ஒரு டூயட் காட்சி வைத்திருக்கலாம் வெளிநாட்டில் அதை தவிர்த்து இருப்பது புத்திசாலித்தனம் .
வாயில்லா ஜீவனை மாரிசாமி வெட்ட வரும்பொழுது அங்கு ஒரு அனல் தெறிக்கும் சண்டை காட்சி வைத்திருப்பது விறுவிறுப்பான உச்சம்.
இட்லி கடை நன்றாக நடக்கவில்லை என்று சோர்ந்து போகும் பொழுது கனவில் அப்பா சிவனேசன் வந்து என் அம்மா கொடுத்ததை நான் உனக்கு கொடுத்திருக்கிறேன் முயற்சி செய், என்று சொல்லும் இடம் மிக அருமை .
இப்படி பல காட்சிகளை சொல்லலாம் .
திரைக்கதையில் தெளிவு ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் குணாதிசயங்களை திரையில் காட்டி, இருப்பது சிறப்பு. இயக்குனர் தன் சொந்த ஊருக்கு பள்ளி விடுமுறையில் செல்லும் பொழுது கேட்ட சம்பவங்களை ஒரு கற்பனை தொகுப்பாக கச்சிதமாக வடிவமைத்து இருப்பது புத்திசாலித்தனம.
அதே போல், எமோஷனல் காட்சிகளை தனுஷ் சிறப்பாக இயக்கியுள்ளார். ராஜ்கிரணுக்கு பின் தனுஷ் அந்த கடையை எடுத்து நடத்துவது, சண்டைக்கு சண்டை போடுவது தீர்வு அல்ல, அகிம்சைதான் தீர்வு தரும் என சொன்ன விஷயம் சிறப்பு. அதை திரைக்கதையில் காட்சிகளாக அமைத்த விதமும் நன்றாக இருந்தது. அதே போல் தனுஷை அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தருணம், தனுஷுக்கு துணையாக தெய்வமாக ராஜ்கிரண் வந்து நின்றது, இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் என அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தன.
இயக்குனர் தனுசுக்கு நடிகர் தனுஷ், அவ்வளவு சளைத்தவரல்ல ,
முருகன் என்ற கதாபாத்திரத்தில் முத்தாய்ப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நித்யா மேனன்
உடன் காதல், அருண் விஜயுடன் மோதல், அகிம்சை தான் சிறந்த வழி அதற்கு சாதல் என்றாலும் தயார் என்று சொல்லும் பொழுதும், சமுத்திரக்கனி இடம் மோதும் பொழுது, சத்யராஜ் இடம் பணிவாக பேசும் பொழுது ,ஊர் மக்கள் தனக்கு உதவ வரவில்லை என்று ஏங்கும் பொழுதும், அந்த ஊர் மக்களே தன்னுடன் நின்று தனக்கு துணை நிற்கும் பொழுது, இமயம் அளவுக்கு நடிப்பை தொட்டு இருக்கிறார். நிச்சயம் இந்த படம் அவருக்கு விருதுகளை வாங்கித் தரும் என்பதுஉறுதி. இயக்குனராகவும், நடிகராகவும் ,சபாஷ் பெறுகிறார்.
அருண் விஜய்
அவருடைய ஈகோ தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.(அஸ்வின்) என்ற கதாபாத்திரத்தை எந்த ஒரு முன்னணி நடிகரும் ஏற்று நடிக்க மறுப்பார்கள். அதை செய்த அருண் விஜய்க்கு தனி பாராட்டு.
பாக்ஸராக, ஆவேசமாக தாக்குவதும், தனுசை காணும் பொழுதெல்லாம் உதாசீனமாக, உள்ளத்துக்குள் அலட்சியத்தை காட்டுவது, சத்யராஜ் அடித்தவுடன் பொறி கலங்கி நிற்பது.
என வில்லன் என்று சொல்ல முடியாத அளவுக்கு நம்மிடம் அனுதாபத்தையும் கைதட்டலையும் வாங்கிக் கொள்கிறார்.
கீதா கைலாசம்
தனுஷ் அம்மாவாக கஸ்தூரி, என்ற கதாபாத்திரத்தில் ஒரிரு காட்சிகள் வந்தாலும் அவரின் பிளாஷ்பேக் காட்சிகள் , அற்புதமான கட்சிகள்.
மற்றும் ராஜ்கிரண்
சிவனேசன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் அப்பாவாக, மண்ணின் மைந்தனாக ஊர் மக்களை நேசிக்கும் தலைவனாக, அகிம்சை தான் சிறந்த ஆயுதம் என்று போதிக்கும் ஒரு உயர்ந்த குணம் கொண்டவராக நடித்திருக்கிறார். இட்லி கடை மூலம் உயர்ந்து தன் வாழ்க்கையே அந்த இட்லி கடைக்காக அர்ப்பணித்த ஒரு அருமையான கதாபாத்திரம் ராஜ்கிரண் நடிப்பில் இந்த படம் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். மனதை தொடுகிறது. அவர்கள் கதாபாத்திரம் பல காலம் மனதில் நிற்கும் கதாபாத்திரம்.
பார்த்திபன் காவல்துறை ஆய்வாளராக வந்து கடைசி வரை தனுசை எதிர்ப்பாலும், கிளைமாக்ஸ் காட்சியில் கைதட்டல் வாங்கி கொள்கிறார்.
சத்யராஜ்,
விஷ்ணுவர்தன் என்ற கதாபாத்திரத்தில் குறிப்பிட்ட காட்சிகளில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் நித்யா மேனன், கயல் என்ற கதாபாத்திரத்தில் இயல்பான ஒரு கிராமத்து மங்கையாக, தனுசை நேசிக்கும் நங்கையாக, ஜம் என்றும் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார். ஷாலினி பாண்டே,
மீரா என்ற கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். வெளிநாட்டு பெண்ணாக அச்சுஅசலாக இருக்கிறது .அவரை பார்ப்பதற்கு
சமுத்திரக்கனி மாரிச்சாமி என்ற வேடத்தில் கிராமத்து குசும்பு ,கிராமத்து பகை, கிராமத்து சண்டித்தனம் செய்யும் கதாபாத்திரம் சிறப்பாக நடித்தி ருக்கிறா்.
இளவரசு ராமராஜன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜின் கம்பெனியில் பணிபுரிந்தவர், பிறகு படம் முழுக்க தனுசுக்கு ஒத்தாசையாக இருக்கிறார் .தன் அம்மாவுக்கு தன்னை பற்றிய நினைவில்லை என்று சொன்னவுடன் கலங்குவது, இறுதிக்காட்சியில் ஷாலினி பாண்டேவை கடத்துவது, என படத்தின் முதுகெலும்பாக இருக்கிறது அவருடைய கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறார் .
ஆடுகளம் நரேன், அவர்கள் ரவி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜின் மேனேஜராக வந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் பட்டையை கிளப்பி, படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார்.
ஏன் சாமி என்ற பாடல் துள்ளாட்டம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளர் கிரணுக்கு பாராட்டுக்கள்.
கிராமத்து அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது கேமரா அதேபோல பேங்காக் காட்சிகளில் ஒரு ரிச் தெரிகிறது.
எடிட்டிங் பக்கா G K பிரசண்ணா
எந்த இடத்திலும் படம் போர் அடிக்கவிடவில்லை விறுவிறுப்பு குறையவில்லை படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பாளரின் பங்கு அதிகம்.
தயாரிப்பாளர்கள்
Produced by – Dawn Pictures and Wunderbar Films Pvt Ltd presents
Produced by : Aakash Baskaran & Dhanush
Banner : Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd
தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக.
பீட்டர் ஹெயின், சண்டை பயிற்சி அனல் தெரிக்கிறது இன்டர் வெல் பிளாக் சண்டை காட்சியும்,
சமுத்திரக்கனி உடன் தனுஷ் மோதும் சண்டைக் காட்சி தேவையான இடத்தில் படத்திற்கு விறுவிறுப்பை ஏற்றுகிறது.
ஜாக்கி அவர்களின் கைவண்ணத்தில் இட்லிக்கடையும், மற்றும் பாங்காங் காட்சிகளும் அருமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது, ஆர்ட் டைரக்டராக சபாஷ் பெறுகிறார் ஜாக்கி
சதீஷ் நடனம் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார் தனுஷ் ஆடும் அந்த பொங்கல் காட்சி நடனம் ரசிகர்களுக்கு
செம ட்ரீட், கைதட்டலும் விசில் சத்தமும் பறக்கிறது
நாகு அவர்கள் காஸ்டியூமராக பணி புரிந்திருக்கிறார். பாங்காங் காட்சிகளில், தனுசுக்கு கொடுத்த கோட் சூட், இட்லி கடையில் கொடுத்த வேட்டி சட்டையும், மற்றும் சமுத்திரக்கனியின் ஆடை வடிவமைப்பு, நித்யா மேனனின் ஆடை வடிவமைப்பு, அருண் விஜயன் ஆடை ஆடை வடிவமைப்பு எல்லாமே கச்சிதமாக இருக்கிறது.
ராஜா ஒப்பனையாளராக பணிபுரிந்து இருக்கிறார் அழகான ஒப்பனை
. எதுவும் மிகையாகத் தெரியவில்ல
மற்றும் இப்படத்திற்காக உழைத்த தொழில் நுட்ப கலைஞர்கள்
Costume Designer:
Kavya Sriram
Publicity Design: Kabilan
Production Controller: D.Ramesh Kuchirayar
Marketing Head:- Manoj Maddy
PRO : Riaz K Ahmed – Sathish AIM
Music and Digital Partner – Saregama
Executive Producer: Sreyas Srinivasan
என அனைவரும் இந்த வெற்றி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் .அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த இட்லி கடை சுவையாக இருக்கிறதா மீண்டும் சுவைக்க தோன்றுகிறதா?
ஹை லைட்ஸ்
🧶கதைக்களமும் அழகான திரைக்கதையும்
நேர்த்தியாக இருக்கிறது
🧶மனதை தொடும் எமோஷனல் காட்சிகள்
ஆர்ப்பாட்டம் இல்லாத அனைவரின் நடிப்பு
🧶பாடல்கள், பின்னணி இசை
பாடல் எழுதிய கவிஞர்கள் அனைவரும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்
🧶ஒளிப்பதிவு
கிராமத்து அழகை அள்ளி கொண்டு வந்திருக்கிறது கேமராவுக்கு திருஷ்டி சுத்தி போட வேண்டும்
🧶மண்மணம் மாறாத கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், எல்லா தரப்பு ரசிகர்களையும் பாராட்டுகளை வாங்கிக் கொள்ளும்
🧶 தனுஷ் அவர்கள் எதார்த்தமாக சொன்ன கதைக்களம் அதிக பில்டப் இல்லாமல் நடித்த நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்திருக்கிறது.
மொத்தத்தில், இந்த இட்லி கடையில் சாப்பிட்ட இட்லியும், சாம்பாரும் செம சுவையாக இருந்தது.
மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்
வெற்றி பட்டியலில் இட்லி கடை🙏
