கதை களம்
காந்தாரா ,அடர்ந்த காட்டுப்பகுதி அங்கு சென்றவர்கள் திரும்பி வந்தது கிடையாது. அங்குள்ள ஈஸ்வரன் பூந்தோட்டத்தில் ஆதிவாசிகள் கூடியிருக்கிறார்கள்.
அங்கு கிணற்றில் இருந்து ஒரு குழந்தை கிடைக்கிறது . அவர் தான் நாயகன் (ரிஷப் ஷெட்டி)
பார்வதி தேவி புலி ரூபத்தில் வந்து, அந்த குழந்தைக்கு பாதுகாப்பு தருகிறார்.
பாங்காரா நாட்டு மன்னன் காந்தாராவைஅடைய சென்று மரணம் அடைகிறார்.
அவரது மகன் ஜெயராம் ஆட்சி பொறுப்பை ஏற்கிறார் .அவருக்கு இரண்டு குழந்தைகள் குலசேகரன், கனகவதி இவர்கள் இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் குலசேகரனுக்கு பட்டம் சூட்டுகிறார் மன்னர் ஜெயராம் .
அதே சமயம் காந்தாராவில் காட்டுக்குள்ளேயே வாழ்ந்த ரிஷப் செட்டி தன்னுடைய பகுதிக்கு வேட்டையாட வந்த
குலசேகரனை என்கிற மன்னனை ஓட வைத்துவிட்டு அதில் ஒரு வீரரான சென்னப்பாவை, அழைத்துக் கொண்டு தன்னுடைய தோழர்கள் எல்லாம் அழைத்துக் கொண்டு பங்காரா அரண்மனைக்கு வருகிறார்.
அங்கு இளவரசி கனகவதியை பார்க்கிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது துறைமுகத்தில் வியாபாரம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை பார்த்து, ஈஸ்வரன் தோட்டத்து மக்களை விவசாயம் செய்ய வைத்து, ரிசப் செட்டி எல்லோரையும் வியாபாரி ஆக்குகிறார்.
இதை அறிந்தமன்னன் குலசேகரன் காந்தாரா பகுதியில் இருக்கும் ஈஸ்வரன் தோட்டத்துக்கு சென்று , எல்லோரையும் கொன்று குவித்து, நரக வேட்டை ஆடுகிறான். அங்குள்ள கடப்பாவாசிகள், சிவபெருமானை தங்கள் சக்திக்கு கொண்டு வந்து கடவுளை வசமாக்குகிறார்கள்.
ஈஸ்வரன் தோட்டத்தில் வாழ்ந்த மக்களை குலசேகரன் கொன்று குவித்ததால், அவனையும் அவன் வீரர்கள் அனைவரையும் கடவுள் ரூபம் எடுத்து அனைவரையும் வேட்டையாடுகிறார் ரிஷப் செட் டி.
தன் அண்ணனை கொன்ற ரிஷப் ஷெட்டியை, நாயகி கனகவதி பழி வாங்கினாரா? அல்லது காதலனுடன் கைகோர்த்தாரா? என்பதை பிரமாண்டமாக சொல்லியிருக்கிறது இப்படம்.
காவல் தெய்வம், காட்டுப்பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள்,பாங்காரா” அரசன் அதிகாரவரம்பு, வனம் வந்த பிறகு நடக்கும் கட்டுப்பாடுகள்,
தொட்டால் தீட்டு, என அனைத்தையும் கமர்சியலாகவே ‘காந்தாரா’1 காட்டியிருந்தாலும் நம் கண்களை அசரவிடாமல், இழுத்துப் பிடித்து இருக்கையில் அமர வைத்து விடுவதுதான் இதன் திரைக்கதை மாயம். அந்தக் காட்டின் மாயம் என்று கூட சொல்லலாம்.
மூண்றுமணி நேரத் திரைப்படத்தில், ‘கடப்பாவாசிகள், தேவாங்குரத்தம், ஈஸ்வரன் தோட்டத்து மக்களுடன், அதைத் தொடர்ந்து நடக்கும் மோதல், எதிர்பார்ப்பது போலவே அரசன் வில்லன், அம்மக்களின் பண்பாட்டுப் பின்னணி, திடீரென ஆட்டம் காட்டிப் போகும் காவல் தெய்வம், ‘காந்தாரா’ காட்டும் உலகம் வியக்க வைக்கிறது.
அதற்கு, காட்டின் அமைதியையும் ஆவேசத்தையும் ஒரு சேரக் காட்டும் அசத்தலான ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் , படத் தொகுப்பும், கலைஇயக்கமும், பெரும் பலமாகி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வந்தபின்னும் அதன் தாக்கத்தை உணர்த்தும் இவர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
🧶*நாயகன் ரிஷப் ஷெட்டி
நாயகன் ரிஷப் ஷெட்டி(Berme) என்ற கதாபாத்திரத்தில் படத்துக்குத் தூணாக நிற்கிறார்., ஆக்ரோஷம், காதல் தன்மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று ஏக்கம், எதிரிகளைப் பந்தாடும் ஆவேசம் என அவர் நடிப்பில் அத்தனை இயல்பு. கிளைமாக்ஸில் அருள் வந்து அவர் போடும் ஆட்டமும் ஆக்ரோஷமாக எதிரிகளை வேட்டையாடுவதும் சிலிர்க்க வைக்கிறது.
இவருக்கு நம்ம ஊரு நாயகன் மணிகண்டன் தான் டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அவ்வளவு அற்புதமாக பொருந்தி இருக்கிறது .
புலி வழிகாட்ட, ,தேவாங்குவிடம் இருந்து தப்பிப்பது , அம்மா மரணத்தில் அலறுவது , என் மனுஷன் நடிப்பிலும், இயக்கத்திலும் பிச்சு உதறி இருக்கிறார். பல கோடி பட்ஜெட் என்கிறார்கள் என்று வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகனும், இயக்குனரும் ஆன ரிசப் செட்டி . அவரது டீம் அனைவருக்கும் சல்யூட்
நாயகனை வீரசூரனாகக் காட்டுவது , முதல் சண்டைக்காட்சியில் மக்கள் வணிகம் செய்யும் இடத்தில் அந்த தேர் சண்டை , அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது பாய்ந்து ஏறிச் சென்று கனகவதியை பார்க்கும் அந்த காட்சி அவ்வளவு அற்புதமாக படமாக்கப்பட்டு இருக்கிறது.
கடப்பாவாசிகளுடன் மோதும் அந்த சண்டை காட்சி படு பயங்கரம்.
கிளைமாக்ஸில் நாயகன் சாமி வந்து ஆடும் அந்த காட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது .
5 வருடமாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் ரிஷப் செட்டி அதன் பலன் கண் முன் தெரிகிறது.
என்றால் அது உண்மைதான் ‘காந்தாரா’வின் காந்தமாக திகழ்கிறார் நாயகன் & இயக்குனர் வாழ்த்துக்கள் சார்.🙏
🧶நாயகி ருக்மணி வசந்த்
காதலுக்காகவே வந்து போகும் நாயகி அல்ல, ருக்மணி வசந்த், பார்வையிலே ஒரு தீர்க்கம், தனது எதிரி இவர்தான் என்று கண்ட பிறகு அந்த எதிரியை வீழ்த்த போடும் வஞ்சகத் திட்டம், அண்ணனுக்கு சொல்லும் ஆலோசனை , துறைமுகத்தில் நாயகனுடன் போடும் வியாபார ஒப்பந்தம். கிளைமாக்ஸ் காட்சியில் யாகம் செய்து எதிரியை வீழ்த்த துடிக்கும் அந்த வீரம், என்று கனகவதியாக கண்களுக்கு விருந்து மட்டுமல்ல கதைக்கும் நாயகியாக அற்புதமாக நடித்திருக்கிறார் ருக்மணி வசந்த் .
தாத்தா காந்தாரா பகுதிக்குள் சென்று திரும்பி வரவில்லை நான் அந்த காந்தாரப்பகுதியை மீட்பேன் என்று, காந்தாராவை மீட்க வரும் அரசப் பரம்பரை குல் சன் தேவையா” நடிப்பு குல சேகரனாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றும் ஜெயராம் நடிப்பு நன்றாக இருக்கிறது.
இதில் நடித்த அத்தனை நடிகர்களும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் குழு:
🧶ஸ்டுடியோ : ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு : விஜய் கிரகந்தூர்
🧶எழுதி & இயக்கியவர் : ரிஷப் ஷெட்டி
படத்துக்காக எவ்வளவு மெனக்கெட்டு ஒரு அற்புதமான கதையை தந்திருக்கிறார். காந்தாராவில் ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை இந்த காந்தாரா லெஜெண்ட் சாப்டர் ஒன்” அதைவிட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டம், பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் 200 பேர், 300 பேர் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் திறமையாக வேலை வாங்கி ஒரு அருமையான இயக்குனர் பிரமாண்டமான படம் என்றால் இதுதான் என்று சொல்ல வைத்திருக்கிறது. இந்த காந்தாரா சேப்டர் ஒன் “
🧶ஒளிப்பதிவு இயக்குநர் : அரவிந்த் S காஷ்யப், ISC
ஒளிப்பதிவாளரின் கோணம், கடுமையான உழைப்பு ,ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார் .
காந்தரா காட்டுக்குள் நடக்கும் அந்த திகிலான காட்சிகளும், அரண்மனையில் நடக்கும் அந்த குலசேகரனின் போதை ஆட்டமும், கனகவதி யின் அழகு, அழகான காதலையும் சிவன் கோயிலையும், துறைமுகக் காட்சிகளையும் ,அந்த இரவு நேர விளக்குகளையும் ஒளிப்பதிவாளர் அற்புதமாக கண்களுக்கு விருந்தாக தந்து இருக்கிறார்.
🧶இணை எழுத்தாளர்களாக அனிருத் மகேஷ், ஷானில் கவுதம பணி புரிந்து இருக்கிறார்கள் சிறப்பு.
🧶: B. அஜனீஷ் லோக்நாத்
இசையில் பாடல்கள் மிரட்டுகிறது பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ரிசப் செட்டி அருள் வந்து ஆடும் காட்சிகளில் ஓங்காரம் போடும் அந்த ஒலிச்சத்தம் படம் விட்டு வெளியே வந்த பிறகும் நம் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இசை ஓம்காரம்
புரொடக்ஷன் டிசைனர் : பாங்க்லான் சிறப்பு
🧶ஆடை அலங்கார இயக்குநர் : பிரகதி ஷெட்டி பணி புரிந்து இருக்கிறார். தரமான ஆடை வடிவமைப்பு, அரசவையில் அத்தனை வீரர்களுக்கும் ஆடை வடிவமைப்பு, ஈஸ்வரன் தோட்டத்து மக்களுக்கு ஆடை வடிவமைப்பு, கடப்பாவாசிகள் ஆடை வடிவமைப்பு, கனகவதி ஆடை தேர்வு, என அனைத்தும் கச்சிதமாக பொருந்தி ஆடை தேர்வில் விருது பெரும் அளவுக்கு உழைத்திருக்கிறார்
பிரகதி ஷெட்டி
🧶ஆர்ட் டைரக்டராக தரணி கங்கேபுத்திரா
பணி புரிந்து இருக்கிறார் அவருக்கு நிச்சயம் இந்த ஆண்டின் தேசிய விருது கிடைப்பது உறுதி .
என்ன ஒரு கலைநயம் மக்கள் மத்தியில் உருண்டோடி வரும் தேர் ,
அரசன் கட்டி வரும் சிவன் கோயில்,
அரசவை குலசேகரனின் அந்தப்புரம், சிறைச்சாலை, துறைமுகப் பகுதி கிளைமாக்ஸ் காட்சியில் போர் வீரர்கள் பரந்து வரும் அம்புகள் ,என ஆர்ட் டைரக்டர் உழைப்பு அற்புதமாக இருக்கிறது. பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் சார்.
எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : ஆதர்ஷ் J.A, பிரமோத் ஷெட்டி
🧶ஸ்டண்ட் அமைப்பாளர்களாக, அர்ஜுன் ராஜ், டோடார் லாசரோவ் (ஜூஜி), ராம் – லக்ஷ்மண், மகேஷ் மாத்யூ, மிதுன் சிங் ராஜ்புத்
ஆகியோர் பணி புரிந்திருக்கிறார்கள். காந்தாரப்பகுதியில் ஆரம்பத்தில் நடக்கும் சண்டை காட்சி, புலியுடன் நாயகன் வருவது, கிளைமாக்ஸ் சண்டை காட்சி, பரந்து பறந்து நாயகன் போடும் சண்டை காட்சி, ஈஸ்வரன் தோட்டத்து மக்களை குலசேகரன் அழிக்க வரும்பொழுது நடக்கும் சண்டை காட்சி, கடப்பாவாசிகளுடன் நடக்கும் சண்டை காட்சிகள் ,என ஒவ்வொரு சண்டை காட்சிகள் மிரட்டுகிறது. இவர்களின் உழைப்பு கடுமையாக இருக்கிறது .அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகன் ரிசப் செட்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
🧶நடன பயிற்சி யை புஷன், ஷெட்டி
அமைத்திருக்கிறார். நாயகன் அருள் வந்து ஆட்டமாடும் அந்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெறும். திரையரங்கில் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது நடனம் .
🧶சுமரஷ் அவர்கள் படத்தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார் எந்த இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையாமல் போவதற்கு படத்தொகுப்பாளரின் பங்கு அதிகம். இடைவேளைக்குப் பிறகு படம் ராக்கெட் வேகத்தில் சர்ரென்று போடவதற்கு, படத்தொகுப்பாளரின் பணி தான் மிக முக்கியம் வாழ்த்துக்கள் சார் .
விஎஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: சஞ்ஜித்K.V,
அருமையான மாயாஜாலம் வி. எப். எக்ஸ் புரிந்திருக்கிறது புலி, தேவாங்கு , தேனீக்கள்,மற்றும் காந்தாரப் பகுதிகளில் நடக்கும் அந்த மர்ம நிகழ்ச்சிகள், அனைத்திற்கும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி, என எல்லா இடங்களிலும் சிறப்பாக இருக்கிறது.
🧶DI : கலர்பிளாஷனட்ஸ் ஸ்டுடியோ
,ஷகாச்சி
கலரிஸ்டாக பணிபுரிந்து இருக்கிறார்.
🧶மக்கள் தொடர்பாளர் யுவராஜ், இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். நல்ல முறையில் அவருக்கும் வாழ்த்துக்கள்.
🧶மொத்தத்தில் இந்த காந்தாரா லெஜெண்ட் சாப்டர் ஒன்” ரசிகர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் .
பிரம்மாண்டம் என்றால் இதுதான் பிரமாண்டம் என்று சொல்ல வைக்கும். ஒரு நல்ல படைப்பு காந்தாரா” வெற்றி பட்டியலில்”
