வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’
இப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கதை களம்
ஜவுளிக்கடை வியாபாரத்தில் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரன், வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சந்தித்து,தன் மகனுக்கு இருதய நோய்க்காக 80 லட்சம் வட்டிக்கு கடன் வாங்குகிறார்.
கடுமையான வட்டி போட்டு கட்ட முடியாதவர்களின் மனைவி, மகளை தூக்கி வந்து அந்தப்புரத்தில் அனுபவித்து, வேலைக்காரியாக நடத்தும், கந்துவட்டிக்காரர்
களாக, விட்டல் ரவி,மற்றும் புதுப்பேட்டை சுரேஷ் இரு வரும் மனித நேயம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
சூப்பர் வட்டி ,ஸ்பீடு வட்டி, ஜம்போ வட்டி என்று வட்டிக்கு மேல் வெட்டி போட்டு 80 லட்சம் கடன் வாங்கியதை, ஒரு கோடியாக திருப்பி செலுத்தியும், மறுபடியும் கடன் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள் .
கடன் வாங்கியவர்கள், அந்த கடனிலிருந்து தப்பிப் பிக்க முடியாமல் ,திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் மனைவி பிள்ளைகளை தூக்கிப் போய் பாலியல் அத்துமீறல் ஈடுபடுகிற, அந்த கொடூர மனிதர்களிடம் தப்பிக்க முடியாமல் ரவிச்சந்திரன், சில விபரீத முயற்சிகளை எடுக்கிறார். தூக்கு போடப் போகிறார், விஷம்அருந்த பார்க்கிறார். கையை கீறி ரத்தம் இழந்து சாகத் துடிக்கிறார். மனைவி மக்களை கத்தியால் குத்தி விட்டு தானும் செத்து போகலாம், என்று நினைக்கிறார் தப்பியோட நினைக்கிறார். ஆனால் அந்த கொடூரமான மனிதர்கள் அவர்களை வாட்டி சித்திரவதை செய்கிறார்கள். இதோடு ஆரம்பத்திலிருந்து ஒரு சைக்கோ கொலைகாரன் ரோட்டில் வருபவர்களை கொன்று கொண்டிருக்கிறான். யார் அவன்? அவனுக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்! என்று அற்புதமான திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குனர் கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் இலங்கை வேந்தன் .
என்ற ஒற்றை லைன் தான் படத்தின் கதை…..சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் கடன் வாங்கி வியாபாரம் செய்து அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக படமாக தந்திருக்கிறார் இயக்குனர்
நடிகர் & நடிகைகள்
வட்டிக்கு வாங்கி அல்லல் படும் ரவிச்சந்திரன் ஆக (ரஞ்சித் )அற்புதமாக நடித்திருக்கிறார் .
ஒரு மனிதன் கடன் வாங்கினால் எப்படி சிரமப்படுவாரோ, எப்படி துன்பப்படுவாரோ அதை தன் நடிப்பின் மூலம் பட்டை தீட்டிய வைரமாக நடிப்பில் ஜொலித்திருக்கிறார். அற்புதமான நடிப்பு, நல்ல கதாபாத்திரம் தன் மகளை ,மகனை விஷம் வைத்துக் கொள்ள நினைப்பது, மனைவியை கத்தியால் குத்தத் துடிப்பது, தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு சாக நினைப்பது, இப்படி இறுதி முயற்சியாக அவர் செய்யும் முயற்சிகள் தான் இந்த படத்தில் மிகப்பெரிய பலமாக அவர் நடிப்பில் நன்றாக வந்திருக்கிறது.
நாயகி மெகாலி
(வாணி )என்ற கதாபாத்திரத்தில் குமார், என்ற மகனுக்கும், கௌரி என்ற மகளுக்கும் அம்மாவாக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரஞ்சித்தின் மனைவியாக படம் முழுக்க ஒரு குடும்பத் தலைவியாக, கணவனுக்கு ஆறுதல் சொல்லும் நல்ல ஒரு பெண்மணியாக அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார்
கதிரவன் கிரைம் இன்ஸ்பெக்டராக வந்து இறுதியில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் .
மிரட்டி இருக்கிறார்கள் விட்டால் ராஜா, புதுப்பேட்டை சுரேஷ், மற்றும் குணா கமல்,
சதீஷ், மோனிகா, நீலேஷ் நல்லா நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
படம் முடியும்போது விஜய் சேதுபதியின் வாய்ஸ் படத்திற்கு பக்கபலமாக வந்திருக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குநர்& தயாரிப்பாளர் வெங்கட்ஜனா இயக்கத்தில் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’
இன்று மிடில் கிளாஸ் மக்கள் கடன் வாங்கி சிரம படும் வாழ்க்கை மீட்டர் வட்டி,, ஸ்பீடு வட்டி, ஜம்போ வட்டி என்று கடன் வாங்கி கொடுக்க முடியாதவர்கள் மனைவியை தூக்கி பல வந்த படுத்தி அவமானப்படுத்தும் செயலில் இறங்கி , கடன் வாங்குபவர்கள் தற்கொலை முயற்சி செய்பவர்கள் திருந்த வேண்டும் என்று கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வாழ்த்துக்கள்.
சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவு அருமை
சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் பரவசத்தை தருகிறது.
வடிவேல் – விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு படத்தை சீராக கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள்.
கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார் சிறப்பாக இருக்கிறது.
தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக தயாராகி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கிறார். அஜய் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் அஜய் வழங்குகிறார்.
இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் வேலு ,சிறப்பாக படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த படம் தற்கொலையை தடுத்து நிறுத்தும் வகையில், விழிப்புணர்வு படமாக வந்திருக்கிறது. வியாபாரம் செய்து கடன் வாங்கி சிரமத்திற்கு ஆட்ப்பட்டவர்கள் இந்த படத்தை பார்க்கும் பொழுது மிகவும் கனெக்ட் ஆவார்கள். வறுமையோடு வாழ்ந்தாலும் கடனோடு வாழக்கூடாது. என்ற முடிவு எடுப்பார்கள் இந்த படம் பேசப்படும் என்பது உறுதி.
சோக காட்சிகளோடு மகிழ்ச்சி காட்சிகள் கலந்து தந்து இருக்கலாம் கதை சீராக செல்ல வேண்டும் என்று இயக்குனர் நினைத்து இருப்பாரோ?
மொத்தத்தில் பாராட்ட வேண்டிய படைப்பு மக்கள் பார்த்து திருந்த வேண்டிய படைப்பு.
