மருதம் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பு : சி. வெங்கடேசன்

கதை களம்
ராணி பேட்டை அருகில் உள்ள கல் புதூர் ,கிராமத்தின் விவசாயி கண்ணியப்பன், (விதார்த்)
அவரது மனைவி சிந்தாமணி, (ரக்ஷனா)
இவர்களுக்கு ஒரு குழந்தை,
அழகான குடும்பம்
வாழ்க்கை வசந்தமாக போகிறது.
தன் மகனை அந்த ஊரில் இருக்கும் காஸ்ட்டிலியான
பள்ளியில் சேர்க்க
கதிரவனிடம்(அருள் தாஸ்) இடம் மூன்று லட்சம் கடன் வாங்கி பள்ளியில் கட்டுகிறார்.

அப்போது அவரது நிலத்தில் வங்கியில் ஏலம் எடுத்தேன் என்று ஒருவர் முள் வேலி அமைக்க,
வாங்காத கடனுக்காக நிலத்தை ஜப்தி செய்வதா? என்று
எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், நிலத்தை எப்படி மீட்டார்? என்பதே ’மருதம் படத்தின் ஒன்லைன். கண்ணியப்பன் கதாபாத்திரம்தான் கதையின் மையம்.

படத்தின் மிகப்பெரிய பலம், கதையின் நாயகன் விவசாயி கண்ணியப்பன் கேரக்டரில் நடித்துள்ள விதார்த். எந்த வசதியும் இல்லாத வீட்டில், நவீன வாழ்க்கை அண்டாத ஒரு தனி மனிதனாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். எந்தக் காட்சியிலும் அவர் விவசாயிக்கு ஏற்ற இயல்பிலேயே இருக்கிறார். அவர் மட்டுமல்ல,அவரது நண்பர் மாறன், மனைவி ரக்ஷனா, உட்படகதையின் மாந்தர்காளாக வரும் நிஜ கிராமத்து மக்களும் அப்படியே உள்ளார்கள். கிராமத்துக்கே உரிய பேச்சு வழக்கு, நையாண்டி என அனைவரும் கிராமங்களில் இருப்பதுபோலவே வாழ்ந்துள்ளனர்.

மனைவி சிந்தாமணி. வித்தியாசமான பாத்திரமாக இருக்கிறார், கதையின் நகர்வுக்கு இந்த கேரக்டர்ரசிக்க வைக்கிறது . இதே எண்ணம் மாறன் கேரக்டரை பார்க்கும்போதும் தோன்ற வைக்கிறது. இருவருமே படம் முழுக்க நாயகனோடு பயணிக்கிறார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் , ஒருவேளை வணிக நோக்கோடு இருவரையும் நடிக்க வைத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. எனினும், தினந்தோறும் நாகராஜ் தனது என்ட்ரி சீனில் ’ நம்பிக்கை முக்கியம் எனச் சொல்வதில் தொடங்கி சட்டசிக்கலை தீர்வு காண ஆதாரங்கள் வாங்குவது, போன்ற காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் பங்களிப்பை செய்துள்ளார்.
அதிலும், நீதிமன்ற காட்சிகளை எதார்த்தமாக கொண்டுவந்துள்ளார் இயக்குனர். நீதிபதியாக வரும் முக்கியக் கதாப்பாத்திரம். இன்னும் சில காட்சிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என தோணவைக்கிறது. அவரின் பாத்திர வடிவமைப்பு.

ரகு நந்தன் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசைக்கு தனதுஉழைப்பை கொடுத்துள்ளார் .
படத்தின் முதல் சீனில் இருந்து படம் முடியும் வரை….

வங்கியில் அப்பாவி விவசாயிகளின் பேரில் கடன்கள் வாங்கி ஏமாற்றும் வங்கி மேலாளர் மற்றும், சொத்தை இழந்து தீக்குளித்து இரக்கும் விவசாயி, விவசாயம் தவிர வேறு ஒன்றுமே தெரியாத அப்பாவி மக்கள், இப்படி ஏமாற்று பேர்வழிகளால் விவசாயம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை தனது திரைக்கதையால் அசால்ட்டாக சொல்லி செல்கிறார் இயக்குநர். ஒட்டுமொத்தமாக திரைக்கதை, இயக்கம், வசனம், என தனிமனிதனாக இந்தப் படைப்பை இயக்குனர் செதுக்கியுள்ளார்.
புதுமை க்கு இணையான நம்பிக்கை படைப்பு இந்த ‘மருதம்

குறிப்பாக, ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை அனுபவபூர்வமாக எங்கேஜிங்காக திரைக்குள் நுழைத்துக்கொண்ட வகையிலும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில், கார்ப்பரேட் வில்லன், அவரிடம் சிக்கி அல்லல்படும் விவசாயி, விவசாயிகளை காக்கும் நாயகன் என டெம்ப்ளேட் மாறாமல் விவசாயத்தை நெல் வயல்போல் தொழித்து எடுத்தார்கள். இதில் எந்த டெம்ப்ளேட்டுக்கும் சிக்காமல் விவசாயிகளின் வாழ்வியலையும், வங்கி மோசடியில் எப்படி ஒரு விவசாயி
அகப்பட்டு வாழ்வில் கலந்திருக்கும் என்பதையும் மிக அழுத்தமாக,
பதிவு செய்துள்ளார். ஒரு நிஜ விவசாயின் துன்பம் எப்படி இருக்கும் என்று இயக்குனர் கொடுத்திருக்கும் படைப்பே இந்த ‘மருதம்

நடிகர் & நடிகைகள்

விதார்த் – கண்ணியப்பன்
என்ற கதாபாத்திரத்தில் ஒரு விவசாயி படும் துன்பத்தை, காய்கறிகளை மூட்டையாக சுமந்து, தன் மகனை ஒரு ரிச்சான பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் ,
என்று துன்பத்தை தை அனுபவித்து,
அப்பா பெயரை சொல்லி ஏமாற்றும் வங்கி மேலாளரின் முகத்திரையை கிழித்து ,ஒரு எதார்த்த நாயகனாக இந்த படத்தில் ஜொலித்திருக்கிறார்.

நாயகி
ரக்ஷனா – சிந்தாமல்லி என்ற
கதாபாத்திரத்தில் ஒரு ஏழை விவசாயி மனைவி எப்படி இருப்பாரோ! அப்படி அற்புதமாக பொருந்தி இருக்கிறார். நடிப்பும் எந்த இடத்திலும் மிகைஇல்லாமல் இருக்கிறது .அழகான வரவுஅற்புதமான நடிப்பு.

அருள்தாஸ் – கதிர்வேல்
என்ற கதாபாத்திரத்தில் காய்கறி மண்டி நடத்துபவராக, வந்து விதாரத்துக்கு மூன்று லட்சம் கொடுத்து உதவுகிறார். அவர் சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ள, சரியான சமயத்தில் உதவி செய்யும் நல்ல கதாபாத்திரம்.

மாறன் – பழனி
என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவையோடு நல்ல குணசித்திர நடிகராக ,இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்
முடிவு சோதனை.

தினந்தோறும் நாகராஜ் – கந்தன்
என்ற கதாபாத்திரத்தில், விதார்த்துக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரம் பண்பட்ட நடிப்பு சிறப்பாக நடித்தி ருக்கிறார்.
அவர் வந்த பிறகு கதையில் ஒரு விறுவிறுப்பு பரபரப்பு.

சரவண சுப்பையா – ராஜசேகர்
என்ற முன்னாள் வங்கி மேலாளராக, அப்பாவி விவசாயிகளின் நிலங்களை ஏமாற்றி, கொடூரமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன்
இயக்குனர் அழுத்தமான படங்களுக்குச் சொந்தக்காரர். கதாசிரியர் வசனகர்த்தா , என்ற பன்முகத் திறமை கொண்டவர். இவரது இந்த படம்இயல்பான காட்சிகளையே கொண்டிருப்பது. ஆச்சரியப்பட வைக்கிறது. திரைக்கதை+அதற்கு மிகவும் சரியாக பொருந்தக்கூடிய நடிகர்கள், என தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்க்கும் இப்படத்தின் தனித்துவமான அம்சமே கதாபாத்திர உருவாக்கம்(குறிப்பாக கண்ணியப்பன்)மற்றும் ‘பளிச்’ வசனங்கள் தான்.

.தேவையற்ற சண்டை காட்சிகள்.. படு அபத்தமான காதல்.. நகைச்சுவை என்ற பெயரில் விரசம்.. என்று சினிமா போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ் சினிமாவை(மருதம்) வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும் இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ,ஒவ்வொரு வசனங்களும், ஒவ்வொரு பாடல்களும் நம் நெஞ்சில் அழியாத கதை களம் (எந்த ஒரு ஆபாசமும் இல்லாத ) ரசிக்க வைத்த பாடல் வரிகள் . பால் வடியும் முகத்துடன் சிரித்தபடியே வாயசைக்கும் குழந்தையை. மறக்க முடியுமா?
இயக்குனர் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய இயக்குனர்
இரண்டு சண்டைக் காட்சிகள் அது எதார்த்தமாக இருக்கிறது இயக்குனரின் இயல்பான திரை மொழி பேசப்படும்.

ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்
இவரை ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். ஒப்பனையில்லாத நடிகர்களை, இயற்கையான ஒளியில் அற்புதமான கதை அம்சங்களின் பின்னணியில் படம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதனின் ஆதாரமான உணர்வுகளைக் விவசாயி மூலம் யதார்த்த படமாக்கி இருக்கிறார் .

எடிட்டிங் : B சந்துரு
எந்த இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையாமல் செல்ல படத்தொகுப்பு மிகவும் உதவி இருக்கிறது. முதல் அரை மணி நேரம் குடும்பம் ஆனந்தம் என்று காட்டிவிட்டு, அதற்கு பிறகு விதார்த் வங்கி மோசடியை ஆராயும் காட்சிகளை விறுவிறுப்பாக செதுக்கியிருக்கிறார் அதன் பிறகு இடைவேளைக்கு பிறகு அரை மணி நேரம் கொஞ்சம் அழுகைகாட்சிகள் இருந்தாலும் கோர்ட்டு சீன் வந்து மீண்டும் விறுவிறுப்பு பரபரப்பை ஊட்டி படத்தொகுப்பு கச்சிதமாக நம்மை பரவசப்படுத்துகிறது.

ஒலி :T உதயகுமார்
DI : வசந்த்
: தாமு MFA ஆர்ட் டைரக்டர் ஆக பணிபுரிந்து இருக்கிறார்.
கோர்ட் சீன் ,மற்றும் வங்கி அலுவலகம், தினந்தோறும் நாகராஜன் பயன்படுத்தும் அலுவலகம், பள்ளி என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் நன்றாக பணிபுரிந்து இருக்கிறார். இயற்கையாக இருக்கிறது இயல்பாக இருக்கிறது.

ஒப்பனையாளர் மற்றும் காஸ்ட்யூமர் கதைக்கு தேவையாக கச்சிதமாக உழைத்து இருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பாளர்: A. ராஜா இந்த படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் ஒரு நல்ல படம், தனக்கான வெற்றியை அது உள்வாங்கி வெளிப்படுத்தும், அந்த வகையில் இந்த “மருதம்” பாராட்ட வேண்டிய படைப்பு. வங்கி மோசடியை தெளிவாக எடுத்து வைத்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ,மருதம் வெற்றி பெறும்.
வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா
தரமான சினிமாக்களை பாராட்டுவோம் கொண்டாடுவோம்.