வேடுவன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘வேடுவன்’ வெப் தொடர் வித்தியசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
கதை களம்

சூரஜ் (கண்ணா ரவி ) நடிக்கும் படங்கள் தொடர்ந்து நான்கு தோல்வியடைய, அதற்கு காரணம் கதையில் அவர் தலையிடுவதுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

மன உளைச்சலுக்கு ஆளாகி ,
நொந்து போகும் சூரஜ், அவர் அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க அதுவும் போலீஸ் வேடத்தில் நடிக்க கனவு காண்கிறார்.

அந்த நேரம் பார்த்து அவரிடம் ஒரு புதுமுக இயக்குனர் கதை சொல்ல வர, அது அவர் கனவில் கண்ட போலீஸ் ஸ்டோரி ஆக விரிகிறது.

அதில் சூரஜ் அண்டர்கவர் காப் ஆக வரும் அவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என இயக்குனர் கதை சொல்கிறார்.

தமிழகத்தில் உள்ள ஈரோடு, சேலம், கோவை போன்ற பகுதிகளில் அட்டூழியம் செய்யும் சமூக விரோதிகளை அவர்களது இருப்பிடத்திற்கு சென்று, மாறுவேடத்தில் பல நாள் அவர்களை கண்காணித்துப் போட்டுத் தள்ளுவதுதான் அவரது வேலை.

அப்படி சென்னையின் பிரபல ரவுடியான காடை குப்பம்
குணாவை, அவரது மீனவர் குப்பத்தில் வைத்துப் பிச்சைக்காரன் வேடத்தில் போட்டுத் தள்ளுகிறார் .
குணாவின் மனைவி ரேகா நாயர் தன் கணவனை கொன்றவன் யார்? என்று போலிஸ், சொல்லும் வரை அடக்கம் செய்ய மாட்டேன், என்று பிடிவாதம் செய்கிறார்.

அடுத்த அசைன்மெண்டாக கட்டப்பஞ்சாயத்து செய்து 40 கொலைகள் செய்த ஆதி நாதனை, என்கவுண்டர் செய்ய
மருதுபாண்டிபுரம் செல்கிறார் .அங்கு சென்று ஒரு புரோட்டா கடையில் வேலை செய்கிறார்.

அந்த ஆதியை(சஞ்சிவி வெங்கட்) கண்காணிக்கும் வேளையில் அவரது முன்னாள் காதலியை (வினுஷா) வான சாந்தியைசந்திக்க நேர்கிறது.

சாந்தியும் மொழி யை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறாள்.

போன இடத்தில்தான் தெரிகிறது அவர் கொல்ல வந்த ஆதி,அவளது கணவர் என்றும்
ஊரே அவர் மீது மரியாதை வைத்திருக்கிறது. அடுத்த எம் பி அவர்தான், என்று வலம் வருகிறார். பள்ளி குழந்தைகளை படிக்க வைக்கிறார். இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறார் .
அப்படி பட்ட வருக்கு சரோஜினி, காந்தி என்று அன்பான குழந்தைகள்.
அன்பான அந்தக் குடும்பம் என,
ஊரில் நல்ல மனிதராக வலம் வருகிறார். ஆனால் காவல்துறை அவரை என்கவுண்டர் செய்ய சொல்கிறது.

முன்னாள் காதலி சாந்தியின் அன்பு ஒருபுறம் ,கடமை ஒருபுறம் ,ஊரில் நல்ல மனிதராக வலம் வரும் ஆதியை கொள்ள வேண்டும் என்ற கட்டளை ஒருபுறம் ,என மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார் மொழி.
தன் மனைவியிடம் ஆலோசனை கேட்கிறார் மனைவியும் குழப்பத்தில் இருக்கிறார்.
பிறகு ஒரு தெளிவான முடிவுக்கு வந்து
ஆதியை என்கவுண்டர் செய்தாரா? தன் முன்னாள் காதலியை, விதவை ஆக்கினாரா?
பல குழந்தைகளை படிக்க வைத்த ஆதியை என்ன செய்தார் ?என்பது தான் கதை. முக்கியமான திருப்பம் கதைக்களம்.
அதன் பிறகு ,படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

காடை குப்பம் குணாவை, என்கவுண்டர் செய்யும் மொழி
அதற்காக பிச்சைக்காரன் வேடம் போடும் கண்ணா ரவி, அச்சு அசலாக நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு
40 கொலை செய்த தாதா ‘ஆதிநாதனை என் கவுண்ட் செய்யும் முயற்சியில் இறங்குகிறார் போது,
அவர் குழப்பத்தில் எங்கே தன் கடமையை தவறிவிடுவாரோ? என்று அச்சத்தை ஏற்படுத்துகிறார்.

பல ரவுடி களை,என்கவுண்டர் செய்த போலீஸ் ‘கண்ணா ரவிக்கும் , ஆதி நாதனுக்குமான இருவருக்குமான டாம் அண்ட் ஜெர்ரி துரத்தலே “வேடுவன்

படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும் முன், கண்ணா ரவி க்கு படத்தில் அவர் கொடுப்பதுபோலவே ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! மொழி, மொழி என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் நொடியிலேயே திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் இறுதி வரை அதகளம் பண்ணுகிறார் நடிப்பில். எண்ட்ரி ஆவதில் தொடங்கி, நம்மை. வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. சாந்தி, சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும், ஆதி நாதனிடம்
குரோதமுமாய், டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார்.கண்ணாரவி .என்னா நடிப்பு ?என்று கேட்க வைக்கும் அவர் துடிப்பு !
எப்படியும் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வரவேண்டும், என்ற அவரின் துடிப்பு நன்றாக தெரிகிறது.
வாழ்த்துக்கள் சார்.
இந்த” வேடுவன் உங்களுக்கு சரியான பாதை அமைத்துக் கொடுக்கும்.

சஞ்சீவி வெங்கட் ’ கண்ணா ரவியை மடக்கும் இடங்கள் மாஸ்!
திரை கதையை ஜெட் வேகத்தில் பறக்க வைக்கும் பரபரப்பு யுக்தி!

தாதா ஆதி நாதன்
வேடத்தில் சஞ்சீவி வெங்கட் ,சின்ன வயதில் பல கொலைகளை செய்பவர் .பெரியவன் ஆனதும் நல்லவனாக மாறி, ஊருக்குள் நல்ல பேரை சம்பாதிக்கிறார்.
தன் மனைவியை சாந்தி மா, சாந்திமா, என்று அழைப்பதும் தன் குழந்தைகளை உயிருக்கு நேசிப்பதும் ,கருப்பு இருக்கும் போது எனக்கு கவலை எதற்கு? என்று தெனாவட்டாக சொல்லும் பொழுது, தன்னை என்கவுண்டர் செய்ய வந்திருக்கும் மொழி தன் மனைவியின் முன்னாள் காதலன் என்று கண்டுபிடிக்கும் போதும் ,ஆழமான பார்வையில் தீர்க்கமான நடிப்பை அழகாக அம்சமாக தந்திருக்கிறார். சஞ்சீவி வெங்கட். இப்படி பார்த்து எத்தனை நாள் ஆச்சு திருமதி செல்வத்திற்கு பிறகு, ஆதிநாதன் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தாமல், மீதி கதையில் பிரகாசமான ஜோதியாக வெளிச்சம் தந்திருக்கிறார். வாழ்த்துக்கள் சார்.

அடுத்து வினு ஷாவின் நடிப்பு
சாந்தி, என்ற கதாபாத்திரத்தில் அழகி படத்தில் பார்த்த நந்திதா ராவ் போன்ற ஒரு தோற்றத்தில் அம்சமான நடிப்பை கொடுத்திருக்கிறார். கடைவீதியில் ஒவ்வொரு காய்கறியும் எடுத்து வைக்க சொல்லும்படி சொல்லும் காட்சியிலிருந்து, தன் கணவனை சுட்டுக் கொன்றவனை ரிவேஞ் எடுக்கும் வரை ,தன் முன்னாள் காதலன் மீது பாச மழை பொழிவதும், தன் கணவனை உயிருக்குயிராய் நேசிப்பதும், என நடிப்பில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலித்திருக்கிறார். வினுசா சாந்தியாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொள்வார்
என்பது உறுதி .

அடுத்து லாவண்யா, கண்ணா ரவியின் மனைவியாக வந்து
அவரின் முன்னாள் காதலி யுடன் நன்றாக பேச சொல்லும் ஒரு புதுமையான மனைவியாக வித்தியாசமான வேடத்தில் அசத்தியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள், படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
துணி காய போடும் போது பக்கத்து வீட்டு பெரியவர் சொள்ளு விடுவதை தன் கணவனிடம் சொல்லி சண்டைக்குப் போக வேண்டாம் என்று , பொறுப்பான மனைவியாக , மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்.

அடுத்து ஜீவா ரவி, இவர் போலீஸ் அதிகாரியாக பல டுவிஸ்ட்களுக்கு காரணமாக இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

கருப்பு என்ற கதாபாத்திரத்தில் வரும் கதாபாத்திரம் சிறப்பாக நடித்தி ருக்கிறார். கவனம் பெறுகிறார் நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு இவரின் நடிப்பு அழைத்துச் செல்லும் என்பது உறுதி

அதேபோல புரோட்டா கடையில் மொழிக்கு உதவி செய்யும் கோபால், என்ற கதாபாத்திரம் நன்றாக அமைக்கப்பட்டு இருக்கிறது ,

குழந்தைகள் அகில், சரோஜினி ,காந்தி என்ற இந்த மூன்று கதாபாத்திரங்களும் அவ்வப்போது வந்து இளந்தென்றலாக அவர்கள் நடிப்பில் நம்மை பரவசப்படுத்திவிட்டு போகிறார்கள்.

படத்தில் தயாரிப்பாளராக வருபவர். புலம்புவது நிஜமான தயாரிப்பாளரை கண்முன் காட்டுகிறது.
கதையை மட்டும் மாற்றி விடாதீர்கள் என்று ஹீரோ விடம் கெஞ்சும் பரிதாபமான தயாரிப்பாளர் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

நிஜமான சாந்தியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாரகுபதி, ஒரு காட்சிகள் வந்தாலும் மிரட்டலாக நடித்திருக்கிறார் ஹீரோவாக வரும் சூரஜ் ,முன்னாள் கால் போட்டு அமர்ந்து கொண்டு படத்தில் இது போல காட்சிகளை வைத்தால் தேவையற்ற சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்று மிரட்டும் தோனி பீதியை கிளப்புகிறது.
பார்வதி நடிப்பு சூப்பர்

ஹை லைட்ஸ்
இயக்குனர் பவன்
தன்னுடைய திரைப்பட அனுபவத்தால் ஒரு அற்புதமான திரைக்கதை.கொடுத்துஇருக்கிறார். இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழுக்கும்
போது, ஆதி நல்லவரா? கெட்டவரா? என அவர்மீது என்கவுண்டர் செய்தது சரியா? தவறா ? என்று இயக்குனர் கதை வசனம் எழுதி அருமையாக இயக்கி இருக்கிறார்.

இறுக்கமான முகத்துடன், கட்டுமஸ்தான உடல்வாகுடன் இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் கண்ணா ரவி. அந்த ஆரம்பக் காட்சியின், நீளமான சிங்கிள் ஷாட்டில் ஒவ்வொரு இன்ச்சிலும் அநாயாச நடிப்பால் அசத்துகிறார். மனைவி லாவண்யா லவ் மொமண்ட்ஸில், சாக்லேட் பாயாக மாறி ரொமான்ஸ் காட்டுகிறார். ஆதிஆநாதனாக வரும் கதாபாத்திரம்
கதை முடிச்சை அவிழ்க்கும்போது குழம்புவதும், விடை கிடைத்ததும் துள்ளுவதுமாய் நடிப்பின் சீனியாரிடியை நிரூபிக்கிறார் கண்ணா ரவி.

வினுஷா சும்மா வந்து போகாமல், முக்கிய பங்கு வகிக்கிறார். ‘சாந்தியாக’வாக வளையவரும் அவர் கதாபாத்திரம், கொஞ்சம் வித்தியாசம். வரும் காட்சிகளில் எல்லாம் எக்ஸ்ப்ரஷன்ஸில் கவர்கிறார். கண்களால் பேசி நடிக்கும் நடிப்பு க்யூட்! ‘

திரைக்கதையும், இயக்கமும்
சபாஷ் போட வைக்கிறது. ஒவ்வொரு முறை
ஆதியைகொல்ல மொழி துடிக்க,
காதலியா? கடமையா? என அதற்கு விடை சொல்லும்போதே வேறு விடைகள் கிடைப்பதுமாய் சரவெடி கொளுத்துகிறது. கதை. சீரியஸான காட்சிகளிலும் மெலிதான நகைச்சுவையை படம் நெடுகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பவன் வசனங்கள் தேவைக்கேற்ற “நச்
ஐ.ஜி இடம் சூரத் சென்று ஆதியை எதற்கு கொள்ளச் சொன்னீர்கள் என்று கேட்கும் இடம் “நச்
வசனங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாய் ஈர்க்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜன் ,
வடசென்னையையும், மருது பாண்டி புரத்தையும் அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் .

இசை பிரமாதம்
படம் நெடுக வந்து, படம் முடிந்த பின்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது விபின் தாஸ பி.ஜி.எம். ,வா கருப்பா பாடலில் ஆடவைக்கிறார்.
விபின் தாஸ்
பாடல்கள் பவன் எழுதி இருக்கிறார் .

ஸ்ரீ சசிகுமார்.கே.
ஆர்ட் டைரக்டர் பணி நன்றாக இருக்கிறது

சுராஜ் கவியின், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

உமாசங்கர் அவர்கள்,
ஒப்பனை எல்லோரையும் அழகாக காட்டியிருக்கிறார் .

மற்றும் இந்த படத்திற்காக உதவி டைரக்டர் ஆகவும் எக்ஸ்க்யூடியூ ப்ரொடியுசராகவும் முகுந்து பணியாற்றி இருக்கிறார் அவர் பணி சிறப்பாக இருக்கிறது.

நிறைய கேள்விகள் இருந்தாலும் தெளிவான திரைக்கதையும், கண்ணா ரவி, க்ளாஸ் நடிப்பும் சஞ்சீவி வெங்கட் நடிப்பு பெரிய ப்ளஸ்ஸாகக் கைகொடுக்கின்றன.

முகமது சபீர் ஆடை வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது

மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் &சிவா(AIM)
சிறப்பான முறையில் மக்களிடம் வேடுவனை, கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த என்கவுண்டர் சரியான தீர்ப்பு சொல்லியிருக்கிறது. மக்கள் மனதை கவரும் .மக்கள் மனதில் இடம் பிடிக்கும். விலங்கு, அயிலி,போன்ற வெற்றியை வேடுவன்” தொடுவான் என்பது திண்ணம்