உங்க ஆணவத்துக்கு கொலைபண்ணுவீங்களாடா , காதல் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் போய் சாவுங்கடா! என்று நாயகன் கேட்கும் அந்த ஒற்றை வார்த்தை தான் Dude படத்தின் ஒன் லைன்..
ஆரம்பத்தில் தன்னை கழட்டி விட்ட காதலி அமுதவை தேடி ,கல்யாண மண்டபத்தில் சென்று என்னை ஏன் கழட்டி விட்டாய் ?என்று கேட்கிறார், நாயகன் அங்கிருந்து தொடங்குகிறது கதை…..
ப்ரதீப், (அகன் )மம்தா (குறள் )சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர். , இருவரும் மாமா பொண்ணு, அத்தை பையன் சரத் (அமைச்சர் அதியமான்) பிரதீப் தாய் மாமா சரத், இரண்டாம் தங்கை ரோகிணி பிரதீப் அம்மா, இந்த கட்டத்தில் மம்தாவிற்கு ப்ரதீப் மீது காதல் வருகிறது.
ஆனால், ப்ரதீப் சிறு வயதிலிருந்து உன்னை என் ப்ரண்ட் ஆக தான் பார்க்கிறேன் என சொல்கிறார், இதனால் மனமுடைந்த மம்தா மேல் படிப்பு படிக்க பெங்களூர் செல்கிறார்.
அப்போது தெருநாய்கள் துரத்தி உயிருக்கு போராடும் போது ப்ரதீப், மமிதாவை ரொம்பவும் மிஸ் செய்ய, ஒரு கட்டத்தில் அவருக்கு மம்தா மீது காதல் வர, ப்ரதீப் மம்தா அப்பா சரத்குமாரிடம் சொல்கிறா். மம்தா பெங்களூரில் இருந்து வருகிறார்
இதை தொடர்ந்து தடபுடலாக இவர்கள் திருமண ஏற்பாடு நடக்கிறது.
ஆனால் மம்தா பாரி, எனும் ஒருவரை காதலிக்க அது நம்ம ஜாதி இல்லை ,என்று சரத் மறுக்க வேறு வழியின்றி பிரதீப் மம்தாவுடன் எங்கேஜ் மெண்ட் நடக்கிறது.
சரத்குமார் மினிஸ்டர் என்பதால் இந்தியாவில் ஒட்டு மொத்த அரசியல் பிரபலங்களும் திருமணத்திற்கு வருகிறார்கள் மம்தா காதலன் பாரி அங்கு வருகிறார் இப்போது பாரியுடன் திருமணம் நடந்ததா? ப்ரதீப் உடன் திருமணம் நடந்ததா? அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை .
படத்தின் முதல் பாதி செமசரவெடி தான், புல் பொழுதுபோக்கு காமெடி என இறங்கி அடித்துள்ளனர், அதிலும் ப்ரதீப்-மமிதா திருமணத்தின் போது நடக்கும் கலாட்டா, ப்ரீ இண்டர்வெல் முழுவதும் செம ட்ரீட் தான், அதிலும் ஆணவக்கொலைக்கு எதிராக ப்ரதீப் பேசும் வசனம் கண்டிப்பாக வரவேற்கதக்கது.
அதை சொன்ன விதம் அருமை. . படம் முழுக்க ப்ரதீப் ஒன் மேன் ஷோவாக கலக்குகி யிருக்கிறார்கள் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றி அடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கல்யாண வீட்டில் தொடங்கும் அட்ரா சிட்டி, அலப்பறை அப்படியே கலகலப்பாக மம்தா காதல் பிரிவு, என செம ஜாலியாக நடித்திருக்கிறார்
வீட்டுக்குள் இருக்கும் செல்ல பிராணிகளிடம் கொஞ்சுவது, அம்மாவிடம் கொஞ்சுவது, தாய் மாமா கொடுத்த செக் வேண்டாம் என்று சொல்வது என சிக்கர் அடித்து இருக்கிறார்
அகன் என்ற கதாபாத்திரத்திற்கு காதல் செட்டாவதில் பிரச்சனையாக இருக்கிறது. என்பதை செம ஜாலியாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி நடிகர் சந்திரபாபு நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை போல் இதிலும்.
நாயகன். நடித்துள்ளார்.
அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
காதல் பிரிவு, தாய்மாமன் இடம் அடி வாங்கும் பொழுது, குழந்தை மீது பாசம் காட்டுவது, உண்மையை சொல்லி நண்பனிடம் திட்டு வாங்குவது, டாக்டரிடம் சென்று பேசும் போதும், பல இடங்களில் எமோஷன் பீல் கொடுத்து கலக்கி இருக்கிறார். இளைஞர்கள் கொண்டாடும் நாயகன் பிரதீப்.
மம்தா பைஜ்
அப்பாவுக்கு பயந்த குறளரசியாக, காலித்த பாரியை மறக்க முடியாதவராக, தனக்கு உதவி செய்த அகன் நன்றாக வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கும் தோழியாக, நீ தியாகி நான் துரோகியா? என்று கேட்கும் காட்சிகள் மற்றும் நாயகனுக்கு மேட்ரிமேனியில், பெண் தேடும் போதும், நடிப்பில் செம ஸ்கோர் செய்திருக்கிறார்
சரத்குமார்
பால் வளத்துறை அமைச்சர், அதியமான் கதாபாத்திரத்தில் வந்தாலும், அதன் வோல்டேஜை அறிந்து, பக்குவமான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார் சரத். அவரின் பாத்திரப் படைப்பும் வில்லனிசத்துக்குள் நுழைந்து ஜாதி வெறியின்பக்கம் நிற்பது இந்த 2025 லும் இப்படியா இருப்பீர்கள்! என்று கேட்க வைக்கும் முதிர்ச்சியானதொரு நடிப்பு!
குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு போகும் ஜாதி வெறி!
தன் தங்கையை ஆணவ கொலை செய்யும் அளவுக்கு போகும் அதிகாரதிமிர்!
தங்கை ஆவியாக வந்து பழிவாங்க கூடாது என்று நினைவிடம் கட்டி தினமும் கும்பிடுவது, மகள் காதலுக்கு தடையாக இருப்பது என கலக்கி இருக்கிறார் சரத்குமார்.
ரோகிணி , ஹிர்துஹாரூன் , ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வன் , ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. நண்பன் லக்சுமண், ஹாரூன் ,கலகல மோடு நடிப்பை, கச்சிதமாகத் திரைக்கதைக்குப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இயக்குனர்
காதல் தோல்வி, குடும்பப் பின்னணி என நகரும் முதல் பாதி திரைக்கதை, சில பல வழக்கமான காட்சிகளால்
சுவராஸ்யமான
அதே வழக்கமான காட்சிகளைச் சின்ன சின்ன சுவாரஸ்ய திரைமொழியால் ரசிக்கும்படி மாற்றியிருக்கிறார் இயக்குநர். இண்டர்வெலில் பீக் அடிக்கும் படம்
இயக்குனராக, அவதாரம் எடுத்துள்ள கீர்த்திஸ்வரன்,
இன்றைய இளைய தலைமுறையின் பல்ஸ் தெரிந்து படம் எடுத்துள்ளார். உதவி செய்தால் மற்றவர்களுக்கு ஹீரோவாக தெரிவார்கள். ஆனால்அவர்கள் மண வாழ்க்கை ஜீரோ என்பதை இக்கால இளைஞர்கள் தலையில் ஆணி அடிப்பது போல் அழகாக திரைக்கதையில் சொல்லி உள்ளார்.
ஆணவக் கொலையை தவறான செயல் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்
கலர்ஃபுல் காமெடி ஸ்டோரிக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறது நிகேத் பொம்மியின் கேமரா. வெவ்வேறு காலகட்டக் கதைகளை நேர்கோட்டில் கச்சிதமாகக் கோர்த்ததோடு, கட்களால் கலகலப்பான காட்சிகளுக்குச் சுவாரஸ்யத்தையும் கூட்டியிருக்கிறது பரத் விக்ரமன் படத்தொகுப்பு. முக்கியமாக, படத்தின் திரைமொழிக்கு மைலேஜைக் கூட்டியிருக்கிறது. அபயசங்கர். இசையில் வரும் நாண்கு பாடல்களில், சிங்காரியே, அலையே, ஆகியவை முணுமுணுக்க வைக்கின்றன. தன் பின்னணி இசையால், பல காட்சிகளை மெருகேற்றி, தியேட்டர் மொமன்ட்களாகவும் மாற்றியிருக்கிறார்.
இசை அமைப்பாளர்.
பாடல்களை எழுதியுள்ள விவேக் ,
பால் டப்பா, ஆதேஷ் கிருஷ்ணன் சாமுவேல் ,
பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது .
ஆக்ஷன் காட்சிகள் யண்ணிக்பெண்,
மற்றும் தினேஷ் சுப்பராயன் ,
ஆர்ட் டைரக்டராக
பூர்ணிமா ராமசாமியும் ,
நடன பயிற்சி அனுஷா விஸ்வநாதனும், பணி புரிந்திருக்கிறார்கள்
பி.எல். சுரேந்தர் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் அற்புதமான கலைப்படைப்பு
கல்யாண வீடு.
பிரதீப் அலுவலகம்,
சரத் வீடு ,என எல்லாமே ரசிக்க வைக்கிறது.
டி .ஐ .செய்தவர்கள்
மற்றும் கலர் கரெக்ஷன் செய்தவர்கள் ,
ஒப்பனையாளர் ,என அனைவரும் இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள்.
மக்கள் தொடர்பாளர்கள்
திரு. சுரேஷ் சந்த்ரா
திரு. அப்துல் நாசர்
அவர்கள்.
S MEEDA
மொத்தத்தில் “டியூட்
இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள், பல்ஸ் தெரிந்து படம் எடுத்துள்ளார் இயக்குனர். வெற்றி பட்டியலில் ட்யூட்
தயாரிப்பு: மைத்திரி மூவிஸ் .
தமிழ்நாடு வெளியீடு ஏ.ஜி.எஸ் சினிமாஸ்
