கதை களம்
ஐ.டி கம்பெனியில் வேலை செய்யும் சிவா, (ரியோ) தன் அப்பா, அம்மா,சம்மதத்துடன் சக்தியை(மாளவிகா) திருமணம் செய்கிறார். ஆரம்பத்தில் நன்றாக போகும் இவர்கள் வாழ்க்கை, பிறகு நீயா, நானா, என்ற ஈகோவுக்குள் நுழைகிறது.
அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது.
தாலியை கழற்றி வைத்துவிட்டு ரீல்ஸ் போடும் மனைவியை சிவா கண்டிக்க, முதல் சம்பவம் அரங்கேறுகிறது. இரண்டாவது சம்பவம் சிவாவின் உறவினர் கல்யாணத்தில் நாயகி, சக்தி கால் மீது கால் போட்டு கொண்டு கால் ஆட்டி கொண்டு இருக்க, சிவாவின் அப்பா அம்மா கண்டிக்க இரண்டாவது சம்பவம் அரங்கேறுகிறது.
மனைவியை பழிவாங்க சிவா, வழக்கறிஞர் லட்சுமி ஒரு கடையை ஓபன் பண்ணும் பொழுது, அங்கு லுங்கியோடு வருகிறார். அங்கு மூன்றாவது பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.
சிவா குடித்துவிட்டு போதையில் உளறிக்கொண்டு இருப்பதால், மீண்டும் பிரச்சினை அதிகரிக்கிறது.
நாலாவது சம்பவமாக சக்தி பியூட்டி பார்லர் ஆரம்பிக்கிறேன் என்று சொல்ல, சிவா அதை மறுக்க அதனால் பிரச்சனை ஏற்படுகிறது.
கணவனிடம் தான் கர்ப்பமாக இருப்பதை சொல்ல சக்தி வரும் பொழுது, சிவா வேறொரு பிரச்சினையை கிளப்பி, நான் வேலை செய்துவிட்டு வந்திருக்கிறேன். காலிங் பெல் அடிக்கிறேன் .எழுந்து வந்து கதவை திறக்க மாட்டாயா? என்று சத்தம் போட அங்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் சிவா, சக்தி யை”செத்துப் போ என்று சொல்ல சக்தி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருக்கு வழக்கறிஞர் லட்சுமி அடைக்கலம் கொடுத்து விவாகாரத்தை வாங்கி கொடுக்க முற்படுகிறார். சிவாவுக்கு நாராயணனும், வழக்கறிஞராக விவகாரத்தை வேண்டாம் என்று தன் அசிஸ்டன்ட் சித்து உடன் முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் யார்? வெற்றி பெற்றார்கள் என்ன நடந்தது? என்பதுதான் கதைக்களம்.
கணவனை பிரிந்து செல்லும் மனைவிக்காக பொறுமையுடன் காத்திருந்து தன்னுடைய அன்பு மனைவிக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறான்.சிவா பின்னர் ஒரு இடைவேளைக்கு பிறகு கணவனும் மனைவியும் இணைத்தார்களா? இல்லையா ?
ஹீரோ ஹீரோயின் சந்திப்பு, காதல், திருமணத்திற்கு பிறகான ஊடல் கூடல், சூழ்நிலை காரணமாக உறவில் விரிசல், பிரிவு, பிறகு மீண்டும் சந்திப்பு, மனமாற்றம், மீண்டும் உறவு கூடுவது இது தான் படத்தின் அடுத்தடுத்த கட்டம் ஆனால் அந்த கட்டமைப்பை நேராக சொல்லாமல் கலைத்து போட்டு அதில் நகைச்சுவை கலந்து ஸ்வாரஸ்யமாக ஒரு படைப்பாக கொடுத்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
வாழ்க்கையில், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தவறைச் செய்யத்தான் செய்கிறார்கள். அப்படித் தவறு செய்தவர்கள், ஒருகட்டத்தில் உணர்ந்து, தெளிந்து, திருந்தியும் விடுகிறார்கள். அதுமட்டுமா?
காதலர்களின் வாழ்வியலை காதலுடனும், தாம்பத்யத்துடனும் பின்னிப்பிணைந்து, உணர்வுபூர்வமாகச் சொல்லப்பட்டதுதான்
“ஆண் பாவம் பொல்லாதது”
நாயகன் ரியோ
ரியோ ராஜ், சிவா என்ற கதாபாத்திரத்தில் மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் அன்பான கணவராக, அதேசமயம் மனைவி தவறு செய்யும் போது தட்டி கேட்கும் நல்ல கணவராக நடித்திருக்கிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி க்கு எல்லா உரிமையும் இருக்கிறது. என்றாலும் சில விஷயங்களை கணவன் பேச்சைக் கேட்க வேண்டும். என்ற எண்ணத்தை திணிக்கும் பொழுது, இருவருக்குள் பிரச்சனை ஏற்படுகிறது .அதுவே முற்றிப்போய் விவாகரத்து வரை வரும் போது நெருங்கி போய் விடுகிறார்.ரியோ நடிப்பு நன்றாக இருக்கிறது.
படம் இறுதி பகுதியை தொடும் போது படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். தனது மனைவி தன்மீது மிகுந்த மோசமான களங்கத்தை உருவாக்கும் போதும் தன் மனைவி மீது எந்த களங்கத்தையும் சுமத்தாமல், பெண்மையை உயர்த்தி பேசி தாய்மார்களின் ஒட்டுமொத்த அப்ளாஸ் அள்ளுகிறார்” ரியோ
நாயகி மாளவிகா மனோஜ்,
அழகான இளம் மனைவியாக பெண்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
என்று” இட் இஸ் மை சாய்ஸ் “என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுப்பது, சிகரெட் குடிப்பது, மது குடிப்பது, ரூல்ஸ் போடுவது ,தனக்கு கணவன் பாதி வேலை செய்யட்டும், நான் பாதி வேலை செய்கிறேன் என்று இன்றைய பெண்களின் அச்சு அசலாக நடித்திருக்கிறார்.
விக்னேஷ் காந்த்,
வழக்கறிஞர் நாராயணணாக, தன் மனைவி வழக்கறிஞரான லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு, தன் சொத்துக்களை எழுதிதந்து விட்டு தன் ஒரே குழந்தையை பார்க்க முடியாமல் ,அவர் தவிக்கும் தவிப்பும், போலீஸ் ஸ்டேஷனுக்குள் அவர் நடத்தும் நாடகம். ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் குழந்தையை பார்த்து அவர் கதறும் காட்சி மிகவும் ஒரு பாசமுள்ள தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
நீதிமன்றத்தின் இறுதிக்காட்சியில் எப்படியேனும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக லட்சுமி யிடம், தோற்றுவிட கூடாது என்றவாதாடும் போது ,
இன்றைய கணவன் மனைவிக்கு ஒரு லெட்சரராக பாடம் எடுத்திருக்கிறார். அசத்தியிருக்கிறார்.
ஜான்சன் திவாகர் சித்து, என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க கலகலப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் நாயகியின் ஈகோவை தூண்டிவிட்டு, பிரச்சினையை துவக்கும் இடத்திலும், மது குடிக்கும் காட்சிகளும், செம கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஷீலா, லட்சுமி என்ற வழக்கறிஞராக நாயகிக்கு, விவாகரத்து வாங்கி தருவதில் குறியாக நடித்திருக்கிறார். “நாங்கள் ஜெயிப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டும் என்றால் செல்வோம்” என்று அவர் சொல்லும் காட்சிகள் ஆண்களுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்த தான் செய்கிறது.
மற்றும் ராஜா ராணி பாண்டியன், இயக்குனர். ஏ. வெங்கடேஷ், மற்றும் பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கதை, வசனம் ,எழுதி இயக்கி இருக்கிறார் கலையரசன் தங்கவேலு. இன்று நீதிமன்றத்தில் நிறைய விவாகரத்து வழக்குகள் படை எடுக்கிறது. அதற்கெல்லாம் ஒரே காரணம் மனைவியும், கணவனும், விட்டுக் கொடுத்து வாழாமல், ஈகோ, என்ற ஒரு மாய பிம்பத்துக்குள் சிக்கி , சின்னா பின்னமாகாமல் அன்போடு வாழ வேண்டும். என்று அற்புதமான கருத்தை சொல்லி படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக வடிவமைத்திருக்கிறார் .நாயகனின் அப்பா, அம்மா, நாயகியின் அப்பா, அம்மா, மற்றும் டிடெக்டிவ் பார்க்கும் இளைஞர், மற்றும் எல்லா கதாபாத்திரங்களி் இயக்குனர் திறமை தெரிகிறது.
குடும்ப உறவுகளை பற்றியும் சமூக சிக்கல்களை பற்றியும் திரைக்கதை அமைப்பது என்பது மாயாஜால கதைகளை காட்சி படுத்துவதை காட்டிலும் சவாலானவை. ஏனென்றால் இந்த கதைகள் நம்மையும் நம்மை சுற்றியும் அன்றாட வாழ்வில் நிகழ்பவை. இவை ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளாக இருக்காது என்றாலும் அதனுடன் கற்பனையை சேர்த்து மெருகேற்றி பார்வையாளர்கள் ரசிக்கும் படி தொகுத்து வழங்குவது தான் ஒரு சிறந்த திரைக்கதையின் சிறப்பம்சம்.
இயக்குனர் இந்த படத்தின் மூலம் வெற்றியை அடைந்திருக்கிறார்.
Produced by: Vedikkaranpatti S Sakthivel
Supported by: Blacksheep Finds
Production Controller: Usalai Sivakumar
General Manager: N G Arjun
Executive Officer : R Nandha Kumar
இசையமைப்பாளர் சித்துகுமார், மறச்சேனே” என்ற பாடலும் திருமண பாடலும்” ரசிக்க வைக்கிறது. பாடல்களை எழுதி இருக்கிறார்கள், விக்னேஷ் ராமகிருஷ்ணன், மற்றும் ஜி. கே .வி
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளையும், நாயகனின் வீடு, மற்றும் நீதிமன்ற காட்சிகளில் ,கேமரா அற்புதமாக விளையாடி இருக்கிறது.
வருண் படத்தொகுப்ப பாளராக பணி புரிந்திருக்கிறார். இரண்டு மணி நேரம் கச்சிதமாக இருக்கிறது. படம்.விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளரின் பங்கு மகத்தானது.
கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் சிவக்குமார் முருகேசன் வசனங்கள் நன்றாக இருக்கிறது
வினோத் ராஜ்குமார்
ஆர்ட் டைரக்டராக, நீதிமன்றம் ,மற்றும் நாயகனின் வீடு, நாயகியின் வீடு ,என எல்லா இடத்திலும் அரங்க அமைப்புகளில் அசத்தியிருக்கிறார்.
மீனாட்சி ஸ்ரீதரன் காஸ்ட்யூம் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்.
மக்கள் தொடர்பாளர் சதீஷ்குமார் S 2 மீடியா
மொத்தத்தில் இந்த ஆண்பாவம் பொல்லாதது கணவன் மனைவி மட்டுமல்ல பெற்ற தாய் தந்தையரும் தங்கள் மகனை மகளை எப்படி சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதை சொல்லும் படமாக வந்திருக்கிறது வெற்றி பட்டியலில் இந்த படம் இணையும்
இந்த படத்தை ஏ.ஜி.எஸ் சினிமாஸ் வெளியிடுகின்றது. இந்த படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
