தடை அதை உடை திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’.

அங்காடித் தெரு மகேஷ், சமீபத்தில் வெளியான திருக்குறள் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த நடிகர் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் நடித்திருக்கின்றனர். அனைவர் நடிப்பும் இயல்பாக இருந்தது.

கதை களம்

‘‘1990-களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த “கம்பன் தன்னந்தனியாக போராடி தன் மகன் சிவன் படிக்க வைக்க போராட்டம் நடத்துகிறார்.தன் வம்சத்தினர் கல்வி கற்க வேண்டும் என்று போராடுவதை உண்மைக்கதையை தழுவி படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தயாரிப்பாளர் இடம் மூன்று பேர் தாங்கள் எடுத்த குறும்படத்தை காட்டுகிறார்கள். அவர் இதெல்லாம் ஒரு படமா? என்று மூஞ்சியில் தூக்கி வீசிகிறார் அடுத்து ஸ்கிரிப்ட். அடுத்து நச்சு என்று கார மிளகாய் சாப்பிடுவது போல் நல்ல படமாக எடுத்து வர சொல்கிறார். மூவரும் சென்று யூ ட்யூப் நடத்துவது எப்படி !என அதில் உழவர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு நடத்தும் கவுன்சிலரிடம் பேட்டி எடுத்து அவரால் பிரச்சனைக்கு உள்ளாக, அங்காடித்தெரு மகேஷின் அக்கா அக்கா ரீல்ஸ் போட்டு அதில் தஞ்சாவூர் தெரிந்த ஒருவன் மோசமாக கமெண்ட் போட்டுவிட மகேசன் அக்கா தற்கொலை செய்து கொள்கிறார். அவனை நால்வரும் விரட்டி பிடிக்க மகேஷ் அவனை அடித்து உதைக்க இப்படி போகிறது கதை .

படம் முழுக்க ஒரு முயற்சி ,கல்விக்கான போராட்டம். என்றும் முதல் பாதியும், இரண்டாம் பாதியில் இணைத்து கதை சொல்லி இருப்பதும் மிகவும் ரசிக்க வைக்கிறது.

கதையின் நாயகர்கள் :
அங்காடி தெரு மகேஷ் ( சிவன் )

படித்துவிட்டு அதே ஊரில் தாசில்தாராக பணிபுரிகிறார். யூடியூப் என்பதெல்லாம் வேலைக்காகாது என்று அறிவுரை கூறுகிறார். அவர் கதாபாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்திருக்கிறார்.

திருக்குறள் குணா பாபு – (சதீஷ் ), கணேஷ் (கார்த்திக்)

இவர்கள் மூவரும் youtube நடத்தி ஒரு படம் இயக்க லட்சயமாக கொண்டு படம் முழுக்க செயல்படுகிறார்கள்.

K.M.பாரிவள்ளல் ( கம்பன்),

என்ற கதாபாத்திரத்தில் தன் மகனை படிக்க வைக்க பள்ளியில் சேர்க்க போராடும் போராட்டம். இடைவேளைக்கு பிறகு மில் முதலாளியாக வில்லன்களிடம் அடிபடுவது ,என சிறப்பாக நடித்திருக்கிறார்.

திருவாரூர் மஹாதீர் முகமது ( வினோத்). மற்றும் இவர்களுடன் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், M.K.ராதாகிருஷ்ணன்( சிலுக்கு மணி), வேல்முருகன் (தலைமை ஆசிரியர்) , காத்து கருப்பு கலை, பாக்கியம் கௌதமி, சுபாஶ்ரீ( தேவி),
சூரியப்ரதாபன் ஆகியோர் நடிப்பும் இயல்பாக இருக்கிறது ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒளிப்பதிவு – தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் செய்துள்ளார்கள்..
ஆற்றங்கரை ஓரம், வயல் காடு ,செங்கல் சூளை ,என எல்லா இடங்களிலும் கேமரா புகுந்து விளையாடி உள்ளது.
பாடல்கள் – அறிவழகன் எழுத
சாய் சுந்தர் -இசை
ரசிக்க வைக்கிறது .
டாய்சியின்
படத்தொகுப்பு
விறுவிறுப்பாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது.
ஆர்ட் டைரக்டராக சிவகுமார், பணி புரிந்திருக்கிறார்.
மணி
சண்டை பயிற்சி
அமைத்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் இயல்பாக இருக்கிறது.
அசோக் குமார்
தயாரிப்பு மேற்பார்வை. -வேல்முருகன்
நிர்வாக தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன்.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

தயாரித்து, கதை, திரைக்கதை வசனம், எழுதி இயக்கியுள்ளார். பட்டுக்கோட்டையை சேர்ந்த அறிமுக இயக்குனர் அறிவழகன் முருகேசன். ஒரு உண்மை கதையை இயக்குனர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார். வித்தியாசமான முறையில் நன்றாக இருக்கிறது. அரைத்த மாவை அரைக்காமல் இடைவேளைக்கு முன் ஒரு குறும்படம், இடைவேளைக்கு பின் ஒரு குறும்படம், என இரண்டு குறும்படங்களையும் இணைத்து கிளைமாக்ஸ் காட்சியில், ஒவ்வொருவரையும் வரவைத்து,+ வித்தியாசப்படுத்தி இருக்கிறார். நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.