பாகுபலி தி எபிக்”திரை விமர்சனம்

இந்திய சினிமாவின் பெருமை மிகும் படைப்பு”பாகுபலி “

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைத்து ஒரே திரைப்படமாக ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் வந்துள்ளது ..

முதல் பாகம்

2015ஆம் ஆண்டு பாகுபலி முதல் பாகம் வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது.
இந்தப் படத்தை பார்த்தவர்கள் பிரமித்து போனார்கள். பிரபாஸ் ஆரம்பக் காட்சியிலேயே, அந்த நீர்வீழ்ச்சியில் தாவித்தாவி மழை உச்சிக்கு போக நினைப்பதும், ரம்யா கிருஷ்ணன் ஜெய் பாகுபலி என்று குழந்தையை தண்ணீரில் தூக்கிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்வதும், தமன்னாவின் கவர்ச்சி, மற்றும் படமாக்கப்பட்ட விதம் ரசிகர்கள் மெய் மறந்து போனார்கள்.

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை யோசிக்கச் செய்தது

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம் எப்படி இருக்கும்? முதல் பாகத்தை மிஞ்சுமா இதில் என்னென்ன வைத்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள் இரண்டாம் பாகம் வெளியானது முதல் பாகத்திற்கு சற்றும் குறையாமல் இரண்டாம் பாகத்தில் அத்தனை காட்சிகளும் அற்புதமாக படமாக்கி இருந்தார் இயக்குனர் ராஜமவுலி
அனுஷ்காவின் அரண்மனையில் நடக்கும் சண்டை காட்சி, அனுஷ்காவோடு பிரபாஸ் பாடும் அந்த டூயட் காட்சி,
பெண்ணை தொட்டவனை கையை வெட்டுவது தப்பு ,தலையை வெட்ட வேண்டும் என்று பிரபாஸ் சேதுபதி வெட்டி சாய்ப்பது,
இப்படி இரண்டாம் பாகமும் கிராபிக்ஸ் காட்சியில் உச்சம் தொட்டது.

மாபெரும் வணிக வெற்றிப்படமாகி
இந்திய முழுவதும் பாகுபலி என்று
உச்சரிக்கத் தொடங்கினார்கள் உலகம் முழுவதும் இயக்குனர் ராஜமௌலியின் மூளை திறமையும் டெக்னாலஜியும் வியந்து மெய் மறந்து போனார்கள்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு பாகங்களையும் இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் இன்று வெளியிட்டுள்ளனர்.

படத்தின் முதல் பாதியில், பாகுபலி முதல் பாகத்தில் பார்த்த அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், தமன்னா – பிரபாஸ் இடையேயான காதல் காட்சிகளுக்கும் பாடலுக்கும் கத்தரி போட்டுள்ளனர். அதை வாய்ஸ் ஓவர் மூலம் சொல்லியிருக்கின்றனர்.

படத்தின் இரண்டாம் பாதி, பாகுபலி 2: தி கன்க்ளூஷனில் பார்த்ததைப் போலவே உள்ளது. இங்கும், படத்தை சுருக்கமாக மாற்ற பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டுள்ளன.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், இதை பெரிய திரையில் பார்க்கும்போது, படம் புதிது போல் உணர வைக்கிறது. பிரபாஸ் ‘அமரேந்திர பாகுபலி ஆகிய நான்’ என்று வசனம் பேசும்போது, இன்றும் கைதட்டத் தோன்றுகிறது. ரம்யா கிருஷ்ணன் குழந்தையை கையில் ஏந்தி ‘மகேந்திர பாகுபலி’ என்று கத்தும்போதும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

பாகுபலியின் போர் காட்சிகளை பின்னுக்குத்தள்ளும் அளவுக்கான சண்டைக்காட்சிகள் இதுவரை இந்திய சினிமாவில் வரவில்லை என்றே சொல்லலாம்.

அதேபோல், செண்டிமெண்ட் காட்சிகளும் சிலிர்க்க வைக்கின்றன. தனது கணவனும் மகனும் செய்த துரோகத்தை நினைத்து உடைந்துபோகும் ரம்யா கிருஷ்ணனின் முகம் மனதில் அப்படியே பதிந்துவிடுகிறது.

பாகுபலியின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அனைத்து நடிகர்களுமே மெச்ச தகுந்த நடிப்பை கொடுத்திருந்து

எனவே, ‘பாகுபலி: தி எபிக்’கில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா மற்றும் ராணா ரசிகர்களுக்கு ஒரு பரிசாகும்.

சாபு சிரிலின் கலை இயக்கமும், கமலக்கண்ணனின் கணினி வரைகலையும் ஹாலிவுட் தரம். அருவி முதல்… அரண்மனை வரை மலைப்பை ஏற்படுத்துகிறது. கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். வீரமும் காதலுமாக உரையாடுகின்றன மதன்கார்க்கியின் அழகான வசனங்கள்.

எம்.எம்.கீரவாணியின் இசை மீண்டும் சிலிர்ப்பூட்டுகிறது. இருப்பினும், படத்தின் பெரும்பாலான பாடல்கள் எடிட் செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

சிலிர்ப்பூட்டிய காட்சிகள்

ரீ-எடிட் செய்யப்பட்ட பிறகும் படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் இருக்கின்றன. 10 ஆண்டுகளுக்குப் பிறகும், இதை பெரிய திரையில் பார்க்கும்போது, படம் புதிது போல் உணர வைக்கிறது. , படத்தின் விஎஃப் எக்ஸ் காட்சிகள் இன்றும் பிரம்மிப்பூட்டுகின்றன.

கிளாசிக் சினிமா