பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று படம்.
தேசிய தலைவர்
கதை களம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அவரின் அரசியல் போராட்டம். ஏழை மக்களுக்கு உதவி செய்தது, நியாயத்திற்கு போராடியது,
தேச விடுதலைக்காக போராடிய சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நண்பராக இருந்தது,
தாய் இல்லாமல் இஸ்லாமிய தாய்மாரிடம் பால் குடித்து வளர்ந்தது .
போலீசார் கொலை குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டது .
திருமணம் செய்யாமல் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தது.
இப்படி அவரின் எண்ணற்ற தியாகங்களை இந்த படம் சொல்கிறது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா ,
சுய நலமின்றி
சொக்க தங்கமாக வாழ்ந்தவர். அவரைப் பற்றிய படம் தான் தேசிய தலைவர் .
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான அன்று இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
பாராட்டுக்குரியது .
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக பாவித்து அதற்கேற்ப செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றியது உள்பட பிற முக்கிய நிகழ்வுகளும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவரை கடவுளுக்கு நிகராக மதித்து கொண்டாடுகின்றனர். இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது ஒவ்வொரு சாதனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்டு வரலாறு மக்கள் தெரிந்து கொள்ள வண்ணம் இப்படத்தில் நிறைய அவரைப் பற்றிய தகவல்கள் நிச்சயம் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
நடிகர்கள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம்.பஷிர் கச்சிதமாக நடித்துள்ளார்.
அவருடைய நடை, உடை ,முக வடிவமைப்பு ,சிகை அலங்காரம் பேச்சு, நிதானமான பார்வை, எல்லாமே தேவர் ஐயா அவர்களை பார்ப்பது போலவே இருக்கிறது .
அச்சுஅசலாக
அவர் நடித் திருப்பது படத்தின் சிறப்பு. அம்சம்.
கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைத்து விடுகிறார் பஷீர்
நிச்சயம் விருது கிடைக்கும்.
. மற்றும்
இயக்குனர் இமயம் பாரதிராஜா நீதி பதியாக,
வாகை சந்திரசேகர்,
எம்.எஸ். பாஸ்கர்,
டத்தோ ராதாரவி
வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்கள்.
இயக்கம்
இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய ,இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். திரைக்கதை, வசனம் இயக்கம் சிறப்பாக இருக்கிறது.
அவரே கதையை விளக்குவது போல எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
இசை
இசைஞானி இளையராஜாவின் இசையில், பாடல்கள் கேட்கும்படி இருந்தது.
தேவரைய்யா” பாடல் கலங்க வைத்தது.
பின்னணி இசை பிரம்மாண்டம் .
ஒளிப்பதிவு
அகிலன் ஷியாலியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
அற்புதமான ஒளிப்பதிவு.
படத்தொகுப்பு
K.J. வெங்கட்ரமணன்
படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தது
கலை இயக்குனர்
P.சண்முகம் BFA
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் வீடு, மற்றும் நீதிமன்றம் ,என அந்த காலத்தை நினைவூட்டியது கார் டைரக்டரின் பங்கு.
சண்டைப்பயிற்சி
மிராக்கிள் மைக்கேல்
நடனம்
தீனா
மற்றும் ஒப்பனையாளர்,
காஸ்டியூமர்,
டி . ஐ பணி புரிந்தவர்கள்.
என அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர் பற்றிய படம்.அவரின் வாழ்க்கை வரலாறு வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள். கிளாசிக் சினிமா 🙏🌷
மக்கள் தொடர்பாளர்
டைமண்ட் பாபு
