ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க
பர பரபரப்பான விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்குனர் படத்தை கொடுத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
கதை களம் எழுத்தாளர் ஜெபநேசனை குறி வைத்து கொலை செய்கின்ற ஒரு சைக்கோவை அர்ஜுன் தேடி புறபட, அந்த சைக்கோ யார், அவனுடைய பின்னணி என்ன? என்பதை விரிவான ஒரு திரைக்கதையால் காட்சிப்படுத்துகிறது இப்படம்.
கொடூரக் குற்றவாளியான சைக்கோ, அடுத்து ஈகிள் டவர் ஓனர் வரதராஜனை கொல்கிறான் ஏன்? அர்ஜுன் கண்டடைகிறாரா? அடுத்து ஈகிள் டவர் வாட்ச்மேன் ,
லாண்டரி மேன் இருவரும் கொல்லப்படுகிறார்கள். அவர்களை ஏன் கொலை செய்ய வேண்டும் என்ன நடந்தது ?,என்பதை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பதினைந்து நிமிடம் ஓடக்கூடிய படத்தில் இயக்குநர். விறுவிறுப்பான திரைக்கதையில், சொல்லி இருக்கிறார் .
அர்ஜுன்.
கறாரான காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் ஆகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். தன் இயல்பான நடிப்பு மூலம் குற்றவாளியைக் கண்டுபிடித்து , முனைப்பை வெளிப்படுத்தும் காவல் அதிகாரி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்அர்ஜின்மகுடபதி என்ற காவல்துறை அதிகாரியாக ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்க்கும் போது சபாஷ் போட வைக்கிறது.
இவர் ஈகிள் டவர் பகுதிக்குள் நுழையும் பொழுது படம் பரபரப்பை ஏற்படுத்தி ,அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை உருவாக்குகிறார். பில்டர் வரதராஜன், அவரது மகன் சத்யா, ஈகிள் டவர் வாட்ச்மேன் கனகு, என, ஒவ்வொருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து கவ்வி பிடிப்பது கச்சிதமாக இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஆதியை காதலிக்கும் மீராவாக ,ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளைக் கற்றவராக நடித்திருப்பது படத்திற்கு கதை களத்தில் பொருத்தமாக இருக்கிறது.
முதல் பாதியில் ஜாலியான ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகவும் , இரண்டாம் பாதியில் மனித நேயம் உள்ள ஒரு பள்ளி ஆசிரியராக அற்புதமாக நடித்திருக்கிறார்.
மீரா கதாபாத்திரத்தில் அழகாகப் பங்களித்திருக்கிறார். மீராவின் மனிதநேயம் குழந்தை அணிகாமீது காட்டும் பாசம், என அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதித்திருக்கிறார் பாராட்டுத்தக்க நடிப்பு கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனம் “பெண் என்றால் உன் அம்மா, அக்கா தங்கை அண்ணி என எல்லோரும் பெண் தானே” என்று சொல்லும் பொழுது பலத்த கைதட்டல்
வெல்டன் மீரா🌷🙏
ராம்குமார் பில்டர் வரதராஜன் இந்த கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருக்கிறார் .
அர்ஜுன் இடம் மோதும் காட்சி கம்பீரம்.
வேலா ராம மூர்த்தி மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
தற்காப்பு கலை சொல்லித்தரும் மாஸ்டராக வந்து கிளைமாக்ஸ் காட்சியில் சண்டையில் அதகளம் பண்ணுகிறார்.
தன் மகள் அபிராமி தன்னோடு பேசவில்லை என்று அவர் ஆதங்கப்பட்டு பேசும் காட்சிகள் அவர் மீது பரிதாபம் ஏற்படுத்துகிறது.
அபிராமி கீதா என்ற கதாபாத்திரத்தில்
காவேரி என்ற குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் அனுதாபங்களை அள்ளிக் கொள்கிறார் .
தன் காதலை ஏற்றுக் கொள்ளாத வேலராம மூர்த்தியிடம், கடைசி வரை வீம்பாக இருந்து கண்ணீர் சிந்தும் அருமையான நடிப்பு.
குழந்தை அனிகா அற்புதமான நடிப்பு ஸ்பெஷல் குழந்தையாக, மனதை தொடுகிறார் சின்ன வயதில் இப்படி ஒரு நடிப்பா என்று வியப்பை ஏற்படுத்துகிறது அவரது நடிப்பு வாழ்த்துக்கள் அனிகா.
பிரியதர்ஷினி ஆதியின் அம்மாவாக பயந்த சுபாவம் கொண்ட அம்மாவாக நடித்திருக்கிறார். இடை வேளை க்கு பின்னர் இவர் சொல்லும் உண்மை பகீர் தகவல்.நல்ல நடிப்பு மற்றும் இவர்கள் உடன் பிரவீன் ராஜா, லோகு, என்.பி.கே. எஸ், ராம் குமார், தங்க துரை,பேபி அனிகா, பிராங்க்ஸ்டர், ராகுல், சையத், பத்மன் ஆகியோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர்
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரபரப்பான, புத்திசாலித்தனமான துப்பறியும் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தினேஷ் லக்சுமணன்
பொதுவாக தொடர்கொலைகளை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் படங்களில் அடுத்தடுத்து ட்விஸ்ட்களாக அடுக்குவார்கள். ஆனால், இதில் முதல் பாதியின் பெரும்பகுதி காவல்துறை விசாரணை நடைமுறைகள் சார்ந்த, திரையில் இதுவரை சொல்லப்படாத விஷயங்களைக் கையாண்டிருப்பது புத்துணர்வு அளிக்கிறது. அனுபவமிக்க மூத்த அதிகாரியாக அர்ஜுன் அவருக்குத் துணையாகப் தங்கதுரை இருவரும் வழக்கின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பது சுவாரசியத்துடனும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
முடிவில் குற்றவாளி சிக்கியது போன்ற உணர்வைத் தந்து இன்னொரு குற்றவாளி இருக்கிறார் ,என்று எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார்இயக்குனர்.
அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்கிறது, இரண்டாம் பாதி. பிற்பகுதியில் நிகழும் ஒரு ட்விஸ்ட் திரைக்கதையின் ஒட்டத்துடன் இயல்பாகப் பொருந்தியிருக்கிறது. இந்த எதிர்பாராத திருப்பம் படத்தின் மையக் கதாபாத்திரங்களுக்கு அளிக்கும் அதிர்ச்சி, பார்வையாளர்களுக்கும் ஏற்படுவது, மேம்பட்ட திரைக்கதை ஆக்கத்தின் வெற்றி.
வரதராஜன் ஜெபநேசர் இடையிலான உறவு என்ன என்பதை இணக்கமாகப் பரிணமிக்கும் விதம் அழகாக உள்ளது.
மேக்கிங், திரை கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சிறப்பாக செய்திருக்கிறார்.: இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷
பரத் ஆசீவகன் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.
மூன்று பாடல்கள் முத்தாக இருக்கிறது விவேக் தமிழ் மணி எழுதிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது. உருக வைக்கிறது. பின்னணி இசை சூப்பர்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. ஆரம்பக் காட்சியில் ஜெபநேசன் கொல்லப்படும் பொழுது இருக்கும் திகில் ,கிளைமாக்ஸ் காட்சி வரை, ஒளிப்பதிவாளர் மிரட்டி உள்ளார். அந்த ஈகிள் டவர் சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் கேமரா விளையாடி இருக்கிறது.
லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர்.
அருண் சங்கர் துரை ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்.
அனிகா படிக்கும் பள்ளி ,அர்ஜுனன் போலீஸ் ஸ்டேஷன், அர்ஜுன் வீடு ,அந்த ஈவில் டவர் வீடு, என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் அற்புதமாக இருக்கிறது.
நவநீதம் சுந்தர்ராஜன் வசனம் எழுதி இருக்கிறார். வசனங்கள் அனைத்தும் சார்ப்பாக இருக்கிறது.
கிக்காஸ் காளி, மற்றும் ராஜசேகர் ,விக்கி
மூவரும் சண்டைபயிற்சி அமைத்து இருக்கிறார்கள்
லிப்ட்டுக்குள் அர்ஜுன் போடும் சண்டைக் காட்சி, கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷ் பறந்து பறந்து தாக்கும் காட்சி,என சண்டை காட்சிகள் அனல் தெரிக்கிறது.
காஸ்ட்யூம் டிசைனராக கீர்த்தி வாசன் பணி புரிந்திருக்கிறார் .
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள்.
மொத்தத்தில் இந்த “தீயவர் குலை நடுங்க” தவறு செய்யும் ஒவ்வொரு மனிதரையும்குலை நடுங்க வைக்கும்
என்பது உறுதி.
