மரகத நாணயம்”ராட்சசன் ” போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர், நல்ல கதைகளை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் பவனி வந்தவர் தயாரிப்பாளர் திரு. டெல்லி பாபு அவர்கள் .
அவரின் நல்லாசியோடு அவர் கதையை கேட்டு தேர்வு செய்த படம் தான் “மிடில் கிளாஸ் அற்புதமாக வந்திருக்கிறது இந்த “மிடில் கிளாஸ்”
ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’.
இன்றைய மிடில் கிளாஸ் குடும்பங்கள் என்னென்ன வகையில் அவஸ்தைப்படுகிறார்களோ, பொருளாதாரத்தில் சிரமப்படுகிறார்களோ, அதை மிகவும் தத்ரூபமாக, எதார்த்தமாக சொல்லி இருக்கிறது இந்த “மிடில் கிளாஸ்” இயக்குனர் கதையை சொன்ன வகையிலும் ,திரை கதையை கொண்டு சென்ற விதத்திலும், படத்தின் மேக்கிங், எல்லோர் நடிப்பிலும் படம் வெற்றி பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
: கதை களம்
நடுத்தர வர்க்கத்தில் வாழும்
கார்ல் மார்க்ஸ்,(முனிஷ் காந்த்)அன்பு ராணி,(விஜய லட்சுமி)
பணம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் .
நாயகன் முனீஸ் காந்த் அவரது பிறந்த ஊரில் விவசாயம் பார்க்க இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு செட்டிலாக ஆசைப்படுகிறார்.
ஆனால் நாயகி விஜயலட்சுமி தன் மகன்கள் சென்னையில் படிக்க வேண்டும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று சேலை விற்பது, தையல் கடை நடத்துவது, எம்.எல்.எம் செய்வது என பல வழிகளில் முயற்சி செய்கிறார்.
இந்த சூழ்நிலையில் விஜயலட்சுமி தன் தம்பி திருமணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்ய ஆசைப்படுகிறார். குடும்ப சூழ்நிலை கருதி அதை தவிர்க்க பார்க்கிறார் முனிஷ்காந்த். இதனால் இருவருக்கும் பிரச்சனை வெடிக்கிறது.
இந்த சூழ்நிலையில் முனீஸ்காந்த் அப்பா வேலாராமமூர்த்தி, 1970 ல் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு கடை நடத்துகிறார் .சொந்த மண்ணில் சில பிரச்சனைகள் இருப்பதால் தன்னிடம் வேலை செய்யும் ராமலாலுக்கு அந்த கடையை இலவசமாக கொடுத்துவிட்டு போய்விடுகிறார். ராம் லால் நேர்மையாக பத்திரப்பதிவு செய்து
எப்போது வந்தாலும் தருகிறேன் என்று
வேலராமமூர்த்தி இடம் கொடுக்கிறார்.
எவ்வளவு அருமையான காட்சி திரையில் பார்ப்பதற்கு இப்படிப்பட்ட மனிதர்களை கையெடுத்து கும்பிட தோன்றுகிறது.
இன்னொரு பக்கம்
அன்பு ராணி என்னும் சந்திரமுகி(விஜயலட்சுமி )கொடுக்கும் டார்சச்ரால், பணப்பிரச்சனையால் அவதிப்படும் முனீஸ் காந்த் தன் அப்பா எழுதி வைத்த அந்த பாத்திரத்தை எடுத்து பார்த்து சேட் ராம் லால் சந்திக்க, தன் முதலாளியின் மகன் என்று நன்றி மறவாமல், ஒரு கோடிக்கு “செக் கொடுக்கிறார்.
அந்த செக்கை வாங்கிக்கொண்டு தன் மனைவியிடம் செக்கை வாங்கி விட்டேன் என்று சொல்ல அந்த செக்கை நம்பி விஜயலட்சுமி லோக்கல் ரவுடி இடம் ஆறரை லட்ச ரூபாய் கடன் வாங்கி விடுகிறார்.
இப்பொழுது முனிஸ்காந்த் அந்த செக்கை தொலைத்து விடுகிறார்.
கடன் வாங்கிய விஜயலட்சுமி கடன்காரர்களிடம் இருந்து தப்பித்தாரா?
சும்மாவே சந்திரமுகியாக ஆடும் தன் மனைவி விஜயலட்சுமி இடமிருந்து முனிஸ்காந்த்
தப்பித்தாரா?
செக்கை கொடுத்த ராம் லால் இடம் மீண்டும் போய் முனீஸ்காந்த் செக்கை வாங்கினாரா?
முனீஸ் காந்த் தன் ஊருக்கு சென்று விவசாய நிலம் வாங்க வேண்டும் என்ற கனவு பலித்ததா?
மிடில் கிளாஸ் என்ற youtube சேனல் நடத்தி பணக்காரராகிவிடலாம் என்ற விஜயலட்சுமி முனிஸ்காந்த் குடும்பத்தின் கனவு நிறைவேறியதா?
இப்படி பல கேள்விகளுக்கு நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலை அற்புதமாக சொல்லி இருக்கிறது இந்த மிடில் கிளாஸ் ஃபேமிலி.
‘ நடுத்தர வர்க்க குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள், தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
குடும்பப் பொறுப்புடன் முனீஸ்காந்த், விடாமுயற்சியுடன் விஜயலட்சுமி இருவருக்கும் பணம் தான் பிரச்சினை குடும்பத்தின் தன்னிறைவின்மை மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது..: பெற்றோர் தங்கள் மகன், மகள் கல்விக்காக நிதிப் போராட்டஙகளுடன்
உறவினர் மதிப்பதற்காக ஆடம்பரமாக விழாக்களுக்கு செல்லும் மனப் பாங்கு, கணவனின் நிதி சுமையை அதிகரிக்கும் மனைவிகள், இப்படி எல்லாம் பொருந்தி இருக்கிறது இந்த மிடில்கிளாஸ்” வாழ்த்துக்கள் இயக்குனருக்கு.
இதோ ஒரு பூங்கொத்து 🌷
நாயகன், நாயகி மற்றும் இந்த படத்தில் நடித்தவர்கள்
: முனீஸ் காந்த், ஒரு நடுத்தர வர்க்க பிரதிநிதியாக குழந்தைகளின் கல்விச் செலவு குடும்பத்தின் தேவைகள் மனைவியின் ஆடம்பர ஆசை இவைகளை சமாளிக்கும் நாயகனாக, கதாநாயகனாக அற்புதமாக நடித்திருக்கிறார் .
சந்திரமுகி எனும் தன் மனைவியை செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொண்டு அவர் போன் செய்யும் போது எல்லாம் எல்லாம்
தவிப்பது, செக்கை தொலைத்து விட்டு நண்பர்கள் உடன் அலைவது, கடைசியில் அப்பா சொல்லும்
கா கா ,கதை கண்டு மனம் திருந்துவது கிராமப்புறத்தில், சென்று செட்டில் ஆக தன் நண்பனுடன் ஆலோசனை கேட்டுக் கொண்டே இருப்பது, என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். இப்படத்தின் மூலம் கதைநாயகனாக உயர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.
விஜயலட்சுமி ,அன்பு ராணி என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர வர்க்கத்து பெண்ணாக அம்சமாக பொருந்தி இருக்கிறார். கையாலாகாத கணவனை திட்டும் பொழுதும் youtube ல் பணத்தை சம்பாதித்து விடலாம் என்று ஆசையுடன் சமையல் செய்யும் பொழுதும், தையல் கடை நடத்துவது, சேலை விற்பது, தன் கணவன் கோபித்துக் கொண்டு நண்பர் வீட்டுக்கு சென்று விட்டால் அங்கு சென்று மிரட்டி வர வைப்பது, சாந்தப்படுத்த பெட்ரூமில் அன்பாக பேசுவது, என ஒவ்வொரு காட்சியிலும் அன்பு ராணி தான் நம் கண்ணுக்கு தெரிகிறார் விஜயலட்சுமி தெரியவில்லை இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார் அன்பு ராணி .
காளி வெங்கட் மாறன் என்ற கதாபாத்திரத்தில், முனீஸ் காந்தத்துக்கு அவ்வப்போது கிராமத்தில் நடக்கும் செய்திகளை தூது சொல்லும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
ராதாரவி டிடெக்டிவ் ஆபீஸராக, அவர் மனைவி மாளவிகா அவினாஷ்,மனநல மருத்துவர் உடன் சேர்ந்து உதவும் கதாபாத்திரத்தில் உயர்ந்து காணப்படுகிறார்.
வேலா ராம மூர்த்தி
முனீஸ்க்கு அந்த அப்பாவாக சிவ புண்ணியம் என்ற கதாபாத்திரத்தில், ராம்லால்க்கு செய்யும் உதவி தன் மகனுக்கு எப்படி வந்த நல்லதாக முடிகிறது ,என்பதை சிம்பாலிக்காக காட்டி இருப்பது சிறப்பு. பெற்றோர்கள் செய்யும் நன்மையும், தீமையும் ,தங்கள் குழந்தைகளுக்கு வந்து சேரும் என்பதை இந்த கதாபாத்திரத்தின் மூலம் இயக்குனர் அற்புதமாக வடிவமைத்து இருக்கிறார். ராமமூர்த்தி கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலம் .
மற்றும் முனிஸ்காந்த் நண்பர்களாக குரோஷி ,தாஸ் ஆட்டோ டிரைவராகவும், சங்கு என்ற கதாபாத்திரத்தில் கோடங்கி வடிவேலு வாட்ச்மேன் ஆகவும் வந்து படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார்கள்.
விஜயலட்சுமியின் பக்கத்து வீட்டு உறவுகளாக மலர் என்று கதாபாத்திரமும், செல்வம் என்ற கதாபாத்திரமும் ,
எட்டு வருடங்களாக குழந்தைகள் இன்றி தவிக்கும் தவிப்பு, கிளைமாக்ஸ் காட்சியில் அவர்களுக்கு குழந்தை
உண்டாவது படத்திற்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை காட்சிகள்.
மற்றும் சேட் ராம் லால், நடித்திருப்பவரும் அவரது மகன், மனைவி என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை உருவாக்கி இருக்கிறது. நடித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷
தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தர வர்க்கத்தின் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளை மனதில் வைத்து கதை ,எழுதி, இயக்கி இருக்கிறார்.அதை சொன்ன விதம், ரசிக்க வைத்தது. கடைசி 40 நிமிடம் உருக வைத்து விடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் காகம் சொல்லும் கதையை வைத்து கைதட்டல் வாங்கி விடுகிறார். முனிஸ்காந்த் கிராமத்தில் விவசாய மண்ணில், வெறும் தரையில் படுக்கும் பொழுது கைதட்டல் பலமாக எழுகிறது, இயக்குனருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள்.,
சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு மிக அருமையாக இருக்கிறது. கிராமத்து அழகை காட்டிய போதும், சிட்டியில் முனிஸ்காந்த் மாடியில் அமர்ந்து மது அருந்தும் கட்சியில் ,பல இடங்களில் டாப் ஆங்கிளில் சென்னையை சுற்றி காட்டி இருக்கிறார். கலர் கரெக்ஷன். ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது ரிச்சாக இருக்கிறது.
பிரணவ் முனிராஜ் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. பாடல்கள் குறைவு என்றாலும் இசை படத்தோடு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
சான்
லோகேஷ் படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கின்றது. இரண்டு மணி நேரம்
தான் படம்செதுக்கியிருக்கிறார். படம் விறுவிறுப்பாக போகிறது அடுத்து என்ன? என்று கேட்க வைக்கும் படத்தொகுப்பு”
எம் .எஸ். பி .மாதவன் ஆர் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் முனீஸ்காந்த் வீடு, ராமலால் சேட் மற்றும் வேலராமூர்த்தி இருவரின் கடை, கோடங்கி வடிவேலுவின் அறை, மற்றும் எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது.
டான் அசோக் சண்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார்.
ஜே. நந்தா காஸ்ட்யூமராக பணிபுரிந்து இருக்கிறார். முனீஸ்காந்த்,
உடை வடிவமைப்பு, விஜயலட்சுமி உடை, வடிவமைப்பு ராம்லால், அவரது மகன் உடை வடிவமைப்பு, மற்றும் குழந்தைகள் எல்லோருக்கும் ஆடை தேர்வு கச்சிதமாக இருக்கிறது .
வினோத் குமாரின் ஒப்பனை எல்லோருக்கும் பொருந்தி இருக்கிறது. முனீஸ்க்காந்துக்கும் விஜயலட்சுமிக்கு ஒரு தம்பதிகளுக்கு இயல்பை மீறாத ஒப்பனை கச்சிதமாக இருக்கிறது.
மற்றும் கலரிஸ்ட் நந்தகுமார்,
வி. எஃப். எக்ஸ் ரசூல்,
சவுண்ட் மிக்சிங் ராஜகிருஷ்ணன்,
தயாரிப்பு நிர்வாகி எஸ் .எஸ். ஸ்ரீதர்,
எக்ஸ்க்யூடிவ் புரொடியுசர் மோகன்,
மக்கள் தொடர்பாளர்கள்
திரு. சுரேஷ் சந்தரா,
திரு.அப்துல் நாசர் அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இடைவேளைக்குப் பிறகு கதையை அழுது புலம்பாமல், வெறும் கஷ்டத்தை காட்டாமல், வித்தியாசமான முறையில் டிடெக்டிவ், மனநலம், என்று கொண்டு சென்றதில் வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படம் வந்திருக்கிறது. டபுள் மீனிங் காமெடி, ஆபாச குத்து பாடல், வன்முறை காட்சிகள் எதுவும் இல்லாமல் ரசித்துப் பார்க்கும் வகையில், குடும்பத்தோடு பார்க்கும் ஒரு படத்தை கொடுத்ததற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும், அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
மிடில் கிளாஸ்” வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🙏🌷
SFX- Sync Cinema
Legal Advisor – MV Bhaskar
Marketing & Promotion – DEC – KV Mothi
Production Executive – SS Sridhar
Executive Producer- Mohan P
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌷🙏
