கதை களம்
மணி,தமபி தினேஷ் , தினேஷ் மனைவி ப்ரியா, மணி தன் தம்பி,தம்பி மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி நன்றாக வாழ வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மணி யின் தம்பி தினேஷ்க்கு , அந்த ஊரில் மட்டை செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை கரணும், தினேஷ் இருவரும் நண்பர்கள்.
கரன், கொலை செய்ய தினேஷை அழைத்து செல்கிறார். ஆனால் தினேஷ் குமார் ஆட்களால் கொலை செய்ய பட , இப்போது மணி ஜெகனை போட திட்டம் தீட்ட, தீனா மணியை போட திட்டம் தீட்ட யார்?யாரை பழி தீர்த்துக் கொண்டார்கள் என்பது கதை களம்.
நடிகர்கள்:-
மைம் கோபி, (சிவா) KPY தீனா(செல்வா), அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் (Driver Jamuna), சித்ராசேனன்(குமார் )(Manjumal Boys), சித்து குமரேசன் (Thangalaan, Yaathisai) என அனைவரும் இயல்பான நடிப்பில் கதைக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
நாயகன் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ராமச்சந்திரன் ஸ்கெட்ச் போடும் காட்சிகளில் அவ்வளவு விறுவிறுப்பு. மைம்கோபி அரசியல்வாதியாக தான் எம்எல்ஏவாக வேண்டும் என்று குமரை தீர்த்துக்கட்ட திட்டம் போடுவது படத்தின் உச்சகட்ட விறுவிறுப்பு.
தன் அம்மாவை கொன்று மணியை அவன் நாட்களை போடுவதற்காக தீனா நடத்தும் நாடகம் எதிர்பாராத டிவிஸ்ட்
நாயகி போலீஸ் அதிகாரியாக வந்து பழிக்குப் பழிவாங்கும் கிளைமாக்ஸ் காட்சி கைதட்ட வைக்கிறது.
குமாராக நடித்திருக்கும் உத்திர சேனா சில காட்சிகள் வந்தாலும் அடிமையாக நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஆட்டோ டிரைவராக வருபவர் நாயகனுக்கு உதவியாக இருந்து உயிரை விடுவது பரிதாபம்.
ஜெகனாக வரும் வில்லனிடம் செம தில்லு செம கெத்து
இன்றைய இளைஞர்கள் கைக்கூலிகளாக அரசியல்வாதிகளிடம் எப்படி தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பது தத்துவமாக படம் சொல்லி இருக்கிறது.
அபத்தமான டபுள் மீனிங் காமெடி இல்லை, கதைக்கு தேவையில்லாத பாடல் காட்சிகள் இல்லை, இருந்தாலும் படம் ரசிக்க வைக்கிறது.
வருங்கால சந்ததியில் சிந்திக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
படக்குழுவினர்:-
தயாரிப்பாளர் – அனிஷ் மசிலாமணி
கதை & இயக்கம் – ஹரிவெங்கடேஷ் அற்புதமான மேக்கிங், புதுமையாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதையில், மிரட்டி இருக்கிறார் இயக்குனர். தேவை இல்லாத காட்சிகள் இல்லை !!
கதை..கதை.. மட்டும் குளச்சல் துறைமுகம் அந்த பகுதியில் படமாக்கி இருக்கிறார் .
வாழ்த்துக்கள் சார்.
ஜானி நாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் இருள் சூழ்ந்த பகுதியில் ,படமாக்கி இருப்பது சிறப்பு.
டுமே”இசை அமைப்பாளர் படத்தின் பலம் இசை பிரவீன் M படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.விறு விறுப்பான படத்தொகுப்பு.
ஆர்ட் டைரக்டராக- கார்த்தி லோகா அருமையான அரங்கம் அமைத்துள்ளார்.
இயல்பான சன்டை காட்சியில்- அபினாஷ் ஆதி அசத்தியிருக்கிறார்.
ஒலி கலவை – பிஜூ ஆண்டனி
வண்ணமயமாக்கல் – பிரேம் குமார் G
இயல்பான ஒப்பனை
தந்துள்ளார் – நீலா ஜீவன்.
விளம்பர வடிவமைப்பு – அப்யஜித் வீரா
மக்கள் தொடர்பு – திரு.அவர்கள்
படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
தயாரிப்பு நிறுவனம் – Dakdam Motion Pictures
விநியோகம் – ஷிவானி ஸ்டூடியோஸ் , செந்தில்.
மொத்தத்தில் இந்த படம் முழுக்க ,முழுக்க, ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம் அனைவரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது இளைஞர்கள் உழைத்து முன்னேற வேண்டும் தவறான வழியில் செல்லக்கூடாது “கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்”என்று நல்ல கருத்து சொல்லி இருக்கிறது.
