B P 180″திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய “ஜெ.பி” இயக்கிய சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் தான்’BP 180’ விறுவிறுப்பான திரைக்கதையில் மிரட்டி இருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்தில்,
நடிப்பு அரக்கனாக மிரட்டி இருக்கிறார்.

நடிகை தான்யா ரவிச்சந்திரன், டாக்டர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் முதன்மையாக நடித்துள்ளார். ஒரு அழகான தேவதைக்கும் “

ஒரு அரக்கனுக்கும் நடக்கும் யுத்தம்”!! பி.பி எகிற வைக்கிறது.

கதை களம்

காசிமேடு அர்னால்ட் சண்டை, சச்சரவு, கத்தி, ரத்தம், கொலை என அடையாளப்படுத்தும் மிக பெரிய ரவுடியாக வலம் வருகிறார்.

மீனவர் சங்க தலைவராக (லிங்கம்)

பாக்யராஜ் , அவரின் உப்பைத் தின்று வளர்ந்தவர் அர்னால்ட் அதனால் அவர் மீது விசுவாசம் கொண்டவர்.

அருள்தாஸ் அர்னால்டுடன் கட்டப்பஞ்சாயத்து, செய்து பல சம்பவங்களை செய்து வருகிறார்.

இவர் ஒரு எம்.எல்.ஏ

இன்னொரு புறம் தான்யா ரவிச்சந்திரன் ,டாக்டர் தங்கமாகவும் அவர் தங்கை பெண்(ஸ்வேதா) போலீசாகவும், இன்னொருவர்(நைநா சாய்( செவிலியராகவும் இருக்கிறார்கள்.

பாக்யராஜ் மகள் பாரதிக்கு திருமண ஏற்பாடு செய்யும் பொழுது ,அவர் விரும்பிய காதலனுடன் ஓடிப் போக திட்டமிட்டு ஸ்கூட்டியில் கூட்டியில் போகும் பொழுது ஆக்சிடென்ட் ஆகிவிடுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மகளுக்கு பாக்யராஜ், போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது
என் மகளை அறுக்காதீர்கள், என்று வாதாடுகிறார், டாக்டர் தங்கமான தன் தான்யா, கடமையை செய்கிறார் .இதனால் அந்த அழகான தேவதைக்கும், அருள் தாஸ், மற்றும் டேனியல் என்கிற அரக்கனுக்கும் போர் மூழ்க்கிறது. இந்த போரில் காவல்துறை தான்யா ப்பக்கம் நிற்க, ரவுடிகள் முழுவதும் டேனியல் பக்கம் இருக்க, இறுதியில் யார்,? ஜெயித்தார்கள்!! என்பது கதை களம்.
ஒருபக்கம் மல்லுக்கட்டு!!
மறுபக்கம் ரவுடிகளின் வெட்டு குத்து!!

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு, பரபரப்பு ,!அடுத்து என்ன நடக்கும்!! என்ற ஆவலுடன் ரசிகர்களை விழிகளை வியக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

பாலாஜி டேனியல் ஒருபுறம் கொலைகளை செய்து கொண்டிருக்க, டாக்டர் தங்கம் ஒருபுறம் தன் கடமையை செய்து கொண்டு இருக்க, இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அப்படி ஒரு பரபரப்பு ,
தமிழ் சினிமா எத்தனையோ உச்சகட்ட பரபரப்பை பார்த்திருக்கலாம்.
இந்த காட்சிகள் மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் & நடிகைகள்

டேனியல் பாலாஜி இவர் பொல்லாதவன், காக்க காக்க, பைரவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்
இந்த படத்தில் காசிமேடு அர்னால்டு என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். படத்தில் அவர் அறிமுகமாகும் சண்டைக்காட்சி, அனல் தெறிக்க ஸ்டைலாக ,வாடா !வா என்று ,அவர் சண்டை போடும் ஸ்டைல் அப்படி ரசிக்க வைக்கிறது .
தான்யா உடன் மோதல் ஏற்பட்டு ஆம்பளையா இருந்தா வாடா !!என்று தான்யா சொல்ல இவர் கர்ஜிக்க ,அதன் பிறகு கமிஷனர் டேனியல் பாலாஜி அழைத்து மிரட்ட, பிபி எகிறும் அளக்கு மிரட்டி இருக்கிறார். ஸ்டைலிஷ் ஆன வில்லன். என்று எல்லா வகையில்போற்ற
கூடியவர், அவர் இல்லாத தமிழ் சினிமாவுக்கு, ஒரு பெரிய வருத்தமான செய்தி தான். இந்த படம் முழுக்க அழகான தேவதையுடன், மல்லுக்கட்டு அரக்கனாக!! டேனியல் பாலாஜி மிரட்டி இருக்கிறார்.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் லிங்கம் என்ற கதாபாத்திரம், மகளுக்காக மார்ச்சு வரியில் அழுது துடிக்கும் போது மனதில் இடம் பிடிக்கிறார்.

டாணக்காரன் இயக்குனர் தமிழ், கமிஷனர் தமிழாக கம்பீரமாக வந்து டேனியல் பாலாஜியை மிரட்டும் போது சபாஷ் வாங்குகிறார்.

ஸ்வேதா பெண் போலீஸ் அதிகாரியாக ும் போது மிகச் சிறப்பாக நடித்தி ருக்கிறார்.

அருள்தாஸ் எம் .எல். ஏ
ஆக வந்து ,டேனியல் பாலாஜியிடம் சிக்கிக்கொண்டு படபடக்க வைக்கிறார்.

ரங்கா ஸ்டாலின் என்ற கதாபாத்திரத்தில் தாண்யா அண்ணன் ஆக, மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்.

ஜாக், சமூக சேவகர்
மற்றும் தான்யாவை விடுதலையாக காதலித்து, அவருக்காக டேனியல் பாலாஜியிடம் அடி உதவி வாங்கி உதவி செய்யும் நல்ல கதாபாத்திரம்.

மற்றும் இப்படத்தில் நடித்த ரவுடிகளாக உதவி இயக்குனர்கள் புதுமுக நடிகர்கள் அனைவரும் நடிப்பில் பட்டய வைரமாக ஜொலித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஜிப்ரான் இசையில் மிரட்டி இருக்கிறார். இசை பலமாக இருக்கிறது.
ஒவ்வொரு காட்சியிலும், இசை கதையோடு பொருந்தி போகிறது. ஆக்சன் காட்சிகளுக்கு, மற்றும் பரபரப்பான காட்சிகளுக்கு, உயிர் தந்திருக்கிறார் ஜிப்ரான்.

ராமலிங்கம் ஒளிப்பதிவாளராக, அற்புதமான காட்சி அமைப்பு தந்துள்ளார்,
மார்ச்சுவரிகாட்சி கள்,
கார் டிராவல் காட்சிகள்.
மற்றும் சண்டை காட்சிகளில், கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.

இளையராஜா சேகரின் படத்தொகுப்பு பரபரப்பாக விறுவிறுப்பாக இருக்கிறது.
படம் வேகமாக விறுவிறுப்பாக பரபரப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளரின் ஷார்ப்பான
படத்தொகுப்பு தான் காரணம்.
வெற்றிக்கு இசையும் படத்தொகுப்பம் ஒளிப்பதிவு பெருபங்கு வகித்திருக்கிறது.

சத்யா காஸ்ட்யூம் நன்றாக இருக்கிறது
தான்யாவை அழகான டாக்டராக காஸ்டியூம் காட்டப்பட்டு இருக்கிறது.

ராம் பாபு ஒப்பனையாளர் பணிபுரிந்து இருக்கிறார் வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் சரியான ஒப்பனை

அருண் குமார் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் அற்புதமான கலைப்படைப்பு
மார்ச்சுவரி காட்சிகள்
காவல் நிலையம்,
மற்றும் டேனியல் பாலாஜி வீடு,
என்ன எல்லா இடங்களிலும் ஆர்ட் டிபார்ட்மென்ட்
அருமையாக வேலை செய்து இருக்கிறார்கள்.

ராம் குமார் சன்டை பயிற்சி கொடுத்து இருக்கிறார்.
டேனியல் பாலாஜி மிரட்டி இருக்கிறார் .
படத்தின் ஆரம்பக் காட்சி டேனியல் பாலாஜி போடும் சண்டை அனல் தெரிகிறது.
மற்றும் அந்த இடைவேளை காட்சி எல்லா இடங்களிலும் சண்டை காட்சி மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.

ஹரி ஹரன் நடனத்தை சிறப்பாக
அமைத்திருக்கிறார்.

இயக்குனர்
ஜெ.பி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார்.
தானியாவுக்கு பக்கபலமாக போலீசை நிக்க வைத்து நீதியை நிலைநாட்டி இருக்கிறார்.

பாக்யராஜ், அருள்தாஸ், டேனியல் பாலாஜி
மூவரும் அவ்வளவு பெரிய டான் டக்கர் ஆக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு போஸ்ட் மாட்டம் செய்யாமல் ஒரு பிணத்தை கொடுக்க மாட்டார்கள் என்பது தெரியாதா என்ற கேள்விக்கு இயக்குனரிடம் பதில் இல்லை.

அதேபோல சிட்டியில் இருக்கும் கமிஷனரை டேனியல் பாலாஜி ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார்.
அதைப்பற்றி போலீஸ் விசாரணையும் எந்த நடவடிக்கை காட்டப்படாது சின்ன ஏமாற்றம்!?

மற்றபடி கிளைமாக்ஸ் காட்சி அவ்வளவு கொடூரமாக பல கொலைகளை செய்யும் அரக்கன் டேனியல் பாலாஜிக்கு இன்னமும் அதிகபட்ச தண்டனை கொடுத்திருக்கலாம் என்பது நமது எண்ணம்.

இப்படி ஒன்று இரண்டு குறைகளை தவிர படம் 99/ சதவீதம் சிறப்பாகவே இருக்கிறது வேறு எந்த குறைகளும் இல்லை ஒரு கமர்சியல் படத்துக்கு என்ன தேவையோ? அதை இயக்குனர் சம பங்கில் கொடுத்திருக்கிறார்.
கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிகர் நடிகைகள் மிக பொருத்தமாக இருக்கிறது.
ஒரு சின்ன தீப்பொறி எப்படி மலையாக, அதுவும் எரிமலையாக, வெடிக்கிறது என்பதை திரைக்கதையின் மூலம் சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
அதிர வைத்தது திரை கதை,
பதற வைத்தது.
ஒரு பூ ஒன்று புயலானது!!
இயக்குனர் தான்யா என்ற கதாபாத்திரத்தில் மூலம் பாரதி கண்ட கண்ணம்மாவை ஞாபகப்படுத்தி இருக்கிறார்.
டாக்டர் தங்கம் என்றாலே “ஞாபகங்கள் தீமூட்டும்”
அதர்மம் அழிந்து தர்மம் தலைக்க வேண்டும் என்ற இயக்குனர் கனவு மெய்படட்டும்

பாரதியார் இயற்றிய “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாடல், துணிச்சலையும், தைரியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த பிரபலமான பாடல், உலகம் முழுவதும் எதிர்த்து நின்றாலும் அல்லது இழிவாகக் கருதப்பட்டாலும், பயப்படக்கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.
பாடலின் முக்கிய வரிகள்:
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
“இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
“துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
இந்த பாடல் வரிகளை மட்டும்
டாக்டர் தங்கம் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
வெல்லட்டும் இயக்குனர் கனவு.
அரக்கர்கள் உலகை விட்டு வெளியே போகட்டும் அன்பு, மனிதம் தழைக்கட்டும்!!

மற்றும் இப்படத்தில் பணி புரிந்திருக்கிறார்கள்,
டெக்னீசியன் கள்
VFX : G.E.Ashok kumar
Production Executive : G.Thiruneelagandan
Digital PR : Ahmed Asjad
Producers : Pratik D chhatbar &
Atul M Bosamiya
Associate producers : Rajesh Thakur, Paresh Jagda, Hiren Patel

அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் .

மக்கள் தொடர்பாளர்கள்
திரு .சுரேஷ் சந்த்ரா ,
திரு .அப்துல் நாசர், அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Producers : Pratik D chhatbar &
Atul M Bosamiya
Associate producers : Rajesh Thakur, Paresh Jagda, Hiren Patel

ஹரி உத்ரா புரொடக்சன்ஸ் சார்பில் படம் வெளியாகி உள்ளது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும், நடக்கும் போட்டியில்
தர்மம் ஜெயிக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சி வித்தியாசமாக அமைத்திருக்கிறார் இயக்குனர்.
வெல்வெட் கேக் தான்யா செம போல்ட் ஆக துணிந்து நிற்கும் பெண்ணாக ஜெயித்திருக்கிறார்.
படமும் ஜெயித்து இருக்கிறது🌷