இயக்குனர் ஜே.கே. சந்துரு எழுதி இயக்ி இருக்கும் டார்க் ஹீயூமர் திரை படம்.
. பேஷன் ஸ்டுடியோஸ் ,மற்றும் தி ரூட் ஆகியவற்றின் கீழ் சுதன் சுந்தரம், மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி, இவர்களால், தயாரிக்கப்பட்ட படமாகும்.
. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் , ரீட்டாவாகவும், ராதிகா சரத்குமார் ,
செல்லமாவாகவும்,
சுனில் பாபின் என்ற கதாபாத்திரத்தில் , ரெடின் கிங்ஸ்லி சீட்டாவாகவும், செண்ட்ராயன் குமார் ஆகவும்,சூப்பர் சுப்பராயன் டிராகுலா பாண்டியனாகவும்,
நடன இயக்குனர் கல்யாணம் மார்ட்டின் என்ற வேடத்திலும்,
மதுசூதன ராவ் ரெட்டி வேடத்தில் நடித்துள்ளார்
மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர் .
கதை களம்
சம்பவம் 1
ரீட்டா, தன் அக்கா ரியா மகளுக்கு,
பர்த்டே கொண்டாட ஆயத்தமாகிறார்.
அந்த சமயத்தில் டிராகுலா பாண்டியன் அவர் வீட்டுக்கு வந்து மட்டையாகிறார்.
சம்பவம் 2
டிராகுலா பாண்டியன் மகன் பாபின், தன் அப்பாவை கொன்றது யார்? என்று வலை வீசி தேடுகிறார்!! மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் பாபின் பார்வையிலிருந்து ரீட்டா குடும்பம் எப்படி தப்பித்தார்கள்?
சம்பவம் 3
ரெட்டியின் அண்ணனை பாபின் தலை துண்டி கொன்றதால் பாபினை கொள்ள ரெட்டி டிராகுலா பாண்டியன் தலைக்கு நான்கு கோடி பேரம் பேசுகிறார். இதற்காக கல்யாண் மாஸ்டர், சென்ராயன், கதிரவன் ,என நான்கு பேருக்கு அசைன்மென்ட் கொடுக்கிறார் .
அவர்கள் டிராகுலா பாண்டியனை கொன்று பணத்தை வாங்கினார்களா?
சம்பவம் 4
ஜான் விஜய், பாண்டிச்சேரியில் உள்ள ஒரு உணவு விடுதியில் லஞ்சம் வாங்கினார், என்று கீர்த்தி சுரேஷ் வீடியோ எடுத்து அவரை மூன்று மாதம் சஸ்பென்ஸ் எடுக்க வைக்கிறார, கீர்த்தி சுரேஷை ஜான் விஜய் பழிவாங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கீர்த்தி சுரேஷ், ஜான் விஜய் இடம் மாட்டினாரா? இல்லையா?
சம்பவம் 5
கீர்த்தி சுரேஷ் அப்பா பிரபாகர் 18 வருடங்களுக்கு முன்னால் 30 வருடமாக சேர்த்து வைத்திருந்த இரண்டு கோடி ரூபாய் நிலத்தை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டு ,போக தற்கொலை செய்து கொள்கிறார் .அந்த கயவன் யார்? கீர்த்தி சுரேஷ் அவனை கண்டுபிடித்து பழி வாங்கினாரா இல்லையா?
இப்படி பல சம்பவங்களை அடக்கி எழுதப்பட்டிருக்கும் திரைகதை, வித்தியாசம், பரபரப்பு அடுத்து என்ன நடக்கும் !!என்று சஸ்பென்ஸ் திரில்லர்ல்லர் படமாக வந்துள்ளது.
இன்னொரு சம்பவமான சுரேஷ் சக்கரவர்த்தி லல்லுவாக பெண்களை வைத்து
தொழில் நடத்தி பணம் சம்பாதிக்கும் இவர், டிராகுலா பாண்டியனுக்கும், கதிரவனான, தாசுக்கும், என்ன சம்பந்தம் ?இவர் எப்படி இதில் மாட்டுகிறார். என்பது இன்னொரு சம்பவம் இப்படி பல சம்பவங்களை சொல்லி இருக்கிறது இந்த” ரீவால்வர்ரீட்டா”
நடிகர் &நடிகைகள்
ரீட்டாவாக வரும் கீர்த்தி சுரேஷ் அலட்டல் இல்லாமல்
அல்டிமேட் ஆக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். வெல்வெட் கேக் ஆக இருந்த கீர்த்தி சுரேஷ் ,செம ரிவஞ்ச் பேபியாக நடித்து ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் “நான் அன்னை தெரசா இல்ல “கேம் ஓவர்” நான் “ரிவால்வர் ரீட்டா” என்று கதையை முடிக்கும் பொழுது பலத்த கை தட்டல்.
பெரிய ரவுடியான சுனிலிடம் நேருக்கு நேர் கண்களை பார்த்து என்ன நடந்தது? என்று கதையை சொல்லும் பொழுது கைதட்டல்!!
இப்படி அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் “ஸ்கோர் செய்திருக்கிறார்.”
“விடையே இல்லாத கேள்விகளுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடத்தும் தர்மயுத்தம் அவருக்கு வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது” “இந்த வலி பயணம் வலிமையான பயணமாக இருக்கிறது”.
அடுத்து ராதிகா சரத்குமார், மாலை போட்ட மாமியாக சாமியாராக, ஒவ்வொரு சம்பவமும் அசால்டாக செய்திருக்கிறார்.
பிரச்சனைகளுக்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் அவர், அதை முடித்து வைப்பதற்காக அவரே வாய் திறந்து மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் நிறைய,
கிளைமாக்ஸ் காட்சியில் “தாஸ் கூட்டணி ட்ராகுலா பாண்டியனை எடுத்து செல்வதாக வந்திருப்பதாக, சொல்லும் பொழுது அக மகிழ்ந்து, நெகிழ்ந்து “வாங்க வாங்க எடுத்துட்டு போங்க” என்று சொல்லும் அந்த இடத்தில் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆகிறது .
தான் “ஒரு நடிப்பு ராட்சசி” என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் செல்லம்மா “
சுனில் பாபின், என்ற கதாபாத்திரத்தில் வெறித்து பார்வை, அப்பாவை கொன்றது யார்? என்று தேடும் பயணத்தில் கம்பீரமாக புயலாக படம் முழுவதும் வருகிறார்.
கிங்ஸ்லி ட்ராகுலா பாண்டியனின் சின்ன வீட்டு மகனாக, வந்து படம் முழுக்க சிரிப்பு சில்லறைகளைசிதற விடுகிறார்.
“மல்லிகைப்பூ வச்சு வச்சு வாடுது” என்ற ரீல்ஸுக்கு சொந்தக்காரரான சோனியாவை கண்டுபிடிக்கும் பொழுதும்.
கிங்ஸிலேயே பாத்ரூமில் வைத்து பூட்டிவிட்டு போய்விடுவார்கள் அப்பொழுது எப்படி தப்பிப்பது என்று பிரியாணிக்கு ஆர்டர் செய்து, அவரிடம் இந்த தப்பிப்பது இப்படி பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
சுரேஷ் சக்கரவர்த்தி லல்லு என்ற கதாபாத்திரத்தில்
பெண்களை வைத்து தொழில் செய்பவராக, பொருந்தி இருக்கிறார்.
அவர் வாய்ஸ் மாடுலேஷன் பெரிதும் ரசிக்க வைக்கிறது.
மார்ட்டின் என்ற கதவை பாத்திரத்தில் மாஸ்டர் நடித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் வீட்டிலிருந்து டிராகுலா பாண்டியன் போனிலிருந்து ஒட்டு கேட்டு ஒவ்வொரு ஸ்கெட்ச் போடுவது ரசிக்க வைக்கும் நடிப்பு.
தாஸ் என்ற வேடத்தில் கதிரவன் நடித்திருக்கிறார். அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு, மாஸ்டரை போட்டு தள்ளி, பிணத்துக்கு அலைவது சரியான நடிப்பு தீனி.
சென்றாயன் குமார் என்ற வேடத்தில் “தா” என்ற மோசமாக பேசி மாட்டிக் கொண்டு அவஸ்தை படுவது ரசிக்க வைக்கிறது.
ஜான்விஜய் போலீஸாக வந்து கீர்த்தி சுரேஷிடம் ஸ்கெட்ச் போட்டு
50 லட்சம் கேட்டு”
5 கோடிக்கு ஆசைப்பட்டு உயிரைவிடும் ஜகஜால போலீசாக நடித்திருக்கிறார்.
மற்றும் கீர்த்தி சுரேஷின் அக்கா ரியா,தங்கை ரீனா
டிராகுலா பாண்டியன்
சாவுக்கு காரணமான சோனியாவாக நடித்திருப்பவர்.
திலீப் சுப்புராயன் இவர்கள் எல்லோரும் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
இயக்குனர்
சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இப்படம் The Route நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும் அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது
மற்றும் இப்படத்தில் கதா பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அஜய் கோஷ்,
அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடப்பு சூப்பர் .
ஒளிப்பதிவாளர் – தினேஷ் கிருஷ்ணன் அருமையான ஒளிப்பதிவாளர்
கச்சிதமாக இருக்கிறது.
பிரவீன் KL
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
கலை இயக்கம் – MKT
ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்
நிர்வாக தயாரிப்பாளர் – வீர சங்கர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஐஸ்வர்யா சுரேஷ்
தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி
தயாரிப்பு நிறுவனம் – The Route & Passion Studios
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
இப்ப படம் மிகப்பெரிய வெற்றி அடையும்
மிகவும் நேர்த்தியான திரைக்கதையில் இயக்குனர் படத்தை கொடுத்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது.🌷🙏
