* தேரே இஷ்க் மே’- “திரை விமர்சனம்”

ரேட்டிங் 4 -5/5

தனுஷ் பாலிவுட் படத்தில் மீண்டும் ஹாட்ரிக் வெற்றி அடித்திருக்கிறார்!!
செம நடிப்பு!! என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு, மீண்டும் ஒரு தேசிய விருதுக்காக தன் திறமையை முழுவதும் கொட்டி நடித்திருக்கும் படம் தான் இந்த படம்.

கதை களம்

இந்திய விமானப்படையின் மிகத் தேர்ந்த விமானியான ஷங்கர் (தனுஷ்) கட்டுக்கடங்காத கோபமும் யாருக்கும் அடங்காத குணமும் கொண்டவராக இருக்கிறார். அப்படியானவருக்கு மன ரீதியான ஆலோசனை வழங்குவதற்கு உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதற்காக, சிறந்த மனநல நிபுணருக்கு ஷங்கர் குறித்த விவரங்கள் அடங்கிய ரகசிய கோப்பு அனுப்பப்படுகிறது. அதைப் பார்க்கும் அந்த மருத்துவரான முக்தி (க்ரித்தி சனோன்) அவசர அவரசமாக ஷங்கரைக் காணச் செல்கிறார். அங்கு இருவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.
அப்போது பிளாஷ்பேக் காட்சிகள் விரிவடைகிறது .
“கல்லூரியில் படிக்கும் தனுஷ்” “மருத்துவத்தில் ஃபைனல் படிக்கும் கீர்த்தி சனோன்
இருவருக்கும் ஏற்படும் அன்பு, அறிமுக காட்சிகளாக விரிகிறது.
ஷங்கருக்கும் முக்திக்கும் என்ன உறவு இருந்தது? இருவரும் ஏன் ஒருவரை ஒருவர் கண்டு உடைகிறார்கள்? என்கிற கேள்விகளுக்கு காதல், வன்முறை பின்னணியில் பதில் சொல்கிற கதையாகவே “தேரே இஷ்க் மே” ஒரு காதல் காவியமாக உருவாகி இருக்கிறது.
வன்முறையாளனாக இருக்கும் தனுசை திருத்த நினைக்கும் நாயகி ,
அதிலிருந்து தனுசை மீட்டு கொண்டு வந்தாரா?

நாயகியின் பேச்சைக் கேட்டு நாயகி வீட்டுக்கு பெண் கேட்க போகும் தனுஷ்” நாயகியின் அப்பா கண்டிஷன் போடும் அந்த யுபிஎஸ் பரிட்சையை எழுதி தேர்வடைந்தாரா?

யுபிஎஸ் எக்ஸாமில் தேர்வாகி நாயகியை பார்க்க செல்லும் தனுஷ் ஏமாற்றம் அடைகிறார்!! நாயகியின் தந்தை கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா? இல்லையா?

தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற கொதி நிலையில் நாயகியின் எங்கேஜ்மென்ட் விழாவில் பெட்ரோல் பாட்டில் வீசி அந்த கூட்டத்தையே கதிகலங்க வைக்கும் தனுஷ் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டதா? அல்லது பிரகாஷ்ராஜ் எல்லோரும் காலிலும் விழுந்து “அசுரன் பட பாணியில் மன்னிப்பு கேட்டதால் மன்னிக்கப்பட்டாரா?

இடைவேளைக்குப் பிறகு” தனுஷின் கேரியர் உயர்ந்து கொண்டே போக” நாயகியின்” கேரியர் போதையில் வாழ்வை இழந்து கொண்டே போக” காதல் இருவரையும் என்ன செய்தது? என்பதை சொல்வது தான் இந்த படம்.

இயக்குநர் ஆனந்த் எல். ராய் – தனுஷ் கூட்டணியில் உருவான ராஞ்சனா (அம்பிகாபதி) திரைப்படத்திற்கு இன்றுவரை ரசிகர்கள் கொண்டாடி கொண்டு வருகின்றனர். காரணம், அப்படத்தில் பேசப்பட்ட ஒருதலை காதலின் உணர்வுகளும் வலிகளும் பலரின் வாழ்க்கையுடன் தொடர்பு செய்ய முடிந்தது. முக்கியமாக, ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்கள் கதைக்கு உயிராக அமைந்திருந்தன.
அந்தப் படம் போலவே இந்த படத்தில் இயக்குனர், இசை, நடிப்பு, மூன்றும் பிரமாதமாக பேசப்பட்டிருக்கிறது அதுதான் படத்தின் வெற்றிக்கு உயிர்நாடியாக அமைந்துள்ளது.
அழுத்தமான உணர்ச்சிகளுடன் உருவாக்க பட்டுள்ள இப்படத்தில் மனிதனிடம் நீங்காத வன்முறை மட்டுமல்ல அன்பும் அவனுக்கு மிகப்பெரிய எதிரியே என்பதை தனுஷ் மற்றும் க்ரித்தி சனோனின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகளுடன் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் போட்டி போட்டு கொண்டு நடித்திருக்கிறார்கள்
தேசிய விருது இரு வரில் யாருக்கு கிடைக்கும் !!என்பதை
பட்டி மன்றம் வைத்து பேசும் அளவுக்கு நடிப்பு சூப்பர்!!

ஆனந்த் எல். ராய் ராஞ்சனாவில் என்ன கதையைச் சொன்னாரோ அதே கதையைக் கொஞ்சம் மாற்றி தேரே இஷ்க் மேயில் சொல்லியிருக்கிறார். காதல் என்றாலே வலிதான். அதிலும் ஒருதலைக் காதல் என்றால்? இவை இரண்டும் இப்படத்தில் பதிவாகியிருக்கின்றன.
காதலுக்காக ஏன் இவ்வளவு துயர்களை அனுபவிக்க வேண்டும்? இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் காதல் ஒன்றும் தெய்வீகமானது இல்லை. இருவரின் மனமும் இணைந்தால் இருக்கலாம்; இல்லையென்றால், மனமொத்து பிரியலாம்; தேவையென்றால், மீண்டும் இன்னொரு காதலைச் செய்யலாம்.
என்பதை பதிவு செய்து வெற்றி வாகை சூடி இருக்கிறார் இயக்குனர்.
கதையைச் சொன்ன விதத்திலும் கதாபாத்திரங்களை எழுதிய விதத்திலும் இதன் முடிவு என்னவாக இருக்கும் என ஊகிக்கமுடியாது?

முதல் பாகத்தில் நகைச்சுவை, காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் காதலின் வலி என்ன என்கிற அழுத்தமாக வசனங்கள் உணர்வுப்பூர்வமாக மாறுகின்றன. விமானப்படை போர்க்காட்சிகளை எடுத்த விதமும் நன்றாக இருந்தன.
முதல் பாகத்தில் நகைச்சுவை, காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாகத்தில் காதலின் வலி என்ன என்கிற அழுத்தமாக வசனங்கள் உணர்வுப்பூர்வமாக மாறுகின்றன.
காட்சிகளை மாற்றி மாற்றி சொன்னதில் இயக்குனர் வெற்றி அடைந்திருக்கிறார்..

தனுஷ்

தனுஷின் கடந்த சில திரைப்படங்களை ஒப்பிடும்போது இப்படத்தில் சிறப்பான நடிப்பையே கொடுத்திருக்கிறார். காதலிக்கத் துவங்கும் காலகட்டத்தில் வன்முறையான கல்லூரி இளைஞனாகவும் விமானப்படை வீரரான பின் அனுபவிக்கும் காதல் வலிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
“என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு”
இன்று நாயகி வீட்டுக்குச் சென்று பாட்டில் வெடிகுண்டு வீசும் பொழுதும்,
காதலி தன்னை பெண் கேட்டு வரச் சொல்லி விட்டாள் என்று பிரகாஷ்ராஜ் நண்பனுடன் ஆட்டம் போடும் பொழுதும்,
நாயகி” வா ஒன்றாக இருக்கலாம்”
என்று அழைக்கும் பொழுது மறுத்துவிட்டு ஜென்டில்மேனாக வரும் பொழுதும்,
பிரகாஷ்ராஜ் இறந்த பிறகு கங்கையில் சென்று அடக்கம் செய்யும் பொழுது ஒரு வெறுத்துப் பார்வையில் மொத்த நடிப்பையும் கொட்டி இருக்கும் பொழுதும்,
ஏர்போர்ஸில் சேர்ந்த பிறகு நாட்டுக்காக உழைக்க உயிரையே கொடுக்க துணியும் பொழுதும் தான்” ஒரு நடிப்பு அரக்கன்” என்பதை பறை சாற்றி இருக்கிறார் இன்றைய தலைமுறையில் இதுபோல யாரும் நடிக்க முடியாது
தான் ஒரு நல்ல நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
இவரும் கிரித்தி சனோனும் முதன்முறையாகச் சந்திக்கும் காட்சியில் கண்கலங்க தன் முன்னாள் காதலியைப் பார்க்கும்போது தனுஷின் நடிப்புத் திறன் முகத்திலேயே வெளிப்படுகிறது.

கிரீத்திசனோன்

க்ரித்தி சனோனுக்கு கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாகவே இது இருக்கும். காதலைப் புறக்கணிக்கும் காட்சிகளிலும், அதை சுமக்கும் காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். மனவலியால் சிகரெட் புகைப்பதும், குடியை நாடுவதுமாக ஒருகட்டத்தில் க்ரித்தியின் கண்ணீர், இக்கதைக்கு சிறந்த பங்களிப்பையே செய்கிறது.
கிளைமாக்ஸ் காட்சி தன் குழந்தையைக் காண தனுஷ் இருக்க வேண்டும் என்று அவர் கையெழுத்து போட மறுப்பதும் தாய்மை ஸ்தானத்தில் தவிப்பதும் என சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்
இன்றைய தலைமுறையில் எந்த நாயகியும் இப்படி நடிக்க மாட்டார் துணியில் நடித்த நாயகி பாராட்டுக்கள் பல….

பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் தனுஷின் தந்தையாக நல்ல நடிப்பு. தன் மகன் செய்த பிழைக்காக நாயகியின் தந்தையிடம் கெஞ்சுவதில் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
ஒவ்வொருவர் காலிலும் விழுந்து கெஞ்சும் பொழுது கண்களில் ஈரப்பசையை கசிய விடுகிறார் நெஞ்சுக்குள் ஒரு பெரிய பாரத்தை சுமத்துகிறார்.
தன் மகன் நன்றாக வந்து விடுவான் என்ற கனவில் இருக்கும் அவருக்கு காதலினால் இப்படி ஆகிவிட்டானே என்று கலங்கி தன் கனவுகளை சொல்லிக்கொண்டே வேகமாக ஸ்கூட்டரில் சென்று நறுக்கி விழுந்து மரணம் அடையும் காட்சிகள் மனதை ரணகளம் ஆக்கி இருக்கிறது பண்பட்ட நடிப்பு பிரகாஷ்ராஜுக்கு விருதுகள் குவியும்
“காதலில் மரணம் மட்டும்தான் உள்ளது. மோட்சம் இல்லை” என்பது போன்ற பல வசனங்கள் பலமாகவே அமைந்துள்ளன. இப்படம் நேரடியாக ஹிந்தியில் உருவாகியிருந்தாலும் தமிழ் வசனங்களும் பாடல் வரிகளும் அழுத்தமாகவே இருப்பது படத்திற்கு பலமாகவே அமைந்துள்ளது. கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷும் க்ரித்தி சனோனும் பேசிக்கொள்ளும் காட்சி உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.

இசையமைப்பாளர்

ஏ. ஆர். ரஹ்மான் கதையின் இன்னொரு நாயகனாக அசத்தியிருக்கிறார். பின்னணி இசையிலும் பாடல்களிலும் உணர்வுகளைத் தெளித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்பாடலான உசே கேக்னா (usey kehna) பாடல் ஒலிக்கப்படும்போது சின்னச் சின்ன மரணங்களுக்குப் பெயர்தான் காதல் என மனம் சஞ்சலமடைகிறது. ரஹ்மானின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும்.

ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது அந்த கங்கை காட்சிகள் கண்ணுக்குள் நிற்கிறது.
கல்லூரி கலவரம் அனல் தெரிக்கிறது.
காதல் காட்சியில் தென்றல் வீசுகிறது கேமரா கோணம் அருமை!!

காதல் புனிதமானதா?
இல்லையா?
இன்றைய இளைஞர்கள் இப்படி ஒரு காதல் வலியை அனுபவிக்க இயலுமா? என்று இறுதிக்காட்சியில் பெருமூச்சுடன் ஒரு பதில் கிடைப்பது வரை தேரே இஷ்க் மே ஒரு காதல் படமாக தோற்கவில்லை என்று சொல்லலாம்!

அன்று ஒரு தேவதாஸ் ,வசந்த மாளிகை, இன்று ஒரு
“தேரே இஷ்க் மே”

இது ஒரு காதல் காவியம் ,கலையாத ஓவியம்.
என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
வசந்தகால நினைவலைகள்.
வெற்றி பட்டியலில் இணைந்திருக்கிறது கொண்டாடுவோம் மகிழ்வோம்.

வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷🙏

மக்கள் தொடர்பாளர்கள்:
திரு: ரியாஸ் அகமது
திரு:பாராஸ் அகமது
மக்களிடம் நல்ல முறையில் நடத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

வலி நிறைந்த பயணத்தில் இப்படம் ஒரு வலிமையான பயணம்