ஐ பி எல் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7-5

“இந்தியன் தண்டனை சட்டம் பற்றி பேசும் படம் “

“லாக் அப் மரணம் பற்றியும் கதை சொல்லி இருக்கிறது

“சாமானிய மனிதன் ஒருவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து குற்றவாளியாக்க துடிக்கும் அதிகார வர்க்கத்திடமிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான்” என்பது ஒன்லைன் .

இயக்குனர் கருணாகரன் இயக்கத்தில் டி.டி.எஃப் வாசன் நாயகனாக நடித்துள்ள .ஐபிஎல் இப்படத்தில் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் ராதா பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி ஆர் மதன் கிருஷ்ணன் தயாரத்துள்ளார்
பரபரப்பான திரைக்கதை மூலம் அசுரத்தனமாக வந்திருக்கிறது
இந்த படம்.
இப்படத்தில் டிடிஎஃப் வாசன், கிஷோர் ,
அபிராமி ,குசிதா,
சிங்கம் புலி, ஆடுகளம் நரேன்,
ஜான் விஜய், தீலிபன்,
போஸ் வெங்கட்,
ஜனனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.: தயாரிப்பாளர்
Banner: Radha Film International
Producer: G.R. Madhan Krishnan
Production Executive: Rajah Subhramani

கதை களம்
நாயகன் குணசேகரன் (கிஷோர்) வேலையை இழந்து விட்டுசொந்தமாக கார் வாங்கி டாக்ஸி ஓட்டுகிறார்.
வாழ்க்கை வசந்தமாக போகிறது ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமாக இருக்கிறது.
ஒருநாள் டெலிவரி பாயான அன்பு (வாசன்) பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.

ஆனால் வேறொரு நபர் (ரஹீம்)அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் அன்பு மீது அவர் கடும் கோபத்தில் இருக்கிறார். இதற்கிடையில், த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அதே கட்சியின் முதல்வர்” பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை திருட ஆட்களை அனுப்புகிறார்”. அதன் விளைவாக சில கொலைகளும் நடக்கின்றன. இந்த சூழலில் மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்ததாக நினைத்து, போலீஸ் அதிகாரி முத்துக்கருப்பன் (போஸ் வெங்கட்) லாக்கப்பில் வைத்து தாக்க அந்த இளைஞர் இறந்து விடுகிறார்.
அவரது செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து முத்துக்கருப்பன் பார்க்கிறார். (அது முதல்வர் சம்பந்தப்பட்ட வீடியோ)
ராஜேஷ் கொலை க்குஅப்பாவியான குணசேகரனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சேர்ந்து பலிகடாவாக்க பார்க்கிறார்கள்.
இதிலிருந்து தனது காதலியின் அண்ணனான குணசேகரனை டெலிவரி பாய் அன்பு எப்படி காப்பாற்றினாரா?
இல்லையா ?
குணசேகரன் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தாரா? இல்லையா?
ராஜேஷைகொன்ற கொலை குற்றவாளி முத்துக்கருப்பன் தண்டிக்கப்பட்டாரா? இல்லையா?
அவரை ஆட்டி வைக்கும் உச்சத்தில் இருக்கும் முதல்வர் தப்பித்தாரா? வெளியே வந்தாரா?
என்பதை விறுவிறுப்புடன், பரபரப்புடன், சொல்லி இருக்கிறது இந்த ஐபிஎல் திரைப்படம்.

அன்பு என்கிற கதாபாத்திரமாக வரும் டிடிஎப் வாசன் பில்டப் இல்லாமல் அறிமுகம் ஆகிறார். அப்போது அவர் கூறும் மெசேஜ் அவரை பின்தொடர்பவர்களுக்கு கனெக்ட் ஆவதால் கரகோஷம் எழுகிறது.
காதல் காட்சிகளில் நன்றாக ரொமான்ஸ் செய்கிறார்.
பைக் ரேஸ் ஒன்றில் அஜித்தை ஞாபகப்படுத்துகிறார்.
கிஷோர் மதுரை செல்லும் வழியில் வில்லன்களிடம் மாட்டிக் கொள்ள இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்கிறார்.
கிஷோர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் குற்றம் சாட்ட பட்டு நிறுத்தி வைக்கும் போது உண்மையை வெளிக்கொண்டு வர கடும் முயற்சி எடுத்து உதவி செய்கிறார்.
காதலி வீட்டில் ஏதாச்சியாக வீடியோ செட்டப் செய்து வந்ததில் கிளைமாக்ஸ் காட்சியில் பெரிதும் உதவுகிறது.
முதல் படத்தில் முத்தாய்ப்பாக நடித்திருக்கிறார்.
வாசனுக்கு எதிர்காலம் பிரகாசம்.

கிஷோர் தான் நாயகன் அதிக காட்சிகளில் தோன்றுகிறார். முகபாவனைகளில்
பரிதாபம் கொள்ள வைக்கிறார்.
தன்னை பற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் புலம்பும் பொழுது, அபிராமி மீது அளவற்ற அன்பு காட்டும் பொழுதும்,
போலீஸ் அதிகாரிகளிடம் அடி வாங்கும் பொழுது, கிஷோர் ஒரு சிறந்த நடிகராக பரிமளித்திருக்கிறார்
கிஷோர்தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். கால் உடைந்த நிலையில் தாங்கி தாங்கி நடப்பதில் தொடங்கி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வசனங்களை எதார்த்தமாக பேசுவது என பிரமாதப்படுதுகிறார்.. மேலும் இரண்டாம் பாதி முழுவதும் கிஷோர் தாக்கப்படுவதை காட்டுவது தொய்வாக உணர வைக்கிறது. நரேன் முதல்வராக மிரட்ட, ஜான் விஜய் கே கே நகர் போலீசாக, வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்
அபிராமி குடும்பத்தில் புகுந்து கேரம் போர்டு விளையாடும் பொழுதும் ,அபிராமி தோசை சுடும் பொழுது மஞ்சள் கரு இல்லாமல் முட்டை எப்படி ஊற்றுவது என்று சொல்லித் தரும்போது பெண்களிடம் கோபத்தை வாங்கி கட்டி கொள்கிறார்.
ஜான் விஜய்.

ஹரிஷ் பேரடி கொடூர வில்ல முகத்தை காட்டி மிரட்டுகிறார்.
கிஷோர் அடி வாங்கும் பொழுது குரூரமாக சிரிப்பது, சீசாவை மூட்டை கட்டி வெழுப்பது ,என மிரட்டி இருக்கிறார்.

போஸ் வெங்கட்
(முத்துக்கருப்பன்)
என்ற போலிஸ் அதிகாரியாக பிச்சைக்காரிஇடம் பணத்தை பிடுங்கும் முதல் காட்சியிலேயே அவர் கதாபாத்திரம் தெரிந்து விடுகிறது. பணத்துக்காக எதையும் செய்யும் படுபாதகனாக அரசியல்வாதிக்கு அடியாளாக இருந்து கொண்டு அவர்கள் தேவையை நிறைவேற்றும் கொடூர முகம் கொண்டவராக, ஒரு சாமானிய டாக்ஸி டிரைவர்மீது கொலை குற்றத்தில் மாட்ட வைக்கும் போஸ் வெங்கட்டுக்கு இந்த ஆண்டில் சிறந்த வில்லன் நடிகர் விருது கிடைக்கலாம்
அபிராமி வசந்தி என்ற, கதாபாத்திரத்தில் நடுத்தர மிடில் கிளாஸ் அம்மாவாக கண்மணி என்ற படிக்கும் பெண் குழந்தைக்கு அம்மாவாக, அருமையாக பொருந்தி இருக்கிறார். கிஷோர் துவண்டு விழும் போதெல்லாம் அவரை அரவணைத்து ,அன்பு காட்டுவது கணவன் வேலையை விட்டு வந்த போது ,தன் நகையை கழற்றி கொடுத்து கார் வாங்க வைப்பது, இப்படி படம் முழுக்க அபிராமி வசந்தியாக தெரிகிறார் வெல்டன் நடிப்பு!!

குஷிதா கனிமொழி என்ற கதாபாத்திரத்தில் இளமை பொங்கும் தென்றலாக வந்து மணம் வீசுகிற வாசனை உடன், காதல் பேசி கவிதை பாடுகிறார். இயல்பான சிரிப்பு அழகான வரவு .

ஜனனி கண்மணி என்ற கதாபாத்திரத்தில் கிஷோர், அபிராமிக்கு மகளாக வந்து , இரண்டு காட்சிகளில் அலப்பறை செய்கிறார்.
ரசிக்க வைக்கிறார்.
இதில் நடித்த அனைவரும்
தங்கள் பங்குக்கு படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். என்றாலும் படத்தில் பல லாஜிக் மீறல்கள். மதுரையில் லாக்அப் மரணம் ஆனதை மறைக்க சென்னையில் உள்ள ஒருவரை ஏன் குற்றவாளியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்? வாசன் சாதாரண டெலிவரி பாயாகத்தான் அறிமுகமாகிறார்.
ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் காரிலேயே பயணிக்கிறார். அது ஏன் , எப்படி என்று விளக்கவில்லை. ஹரிஷ் போன் செய்யாமலேயே போனில் பேசுகிறார்.
தீலீபன் கிஷோர் அப்பாவி என்பதை அறிந்துகொண்டு அவருக்கு உதவும் மதுரை காவல்துறை சூப்பிரண்டு போலீசாக நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

சிங்கம்புலி, கிஷோருக்கு மச்சானாக வந்து கதையில் ஆறுதலாக வந்து போகிறார்.

இயக்குனர்
கருணாநிதி தயாரிப்பாளர் சொன்ன ஒன்லைன் வைத்து, சிறப்பாக ஒரு திரைக்கதை அமைத்து விசாரணை பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார்.
நல்ல மேக்கிங் ,நல்ல திரைக்கதை, நல்ல வசனம் , இது எல்லாமே சிறப்பாக இருக்கிறது.
படத்தை கோர்வையாக கொண்டு சென்றதில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.
சமூகத்துக்கு நல்ல ஒரு படிப்பினையை சொல்லி இருக்கிறார்.
குற்றவாளிகள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும்” தர்மம் அவரை தப்பிக்க விடாது என்று நீதியை சொல்லி இருக்கிறார்.
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
படம் முடிந்த பின் லாக்அப் சித்ரவதையால் இறந்தவர்களை காட்டிய இயக்குநரை பாராட்டலாம்.
இன்றைய டெக்னாலஜி” உலகில் எவ்வளவு பெரிய குற்றவாளியும் ஈசியாக பிடிபடுவான் ஜாக்கிரதையாக இருங்கள்” என்ற எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
நடிகர்களின் பங்களிப்பை சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.
மொத்தத்தில் எடுத்துக்கொண்ட கதைக்காக இந்த IPL பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது.
இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.

அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் முதல் பாடலான “புது கார் பாடலும்”
வாசன் அறிமுகமாகும் காட்சியில் “அப்போ அப்போ தான் இப்போஇப்போதான்”
பாடலும்,
வாசனுக்கும் குசிதாவுக்கும் வரும் மெலோடி பாடல்,
ரசிக்க வைக்கிறது
பின்னணி இசை பிரமாதப்படுத்தி இருக்கிறது கதையோடு ஒன்றிப் போவதால் இசை தனி கவனம் பெறுகிறது.
பாடல்களை மோகன் ராஜா, கு .கார்த்திக்,
குணா ருத்ரா, ஆகாஷ், அருள் விக்டர், தமிழரசன்,
ரமேஷ் நமச்சிவாயம்
எழுதி இருக்கிறார்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.

பிச்சுமணியின் ஒளிப்பதிவு” ரிச்சாக இருக்கிறது”” “நச்சென்று கேமரா கோணம் வைத்திருக்கிறார் “மதுரை திருச்சி ஹைவேயில்..
டாப் ஆங்கிலில்
கேமரா வைத்து அசத்தியிருக்கிறார்
பாடல் காட்சிகளில் ஒவ்வொரு லொகேஷனையும் தேர்வு செய்து சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

பிரகாஷ் அவர்களின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது இரண்டு மணி நேரம் ஷார்பாக செதுக்கியிருக்கிறார்.
தினேஷ் சுப்புராயன் சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார்
ஹைவே ரோடில் வாசன் பைக்கில் சண்டை போடும் காட்சிகள் செம விறுவிறுப்பு நல்ல பரபரப்பு அனல் தெரிகிறது.
அதேபோல கிஷோரை கும்பல் கடத்தும் பொழுது வரும் சண்டைக்காட்சியும் சிறப்பாக செய்து இருக்கிறார் சண்டை பயிற்சியாளர்.
Costume Designer: R. Murugananthan
Art Director: ‘Vengal’ Ravi
Choreographer: Rajesh Christy, Noble Jecikay
DI: Whitee Lottus Digital Studio
VFX: I-Matte Media, Shade 69 Studios
VFX Supervisors: Vetri Selvan B, Sathish Kumar R
Colorist: John Sriram
Sound Mix: Uki. Ayyappan, G Studios, AVM
Dubbing: Murugan G Studios, AVM
SFX: Randy
அனைவரும் ஒரு வெற்றி படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அதில் மேக்கிங், தரம், சவுண்ட் சிஸ்டம், ஒப்பனை ,
ஆர்ட் டைரக்டர், வி.எப் எக்ஸ் காட்சிகள், என அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது .கலர் கரெக்ஷன், மிகவும் நன்றாக இருக்கிறது
கண்களில் ஒத்துக் கொள்ளும் அளவுக்கு
ரிச் ஆக வந்துள்ளது.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் படத்தை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் ஆடுகளம் “நரேன் சொல்வதைப் போல”நான் பேசிப் பேசி ஆட்சியைப் பிடிக்கவில்லை கத்தியை வீசி வீசி தான் இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

கிஷோர் சொல்கிறார் “சட்டம் என்பது சாமானியனுக்கு அல்ல” அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தான். என்று

வாசன் சொல்கிறார் “நீதி நிச்சயம் ஒருநாள் வெல்லும்” என்று
இப்படி “சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்கும்” என்று சொல்லி ஜெயித்திருக்கிறது “இந்தியன் தண்டனை சட்டம்”
அதேபோல படமும் மக்கள் மத்தியில் பேசப்படும் என்பது உறுதி !!🌷

வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷🙏