1970 களில் வைகை ஆற்றின் கரை ஓரம் வாழ்ந்த மக்கள்
அணையில் நீர்மட்டம் உயர்ந்தால் விவசாயம் செய்ய முடியாது.
அணை நீர்மட்டம் குறைந்து காணப்படும் போது விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெருக்குகிறார்கள்.
மற்ற நேரங்களில் விவசாயம் இல்லாத போது சில சமூக குற்றங்களை செய்து வருகிறார்கள்.
அந்த வைகைகரையோர கிராம மக்களான,
,ரொக்க புலி, பாண்டி இருவரும் எப்படி இணைந்து பல சம்பவங்களை செய்தார்கள். என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்.
ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர்! ஒரு கட்டத்தில், தனிமையில் நிற்கும் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி.
அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது
நாயகனும் நாயகியும் எப்படி இணைகிறார்கள் அவர்களுக்கு எப்படி காதல் வருகிறது அந்த மெல்லிய கோட்டுக்குள் இருவரும் எப்படி ஒன்றாக இணைகிறார்கள். என்பதை சொல்வது அடுத்த சம்பவம்
இயக்குனர் பொன்ராம் உண்மை கதையை எடுத்து திரைக்கதையை சூப்பராக அமைத்திருக்கிறார், இது கொஞ்சம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. .
முதல் பாதி அசத்தலான சண்டை காட்சிகளுடன் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. இரண்டாம் பாதியில், எமோஷனல் ,மற்றும் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது . படத்தில் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால் படம் போரடிக்காமல் செல்கிறது. சண்முக பாண்டியன், சரத்குமார் இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..
கிளைமாக்ஸில் வரும் திருப்பம் ரசிக்க வைக்கிறது.. கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம்.. படத்தில் வரும் காமெடி காட்சிகள் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது.. அதுவே படத்திற்கு பலம்’
ரொக்க புலி(சரத் குமார்)
தன்னைக் கடித்த பாம்பை கையில் பிடித்தபடி, ஆஸ்பத்திரிக்கு வரும் ரொக்கப் புலியாக சரத்குமார் கலக்கி இருக்கிறார்
கிண்டல், நையாண்டிமாக
கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார். சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் நையாண்டிகள் எனக் கலகலப்புக்கும் கரம் தந்திருக்கிறார்!
கிராமத்து பெரிசு .
குசும்பு இது புதுசு.
முதல் 10 நிமிடம் சரத்குமாரின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது.
பாண்டி(சண்முக பாண்டியன்)
அம்மாவை இழந்த பாண்டியாக ,ரொக்கப் புலியுடன் சேர்ந்து சம்பவங்களை செய்து ,ஊருக்குள் கெத்தாக வலம் வருகிறார்.
அம்மாவுக்கு பேய் பிடித்து விட்டது என்று கேள்விப்பட்டு வந்து தலையை வாரிக் கொள்வது, நாயகி லைலாவை பார்த்து ஜொள்ளு விடுவது.
எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் அவதாரத்திலும், கோப ரியாக்ஷன்களை வெளிப்படுத்தி கைதட்டல்களை வாங்கிக் கொள்கிறார். சண்முகப் பாண்டியன் விஜயகாந்த்.
அலட்டல் இல்லாத நடிப்பு .உருட்டல் கலந்த குசும்பு.
இருப்பினும், , மதுரை வட்டார வழக்கு உச்சரிப்பில்
பேசியிருந்தால் “லந்து “நன்றாக இருந்திருக்கும்.
லைலா(தர்ணிகா)
கம்பீரமான காவல் துறை அதிகாரி, கஞ்சா எங்கெங்கு இருக்கிறது என்று நாயகனை வைத்து மடக்கும் நடிப்பு.
துடிப்பான இளம் வரவு. நாயகன் மனம் கவர்ந்த உறவு.
காவல் அதிகாரியாக கதாபாத்திரத்திற்குத் தேர்ந்த நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்.தட்டுத் தடுமாறி பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகி தர்ணிகா. அதனைச் சுவாரஸ்யமாக்கிக் கலகல எபிசோடுக்கு ஸ்டீயரிங்கை திருப்பியிருக்கிறார்
லைலாவாக வந்து மஜ்னுவுடன் டூயட் பாடி ,மாமுல் போலீஸ் அதிகாரியாக வந்து போகிறார்.
மற்றும்
கல்கி ராஜா.குந்து
என்ற பாத்திரத்தில் படம் முழுக்க வந்து கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
சுஜீத் சங்கர்
கடமை தவறாத எஸ். பி .யாக வருகிறார் ஆனால் இவருக்கு சைக்கோ போலீஸ் என்று பெயர் .
நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.
மற்றும்
காளி வெங்கட், தருண் கோபி,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.
அவருக்கு வாழ்த்துக்கள் 🌷
தொழில்நுட்ப கலைஞர்கள்
.
ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம் இவரின் கேமரா ,
மலைகளையும் வெக்கை படிந்த நிலங்களையும், படம்பிடித்த விதம், வைகை அணையை ஒட்டிய பகுதிகளைக் காட்சிப்படுத்தக் கையாண்டிருக்கும் ஒளியமைப்பு ,என படத்திற்குக் கூர்மை தீட்டியிருக்கிறார்.
கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது கேமரா
பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
யுவன் சங்கர் ராஜா
வின் இசையில்,
படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ‘வஸ்தாரா’ பாடல் நன்றாக வந்திருக்கிறது.
இயக்குனர்
இயக்குனர் பொன்ராம் இதற்கு முன் இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
பொன்ராம் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். எனவே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது
அந்த எதிர் பார்ப்பை நிறை வேற்றி இருக்கிறார்.
சண்முக பாண்டியனிடம் அசத்தலாக நடிப்பை வாங்கி இருக்கிறார்..1996ம் வருடம் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் பொன்ராம். சரத்குமாருக்கும், சண்முக பாண்டியனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
அதற்குக் காரணம் இயக்குனர் தான். படத்தின் இடைவேளை காட்சியும் மிகச் சிறப்பு.. கண்டிப்பாக சண்முக பாண்டியனுக்கு இது ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக தந்திருக்கிறார் இயக்குனர்.
கலை இயக்குநராக சரவணன் பணி புரிந்து இருக்கிறார்
அந்த கிராமத்து காவல் நிலையம்.
சரத்குமார் வீடு ,
சண்முக பாண்டியன் வீடு ,மற்றும் கோயில் பண்டிகை, கருப்பணசாமி, என ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் பளிச்சென்று தெரிகிறது.
தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பாளராக கச்சிதமாக படத்தை செதுக்கியிருக்கிறார். படம் விறுவிறுப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளரின் கைவண்ணமே காரணம் .
பீனிக்ஸ் பிரபு & சக்தி சரவணன் இவர்கள் சண்டை பயிற்சியில் அனல் தெரிக்கிறது ஆரம்பத்தில் சரத்குமார் போடும் சண்டையும், கிளைமாக்ஸ் காட்சியில் ,சண்முக பாண்டியன் போடும் சண்டையும் தனி கவனம் பெறுகிறது.
ஷெரீப் ,மற்றும் காவியா, நடன பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் வஸ்தாரா” நடனம் சூப்பர்
பாடல்களை யுக பாரதியும், கவிஞர் சினேகனும் ,சூப்பர் சுப்புவும் எழுதி இருக்கிறார்கள் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
குப்புசாமி அவர்கள் ஒப்பனையாளராக பணிபுரிந்து இருக்கிறார் சரத்குமார் வெள்ளை தாடி ஒப்பனை கொஞ்சம் பொறுத்த மற்றதாக தெரிகிறது.
ஆடை வடிவமைப்பு தன்ராஜ்
காஸ்ட்யூம் டிசைனர் மீனாட்சி
மற்றும்
Direction Team
Selvaraj Thirumeni
Bala Sivasamy
Dinesh Narasimharaj
Edward Francis
Vel Sankar
Jamunu Pandi
Nandhakumar M
Arun
Associate Editor : Prashanth S
Di : Infinity Media
Colorist : Shanmuga Pandian M
Vfx : Sozo Studios
Sound Mix : T Udhayakumar (Sound Vibe)
Sound Design : R.K.Aswath (DAW RECORDS) – R.Rajmohan
Design : Pavan Reddot
Production Controller : Kovai V Vijaya Kumar, Theni P Selvakumar
Marketing & Promotion : K V Mothi (Dec)
Music And Digital Partner : Saregama
Executive Producer : JayaSankar Selvaraj
Label: Saregama India Limited, A Rpsg Group
என இந்த திரைப்படத்திற்கு, திரைக்கு முன்னாலும், திரைக்குப் பின்னாலும், இத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் ,தங்கள் உழைப்பை கொட்டி இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரின் உழைப்புக்கு
வெற்றி நிச்சயம்.
மக்கள் தொடர்பாளர்
திரு.நிகில்முருகன்
அவர்கள் படத்தை
நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் 🌷
கொம்பு சீவி “திரை படம்”சண்முக பாண்டியனுக்கு ஒரு ஹிட் படமாக அமைந்திருக்கிறது
அனைவருக்கும்
கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள் 🌷
