ஒன் மேன்” திரை விமர்சனம்

ரேட்டிங் -4-5-/5

ஒன் மேன்’ (One Man / One) திரைப்படம் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே ஒரு தனித்துவமான தொழில்நுட்ப சாதனையாகப் பார்க்கப்படுகிறது இப்படத்தின் வியப்பூட்டும் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் முக்கிய காட்சிகள்
பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் ராஜ் குமார் சார் ☘️

💥 அசாத்தியமான தொழில்நுட்ப விவரங்கள்70-க்கும் மேற்பட்ட துறைகள்: வழக்கமாக ஒரு சினிமாவிற்கு 24 கைவினைக் கலைஞர்கள் (Crafts) தேவைப்படுவர். ஆனால், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், கேமரா லைட்டிங், மேக்கப், காஸ்டியூம், எடிட்டிங், டப்பிங், கலர் கரெக்ஷன் என 70-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பணிகளை சங்ககிரி ராஜ்குமார் ஒருவராகவே செய்துள்ளார்.VFX மற்றும் 3D மாடலிங்: படத்தின் கிராபிக்ஸ், அனிமேஷன், 3D மாடலிங், டெக்ஸ்சர் போன்ற கடினமான விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பணிகளையும் அவரே கற்றுக்கொண்டு தனியாகச் செய்துள்ளார்.6 வருட உழைப்பு: எந்தவொரு உதவியாளர்களும் இல்லாமல், இந்த முழு நீள அறிவியல் புனைகதை (Sci-Fi) திரைப்படத்தில்
மேக்கிங் கேமரா: ஒவ்வொரு காட்சியையும் அவர் எப்படித் தனியாகப் படம்பிடித்தார் என்பதை நிரூபிக்க, திரைக்குப் பின்னால் நடப்பவற்றை மற்றொரு தனி கேமராவில் முழுமையாகப் பதிவு செய்துள்ளார
.🔥 மிரட்டலான முக்கிய காட்சிகள் (Action Sequences)படம் ஒரு ஒற்றை மனிதனால் எடுக்கப்பட்டாலும், இது ஒரு சோதனை முயற்சி (Experimental) படம் போல இல்லாமல், ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.ஹெலிகாப்டர் சேஸிங்: விறுவிறுப்பான ஹெலிகாப்டர் துரத்தல் காட்சி.ரயில் விபத்து: பிரம்மாண்டமான ரயில் மோதல் காட்சி (Train collision).அமெரிக்கா கார் சேஸ்: அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் துரத்தல் காட்சிகள்.அருவி காட்சி: ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சிக்குள் (Waterfall) குதித்து 5 பேர் தப்பிப்பது போன்ற த்ரில்லிங்
காட்சி மிரட்டி இருக்கிறார்

🔥. கதாபாத்திர வடிவமைப்பு (Casting Feat)20 முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட துணை கதாபாத்திரங்கள் என படத்தில் வரும் அத்தனை வேடங்களிலும் சங்ககிரி ராஜ்குமார் மட்டுமே வெவ்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.CGI மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரே காட்சியில் பல நூறு வடிவங்களில் அவரே திரையில் தோன்றுவது படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ஆகும்.

☘️பின்னணி இசை – ராஜ்குமாரே செய்த முயற்சி
“ஒன் மேன்” படத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இசையும் இந்த one-man முயற்சியின் ஒரு பகுதிதான். படத்தின் இசை, பாடல்கள் உள்ளிட்ட இசை சம்பந்தப்பட்ட பணிகளையும் வேறு இசையமைப்பாளரிடம் ஒப்படைக்காமல் ராஜ்குமாரே செய்துள்ளார்
இதனால் வழக்கமான திரைப்படம் போல,
இயக்குநர் → இசையமைப்பாளர் → பின்னணி இசை → ரெக்கார்டிங்
என்ற தனித்தனி குழு முறையை விட, காட்சியை உருவாக்கியவரே அதற்கான இசை உணர்வையும் உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஹை லைட்

🎧 ஏன் பின்னணி இசை முக்கியம்?
இந்தப் படத்தில் பல கதாபாத்திரங்களையும் ஒரே நபர் நடித்திருப்பதால், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்வையாளர்கள் எளிதில் வேறுபடுத்திக் கொள்ள காட்சி, மேக்கப், குரல், ஒலி மற்றும் இசை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதனால் பின்னணி இசை வெறும் “BGM” ஆக இல்லாமல், ஒரு கதாபாத்திரத்தின் மனநிலை, காட்சியின் பதற்றம், நகைச்சுவை அல்லது உணர்ச்சியை வேறுபடுத்தும் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால், இங்கே ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்: எந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, எத்தனை BGM tracks உருவாக்கப்பட்டன, recording எங்கே நடந்தது, குறிப்பிட்ட இசைத் தீம்
இவையெல்லாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறார்.

🎬, எடிட்டிங் முதல் இசை வரை அனைத்து பணிகளையும் தானே செய்து ள்ளார்
எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

☘️ஒன் மேன்” படத்தில் ஒரே ராஜ்குமார் பல கதாபாத்திரங்களாக எப்படி திரையில் தோன்றுகிறார்—ஒரே காட்சியில் இரண்டு/மூன்று ராஜ்குமார்களை எப்படி உருவாக்கினார், கேமரா எப்படி வைக்கப்பட்டது, CGI எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார் அதை படத்தின் முடிவில் தெளிவாக விளக்கி உள்ளார்.

கதை களம்

🌍 நான்கு நண்பர்கள்
ராஜா, ரூபி, ஜேக், பூமா
கார் ரிப்பேர் ஆகி
காட்டுக்குள் வழி தவறிச் சென்று, செயல்பாடு நிறுத்தப்பட்ட ஒரு ரசாயனத் தொழிற்சாலையை கண்டுபிடிக்கிறார்கள் .
அந்த தொழிற்சாலை, உலகத்தை சில நாட்களுக்கு உறையச் செய்வதற்காக நடத்தப்பட்டு தோல்வியடைந்த ஒரு அறிவியல் பரிசோதனையின் மையமாக இருந்திருக்கிறது. அந்த கருவிகள் இந்த நான்கு பேரின் கையில் சிக்கிய பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் மையம
இது வெறுமனே “உலகம் அழிந்துவிட்டது; ஒரே மனிதன் உயிருடன் இருக்கிறான்” என்ற சாதாரண post-apocalyptic கதை அல்ல. உலகையே சில நாட்களுக்கு நிறுத்திவிடக்கூடிய அறிவியல் பரிசோதனை என்ற சயின்ஸ்-ஃபிக்ஷன் கோணம்தான் படத்தில் மையம்.

மல்டி டேலண்ட் உள்ள நான்கு இளைஞர்களாகவும்,சைண்டீஸாகவும்,அம்மாவாக,கார்டிரைவராக,வேலைகாரனாக, காவல் துறை அதிகாரியாக என இவரே கலக்கி இருக்கிறார்.
லாக்டவுன் அறிவிக்கவுள்ள நேரம். அவர்கள் செல்லும் பாதை அதில் சில பல தடைகள் அங்கு முக்கியமான லேப் ஒரு காரியத்தால், உலகில் அனைவரும் மறைந்து போவது என இதுவரை தமிழ் சினிமாவில் சொல்ல படாத கதையை சொல்லி இருக்கிறார்.
வித்தியாசமான கதைகளம்.

👑 “உலகம் அழிந்த பிறகு அவர் ராஜாவாகிறார்”
என்பதும் குறிப்பிடத்தக்கது சர்வதேச ரசிகர்களுக்கும் பொருந்தக்கூடிய கதை, இறுதியில் ஒரு செய்தி பணம் பொருள் உலகமே நம் கையில் இருந்தாலும் அன்பு மட்டுமே இங்கு மனிதர்களை வாழ வைக்கும் ஒரு மனிதன் துன்பப்படும் பொழுது அவனுக்கு ஆறுதல் கூற இன்னொரு மனிதன் வேண்டும் என்ற ஒப்பற்ற தத்துவத்தையும் இந்த படத்தின் மூலம் கூறியிருக்கிறார் இயக்குனர். (ஆக்‌ஷுவலா இது ஹாலிவுட்ல வேறலெவல்ல வொர்க் ஆகிற கன்டென்ட்)
“ONE MAN” 100 நிமிடத் திரைப்படம
அந்த 100 நிமிடம் படமும் விறுவிறுப்பாக அடுத்து என்ன? நடக்கும் !என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் ஹெலிகாப்டர் சீன், சீட்நுனுக்கே நம்மை கொண்டு வந்து விடுகிறது அமெரிக்காவில் நடக்கும் காட்சிகள் அற்புதமாக படமாக்கி வி.எக.எக்ஸ் செய்திருக்கிறார்.
நண்பர்கள் ஒவ்வொருவராக இழக்கும் போது அந்த நட்பின் வலியையும் புதிவு செய்து இருக்கிறார் ஆரம்பத்திலிருந்தே “ஒரே மனிதன் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, சவுண்ட் மிக்சிங், CGI என பல துறைகளையும் அவரே கையாள்வதாக அந்த “10 நாட்கள் – அவர் அனுபவிக்க நினைக்கும் ஆசை – ராஜாவாகும் சம்பவம்” பற்றிய தகவல் தரமான சம்பவம

:🔥 ஒரே ராஜ்குமார்… பல கதாபாத்திரங்கள்!
எப்படி சாத்தியமானது எப்படி படம் அடைவது ஒவ்வொரு கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்கிறது இது எப்படி உருவானது என்பதெல்லாம் வையப்பான விஷயமாக படம் பார்ப்பவர்களுக்கு இருக்கும்.
ஒரே நடிகர் பல கதாபாத்திரங்களாகத் தோன்றுவதற்கு அவர் வேறுவேறு தோற்றம், மேக்கப் மற்றும் CGI/மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். வயதான தோற்றம் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை motion capture முறையிலும் செய்திருக்கிறார்
இந்த படத்தில் ராஜ்குமார் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் எத்தனை, அவர் எப்படி ஒரே நேரத்தில் பல கதாபாத்திரங்களை படமாக்கினார், CGI/டெக்னிக்கல் ட்ரிக்ஸ் என்ன, படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் படம் முடிந்த பிறகு அவரே வெளியிடுகிறார் இதுவும் பாராட்டத்தக்கது’.

🎥 ஒரே காட்சியில் இரண்டு ராஜ்குமார் எப்படி?
இதன் அடிப்படை உத்தி என்னவென்றால்:
முதலில் ஒரு கதாபாத்திரமாக நடிப்பு → கேமராவில் பதிவு → அதே காட்சியின் continuity-யை காப்பாற்றி மற்றொரு கதாபாத்திரமாக நடிப்பு → பின்னர் editing/CGI மூலம் இரண்டு காட்சிகளையும் இணைத்தல்.
இதற்கு முன்பே அவர் செய்த முயற்சியில், ஒரு திரையரங்கில் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பது போன்ற காட்சிக்காக தானே ஒவ்வொரு இருக்கையிலும் அமர்ந்து தனித்தனியாக படமாக்கியிருக்கிறார். பின்னர் அவற்றை ஒரே காட்சியாக உருவாக்கியிருக்கிறார். இதுஎல்லாம் தமிழ் சினிமாவில் பிரமிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

“ஒன் மேன்” – என்ன ஸ்பெஷல்?
சங்ககிரி ராஜ்குமார் இயக்கி நடித்துள்ள இந்தப் படத்தில், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, மேக்கப், காஸ்ட்யூம், லைட்டிங், எடிட்டிங், டப்பிங், அனிமேஷன், கலர் கரெக்ஷன் என திரைப்படத்துக்குத் தேவையான பல முக்கியப் பணிகளையும் அவரே செய்திருக்கிறார்.
மிகப்பெரிய ஆச்சரியம்: படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களிலும் அவரே நடித்துள்ளார்! அதாவது, தனித்தனி நடிகர்கள் இல்லாமல் பல்வேறு கதாபாத்திரங்களை ஒரே ராஜ்குமாரே ஏற்றுள்ளார்.

🎬 கேமராவையும் தனியாக இயக்கியிருக்கிறார்!
இது இன்னும் பிரமிக்க வைக்கும்
ராஜ்குமார் தானே ஒரு கிரேன் தயாரித்துள்ளார். அதைக் கழற்றினால் டிராலியாகவும் பயன்படுத்தும் வகையில் அமைத்திருந்ததாக அவர் கேமராவை அமைத்து, தானே நடிக்கச் சென்று, மோட்டார் மூலம் கிரேன்/டிராலியை இயக்கியிருக்கிறார்.இதுவும் தமிழ் சினிமாவில் புதுமை! புதுமை!
அதாவது வழக்கமாக:
கேமராமேன் + கிரேன் ஆபரேட்டர் + நடிகர் + இயக்குநர்
என்று நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்ய முயன்றிருக்கிறார்!
என்பதும் குறிப்பிடத்தக்கது.

🌲 வெளிப்புறப் படப்பிடிப்பும் தனியாக!
அவர் ஒகேனக்கல், தலக்கோணம் போன்ற அடர்ந்த காடுகளிலும், இமயமலைப் பனிப்பகுதிகளிலும் தனியாக தங்கி படப்பிடிப்பு செய்திருக்கிறார்.
மற்றும் மலேசியா, தாய்லாந்து காடுகளிலும் படப்பிடிப்பு நடத்தியது கண்களுக்கு குளிர்ச்சியாகவும் காட்சிகள் வித்தியாசமாகவும் இருந்தது.
, ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். திரைப்படத்தையும் உருவாக்க முடியுமா?” என்ற கேள்விக்கு ராஜ்குமார் தனது பல ஆண்டுகால உழைப்பால் நடைமுறைப் பரிசோதனை செய்திருக்கிறார்.
சங்ககிரி ராஜ்குமாரின் “ஒன் மேன்” (One Man) உண்மையிலேயே வித்தியாசமான முயற்சி
இதன் சிறப்பு கதை மட்டுமல்ல—ஒரு முழு திரைப்படத்தையே ஒரே மனிதர் உருவாக்கியிருக்கிறார் என்பதுதான்.

💡 இந்த முயற்சியின் நோக்கம் என்ன?
“ஒரு தனி மனிதனால் நினைத்த கருத்தை உலகத்திடம் கொண்டு செல்ல முடியும்” என்பதை நிரூபிக்கும் வகையில் படம் வெற்றி அடைய சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறார்.
அவருடைய முந்தைய படங்களான “வெங்காயம்”, “பையாஸ்கோப்” ஆகியவற்றுக்குப் பிறகு வந்த இந்த முயற்சி, வழக்கமான திரைப்படத் தயாரிப்பு முறைக்கு முற்றிலும் மாறானது. பாராட்டுக்குரியது.

தமிழ் சினிமாவில் ‘சிங்கிள் ஷாட்’ முறையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்திருப்போம். ‘சிங்கிள் கேரக்டர்’ முறையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை பார்த்திருப்போம். இதுவரையிலும் யாரும் திரையில் பார்த்திராத புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். அதாவது, திரைப்படம் எடுப்பதற்கு குறைந்தபட்சம் 100க்கும் மேற்பட்ட நபர்கள் தேவை என்கிற நிலைமையை மாற்றி தனி ஒருவனாக ‘ஒன் மேன்’ படத்தை உருவாக்கி இருக்கிறார்.

யார் இந்த சங்ககிரி ராஜ்குமார்?

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் தெருக்கூத்து கலைஞருக்கு மகனாகப் பிறந்தவர் ராஜ்குமார். சினிமா மீது கொண்டுள்ள ஆர்வத்தால் மறைந்த இயக்குநர் வேலு பிரபாகரனிடம் உதவியாளராக பணிபுரிந்து அதன் பின்னர் ‘வெங்காயம்’, ‘ பயாஸ்கோப்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பன்முக ஆளுமையாக உருவெடுத்தார். இவர், தனது மூன்றாவது திரைப்படத்தை வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டு இருந்த சூழலில் அவருக்கு புதிய யோசனை ஏற்பட்டுள்ளது.

பெரிய பொருட்செலவு மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்டிருக்க கூடிய நடிகர், நடிகைகள் இருந்தால் படத்திற்கான விளம்பரமும் சிறப்பாக அமையும். அதற்கு மிகப்பெரிய அளவு செலவு ஆகும். அதே நேரம் வித்தியாசமான புதிய முயற்சியை திரைப்படத்தில் செய்தால் அதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்பது மூலமாக படத்தின் விளம்பரம் அதுவாக நடக்கும் என யோசித்து வித்தியாசமாக படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்தார்.
“ஒன் மேன்” படத்தின் கதையின் நாயகனாக நடித்து, கதையின் மாந்தர்கள், ஒளிப்பதிவு, இசை, கலை, இயக்கம், படத் தொகுப்பு என அனைத்துப் பணிகளையும் தானே மேற்கொண்டு கிட்டத்தட்ட கடந்த 6 ஆண்டுகளாக ‘ஒன் மேன்’ படத்தை எடுத்து முடித்துள்ளார்
படத்தை பார்த்த போது பிரமிப்பு பிரமிப்பு பிரமிப்பு
அறிவும், திறமையும் ஒருங்கே பெற்றவராக இருக்கிறார்.

எந்த ஒரு பெரிய வசதியும் இல்லாமல் தான் ஒருவரே கதை எழுதி, பல வேடங்களில் நடித்து, தயாரித்து, ஒளிப்பதிவு செய்து, கலை இயக்குனராக, மேக்கப் மேனாக, லைட் மேன் ஆக, படத்தொகுப்பாளராக, சவுண்ட் எஞ்சினியராக டப்பிங் கலைஞராக, விஎஃப்எக்ஸ் கலைஞராக.. அனைத்து வேலைகளையும் செய்து படத்தை முடித்து இருக்கிறார்.

இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. ஹாலிவுட், பாலிவுட் போன்ற திரையுலகில் ஏராளமான பொருட்செலவில் பல தொழில் நுட்ப வல்லுனர்களின் பங்களிப்போடு செய்கின்ற பணியை இவர் ஒருவரே செய்திருக்கிறார்.

இவருக்கும் பண பலம் இருந்திருந்தால், இன்னும் பிரம்மாண்டமாகவும் ஆச்சரியப்படும் வகையிலும் உலக திரையுலகுக்கு சவால் விடுகின்ற அளவுக்கு தனது திறமையை காட்டி இருப்பார்.

அந்த அளவுக்கு இந்த படத்தை இயக்கி நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார். அவருடைய திறமையை போற்ற வேண்டும். அவரது முயற்சியை பாராட்ட வேண்டும். அவரது படத்தை எல்லோரும் பார்த்து… அவர் மிகப்பெரிய வெற்றி அடைய உதவ வேண்டும்…

வாழ்த்துக்கள் சங்ககிரி ராஜ்குமார்…. வாழ்க வாழ்க வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️