அவதார் : பயர் அண்ட் ஆஷ் “திரை விமர்சனம்

ரேட்டிங் 5/5

பிரம்மாண்டத்தின் உச்சமாக வந்திருக்கும் இந்த படம் இதற்கு முன் வந்த
அவதார்( 2009), அவதார் தி வே ஆப் வாட்டர்(2022) படங்களுக்குபின் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்திருக்கும் “அவதார் படத்தின் 3ம் பாகம் “அவதார் பயர் அண்ட் ஆஷ்.”
படம் முழுக்க இயக்குனர் தன் கற்பனை திறமையால் மிரட்டி இருக்கிறார் படம் பார்த்து விட்டு வருபவர்கள் வியந்து அசந்து போய் வருகிறார்கள்.
இந்த படம், தமிழிலும் டப்பாகி உள்ளது. முந்தைய 2 பாகங்களை பார்த்தவர்கள், இந்த பாகத்துடன் எளிதில் கனெக்ட் ஆவார்கள். அவர்களுக்கு முன்கதை தெரியும் என்பதால் பல விஷயங்களை, கேரக்டர்களின் தன்மையை எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அவதார் 2- விட்ட இடத்திலிருந்து படம் தொடங்குகிறது, ஜாக்சலி தன் குடும்பத்தை காப்பாற்ற, நாவி பகுதிக்குள் ஐக் தங்குகிறார். அங்கு ஜாக்சலி இளைய மகன் தன் அண்ணனை இழந்த சோகத்தில் இருக்க, ஸ்பைடர் மனிதன் அவனால் இந்த உலகில் வாழ முடியாது அவனை மனிதர்கள் வாழும் பகுதியில் விட வேண்டும் என ஜாக்சாலி குடும்பத்துடன் வான்வெளி பயனத்தில் பறக்கிறார்.

அப்படி பறக்கும் போது சாம்பல் பகுதியை சார்ந்த நெருப்பை வைத்து ஆட்சி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை தாக்குகிறது, அங்கு மிகப்பெரிய போராட்டத்தின் பிறகு ஜாக்சலி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைகிறார்.

படத்தின் ஆரம்பத்தில்
பாண்டோரா என்ற வேற்றுகிரகவாசிகளுக்கும், அவர்களால் வெள்ளைத்தோல் ஆகாயவாசிகள் என்று சொல்லப்படும் எதிர்காலத்தில் வாழும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டைதான் படத்தின் கதை களமாக விரிகிறது
அதில் கணவன், மனைவி உறவு, அப்பா, மகன் பாசம், குடும்ப சென்டிமென்ட், கடவுள் நம்பிக்கை என பல விஷயங்களை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர்
உலகம் முழுவதும் கணவன் மனைவி குழந்தைகள் என்று சென்டிமென்ட் இருக்கிறது என்பது நிரூபித்து இருக்கிறார் இயக்குனர்.

முந்தைய பாகத்தில் கடலில் சண்டையிட்டு எதிரிகளை விரட்டி ஜெயிக்கிறார்கள் ஹீரோ சாம், சோயா தம்பதியினர். அவர்களுக்கு கடல்வாழ் இன மக்கள் உதவியாக இருக்கிறார்கள்.
அதுவே மிகப் பிரமாண்டமாக இருந்தது அற்புதமாக இருவரும் நடித்திருந்தார்கள்.

சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு ஒரு அவதார் வருகிறது. உடன் மீண்டும் அதிநவீன தொழில்நுட்பம். மீண்டும் அவற்றை எல்லாம் சமாளித்து, தன் குடும்பத்தையும், தன் வீடாகக் கருதும் பண்டோராவையும் எப்படி சல்லி காப்பாற்றுகிறான் என்பதை பேசுகிறது ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ஆங்கிலத் திரைப்படம்

இந்த பாகத்திலும் மீண்டும் பழைய வில்லன்களால் அவர்களுக்கு ஆபத்து வருகிறது.
அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை சம நிரூபிப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஹீரோ குடும்பத்தில் ஒருவராகிவிட்ட, தனது மகன் மைல்சை வில்லன்
தேடி வருகிறார்
ஸ்பைடர் என்ற
தன் மகனுக்காக அவர் நடத்தும் யுத்தம் மிகப்பெரியது.

அதற்கு புது வில்லி ஓனா சாப்ளின் எப்படி உதவி செய்கிறார்.என்பது
விறுவிறுப்பான கதைக்களம் “ஓனா சாப்ளின் வரும் காட்சிகளில் படம் பார்ப்பவர்கள் வியந்து போய் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குனர்.

ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி கதாபாத்திரங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது
முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆக்‌ஷன் மற்றும் கிராபிக்ஸ் மீது காட்டியிருக்கிறார் கேமரூன் கதையின் ஆன்மாவில் . எல்லா காட்சியும் மனதைத் தொடும்படி இருக்கிறது
ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளும் பிரமிக்க வைக்கிறது.

சைமன் ஃப்ரான்லென் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது. போர்க்களக் காட்சிகளில் இசை வேகம் கூட்டினாலும், முதல் பாகத்தில் மறைந்த ஜேம்ஸ் ஹார்னரின் மனதைத் தொடும் மெல்லிசை இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும்

ஜேம்ஸ் கேமரூன் அவதாருக்காக தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிட்டு வருகிறார், ஆனால், படத்திற்கு படம் டெக்னாலஜி அதிகமாகி கண்களுக்கு விருந்து வைக்கிறார்

படத்தின் பெரும் பலமே விஷ்வல் காட்சிகள் தான், பேரஷுட் போல் வானத்தில் பறக்கும் மீன்கள், அங்கு வருக் சாம்பல் குழுவினர் சண்டை என ஆரம்பம் செம அதிரடியாக ஆரம்பிக்கிறது

கிரி தான் என்று உணர தொடங்கி அவர் கதையை கேட்கும் இடம், தன் சக்தியை வைத்து சாம்பல் பகுதி மனிதர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சி அவருக்கான முக்கியத்துவம் இந்த படத்தில் சிறப்பு.

சாம்பல் பகுதி ராணி, வில்லத்தனம் மிரட்டுகிறது கேனல் மைல்ஸ் ஒருவரே போதும், அப்படியிருக்க இவரும் கூட சேர்வது கூடுதல் சிறப்பு.

அதிலிருந்து கிளைமேக்ஸ் பிரமாண்ட சண்டைக்காட்சி என முதல் 2 பாகத்தில் பார்த்தது போலவே சென்றாலும் பிரமாண்டம் பொழுதை போக்குகிறது

தயாரிப்பு : 20த் செஞ்சூரி பாக்ஸ்
இயக்கம் : ஜேம்ஸ் கேமரூன்
நடிப்பு : சாம் வொர்த்திங்டன், சோயா சால்டனா, வராங், ஸ்டீபன்லாங்
ஒளிப்பதிவு : ரசூல்கார்பெண்டர்
இசை : சிமன் பிராங்க்ளின்
.

டெக்னிக்கல் ஒர்க்

வலுவான வில்லன்

கிளைமேக்ஸ் சண்டக்காட்சி
என மிரட்டி இருக்கிறார்கள்.
பிரமாண்டமான விஷுவல் மற்றும் பரபரப்பான காட்சிகள். நடுவில் சில சென்டிமென்ட் காட்சிகளும் சிறப்பாக இருந்தன.
ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயம் வெகு முக்கியமானது. அதுதான் அவதார் திரைப்படத்தை முக்கியமானதாக மாற்றுகிறது. உலகின் கால நிலையும், சுற்றுச்சூழலும் மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. மனிதன் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கிறான். இருக்கும் ஒரு பூமியையும் பொறுப்பின்றி பாழாக்கிக் கொண்டிருக்கிறான். இன்னொரு கிரகம் கிடைத்தால் அதையும் பாழாக்கி விடுவான், என்பதை அவதார் சொல்கிறது. அது குறித்த கவலையை நமக்குள் எழுப்புகிறது.
கற்பனை கிரகத்தை அவதாரின் படைப்பாளிகள் நம்முடையதில் இருந்துதான் உருவாக்கி இருக்கிறார்கள். நம் இந்திய மரபின் கூறுகள் அவதாரில் நிறைய இருக்கின்றன. முன்னோர் வழிபாடு, இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு, உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் , மனிதனுக்குமான பிணைப்பு, மனிதனும் மற்ற உயிரினங்களில் ஒருவன்தான் என்கிற உண்மை , இவை எல்லாவற்றையும் பேசுகிற ஒரு படம் அவதார்.
திரையரங்கில் அவதாரின் தமிழ் வெர்ஷனை பாருங்கள். ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த படம் பிரமாண்டத்தின் உச்சம்