கோதண்டம் & கோ மற்றும் லட்சி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு ஏ எழுதி இயக்கியுள்ள பருத்தி”
ஏற்கனவே இவர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் கே பாரதி அவர்களை வைத்து வளையல்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித் வாசுதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைத்தது
ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது கேமரா
ஓசூர் தேன்கனி கோட்டாவில் உள்ள கிராமத்தில்
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
சிவா,மதி என்று இரு
குழந்தைகள் அந்த கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு ,இயக்குனர் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறார். ஜாதி ,என்ற அரக்கனையும் சவுக்கெடுத்து வீசி இருக்கிறார்.
பள்ளியில் படிக்கும் சிவா, மதி இருவரும் ஒன்றாக படிக்கிறார்கள்.
பள்ளியில் ஆசிரியராக இருக்கும் மோகன் மதியின் பாட்டியிடம் உன் மகளும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த சிவாவும் ,ஒன்றாக பழகுகிறார்கள். என்று போட்டுக் கொடுக்க, மதியின் பாட்டி அவனோடு பழகி விட்டு வந்தாயா என்று தண்ணீர் ஊற்ற மதிக்கு ஜுரம் வருகிறது.
ஆனால் அவரின் அப்பா, இதெல்லாம் தவறு குழந்தைகளுக்கு ஜாதி எதற்கு என்று கண்டிக்கிறார்.
சிவாவின் பாட்டி
சிவாவுக்கு ஆதரவாக இருக்கிறார் சிவாவின் அம்மா சோனியா அகர்வால் அதே ஊரில் இருந்தாலும் பிரிந்து வாழ்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? என்று சஸ்பென்ஸ் ஆககொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
இந்த படம் ஆணவக் கொலைகளை பற்றி பேசுகிறது .
சாதிய திமிரில் நடந்து கொள்ளும் சில வன்முறையாளர்
களை சொல்கிறது .
அண்ணன் மனைவியை அடையத் துடிக்கும் கொழுந்தனின்
கா முகம் பற்றி சொல்கிறது.
சின்னஞ்சிறு குழந்தைகள் மனதில் சாதி என்னும் விஷத்தை எப்படி இந்த சமுதாயம் புகுத்துகிறது என்பதை இயக்குனர் அற்புதமாக சொல்லி இருக்கிறார். இவர் பாரதிராஜாவின் உதவியாளர் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் அப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக வடிவமைத்து இருக்கிறார்.
திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் ஒரு நாட்டின், மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களாக இருக்க வேண்டும் என உலகின் தலைசிறந்த இயக்குனர்கள் சொல்வார்கள்.
தமிழ் சினிமாவில் அப்படி மண் சார்ந்த, மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் கடந்த சில வருடங்களாக வராமல் இருந்தன. கிராமிய மணம் வீசும் படங்களைப் பார்ப்பதே அரிதாகிப் போனது. ஆனால், சமீபமாக சில புதிய இயக்குனர்களின் படங்கள் அந்தக் குறையைப் போக்கி வருகின்றன.
மலை சார்ந்த மக்களின் வாழ்வியலைச் சொன்ன ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைத் தொடர்ந்து இந்த ‘பருத்தி” ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக வெளிவந்துள்ளது.
இயக்குனர் குரு ஏ, படத்தில் இடம் பெற்றுள்ள தேன் கனிகோட்டை கிராமத்திற்குள் நம்மையும் புகுத்திவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளார். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது, இந்தக் கதை இயக்குனர் பார்த்து, அனுபவித்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைவிட வாழ்க்கையில் படித்து முன்னேறத் துடிக்கும் இரண்டு குழந்தைகள்ளுக்குநேர்ந்த சில வன்கொடுமைகளை நேரில் பார்க்கிறோமோ என்று சொல்லுமளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும் இத்திரைப்படத்தில் கொண்டு வந்துள்ளார் சமூக சிக்கல்களில் சிக்கி தவித்து பால்ய பருவத்தை கடக்கும் சிறார்களின் மனநிலையை எதார்த்தத்துடனும் மிகவும் உணர்வுபூர்வமாக கிராமத்தில் இருந்து வாசம் மாறாமல் இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
கன்னியம்மாவாக கருப்பு மேக்கப் போட்டு கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் சோனியா அகர்வால் நிறைய காட்சிகளில் உருக வைக்கிறார் .
சிவா, மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் நன்றாக நடித்திருக்கிறார்கள் .
மதியின் அப்பாவாக வரும் ரிஷி ,நல்ல மனிதராக சாதி மதம் பார்க்காதவராக சிறப்பாக நடித்தி ருக்கிறார் .
இவரின் அண்ணனாக வரும் தயாரிப்பாளர் கோதண்டம், வில்லனாக சாதி வெறி பிடித்த மனிதராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
காக்கா முட்டை பாட்டி இந்த படத்தில் மிக முக்கியமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் .
மற்றும் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்கள் பங்குக்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள் .
மக்கள் தொடர்பாளர் நிதீஷ் குமார்
மொத்தத்தில் இந்த படம் சாதி, சமயம் அற்ற உலகம் உருவாக வேண்டும். சின்னஞ்சிறு, குழந்தைகள் மனதில் சாதி, என்னும் நஞ்சை புகுத்த கூடாது ,எல்லோரும் சமமாக வாழ வேண்டும் .என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறது. மக்கள் கொண்டாட வேண்டிய ஒரு நல்ல தரமான படைப்பு🌷
