செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள வெற்றி படம் தான் “சிறை”
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மனிதர்களை பிரித்தாலும் சூழ்ச்சிகளுக்கு சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குனர். மற்றும் கதை ஆசிரியர் தமிழ்.
படத்தின் ஹைலைட் காட்சியான காவல் நிலையத்தில் ,காதர் பாட்ஷா என்னும் காவல் துறை அதிகாரி, இன்னொரு காவல் துறையைச் சார்ந்த பாண்டி என்ற போலீஸிடம், குறிப்பிட்ட ஒரு பெயர் இருந்தால் சுட்டு விடுவியா? எங்கே என்னை சுடு, பார்க்கலாம் என்று கேட்கும் அந்த ஒரு காட்சி படத்தை இமயமலை அளவுக்கு தூக்கி நிறுத்தி இருக்கிறது.
இந்த சிறை திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சிமலர் “என்றே சொல்லலாம் . ஒரு அருமையான தரமான படைப்பாக வந்திருக்கிறது.
மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”
கதைக்களம்
1997 சிவகங்கை சீமையில் நடந்த ஒரு உண்மை கதை. டாணாக்காரன்” இயக்குனர் தமிழ், அவர்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை எழுத அவரோடு சுரேஷ் ராஜகுமாரி இணைந்து திரைக்கதை, எழுதி இந்த படத்தை ஒரு சிறப்பான படமாக கொடுத்திருக்கிறார் கள்.
இருவருக்கும் வாழ்த்துக்கள் சார் 🌷
காவலதிகாரியான விக்ரம் பிரபு (கதிரவன் )(,பாண்டி,)
(முருகன், )என்று மூன்று எஸ் கார்டுகள்,அப்துல்லா என்ற கொலை குற்றம் சாட்டப்பட்ட விசாரணை கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது, அவர்களிடமிருந்து அப்துல்லா தப்பித்து விட, அதைத்தொடர்ந்த பரபரப்பான சம்பவங்களும் விறுவிறுப்பாக காட்டப்படுகிறது. இடையில் இளம் ஜோடிகளான அப்துல்லா, கலையரசி
காதலும், மனதை ஈர்க்கும் வகையில் படமாக்கபட்டுள்ளது.
அவர்கள் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
அவ்வளவு இயல்பாக இருக்கிறது.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிக அழுத்தமாகவும், ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்வுபூர்வமாக,
எழுதப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள்.
பஸ்சுக்குள் நடக்கும் ஆரம்ப சண்டைக்காட்சி,
அதன் பிறகு அப்துல்லா, கலையரசியின்
மெல்லிய பட்டும் படாமலும் காட்டப்படும் காதல் காட்சிகள்
அக்கா கணவனான குடிகாரனுக்கும்,
அவர் மனைவிக்கும்,
நடக்கும் மோதல்,
பெருமாள் பிள்ளைக்கும் அப்துல்லாவின் தாயாருக்கும் நடக்கும் சண்டை,
நீதிபதி மாற்றப்பட்டு அப்துல்லாவின் விசாரணை என்னவாகும் ?என்ற பதற்றம்.
தப்பியோடியகைதி துப்பாக்கயுடன் ஓடிப்போக விக்ரம் பிரபுவின் போலீஸ் வாழ்க்கை என்னவாகும்? என்று கேள்விக்குறி!!!
என மிரட்டி இருக்கிறார் இயக்குனர்
காட்சிகள் ஜுவ் என்று எகிறுகிறது.
கலையரசியின், அப்பா பெருமாள் அப்துல்லாவின் அம்மாவை எட்டி உதைக்க, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்க ,அப்துல்லா பெருமாளை தள்ளிவிட, அவர் இறந்த விட ,அதன் பிறகு கதை ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.
ஒரு திரைக்கதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த சிறை” படத்தின் திரைக்கதை
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தின் திரைக்கதையை
இ ருவரும் எழுதி இயக்கி இருக்கிறார்
படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள்ளாகவே மொத்த பரபரப்பும் ஆரம்பமாகிவிடுகிறது. அங்கிருந்தே கிளைமாக்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி ஒரு கதையை யோசித்து அதற்கான திரைக்கதை அமைத்து, கூடவே காதலர்கள் -அம்மா, மகன் சென்டிமென்ட்டையும் இணைத்து ஒரு ‘பர்பெக்ட்’ ஆன படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் .
இப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்ததற்காக விக்ரம் பிரபு வைதாராளமாகப் பாராட்ட வேண்டும். , கலர்கலரான ஆடை இல்லாமல் ஒரு ஏட்டையாவாக, அவருடைய தோற்றமும், பேச்சும், அதிரடியும் சிம்ப்ளி சூப்பர்ப். பன்ச் டயலாக்கே இல்லாமல் அவருடைய ஹீரோயிசத்தை அப்படி உயர்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர்.
விக்ரம்பிரபு சிறந்த படங்களின் பட்டியலிலும், சிறந்த கதாபாத்திரங்களின் பட்டியலிலும் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
அக்ஷய் குமார் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய . ஒரு ‘டெய்லர் மேட்’ கதாபாத்திரம் போல் அவருடைய நடிப்பு
அப்துல்லா வாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் அக்ஷய் க்கும் முக்கியத்துவம் கொடுத்ததோடு, கதிரவன் ,முருகன், பாண்டி, மூவரும் லாரியில் சேர்ந்து பயணிக்கும்போது
அப்துல்லா கதிரவனிடம் தன் காதல் கதையை சொல்ல, ஏட்டையா கதிரவன் மனம் மாறுவது! மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
நீதிபதியிடம் துணிச்சலாக பேச சொல்லி கொடுக்கும் கதிரவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு மிளிர்கிறார்.
கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க எப்படியாவது இந்த காதலர்கள் ஒன்று சேர்ந்து விட மாட்டார்களா ?என்று படம் பார்ப்பவர்கள் ஏங்க வைத்து படத்தை ஏக்” தம்மில் தூக்கி நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
நடிகர்கள் & நடிகைகள்
விக்ரம் பிரபு நாயகனாக கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் ஏட்டையாவாக,
மேலதிகாரியிடம் டோஸ் ,வாங்கி கட்டிக் கொள்ளும் போதும் காதலர்களை சேர்த்து வைத்து அவர் போடும் திட்டங்களும், கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
ஒவ்வொரு விஷயத்தையும் தன் மனைவி மரியம்
உடன் பகிர்ந்து கொள்ளும் காட்சி ஜீவன் உள்ள காட்சி ரம்யமாக இருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சி நாயகி கலையரசி நீதி பதியிடம் அனுப்பச் சொல்ல பாண்டி கலையரசி கையை பிடித்துக் கொண்டு” வேண்டாம்சார்!! இது விபரீதம் என்று சொல்ல விக்ரம் பிரபு கையை விடு, என்று சொல்லும் இடத்தில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் ரசிகர்கள்.
அவ்வளவு அற்புதமான காட்சி.
விக்ரம்பிரபு ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.
அவரும் ஒரு பெண் போலீசாக சிறப்பாக நடித்திருக்கிறார். மரியம் ,என்ற கதாபாத்திரத்தில்
இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
அவர் முகபாவனை நன்றாக ரசிக்க வைக்கிறது.
காதலர்களான
அப்துல்லா, கலையரசியிடம் பேச வேண்டும் என்று அவர் சொல்லும் பொழுது மனிதநேயமிக்க பெண் காவல்துறை அதிகாரியாக மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.
இப்படத்தில் இன்னொரு நாயகனாக தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியிருக்கிறார் .
அப்துல்லா, என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தாயின் மீது பாசம் ,காதலி மீது அன்பு ,சிறையில் இருக்கும் பொழுது காதலியின் நினைவில் வாடுவது, விசாரணை கைதியாக வெளியே செல்லும் பொழுது தனக்கு கை விலங்கு போட வேண்டாம் என்று விக்ரம் பிரபுவுடன் கெஞ்சுவது, இப்படி ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அக்ஷய் குமார் சிறந்த நடிப்பு ,இஸ்லாமிய மக்கள் கொண்டாடக்கூடிய கதாபாத்திரம், அற்புதமாக இருக்கிறது.
நீதிமன்றங்களுக்கு வரும் ,அப்துல்லா காதலியை பார்க்க வேண்டும் .என்ற பரிதவிப்பில் இருப்பதும், நாயகி பரிதவிப்பு ,
இதைப் பார்த்து விக்ரம் பிரபு துடிப்பது, என,சென்டிமென்ட்டால் எழுந்து நிற்கிறது படம். அக்ஷய் குமார் ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
கலையரசி, என்ற கதாபாத்திரத்தை முகபாவனை மூலம்
சொல்லி இருக்கிறார். காதலனுக்காக, ஏங்கும் கதாபாத்திரம். அக்கா கணவனிடம் மல்லுக்கட்டும், வீர கதாபாத்திரம். இப்படி சிவகங்கை சீமை கலையரசி, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அழகான வரவு நல்ல நடிப்பு.
கிளைமாக்ஸ் காட்சி மொத்த படம் பார்ப்பவர்களையும் ஒரு உலுக்கு உலூக்கி விடுகிறார்.
ஒரு காதல் என்றால் ஐந்து வருடமாக விசாரண கைதியாக இருக்கும் நாயகனை எதிர்நோக்கி, காத்திருக்கும் நல்ல காதலியாக, கலையரசியாக வாழ்ந்து இருக்கிறார். இவருக்கு விருது நிச்சயம்.
ரகு இசக்கி, மூர்த்தி என்ற கதை பாத்திரத்தில் குடிகாரனாக வந்து மனைவியை அடித்து உதைத்து ,படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார் .அவர் வரும் காட்சிகள் மனுஷன் அடுத்து என்ன செய்யப் போகிறாரோ? என்று பதட்டத்தை உருவாக்குவதில் அவருக்கு, அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
மூணார் ரமேஷ் காதர் பாட்ஷா என்ற கதாபாத்திரத்தில் ஒரே காட்சி வந்தாலும் ,ஒட்டு மொத்த படத்தையும் தோளில் தாங்கி பிடித்திருக்கிறார்.
அதேபோல தயாரிப்பாளர் தேனப்பன் ஒரே காட்சியில் நீதிபதியாக வருகிறார். உருக வைத்து விடுகிறார்
போலீஸாக வரும் பாண்டி, முருகன்,
பெருமாள் கலையரசின் அக்காவாக வருபவர்,
அப்துல்லாவின் அம்மா, காதர் பாட்ஷாவாக வரும் காவல்துறை அதிகாரி, இப்படி எல்லா கதாபாத்திரங்களும் முதல் காட்சியில் இருந்து கடைசிவரை தங்கள் உடல்மொழியால் கவனம் ஈர்க்கிறார் கள்.
*தொழில்நுட்ப கலைஞர்கள் *
பரபரப்புக்குப் பஞ்சமில்லாத எழுத்தால், திரைக்கதையால் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் தமிழ், மற்றும் சுரேஷ் ராஜகுமாரி இருவரும். முதல் பாதியில் விர்ரெனப் பறக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் ஜெட் வேகத்தில் பறக்கிறது. குறிப்பாக, கைதி துப்பாக்கி யுடன், தப்பிக்கும் காட்சி, பப்ஜி ஃபீலிங்
வழக்கமான சினிமா வேண்டாம், வித்தியாசமான சினிமா வேண்டும் என்ற ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவரும் ரசிக்கும்படியான ஒரு வித்தியாசமான
படத்தை கொடுத்திருக்கிறார்கள் .இயக்குனர்கள் தமிழ், மற்றும் சுரேஷ் ராஜகுமாரி.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
பாடல்கள், அனைத்தும் ரசிக்க வைக்கிறது. யுவன் சங்கர் ராஜா பாடும் பாடல் மனதுக்குள் புகுந்து , ரசிக்க வைக்கிறது. நீலோத்தியே”பாடல் உருக வைக்கிறது.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கிராமத்து அழகு, விசாரணை கைதியாக பஸ்ஸில் போகும் பொழுதும், பஸ் ஸ்டாண்ட், மற்றும் எல்லா இடங்களிலும் கேமரா தன்னுடைய பங்குக்கு சிறப்பாக படம் பிடித்திருக்கிறது.
நீதிமன்றம், கிராமம் ரோடு.. மூன்றே லொக்கேஷன்கள்! அத்தனை இடத்துக்கும் நாமும் சுற்றி வருவதுபோன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளிலும், அலுவலகத்தில் நடக்கும் களேபரங்களிலும் அவருடைய உழைப்பு அபாரம்!
பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.
படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு, மிக முக்கியமான காரணம் பல காட்சியில் இவர் செய்திருக்கும் மாயாஜாலம். வெற்றிக்கு பூமாலை சூட்டி இருக்கிறது.
ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.
சண்டைக் காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் படம் ஆக்கப்பட்டு இருக்கிறது.
நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அதுவும் படத்திற்கு கிடைத்த வெற்றி
காஸ்ட்யூம் டிசைனராக
வர்ஷினி சங்கர், பணி புரிந்திருக்கிறார் .
கச்சிதமாக இருக்கிறது.
லீலாவதி குமார்
நடன பயிற்சி கொடுத்திருக்கிறார்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
ஒலி கலவை (Sound Mix) : SP நாராயணன்
VFX: ஸ்பெக்டர் போஸ்ட் Spectre Post
DI: G. பாலாஜி
விளம்பர வடிவமைப்பு: சிவகுமார் S (சிவா டிஜிட்டல் ஆர்ட்)
நடிகர் தேர்வு : C.K. சுரேந்திரா தாணு மூர்த்தி
ஸ்டில்ஸ்: சாரதி
தயாரிப்பு நிர்வாகி: ஆர்.எஸ். வெங்கட்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: அருண் K | மணிகண்டன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஆரோசம்
என இந்த திரைப்படத்திற்காக திரைக்கு முன்னாலும் திரைக்கு பின்னாலும் கடுமையான உழைப்பை கொடுத்து ஒரு வெற்றி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் “சிறை” திரைப்படம் திரையுலகில் மகுடம் சூட்டப்பட வேண்டிய படம்.
‘சிறை இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்று. அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி மற்றும் அவரது டீம் சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளனர். விக்ரம் பிரபு மற்றும் மற்ற அனைவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் தனது திரை வாழ்க்கையை இப்படியொரு படத்தில் தொடங்கியது அவருக்கு சிறப்பான பிரகாசமான எதிர்காலத்தை வழங்கி உள்ளது.
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்🌷
