“ஆசைதான் அனைத்து துன்பத்திற்கும் காரணம் “என்ற ஒன்லைன் ,கதையை
அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஹீரோ, நல்லவனாகத்தான்
இருக்க வேண்டும்,
என்ற இலக்கணத்தை உடைத்து, ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றலாம்!! எப்படி கொன்று அவர்கள் தப்பிக்கலாம்!!! என்பதை வித்தியாசமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
காளி,
சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கிறார் (அருண் விஜய்) அவருடன் ஆந்த்ரே (சித்தி இத்நானி).
அவரும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்.
வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார்.
ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே ‘வுக்கு ஏழையாக வாழ்வதில் நாட்டமில்லை. அதனால், அருண் விஜய்யிடம் காதலை முறித்துக்கொள்ளலாம் எனச் சொல்கிறார். அப்படியான சூழலில் ஒரு குற்றத்தின் மூலம் இருவரது வாழ்வும் செழிக்க ஆரம்பமாக பிரச்னையும் வருகிறது. பணத்தைத் தேடிச் சென்ற அருண் விஜய்யும், சித்தி இத்னானியும் என்ன சிக்கலைச் சந்தித்தார்கள்?
பணத்தின் மீது பேராசை கொண்ட அவர்களது வாழ்க்கையில்
வசந்தம் வீசியதா?
சூறாவளி புயலுக்கு சிக்கி சின்ன பின்னம் ஆனார்களா?என்பதே கதை!!?
அருண் விஜய்
காளி ,என்ற கதை பாத்திரத்தில் மற்றும் உபேந்திரா வாக, இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார்.
அருண் விஜய்.
சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு காதலியை தேடி வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே ‘தரும் தவறான வழிகாட்டுதலால் அவர் சுக்கு நூறாகி குழம்பிப் போகும் நடிப்பு சூப்பராக இருக்கிறது.
நானா? சாவா ?என்று தன்னை தானே கேள்வி கேட்டு, வேள்வி செய்து இருக்கிறார்,
இரண்டு மாறுபட்ட
நடிப்பில் ,குழப்பமான மனநிலை, உடல் மொழி, பார்வை மாற்றங்களை அருண் விஜய் தனது நடிப்பில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் வேகமாக நகரும் திரைக்கதையில், நின்று யோசிக்கவோ அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படவோ நேரமில்லை ஒவ்வொரு சீனிலும் அருண் விஜய் அசத்தலாக நடித்திருக்கிறார் .
கண்ணம்மா பாடலுக்கு, செம நடனம் போட்டு இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் மிகுந்த கவனம் எடுத்து பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் .
சித்தி இத்னானி
கதாநாயகி என்றால் மிகவும் நல்ல கேரக்டராக தப்பே செய்யாதவராக இருக்க வேண்டும். என்ற பார்முலாவை உடைத்து பணத்துக்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில்
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதையின் பார்வையில் சித்தி இத்னானியின் கதாபாத்திரத்தின் வழியாக நகர்வதால், அவருக்கும் படத்தில் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
அழகான தேவதையை வில்லியாக்கிட்டிங்களே பாஸ்!!!
தான்யா ரவிச்சந்திரன்
மல்லியாக வந்தாலும் அல்லி பூ போல காதல் காட்சிகள் அசத்துவார் என்று பார்த்தால்
அவரும் தன் கணவனை கொன்றவனை ரிவஞ்ச் எடுக்க
புறப்படுகிற காட்சியில், கிளைமாக்ஸ் காட்சியில் அவருக்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது .
ஜான் விஜய் திரவியம் ,என்ற போலீஸ் அதிகாரியாக நக்கலும், நையாண்டியாக அருண் விஜய் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஹரீஷ் பேரடி,
ராமுலுஜனார்த்த ரெட்டி, என்ற கதாபாத்திரத்தில் வழக்கம் போல பார்வையாலே மிரட்டி இருக்கிறார். உபேந்திராவை கொல்ல வேண்டும் என்று கொலை வெறியோடு அலையும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.
யோகேஷ் சாமி,
வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.
பாலாஜி முருகதாஸ்
தேஜா, என்ற கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஜோடியாக வந்து, உபேந்திராவின் கையால் சாகடிக்கப்படுவது
கொடூரம் நடிப்பு நன்றாக இருக்கிறது, மற்றும் ராமச்சந்திரன், கலைவாணி, எல்லோருமே தங்கள் நடிப்பை சிறப்பாக வழங்கி இருக்கிறார்கள்,
தயாரிப்பாளர்
BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
வாழ்த்துக்கள் சார்!!
தொழில் நுட்ப கலைஞர்கள்
வழக்கமான இரட்டையர் கதையில் என்ன புதுமை இருக்க வாய்ப்பிருக்கிறது. என்ற எண்ணத்துடன் வரும் ரசிகர்களை மாறுபட்ட திரைக்கதையைத் தந்து அசரடித்திருக்கிறார் இயக்குநர். சுவாரஸ்யம் நிறைத்து மிகத் தெளிவாகத் திரையில் கதையைச் சொல்லிச் செல்கிறார்.
காளி ,உபேந்திரா இருவரது கதாபாத்திரத்தில். வழக்கமாகக் இல்லாமல்
காதலியின் பேராசையால் காதலன் பலியாவது
இந்தப் படத்தின் பலம். அது திரைக்கதையில் உணர்வுரீதியில் கலந்திருக்கிறது. பொதுச் சமூகம் எளிதில் புறந்தள்ளக்கூடிய ஆபத்து கொண்ட அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பில் இயக்குனர் வெற்றிபெற்றிருக்கிறார்.
த்ரில்லர் படங்களுக்கே உரிய திருப்பங்களும் கதையோட்டத்துடன் பயணிப்பதில் இயக்குநர். தன் கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றி நிற்கும். ஆனால், அதற்கு இடம் தராமல் திரைக்கதையும் காட்சிப்படுத்து தலும் கச்சிதமாக கையாண்டு இருக்கிறார்
இயக்குனர் கிரிஷ் திருக்குமரன்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். தன் முத்திரையைப் பதித்துவிடுகிறார். கண்ணம்மா ‘யார்ரா அவன்’ பாடல்கள் இனிமையும் துள்ளலுமாக ஒலிக்கின்றன.
பின்னனிஇசையில் மிரட்டி இருக்கிறார்.
பாடல் கள் எழுதி இருக்கிறார்கள்– கார்த்திக் நேதா, சாம்.CS, விவேகா
பாண்டி சேரிசமீபகால தமிழ் சினிமாக்கள் உள்ளும் புறமுமாகக் காட்டிவிட்டாலும்கூட, அந்தப் பழுதடைந்த குடியிருப்புகளில் இன்னும் காட்சிப்படுத்த எதார்த்த அழகு ஏராளமாக உள்ளது என்பதை டிஜோ டாமிஒளிப்பதிவு நிரூபிக்கிறது.
கோவாவின் அழகையும் அள்ளி வந்திருக்கிறது.
ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதமாக 2 மணி நேரத்துக்குள் முடித்து
விறுவிறுப்பான
வெற்றியை தேடிதந்து இருக்கிறார்.
ஆக்சன் காட்சிகள் ஒவ்வொன்றும் அனல் தெறிக்க அருண் விஜய் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அந்த பயிற்சியை கொடுத்தவர்
ஸ்டண்ட் – P.C. ஸ்டண்ட்ஸ்
அருண் சங்கர் துரை ஆர்ட்டைரக்டராக பணி புரிந்திருக்கிறார் ஆரம்பத்தில் காட்டப்படும் ஏழ்மை வீடும் ,உபேந்திரா இருக்கும் கெஸ்ட் ஹவுஸ், மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் காட்சிகள், எல்லாமே ஆர்ட் டைரக்டர் கைவண்ணத்தில் மிளிர்கிறது.
கிருத்திகா சேகர் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார். அருண் விஜய், சிட்னி இவர்கள் பாடல் காட்சி , வண்ணமாக ஆடை வடிவமைப்பு இருக்கிறது. வில்லன்களுக்கு கச்சிதமாக டான் வேட ஆடைகள் பொருந்தி இருக்கிறது.
நடன அமைப்பு – சுரேன் R, பாபி
இருவரும் கண்ணம்மா” பாடலில் பிண்ணி எடுத்து விட்டார்கள் சிறப்பாக இருக்கிறது.
ஒப்பணையாளர்
மிகச் சிறப்பாக எல்லோருக்கும் ஒப்பனை செய்து இருக்கிறார்.
VFX மேற்பார்வை – H மோனேஷ்
நிர்வாக தயாரிப்பாளர் – மணிகண்டன்
தயாரிப்பு மேற்பார்வை – S R லோகநாதன்
DI – ஸ்ரீஜித் சாரங்க்
ஒலி வடிவமைப்பு – T உதயகுமார் ( Sound Vibe )
பப்ளிசிட்டி டிசைனிங் – பிரதூல் NT
பப்ளிசிட்டி போட்டோகிராஃபர் – வெங்கட் ராம்
ஸ்டில்ஸ் – மணியன்
மக்கள் தொடர்பு – சதீஷ் &சிவா(AIM)
படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌷
மொத்தத்தில் இந்த படம் பேராசைகள், மனிதனை எப்படி அலைக்கழிக்கிறது. என்பது ஒரு பாடமாக சொல்லி இருக்கிறது. காண வேண்டிய படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்
வாழ்த்துக்களுடன் கிளாசிக்சினிமா🌷
