சல்லியர்கள்”திரை விமர்சனம்

ரேட்டிங் 5/5.

நடிகர்சேது கருணாஸ் தயாரித்து, இசை அமைத்து,நடித்த, இயக்குநர் கிட்டு இயக்கிய, “சல்லியர் கள் “இத் திரைப்படம். ஒரு வரலாற்றுப் பதிவு

கதைக்களம்

ஈழத் தமிழ்ப் போர்க்களத்தில் எதிரிகளாக இருந்தாலும் அவர்களின் உயிரைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் மருத்துவப் போராளிகளையே ‘சல்லியர்கள்’ திரைப்படம் மையப்படுத்துகிறது. விறுவிறுப்பான திரைக்கதை, உயிரோட்டமுள்ள நடிப்பு, தரமான இயக்கம், உணர்வுபூர்வ இசை எனப் பல்வேறு அம்சங்கள் மூலம் இந்த வரலாற்று பதிவுநெகிழ வைக்கிறது. இந்த படத்தின். வசனங்களும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடல் வரிகளும், மனதில் ஒரு வலி ஏற்படுகிறது.

சிங்கதேசம் எல்லை ஓரத்தில் படம் ஆரம்பிக்கிறது. இரண்டு இளைஞர்கள் சுட்டு கொல்ல படுகிறார்கள். அதேசமயம்,ராணுவபடை போர் மருத்துவர்கள் “பங்கர் “என்ற பதுங்கு குழி மூலம், காயமடைந்த போராளிகளுக்கும், எதிரிகளுக்கும் மருத்துவ உதவி செய்கிறார்கள். ஆனால் போராளி களை அழிக்க துடிக்கும், சிங்கப்பிரதேசத்தை சார்ந்த, ராணுவ தளபதி…

“உயிர் மேல பயம் வரனும் னா, உயிரை காப்பாத்தறவனை அழிக்கனும் ,என்று பதுங்கு குழி மருத்துவமனை மீது ஏர்அட்டேக்,செய்ய கேப்டன் அபினுகாகவுக்கு உத்தரவிடுகிறார். மட்டகச்சி மருத்தவமனை, மற்றும் நான்கு பங்கர்சை “அழிக்க ஆபரேஷன் நடத்த திட்டம் தீட்டுகிறார்கள்.

நந்தினியும் செம்பியனும்,போராளிகள் உயிரை காப்பாற்ற துடிக்க ,சிங்கப்பிரதேச ராணுவத்தைச் சார்ந்த திருமுருகன் “ரத்தகாடாகட்டும் என்று அந்த சல்லிர்களை அழிப்பதில் குறியாக கொக்கரிக்க எதிரிக்கும் ரத்தம் தரும் செம்பியன் , நந்தினி இவர்கள் தியாகம் என படம் முழுக்க ஒரு சீரான திரைக்கதையில் பயணிக்கிறது. நந்தினி யின் ஃபிளாஷ் பேக் காட்சி மனதை உருக்குகிறது.

அமுதன் ,வளவன் பயிற்சி காட்சி செய்யும் காட்சி, சேது கருணாஸ் சாகும் போது கூட தன் மகனிடம, தலைய குனிஞ்சிடாதே, வளவன் .என்று சொல்லிவிட்டு துப்பாக்கி குண்டை ஏந்தும் காட்சிகள் மனதை பதை பதைக்கும் ,காட்சிகள்
அங்கு வந்த நந்தினி ரத்தம் வீனாக போனதை கண்டும், தன் அப்பா, அம்மா, அண்ணன் மூவரும் இறந்த போனதை கண்டும், அழும் காட்சி, விழிகளால் ஈரத்தை வர வைக்கிறது.

ராணுவ தாக்குதல் நடக்கும் போது கூட எதிரியை காப்பாற்ற நிணைக்கும் போராளிகள். உலகத்திலேயே எங்கும் காண முடியாத தமிழனின் சிறப்பு. வீரமும், மனிதநேயமும், தமிழனின் உயர்ந்த பண்பு என்பதை இப்படம் உணர்த்துகிறது.

மாறன், மலர் இருவரின் காதல் அழகாக சொல்லப்பட்டது. காதலனுக்காக, மலர் துப்பாக்கி ஏந்துவது வீர பெண் புலிகளை கண் முன் காண்பிக்கப்பட்ட காட்சி.

நந்தினி வேடத்தில் சத்யா தேவி ,டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கம்பீரமும் அவர் பேசும் டயலாக் டெலிவரி அவர் நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தது.

அவரது தந்தையாக சேது கருணாஸ்,சிங்களராணுவமுன் கம்பீரம் குறையாமல் தன் மண் மீதும் மக்கள் மீதும் எதிர்காலம் நம்பிக்கையாக இருக்கும் .என்று துப்பாக்கி குண்டு நெற்றியில் ஏந்துவது
என அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

சேது கருணாஸ் பேசும்…. வசனம் “நம்ம உசிரை விதையா விதைக்கிறோம் அது ஒரு நாள் வெடிச்சு உரமா நிற்கும் “என்று அவர் பேசும் வசனம் அவர் நடிப்பு மிக அருமையாக இருக்கிறது.

ஆர்மி வில்லனாக ‘களவாணி’ புகழ் திருமுருகன் நடிப்பு கம்பீரமான நடிப்பு மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கவியரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள, இந்தப் படத்துக்கு கருணாஸ் மகன் கென், அவரது நண்பர் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளார் . பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மலரே என்ற பாடலும், எங்க தேசம் என்ற பாடலும், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சோகப் பாடலும், மனதை உலுக்குகிறது.

சதாசிவம் ஒளிப்பதிவு மிக அருமை .நந்தினியின் பிளாஷ்பேக் காட்சியில் ,எப்படி தமிழர்கள் வாழ்ந்தார்கள்? என,அந்த கிராமத்து அழகையும், வயல் வெளிக்காட்டையும், நீரோடை மையும் அழகாக படம் பிடித்திருந்தார்.
அதேபோல சிங்கப்பிரதேசத்தை சேர்ந்த ராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் நடக்கும் சண்டை காட்சிகள் அருமையாக படம் பிடிக்கப்பட்டிருந்தது.

இயக்குனர்

‘மேதகு’ படத்தை இயக்கிய கிட்டுவின் இரண்டாவது படம் இது. ஈழத் தமிழர்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்திருக்கிறார். தெளிவான திரைக்கதை, பண்பட்ட இயக்கம். உலகத் தமிழர்கள் பாராட்டும் வண்ணம் அவருடைய படைப்பு பேசப்படும்.

இயக்குநர் தி.கிட்டு. முதல் படத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆரம்ப வரலாறு சொல்லியதில் அழுத்தமாய்க் கவனம் பெற்றவர்.. தமிழ்ச் சமூகத்திற்குச் சொல்லவேண்டிய உண்மையான வரலாற்றைத் திரைப்படம் மூலம் சொல்லி இருக்கிறார். சாதி மதத்தால் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றுகூட்ட அவர் லட்சியம் இப்படம் மூலம் நிறை வேறும். ஈழப்போராட்டம் பற்றிய எவ்வளவோ உண்மைகள் கசப்பான உண்மைகள் இன்னும் மறைந்துகிடக்கின்றன. உண்மையான வரலாற்றைச் சொல்வதன் மூலம், தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம்.

தன் உயிரை எடுக்க வந்த ஒருவனுக்கும் உயிரைக் கொடுக்கின்ற அறம் சார்ந்தவர்கள், நம் தமிழர்கள் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. படத்தில் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. காட்சி அமைப்புகளில் நிஜம்.
படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதி காட்சிகளில் வைத்துள்ளார் இயக்குனர்.

இப்படி ஒரு களத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது..தமிழ்சினிமாவில் பொதுவாக நம் படங்களில் போர்க்கள மருத்துவமனை என்றாலே இதுவரை வெட்டவெளியில் ஒரு டெண்ட் அமைத்து சிகிச்சை அளிப்பது போலத்தான் காண்பித்திருப்பார்கள். ஆனால் முதன் முறையாக இந்தப் படத்திற்காக பதுங்கு குழிக்குள் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள் அது நிஜம் என்று மனம் நம்புகிறது.

செட் போட்டு படமாக்குவதை விட இப்படி மருத்துவமனை காட்சிகள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று கலை இயக்குநர் முஜிபூர் ரஹ்மான் செயல் பட்டு இருக்கிறார் .

அப்படி அமைக்கப்பட்ட மருத்துவமனைக்குள்தான் முக்கால் மணி நேர காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள்.அது மிகவும் இயல்பாக இருந்தது. அப்படி மண்ணுக்கடியில் சென்று இந்த காட்சிகளை படமாக்கியது மிகப் பெரிய சவாலாக “சி.பி சதாசிவம் ஒளிப்பதிவாளருக்கும் ,ஆர்ட் டைரக்டருக்கும், இருந்திருக்கும். இருக்கும் போர்க் களம் மற்றும் பதுங்கு குழி காட்சிகளை சிவகங்கை பகுதியில் படமாக்கி இருக்கிறார் கள். போர்க் கள சண்டைக் காட்சிகளை பிரபாகரன் , அழகாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

இளங்கோவனின் படத்தொகுப்பு, அப்துல் அவர்கள் ப்பனை, காஸ்ட்யூம், என எல்லாமே ஒரு போர்க்களத்தை பார்ப்பது போல இருந்தது.
.
இந்த வரலாற்று பதிவு கொண்ட இப்படத்தை வி ஹவுஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்.

தயாரிப்பு – கருணாஸ், இணை தயாரிப்பு – நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார், எழுத்து, இயக்கம் – கிட்டு, ஒளிப்பதிவு – சிபி சதாசிவம், இசை – பிரவீண் குமார், படத் தொகுப்பு – சி.எம்.இளங்கோவன், கலை இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.சரவணன், ஒப்பனை – அப்துல், வி.எப்.எக்ஸ். – சதீஷ் சேகர், மக்கள் தொடர்பு – A.ஜான்.

அனைவரும் காண வேண்டிய அற்புதமான படைப்பு தமிழ் இனத்துக்காக போராடிய போராளிகளையும், சல்லியர்களையும்” வணங்குவோம்🙏