மார்க்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

Banner: Sathya Jyothi Films & Kichcha Creatiions
Produced by Sendhil Thyagarajan, Arjun Thyagarajan

Executive Producer: MT Sriram

Co-Produced By: G Saravanan, Sai Siddharth

Production Designer: Shivakumar

கதை களம்

மாஸ் ,ஆக்ஷன் வெற்றி படமாக வந்துள்ளது. மார்க்”

முதல்வர் ICUவில் சீரியஸாக இருக்க, அவரது மகன் ஆதிகேசவா (ஷைன் டாம் சாக்கோ) தன்னை முதல்வராக்க கையெழுத்திடுமாறு கேட்கிறார்.

ஆனால், கட்சியில் மூத்தவருக்குதான் பதவி கொடுக்க வேண்டும் என அவர் கூற, தாயை கொன்றுவிட்டு ஆதிகேசவனே அவரது கையெழுத்தை போட்டுக் கொள்கிறார்.

முதல்வரை அவரது மகன் கொலை செய்ததை ரகசிய செல்போன் மூலம் டாக்டர் ஒருவர் வீடியோ எடுக்க, அந்த விஷயம் ஆதிகேசவனுக்கு தெரிய வருகிறது. அந்த வீடியோ வெளியேற வரக்கூடாது என அவர் கைப்பற்ற முயற்சிக்க, அடுத்து மங்களூருவின் பல இடங்களில்18 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்

இவர்களை கடத்தியது யார்? போலீஸ் ஒரு புறம் தேட ஆரம்பிக்கிறது.

ஒரு காவல் நிலையத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கையகப்படுத்தப்படுகிறது. ஸ்டீபன் ராஜ் அதை காவல்துறையிடம் கோட்டை விட,
அந்த போதை பொருள் கொல்ஹாபூரில் டானாக இருக்கும் பத்ரா (நவீன் சந்திரா) உடையது என்பதும், அதனை கடத்தும் வேலையை செய்வது முதல்வரின் மகனுடன் தொடர்புடைய ஸ்டீபன் ராஜுடையது (குரு சோமசுந்தரம்) என்பதும் பின்னர் தெரிய வருகிறது.

பத்ரனின் தம்பி ருத்ரன் (விக்ராந்த்) அவரது காதலி ருக்குமணியுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று வெளிநாடு செல்ல சாலமன் (யோகி பாபு) உதவியை நாடுகிறார்.

தன் தம்பியை (விக்ராந்த்)மந்திரி மக்களுக்கு திருமணம் செய்து கொடுத்து தன் மீது உள்ள வழக்குகளை எல்லாம் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்த பத்ரனுக்கு இது பேரிடியாக அமைகிறது.

இதனால் தன் தம்பி விக்ராந்தை தேடி பத்ரன் …மறுபுறம் SP அஜய் மார்கண்டேயா எனும் மார்க் “அந்த போதைப்பொருளை தனது கன்ட்ரோலில் எடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, அந்த 18 குழந்தைகளையும் மீட்க முயற்சியில் மார்க் ஈடுபடுகிறார்.

இதெல்லாம் ஒரு நாளில் நடக்கும் கதையாக பரபரப்பாக விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

கிச்சா சுதீப்

காவல் நிலையத்தில் அறிமுகம் ஆகிறார் . ஒரு பாடல், பின் சண்டைக்காட்சி என அவர் வரும் காட்சி அமர்க்களமாக இருக்கிறது.

பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் ரொம்ப ஸ்டைலிஷாக எதிரிகளை பந்தாடுகிறார். மார்க்கெட் சண்டைக்காட்சியில் அனல பறக்க, தெறிக்க விட்டு, கிளைமேக்சில் உக்கிரத்தை காட்டியுள்ளார்.

மொத்த படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கி பிடிக்கிறார், கிச்சா சுதீப். அவரது தோற்றத்தின் மூலம் அவர் நடத்தும் ஆக்‌ஷன் வேட்டைகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது. நடிப்பிலும் உடல் மொழியிலும் கம்பீரத்தைக் கொண்டு வருகிறார்.

கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க (மார்க்) க்கு..18 மணிநேரமே உள்ளது. அதற்கு அவர்களை கண்டுபிடிக்க முடியாவிடில் குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்ற விறுவிறுப்பை படத்தில் காட்டியபடி செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். அடுத்து இந்த படத்தில் முக்கிய கவனம் பெறுபவர் ருத்தன் “என்ற கதாபாத்திரத்தில் வரும் விக்ராந்த், செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மற்றும் போலீசாக வரும் தீப்ஷிகாவுக்கு என தனியாக மாஸ் சண்டைக்காட்சி ஒன்றும் உள்ளது. அதனை கச்சிதமாக அவர் செய்துள்ளார்.

தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு இருக்கிறது .மற்றபடி ஷைன் டாம் சாக்கோ ஆதிகேசவனாக, அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார், நவீன் சந்திரா, பத்ரன் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார்.

குரு சோமசுந்தரம் ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்தில் , அருமையாக நடித்திருக்கிறார். மற்றும் யோகி பாபு சாலமன், என்ற கதாபாத்திரத்தில் கலகலப்பூட்டுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை ,வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் விஜய் கார்த்திகேயா . ஒரு படத்தை இரண்டு மணி நேரம் 20 நிமிடம் பரபரப்பாக, எப்படி சொல்ல முடியுமோ அதில் சிறப்பாக , ஒரு மாஸ் ,ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக தந்திருக்கிறார். கமர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதால், படத்தில் பரபரப்புக்கோ, விறுவிறுப்புக்கோ பஞ்சமில்லாமல் பறக்கிறது படம். ஒரே நாளில் நடக்கும் இதுபோன்ற த்ரில்லர் கதைகளுக்குப் போரடிக்காத திரைக்கதைதான் பெரிய பலம்.

இயக்குநர் விஜய் கார்த்திகேயா” அதை இதில் கச்சிதமாகச் செய்து பாராட்டைப் பெறுகிறார். . எடுத்துக் கொண்ட கதைக்கு என்ன தேவையோ, அதிலிருந்து மாறாமல் பயணிக்கும் ‘ஸ்கிரீன்பிளே’ ரசிக்க வைக்கிறது. குழந்தைகளை காப்பாற்ற நேரம் குறைய குறைய அதிகரிக்கும் பதற்றத்தை சரியாகவே ‘மிக்ஸ்’ செய்திருக்கிறார், இயக்குநர். ஹீரோவுக்கான ரொமான்ஸ் ஏரியாவை தொடாமல் சென்றதும் அதை முன்னணி ஹீரோவான கிச்சா சுதீப் ஏற்றுக் கொண்டதும் கூட சரியான புரிதல்.சொல்லியிருக்கிறார்.இயக்குனர்

சேகர் சந்திராவின், ஒளிப்பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், வேகமாக படம் பிடித்து வியக்க வைத்திருக்கிறார்.

இசை அமைத்துள்ளார் அபினேஷ் B.லோகநாத், படத்தின் வெற்றிக்கு இசை பக்கபலமாக இருக்கிறது. பின்னணி இசை விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர்.

கணேஷ் பாபுவின், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. படம் பரபரப்பாக செல்வதற்கு படத்தொகுப்பாளரின் பங்கு அதிகம் என்று சொல்லலாம்.

சண்டைக் காட்சிகளை , ஸ்டண்ட் சில்வா, சுப்ரீம் சுந்தர், ரவிவர்மா ,கெவின் குமார் ,விக்ரம் மோர் , மற்றும் சுப்ரமணி ஆகியோர் இணைந்து பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள்

5 சண்டைக் காட்சிகளும் அனல் தெரிக்கிறது. பரபரப்பான சண்டை காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பலமாக இருக்கிறது.

நடனப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். சோபி பவுல்ராஜ் , தினேஷ் ,மற்றும் ராஜக் கலைக்குமார் .

அண்ணாத்த யார் தெரியுமா? பாடலுக்கும், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் காளி கோவில் பாடலும் ,ஸ்டீபன் ராஜ் திருமணம் போது , வரும் பாடல் எல்லாம் ரசிக்க வைக்கிறது.

மற்றும் ஆர்ட் டிபார்ட்மென்ட், ஒப்பனையாளர்கள், காஸ்ட்யூம் வடிவமைத்தவர்கள். சி .ஜி ஒர்க் செய்தவர்கள், என அனைவரின் பங்கும் பாராட்டத்தக்கது.

Sound Mix: T Uday Kumar
Sound Designers: Renjith Venugopal, M Saravanakumar
(Sound Vibe Studios, Chennai)
Co Director: Mourya Manjunath, Michael Arun, Manohar S
Production Controllers: KS Champakadama (Babu),
Malarkannan

என ஒரு வெற்றி படத்துக்கு, திரைக்கு முன்னாலும், திரைக்குப் பின்னாலும், நிறைய கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள் .அவர்கள் உழைப்புக்கு ஏற்றபடி இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக வந்திருக்கிறது. ரசிகர்களை நிச்சயம் கவரும்.

மக்கள் தொடர்பாளர்கள் திரு. சுரேஷ் சந்திரா, திரு .அப்துல் நாசர் அவர்கள்.
படத்தை மக்களிடம் நல்லபடி கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🙏

2026 வெற்றிப்பட வரிசையில் இணைந்துள்ளது “மார்க்”