வா வாத்யார்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

கதை களம்

எம் ஜி ஆர். ரசிகர்களாக இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். அதுவும் எம்ஜிஆர் மறைந்த நேரத்தில் பிறந்த குழந்தை, அவரை போல வளர வேண்டும் என்று நினைப்பவர் ராஜ் கிரண்.

இவர் தீவிர எம் ஜி ஆர் ரசிகர். இவர் எம் ஜி ஆர் படம் பார்க்கும் போது அவர் இறந்துவிட்டார். என்ற செய்தி வருகிறது. அழுதுக்கொண்டே அங்கிருந்து வெளியே வர ராஜ்கிரணுக்கு பேரன் பிறக்கிறார்.

எம் ஜி ஆர் இறந்த அந்த நொடியே பேரன் பிறந்ததால் அவர் தான் அடுத்த எம் ஜி ஆர், இது ஒரு அதிசயம் குழந்தையின் காலில் மச்சம் இருக்க எம்ஜிஆருக்கும் அப்படி ஒரு மச்சம் இருப்பதை ஜோசியர் சொன்னதை நினைவு கூறுகிறார்.எனவே தன் பேரன் நேர்மையாக வளர வேண்டும் என நினைக்கிறார்.

ஆனால் கார்த்தி நம்பியார் போல வளர்கிறார். நம்பியாரை இன்ஸ்பியர் ஆக்கி, தவறான வேலைகள் எல்லாம் செய்து போலிஸாகிறார்.

பிறகு மஞ்சள்முகம் என்ற ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக அமைய, கார்த்தி அவர்களை பிடிக்க முயற்சி செய்ய, அதே நேரத்தில் கார்த்தியி-ன் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரியவர,

பவர் புரோக்கர் பெரியசாமி(சத்யராஜ்) மற்றும் முதல்வர்(நிழல்கள் ரவி) சேர்ந்து ஸ்டெர்லைட் போன்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடுக்கு ஏற்பாடு செய்ததை ஒரு ஹேக்கர் ஆர்வலர்கள் குழு எக்ஸ்போஸ் செய்துவிடுகிறது. யாரென்று தெரியாத அந்த குழு மேலும் எதுவும் செய்துவிடாமல் தடுக்க முடிவு செய்கிறது மாநில அரசு. பெரிய பிசினஸ் டீலை இந்த குழு நாசமாக்கிவிடுவதற்குள் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறத

தன் தாத்தாவுக்காக நல்லவர் போன்று நடித்துக் கொண்டிருக்கும் மோசடி போலீஸான ராமு எப்படி இந்த விஷயத்தில் சம்பந்தப்படுகிறார்?. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனான ராமுவுக்குள் இருக்கும் வாத்தியார் உயிர்த்தெழ என்ன நடக்கிறது?.

காதலியை எப்படி கைப்பிடிக்கிறார்?
பவர் புரோக்கர் பெரியசாமி இடம் இருந்து நாயகன் தப்பித்தாரா?

எம்ஜிஆர் ஸ்டைலில் கார்த்திக் ரசிகர்களை கவர்ந்தாரா ?என்பதை சொல்லும் படம் தான் “வா வாத்தியார்”

நடிகர்கள் & கதாபாத்திரங்கள்

கார்த்தி ராமேஸ்வரன் (அ) ராமு / வாத்தியார் என இரு மாறுபட்ட வேடங்களில், அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். எம்ஜிஆர் ஆக மாறுவது, பிறகு சாதாரண ராமு வாக மாறுவது, என வித்தியாசமான நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார்.

நாயகியுடன் ரொமான்ஸ், தாத்தாவிடம் பாசம், என என்ன பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார்.

கார்த்தி தன் அருமையான நடிப்பால் நவரசங்களை கலந்து ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுத்து இருக்கிறார். எம்ஜிஆர் போலவே மேனரிசம் செய்ய பயிற்சி எடுத்து அசத்தியிருக்கிறார்.

அவருக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படம் அமைந்திருக்கிறது.

கிருத்தி ஷெட்டி– வூ (Wu) என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க, கவர்ச்சி உடையில் வந்து , நாயகனுக்கு உதவி செய்கிறார். பாடல் காட்சிகளில் மற்றும் நடன காட்சிகளில் அசத்தலாக இருக்கிறார் .

அழகான ஏஞ்சலாக இளைஞர்களை கவருகிறார் கிருத்தி.

ராஜ்கிரண் – பூமிப்பிச்சை

என்ற வேடத்தில் எம்ஜிஆரின் ரசிகராக வந்து, அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். எம்ஜிஆர் ரசிகராக இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். என்ற ஒப்பற்ற தத்துவத்தை சொல்லி ,பேரன் தவறான பாதையில் போவதைக் கண்டு மனம் கலங்கும் நடிப்பு மிக அருமை.

சத்யராஜ்– பவர்புரோக்கர் பெரியசாமி வேடத்தில், கம்பீரமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

டீல் பேசி தனது சொத்துக்களை எல்லாம் இழக்கும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார் மஞ்சள் முகம் என்ற ஹேக்கர்ஸ் பிடிக்க அவர் போடும் திட்டம்
பலே”

மற்றும் ஆனந்தராஜ் – பாபு என்ற வேடத்திலும், எம்ஜிஆர் போலவே ஸ்டைலாக வந்து போகிறார். ஜி. எம். சுந்தர் – மணி என்ற கதாபாத்திரத்தில் மஞ்சள் முகம் ஹேக்கர்ஸ் பிடிக்க திட்டம் தீட்டுவதில் சகுனியாக நடித்திருக்கிறார்.

கருணாகரன் – கோவிந்த ராமன் என்ற வேடத்திலும்,
ஷில்பா மஞ்சுநாத் – மாலினி என்ற வேடத்தில் ,
ரமேஷ் திலக் – ரமேஷ் என்ற வேடத்தில் ,
நிழல்கள் ரவி – முதல்வர் வேடத்தில்,
யார் கண்ணன் – மதி சோழன் என்ற வேடத்தில் ,
நிவாஸ் ஆதிதன் – நிவாஸ் என்ற கதாபாத்திரத்தில் ,
பி. எல். தென்னப்பன்
ஜெய் கணேஷ் ஆகவும் ,
வித்யா (ராமுவின் தாய்) – சுசிலா
என்ற வேடத்திலும் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வன்மம் படத்தை இயக்கிய ஜே.கே அரசியல்வாதியாக நக்கலும் நையாண்டிமாக சிறப்பாக நடித்தி இருக்கிறார்.

தொழில்நுட்ப குழு விவரம் :

கதை & இயக்கம் : நலன் குமாரசாமி, சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார். இயக்குநர் . ஒவ்வொரு ஒன் லைனும் அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். படத்தில் ஹீரோ என்று வாத்யார் , என்று வந்த பிறகு படம் ரெக்க கட்டி பறக்கிறது.

மஞ்சள் முகம் டெரர் கிளப்ப, உதவும் நல்ல போலிஸாக, ராமு மாற சேஸிங்கில் கியர் தட்டுகிறார் இயக்குனர்.

எம்ஜிஆர் என்ற பாஸிட்டிவான “வைப்” படம் முழுக்க பரவிக் கிடக்கிறது. அதை சரியான முறையில் அதை சரியான முறையில் பயன் படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் Cவில்லியம்ஸ் பாடல் காட்சிகளில், பரவசப்படுத்தியும், சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பை கூட்டியும் , ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெட்டு படமாக்கி இருக்கிறார்.

பின்னணி இசையில் மிரட்டிஇருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கதைக்கு , தேவையான இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் தந்து ,எம்ஜிஆர் ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடல் இனிமை!!! அருமை!!

சந்தோஷ் நாராயணன் இசைக்கு, பாடல் வரிகள் தந்திருக்கிறார்கள். விவேக், முத்தமிழ், கெலிதீ, துரை அருமையாக இருக்கிறது.

ஆர்ட் டைரக்டர்: டி. ஆர். கே. கிரண் அசத்தலான செட்டிங்ஸ், பாடல் காட்சிகளில் அவரின் கைவண்ணம் பளிச்சென்று தெரிகிறது.

வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு படத்துக்கு அதன் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கிறது.

அனல் அரசு சண்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில், அனல் தெரிக்கிறது.
ஒலி அமைப்பு : விஷ்ணு கோவிந்த்
நடன அமைப்பு : சாண்டி / எம். ஷெரிப்
உடை வடிவமைப்பாளர்கள்
பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகம்பரம், பல்லவி சிங்
உடைகள் : எல். தனபால்
மேக்கப் : பாரிவள்ளல்
சிறப்பு மேக்கப் : ரஞ்சித் அம்பாடி
பிரசார வடிவமைப்பு : டூனி ஜான், 24AM
VFX தலைவர் : ஆர். ஹரிஹர சுதன்
இயக்க குழு :
அருண் நேஹ்ரு, எஸ். ஆண்டனி பாஸ்கர், சிவபிரகாஷ், பி. கவின் கார்த்திக், எம்.டி. இம்ரான், சரண் செல்வராஜ்
தயாரிப்பு கட்டுப்பாடு : எஸ். சிவகுமார்
தயாரிப்பு நிர்வாகிகள் : ஜி. காமராஜ் – எஸ். ராஜ்கமல்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஈ. வி. தினேஷ் குமார்
நிர்வாக தயாரிப்பாளர் : ஏ. ஜி. ராஜா
இணை தயாரிப்பாளர் : நேஹா ஞானவேல்ராஜா
தயாரிப்பு : கே. ஈ. ஞானவேல்ராஜா
பேனர் : ஸ்டுடியோ கிரீன்
டிரெய்லர் கட் : செல்வா RK
ஆடியோ லேபல் : Think Music

மக்கள் தொடர்பாளர்: யுவராஜ் , அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த படம் ,எம்ஜிஆர் ரசிகர்களுக்கு, ஒரு உற்சாகத்தை கொடுக்கும். கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு கலகலப்பான என்டர்டைன்மென்ட் படத்தை கொடுத்திருக்கிறது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் “”வா வாத்தியார்”🌷🙏