Movie Credits:
Director : Nithish Sahadev
Producer : Kannan Ravi
Co-Producer : Deepak Ravi
Production House : K R Group
Creative Producer : Jiiva.
Associate Producer : Muthukumar Ramanathan
கதை களம்
இது ஒரு அரசியல் நகைச்சுவைப் படம் இளவரசு ,மகள் சௌமியா திருமணத்துக்கு தலைமை தாங்க வருகிறார் ஜீவா.
மாப்பிள்ளை வீட்டார் கன்னியாகுமரியில் இருந்து வந்து கொண்டிருக்கிறார் கள்.
எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் தம்பி ராமையா (மணி)
அப்பா செல்லையா இறந்துவிட, சூழ்நிலை அப்படியே போர்க்களமாக மாறுகிறது.
சின்ன சின்ன எரிச்சலில் தொடங்கி கடுஞ்சினம் கொள்ளும் ஆத்திரக்காரராக மாறுகிறார்.தம்பிராமய்யா, மறுமுனையில் தன் சுயத்தின் ஒரு பகுதியாக ‘நான்’ என்னும் அகங்காரம் கொண்டவராக “இளவரசு ” இவர்கள் இருவரும் செய்யும் மனக் குழப்பத்தினால் நாயகன் ஜீவா ஓய்வற்ற தன்மையை கச்சிதமாகக் கடத்துகிறார்.
சில காட்சிகளில் இருவர் மீதும் நம்மை மீறி கோபமும் இரக்கமும் வந்துவிடுகின்றன. குறிப்பாக, இருவரின் குரூரம், வன்மம், ஆற்றாமை, கோபம் உள்ளிட்டவற்றை தனது அனுபவ நடிப்பால் அநாயசமாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்கள். தம்பி ராமையாவும், இளவரசுவும், சௌமியா, கதாபாத்திரத்தில் மணப்பெண்ணாக வரும் நாயகி இவருடைய திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் உணர்வு பூர்வமான மற்றும் அனைத்து விதமான உணர்வுகளையும் சார்ந்தது தான் இந்த திரைப்படம். இது அழுத்தமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.அதேபோல நாயகனின் கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முழு படத்தையும் ,தாங்கி கொள்ளும் அந்த கதாபாத்திரம் படத்தில் மிக சிறப்பான வரவேற்பு பெரும்.
ஜீவா
இந்த படத்தில் நாயகன் ஜீவா, பஞ்சாயத்து தலைவராக, நடித்திருக்கிறார். அருமையான நடிப்பு, பண்பட்ட நடிப்பு,
இளவரசு மகள் சௌமியாவுக்கு நடக்கவிருக்கும், திருமணத்துக்கு ஜம், என்று வரும் அவர் தம்பி ராமையாவின் அப்பா செல்லையா, இறந்துவிட ,இரண்டு வீடும் பக்கத்துக்கு பக்கத்தில் இருக்க, இருவரையும் சமாளிக்கும் அந்த சமாளிப்பு தான் அவர் நடிப்புக்கு கிடைத்த வெற்றி.
பிரார்த்தனா
சௌமியா, என்ற வேடத்தில் படம் முழுக்க மணப்பெண்ணாக திருமணத்துக்கு தயாராகி இருக்கும் பொழுது, பக்கத்து வீட்டில் ஏற்பட்ட இறப்பு அவருக்கு பாதிப்பு ஏற்படுத்த, அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். ஒன் சைடாக தன்னை விரும்பும்.பால்ராசை விரட்டிக்கொண்டு கிணற்றில் விழும் காட்சி பரிதாபம். ஏற்படுத்துகிறது. நல்ல தேர்வு, நல்ல நடிப்பு.
தம்பி ராமையா
மணி என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து மனிதராக, தன் அப்பா இறந்து விட்டார் என்று அவர் சாமி ஆடுவது , குறிப்பிட்ட நேரத்தில் தன் அப்பாவை தேரில் ஏற்றுவேன் என்று சபதம் செய்யும் காட்சிகள், என்று அவர் வரும் காட்சிகளில் செம கலகலப்பு .படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார்.
தம்பி ராமையாவின் பக்கத்து வீட்டுக்காரராக இளவரசு, இளவரசு என்ற கதாபாத்திரத்தில் மகள் திருமண குறிப்பிட்ட நேரத்தில் நடத்திய தீர்வேன் என்று பிடிவாதம் பிடிப்பதும், தம்பி ராமையாவின் மகள் மீது பூரணி மீது, அவதூறு பரப்பி தன் மகளிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும் இளவரசு கட்சிதமான கதாபாத்திரம்.
ஜெய்சன் திவாகர்
தவுடு என்ற கதாபாத்திரத்தில் ஜீவாவுக்கு போட்டியாக சகுனித்தனம் செய்து படம் முழுக்க, கலப்பு ஊட்டுகிறார்.
மற்றும் இளவரசன் மனைவியாக மணிமேகலை, பரந்தானா நாதன் , ஜெய்வந்த், சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமீத் மோகன், அனுராஜ் ,சரத், சாவித்திரி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர்: நிதிஷ் சஹதேவ்
இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை இரண்டு மனிதர்களுக்குள் ஏற்படும் ஈகோவை அற்புதமாக இயக்கியிருக்கிறார் ஆரம்பத்தில் வரும் பெண்ணி என்ற கதாபாத்திரம் நான் நல்லவனா? பைத்தியமா? என்று கேட்க, படத்தின் கிளைமாக்ஸ்- இல் ஜீவா நீ ஒருவன் தான் இங்கு நல்லவன் . எல்லோரும் பைத்தியம். என்று சொல்லும் போது படம் இமயமலை அளவு உயர்ந்து நிற்கிறது. எல்லோர் மனதிலும் கோபம், விரோதம், முன்பகை தேவையில்லாத பொறாமை, குவிந்து கிடக்கிறது. அதை அகற்றினால் தான் இங்கே மனிதம் மலரும், என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக வடிவமைத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் தண்ணீர் தொட்டி உடைந்து எல்லோருடைய ஈகோவையும், சுக்குநூறாக்கும் காட்சிகள், கைதட்ட வைக்கிறது.
தயாரிப்பாளர்: கண்ணன் ரவி
அவர்களுக்கு நாம் பாராட்டுகளை சொல்லியே ஆக வேண்டும். நல்ல கதையை தேர்வு செய்து, அதை ஜீவாவிடம் ஒப்படைத்து ஒரு வெற்றிப் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கும் அவருக்கு கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்.🌷
விஷ்ணு விஜய், பின்னணி இசை யும், பாடல்களிளும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார்கள். நிதீஷ் சஹதேவ், சஞ்ஜோ ஜோசப்,
அனுராஜ் O P. அருமையான கதை. இன்றைய கால ஓட்டத்திற்கு தேவையான கதை.
பப்லுவின், ஒளிப்பதிவு இரவு நேர ,காட்சிகளை அருமையாக படம் பிடித்திருக்கிறது. கல்யாண வீடும், இறப்புவிடும், ஒன்றாக இருக்கும் இடத்தில் எப்படி காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்ட முடியுமோ? அப்படி காட்டி இருக்கிறார்.
அர்ஜுன் பாபுவின், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.
சுனில் குமரன் ,ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். கல்யாண வீட்டை, அருமையாக வடிவமைத்து, தண்ணீர் தொட்டி உடையும் காட்சியில் அவரின் கைவண்ணமும், சி.ஜி ,மற்றும் வி.எப்.எக்ஸ் காட்சிகள், வியக்க வைக்கிறது.
மற்றும் இந்த படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்.
Creative Director : Lipin Unni.
Additional Dialogues : Vijayakumar Solaimuthu.
Chief Associate Director : Rithwik Lima Ramadas
Mixing & Mastering : Sujith Sreedhar
Final Mixing : Vishnu Sujathan.
Sound Designer : Sankaran AS – Sidharthan.
DI : Remesh CP (Color Planet).
VFX : V Rajkumar (Focus VFX)
Costume Designer : Rithesh Selvaraj.
Makeup : Vikram Adhithan.
Action Choreography : Prabhu Jacky
Stills : Navin Philics.
Recordist : K Jagan (LML Studio).
Publicity Designer : YellowTooths
Trailer Cut : Linto Kurian.
Associate Directors : Vijayakumar Solaimuthu, Melbin Mathew Thomas & Pa. Karthik.
Assistant Directors : Thulasi Sundar & Praveen Subramanian.
Executive Producer : Dr. Vinita Kumari.
Head of Production : Srinath Viswanathan.
Production Managers : M Ilaiyaraja Selvam – Mohmed Imran.
Project Management & Advisor : M Ramu.
PRO : Sathish S2 Media.
Marketing and Promotions: KV Mothi ( DEC )
Subtitles : Fill In The Blanks
Label: Saregama India Limited, A RPSG Group Company
என்று இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள் .அவர்கள் உழைப்புக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது.
மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும், ஈகோவை கைவிட்டு விட்டு, மனிதநேயத்தோடு ஒருவரைஒருவர், அனுசரித்து போனால் ,வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். எல்லோர் வாழ்க்கையிலும் வசந்தம் வீசும். தென்றல் மலரும். என்ற ஒரு நல்ல செய்தியை ,சமூக சிந்தனையோடு சொல்லி இருக்கும் இந்த படைப்புக்கு வாழ்த்துக்கள். இந்த படம் மாபெரும் வெற்றி அடைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது.🌷🙏
