இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர் சந்திப்பு

அருண் மாதேஸ்​வரன் இயக்​கும் ‘டிசி’ மூலம் நடிக​ராக​வும் அறிமுகமாகிறார், இயக்​குநர் லோகேஷ் கனகராஜ். அதை முடித்துவிட்​டு, அல்லு அர்​ஜுன் நடிக்​கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்​கிடையே செய்​தி​யாளர்​களிடம் பேசிய லோகேஷ் கனக​ராஜ், ரஜினி – கமல் மீண்​டும் இணை​யும் படத்தை இயக்​காததற்​கான காரணத்​தைச் சொன்​னார்.

“கூலி ரிலீஸ் நேரத்​துல ரஜினி சாரை​யும் கமல் சாரை​யும் சந்திச்சேன். அவங்க ரெண்டு பேரும் இணை​யும் படம் பற்றி பேசினாங்க. எனக்கு அது பெரிய வாய்ப்​பு. 46 வருஷம் கழிச்சு அவங்க சேர்ந்து நடிக்கப் போற படத்தை இயக்​கச் சொல்லி என்னைக் கேட்​டதே பெரிய விஷ​யம். ஆனா, நான் ‘கைதி 2’ பண்றதா இருந்​தது.

கதையை ரெடி பண்ணிட்டு, ரெண்டு பேரை​யும் பார்த்தேன். அவங்களுக்​குக் கதை பிடிச்​சிருந்தது. ஆனா, அவங்க தொடர்ந்து ஆக்‌ஷன் படங்​கள்ல நடிச்​சுட்டு வர்றதால, லைட்​டான ஒரு படத்தை எதிர்​பார்த்​தாங்க. எனக்கு அப்​படி படம் பண்ண வராதுங்கறதால, அதைச் சொல்​லி​விட்டு வந்​துட்​டேன். இதுக்கு இடை​யில மைத்ரி மூவி மேக்​கர்ஸ் நிறு​வனம் 6 வருஷத்​துக்கு முன்​னால எனக்கு அட்​வான்ஸ் கொடுத்​திருந்​தது. அந்த ‘கமிட்​மென்​டு’க்​காக அல்லு அர்​ஜுன் படத்தை இயக்​குறேன்.

உங்​களோட, ‘எல்​சி​யூ’ முடிஞ்​சிடுச்​சு, இனி அப்​படி படம் பண்ண மாட்​டார்னு சொல்றாங்களே…

கைதி 2, விக்​ரம் 2, ரோலக்​ஸ்​… இதெல்​லாம் என்​னோட அடுத்​தடுத்த ஒப்​பந்​தங்​கள். அதனால, எல்​சியூ மூடப்படலை. அல்லு அர்​ஜுன் படம் முடிஞ்​சதும் அது தொடரும்.

ஆரம்​பத்​துல உங்​களுக்கு ஆதரவா நிறைய விமர்​சனம் வந்துச்சு… இப்ப எதிராகவும் வருது, எப்​படி பார்க்​கிறீங்க?

அதை தனிப்​பட்ட விஷயமா எடுத்​துக்க மாட்​டேன். படம் இயக்குறது என் வேலை. என் முதல் படம், ‘மாநகரம்’ வெளியானதுல இருந்து கிட்​டத்​தட்ட 9 வருஷமா எவ்​வளவு பாராட்டு​களை வாங்​கி​யிருப்​பேன்னு எனக்கு தெரி​யும். டக்​குன்னு ஒரு விமர்​சனம் எதிரா வரும்​போது அதை ஏத்​துக்க மாட்​டேன்னு சொல்​றது நியாயமில்​லை. அதுல அக்​கறை இருக்​கற​தாகத்​தான் பார்க்​கிறேன்.

உங்க படங்​கள்ல அதிக வன்​முறை இருக்​கிறதா புகார்​கள் வருதே…

நான் சின்ன வயசுல, தேவர்​மகன், விரு​மாண்டி போன்ற ஆக் ஷன் படங்​கள் பார்த்து அது​போல இயக்​குந​ராகணும்​னு​தான் வந்​தேன். ஒரு இரண்​டரை மணி நேரம், பார்​வை​யாளர்​களை தியேட்​டர்ல உட்கார வைக்​கறது பெரிய சவாலா இருக்​கு. நாம ஜாக்​கி​சான், புரூஸ்​லீ, அர்​னால்டு படங்​கள் பார்த்​து​தான் வந்​தோம். நம்மூர்லயே, ரஜினி, கமல், விஜய​காந்தை பார்த்​தோம். அப்​படித்​தான் ஆக் ஷன் படங்​கள் பண்​றேன். அது ஆக் ஷன்​தான், வன்​முறை இல்​லை. எனக்கு சமூக பொறுப்பு இருக்​கான்னு கேட்​கிறீங்​கன்​னா, இருக்​கு. பார்க்​கிறவங்​களுக்​கும் அது இருக்​கணும்னு நினைக்கிறேன்.
என்றார்