காந்தி டாக்ஸ்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கியிருக்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படம் மவுனப் படமாக (silent movie) உருவாகி இருக்கிறது.

‘’இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது: இப்படம் ஒரு ‘டார்க் காமெடி’ பாணியில் உருவாகியுள்ளது. காந்தி தேசத்தில், மகாத்மா காந்தியின் முகம் பொறிக்கப்பட்ட “பணம்” மனிதர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது, பேராசை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நகைச்சுவை கலந்த சீரியஸான தொனியில் இயக்குனர் கிஷோர் பி. பெலேகர் வடிவமைத்துள்ளார்.

(Theme): சமூகத்தில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையேயான வித்தியாசத்தை சுட்டிக்காட்டுகிறது. அதே சமயம், ஒரு தனிநபரின் ஆசை மற்றும் பேராசையையும் சித்தரிக்கிறது.

இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: சுவாரசியமான காட்சிகளின் மூலம் (Black Comedy) பாணியில் படம் நகர்கிறது. ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

எல்லோரும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அர்விந்த் சாமி நடிப்பு சிறப்பாகப் பொருந்துகிறது.

விஜய் சேதுபதி நடிப்பு: படத்தின் மிகப்பெரிய பலம் அர்விந்த் சாமி அவரது உடல்மொழி (Physical comedy) மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், ஒரு டயலாக் கூட இல்லாத படத்தை சிறப்பாக நகர்த்துகிறது. ஒரு கஷ்டப்படும் நடுத்தர வர்க்க மனிதராக விஜய் சேதுபதி அவரது நடிப்பு இயல்பாக உள்ளது.

வசனமற்ற திரைக்கதை (Silent Film): வசனங்கள் இல்லாமல், காட்சிகள் மூலமாகவே கதையை மிகத் தெளிவாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருப்பது இயக்குனர் மற்றும் எழுத்தாளரின் திறமை. இது படத்திற்கு ஒரு தனித்துவமான தன்மையை அளிக்கிறது.

விஜய் சேதுபதி, தினம், தினம் உணவுக்காக ஏஙகுவதும், நோய்வாய்ப்பட்ட தன் தாயை தாங்குவதும், காதலி, அதிதிராவ், பார்ப்பதும் பிறகு அதிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் ஏற்பட்ட பிறகு, தன் ஏழ்மை நிலை எண்ணி துடிப்பது,என நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார்.

வேலைக்கு சென்ற இடத்தில் லஞ்சம், பக்கத்து வீட்டுக்காரனிடம் சாப்பாடு திருடி சாப்பிடுவது, அரவிந்த்சாமி வீட்டுக்குச் சென்று,எப்படி திருடலாம் !!என்று அவர் வீட்டுக்குள் சென்று இரவு முழுக்க ,சுற்றி சுற்றி வருவது, இப்படி அவர் வரும் இடங்களில் எல்லாம் அருமையாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஏழ்மைக்கும் ஆடம்பரத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை மிக அழகாகச் சித்தரிக்கிறார் இயக்குனர்.

அதேபோல அரவிந்த்சாமி, பெரிய பணக்காரராக இருந்து, தன் சொத்துக்கள் எல்லாம் பறிபோவதை கண்டு, துடித்து, பின்னர் அந்த வீட்டையே கொளுத்தும் அளவுக்கு அவர் மனநிலை தள்ளப்பட்டு, விரக்தி நிலையில் அவர் எடுக்க முடிவு தந்திரத்தின் உச்சம்.

விஜய் சேதுபதி , தான் திருடிய பொருளை கொண்டு வந்து ,அரவிந்த்சாமி இடம் கொடுக்கும் பொழுது, அவர் மன்னித்து அனுப்புவது அவர் நடிப்பு இமயமலை அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

தன்னைத் திருட்டுத்தனமாக போட்டோ எடுத்து பிளாக் மெயில் செய்யும் பத்திரிக்கையாளரையும், போலீஸ்காரர் வைத்து அதை வாங்கும் இடம் சிறப்பாக இருக்கிறது.

அரவிந்த் சாமிக்கு ஏற்ற அருமையான கதாபாத்திரம். இடைவேளைக்கு பிறகு ,இவர் நடிப்புதான் கொடிகட்டி பறக்கிறது.

அதிதி ராவ் அழகான ராகவாக வந்து போகிறார். விஜய் சேதுபதி தவறான பாதையில் போகும்பொழுது, அதை திருத்தும் நல்ல நாயகியாக நடித்திருக்கிறார். தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று விஜய் சேதுபதியிடம்,சைகைமொழியில்சொல்லும் பொழுது, சைகை மொழியில் கோயிலுக்கு வா, என்று அழைக்கும் பொழுதும், அவர் நடிப்பு நன்றாக இருந்தது.

திருடனாக வரும் அவர் நடிப்பும், நன்றாக இருந்தது. விஜய் சேதுபதி ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் பொழுது ,அவர் முன்னாள் பணத்தை காட்டுவதும், கிளப்பில் எதிரும் புதிருமாக, நின்று கொண்டு விஜய் சேதுபதி யைசைகை மொழியில் மிரட்டுவதும், பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவதும் சிறப்பு .

அரவிந்த்சாமி வீட்டில் மாட்டிக்கொண்டு விழிப்பது கலகலப்பு.

விஜய் சேதுபதி, மற்றும் அரவிந்த் சுவாமி ,போன்ற நடிகர்களுக்கு, ஒரு மௌன திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது, கலைநேர்மையையும் நடிப்பின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. வழக்கத்திற்கு மாறான, சவாலான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதற்காக அறியப்படும் இவர்களின் பங்கேற்பு, இந்த படத்தின் கலைத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. அதிதி ராவ், ஹைதாரி ,மற்றும் சித்தார்த் ஜாதவ், உரையாடல் இல்லாத நிலையிலும், மிக நுணுக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பின் மூலம், கதைக்கு மேலும் ஆழம் சேர்த்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, பின்னணியில் உழைத்திருப்பது A.R. ரஹ்மான் அவர்களின் இசை. காந்தி டாக்ஸ் படத்தில், பேசப்படாத வார்த்தைகளுக்குப் பதிலாக, ரஹ்மான் அவர்களின் இசையே உணர்ச்சிகளின் குரலாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாத இந்த உலகில், அவரது பின்னணி இசைதான் கதையாசிரியராக மாறி, பார்வையாளர்களை உணர்ச்சிப் பயணத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இந்த இசை, மௌனத்தை ஒரு வலுவான, ஆழமான அனுபவமாக மாற்றி, திரைப்படத்தை சர்வதேச தரம் கொண்ட, திரைப்பட விழாக்களுக்கு ஏற்ற படைப்பாக உயர்த்துகிறது.

ஒளிப்பதிவு, இரண்டு மாறுபட்டு கோணங்களை வித்தியாசப்படுத்தி காட்டி இருக்கிறது. விஜய் சேதுபதியின் ஏழ் மையையும், அரவிந்த்சாமியின் கோடீஸ்வரன் வாழ்க்கையும் நன்றாக படம் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர்.
வசனங்களே இல்லாத ஒரு சைலண்ட் பிளாக் காமெடித் திரைப்படம். ஏழ்மையில் இருக்கும் ஒரு வேலையற்ற இளைஞன், ஒரு பணக்காரனின் வாழ்க்கையை தற்செயலாக பார்க்கும் கதையை, சிறந்த நடிப்பு மற்றும் சுவாரசியமான திரைக்கதை மூலம் இயக்குனர் இயக்கியுள்ளார். இது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கிளாசிக் படம் .

படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பாளர் ஆஷிஷ் கச்சிதமாக செதுக்கி இருக்கிறார் சார்ப்பாக காட்சிகளை நகர்த்தி யதுரசிக்க வைத்தது.

இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

Writer & Director – Kishor Pandurang ‘Belekar’
Producers: Rajesh Kejriwal, Gurpal Sachar
Producers: Umesh Kumar Bansal, Meerra Chopraa, Kishor P Belekar
Co-Producer: Anil Bhandari
Production House – Zee Studios, Kyoorius, Pincmoon & Moviemill Entertainment
Creative Producer – Nisheeth Chandra
Associate Producer – Deepak R. Nangalia
Director Of Photography – Karan B. Rawat
Production Designer – Durgaprasad Mahapatra
Costume Designers – Neetu Bharadwaj, Priyanka Dubey, Kavitha
Sound Designer – Justin Jose
Music Supervisor – Shubham Bhat
Makeup Designer – Rohit Mahadik
Editor – Ashish Mhatre
VFX – Postmen Studios
DI – Prime Focus Ltd.
DI Colorist – Ashirwad Hadkar (ISC)
Post-Production Head – Paras Fulambarkar

என்று இந்த திரைப்படத்தில், திரைக்கு முன்னாலும், திரைக்குப் பின்னாலும் ,நிறைய கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள் .அவர்கள் எல்லோருக்கும் இந்த படம் சர்வதேச அரங்கில், வெற்றியைக் குவிக்கும் .வசூலிலும் இந்த படம் சாதனை புரியும் என்பது உண்மை.

மக்கள் தொடர்பாளர்
சதீஷ் &சிவா(AIM)

மொத்தத்தில் இந்த படம் வெற்றி பட்டியலில் 🙏🌷