காதல் ரீசெட் ரீபீட் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

மலாலி மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், சன்னி டென்வி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘காதல் ரீசெட் ரிபீட்’. பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பு செய்ய, விஜய் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். புதிய பாணியில் அமைந்துள்ள காதல் கதையில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியுடன் அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர்.

கதை களம்

சித்தார்த்,அதிதி சின்ன வயதில் இருந்தே மியூசிக் கிளாசில் பயின்று
நட்பாகி வளர்கிறார்கள்.

அதிதி, தன் இசைக்குழுவில் சேர்ந்து ஸ்காட் லாந்து செல்கிறார்
தன்னுடன் இருக்கும்
ஹாரி “என்னும் ஹரிச்சந்திரனை காதலிக்கிறார்.
ஸ்காட் லாந்து சென்ற பிறகு,ஹாரி அதிதியை ஏமாற்றி விட்டதால், தற்கொலை செய்து கொள்ள போகிறார் .
அதிதியை பின் தொடர்ந்து செல்லும் நாயகன் சித்தார்த்
அதிதியை காப்பாற்றுகிறார்.
எம். எஸ் .பாஸ்கர் உதவி உடன்,
ஆனால் அதிதி பழைய நினைவுகள் மறந்து தூங்கி எழுந்தால் யாரென்று தெரியவில்லை.
என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இந்த சூழலில் சித்தார்த்,அதிதி இணைந்தார்களா?

ஹாரி,அதிதி இணைந்தார்களா?

அதிதி, தன் அப்பா பிரிந்த பிறகு, ஜெயபிரகாஷ் உடன்
சேர்ந்தாரா?

என்பதை காதல் காவியமாக சொல்லி இருக்கிறது இந்த படம்.

காட்சிகள் ஒவ்வொன்றும் துல்லியமாக அற்புதமாக இருக்கிறது.

ஸ்காட் லாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் படமாக்கபட்டு அசத்தி இருக்கிறார் இயக்குனர், மற்றும் ஒளிப்பதிவாளர்.

நடிகர்கள் & நடிகைகள்

மதும்கேஷ்,
சித்தார்த், என்ற வேடத்தில் அம்மா சொன்ன அந்த ஒற்றை வார்த்தையை லட்சியமாகக் கொண்டு, தன்னை சந்தோஷமாக வைத்திருப்பவரை நாம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கோடு நாயகியை பின் தொடர்ந்து, ஸ்காட் லாந்து வரை நாயகிக்கு பாதுகாப்பாக இருந்து, தன் காதலை மனதுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு ஏக்கமும் சோகமும், சுமந்து நடிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இரண்டு முறை நாயகியின் ,உயிரை காப்பாற்றுவது ,எம். எஸ் .பாஸ்கர் உடன் பாதுகாப்பது என்று முதல் படத்திலேயே முத்தான நடிப்பை வழங்கி இருக்கிறார் நாயகன்.

நாயகி “ஜியா சங்கர்
குட்டி தமன்னாவை போல் காட்சி தருகிறார் .சோகக் காட்சிகளில் காதல் காட்சிகளில், காதலன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று பொங்கி புலம்பும் பொழுதும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன்,
ஹாரி” என்னும் அரிச்சந்திரனாக இடைவேளைக்கு பிறகு நடிப்பில் பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார்.
அதிதியை எப்படியாவது தன் வளைக்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் துடிப்பதும், ஆள் வைத்து கடத்துவதும், சிறப்பான நடிப்பு.
எம்.எஸ்.பாஸ்கர்,
நாயகனுக்காக டாக்டர் பவுல் என்னும் கதாபாத்திரத்தில், படம் முழுக்க அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ்,
நாயகியின் அப்பாவாக திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் பொழுது மகள் ஓடிவிட, அவளை கண்டிப்பதும் ,பின் தேடி வந்து சேர்வதும் என நல்ல தந்தையாக வாழ்ந்து இருக்கிறார் .
விஜி சந்திரசேகர்
மியூசிக் டீச்சராக நாயகனின் அம்மாவாக ஓரிரு காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.
மற்றும் ஸ்காட் லாந்தில் வரும் டாக்டர்கள்,
அர்னால்ட் ஏஜெண்ட்ஸ் என்ற பெயரில் வரும் நான்கு அடியாட்கள்,
எல்லோரும் சிறப்பாக நடித்தி ருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

அரவிந்த் கிருஷ்ணா, ஒளிப்பதிவாளராக
அற்புதமான கண்ணுக்குள் நிறையும் காட்சிகளை கவிதையாக படமாக்கி தந்திருக்கிறார். ஸ்காட்லாந்து பகுதியில் இருக்கும் அழகான இடங்களை தேர்வு செய்து, ஒரு வெற்றி படத்துக்கு உதவி இருக்கிறார் .
,சரவணன் வசந்த், அரங்கம் அமைத்துள்ளார்.
அவரின் பணி அற்புதமாக இருக்கிறது. நாயகனின் வீடு, நாயகியின் வீடு, ஸ்காட் லாந்தில்,
எம் .எஸ். பாஸ்கரின் வீடு, என எல்லாமே அற்புதமாக இருக்கிறது.
ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார் .
காட்சிகளை மிகவும் அருமையாக செதுக்கி இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு, பட தொகுப்பாளரின் பங்கு அதிகம் படம் வேகமாக விறுவிறுப்பாக செல்வதற்கு இவர்தான் காரணம்.
,மனோகர் வர்மாவின் சண்டைப் பயிற்சி
நன்றாக இருக்கிறது.
வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ,ஆர்யன் பாடல்கள் எழுதியுள்ளனர்.
பாடல் வரிகள் மிகவும் ரசிக்க வைக்கிறது.

இசை படத்திற்கு கூடுதல் பலம்
ஹாரீஸ் ஜெயராஜ் அற்புதமான பாடல்கள் தந்துள்ளார். படத்தின் கதைக்களம் இசையை சார்ந்தது என்பதால், அவருக்கு விளையாடுவதற்கு களம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பாடலும் தேனாக இனிக்கும்படி கொடுத்திருக்கிறார்
பின்னணி, இசை, பிரமாதமாக இருக்கிறது .

இயக்குனர்
நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் ,
மதராசபட்டினம், தெய்வத்திருமகன், சைவம்,
போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.
மென்மையான தென்றல்” வருடும் படங்களுக்கு இவரின் இயக்கம் வசந்த காலத்தில் மலர்கள் தூவியது போல இருக்கும். இசை குடும்பத்தை குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன், காதலியுடன் சேர வேண்டும் என்ற கனவுடன், அதற்காக கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவம் அவன் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.
நாயகன்,நாயகி
இருவரின் கெமிஸ்ட்ரியும் படத்தில் மிக அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படம் அவர்களை கோலிவுட் சினிமாவின் மிக சிறந்த ஆன் ஸ்க்ரீன் ஜோடிகளின் பட்டியலில் இடம் பெற வைக்கும் என்பது உண்மை. நாயகியின், கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக தனது ஸ்டைலில் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

இப்படத்துக்கு கூடுதல் பலமாக இருந்து ஹாரீஸ் ஜெயராஜ் இசை. இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக ஹிட் அடித்துள்ளது. குறிப்பதாக கிளைமாக்ஸ் பாடல் காதுகளுக்கு இனிமை சேர்த்தது. அதே போல ஆழமான வசனங்களும் திரைக்கதைக்கு பக்கபலமாய் அமைந்தது.என்றுசொல்லலாம் செண்டிமெண்ட், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக ஒரு கமர்ஷியல் விருதாக இந்த படம் அமைந்துள்ளது. இயக்குனர் திரைப்பயணத்தில் ஒரு வித்தியாசமான படமாக அமைந்துள்ளது “காதல் ரீசெட்ரீபிட்”

மக்கள் தொடர்பாளர் யுவராஜ், இந்த படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
படத்தின்
சோகமான முடிவை மாற்றி உற்சாகமான பாசிட்டிவ் முடிவாக
காட்டி இருக்கலாம்.
வித்தியாசமான முடிவு வேண்டும் என்பதற்காக இயக்குனர் இப்படி சிந்தித்து இருப்பாரோ?
படம் வெற்றி பெற கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது💐