Production House: Beyond Pictures
Producer: Jaivarda
Co-Producer: Jaikanth Suresh
கதை களம்
இப்படம். முதல் பாதி இளைஞர்களை கவரும் ,விதமாக காமெடியாக சென்றாலும், இரண்டாம் பாதியில் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
குதிரை முட்டை வாத்தியார், என்று ஊர் மக்களால் கிண்டலும் கேலியும் செய்யப்படும் ஜார்ஜ் மரியன் ,அவரது மகன் ஹேப்பி ஆனந்தராஜ் (ஜீ வி) இவருக்கு இவரது அப்பாவால் நல்ல காதல் அமையாமல் போகிறது. தேன்மொழி, காதலியாக அமைந்தும் மாமனார் ஜார்ஜ் மரியன் குதிரை முட்டை என்று ஊரார் கேலி செய்வார்கள் குதிரை முட்டை கார் மருமகள் “என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டு பிரிந்து போகிறார்.
அதன் பிறகு நண்பனின் பேச்சைக் கேட்டு, பெங்களூர் செல்லும் ஜீவி, மதுரை முத்து துணையுடன் அங்கு காவியாவை சந்திக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்ய போகும் நேரத்தில் ஜார்ஜ் மரியன், தன் உறவினர்களுடன் பெங்களூர் வந்து என்ட்ரி கொடுக்க, திருமணம் நின்று போகிறது.
இருவருக்கும் இடையே ஈகோ ஏற்பட சம்பந்தி இருவரில் யார்? காலில் யார்? மன்னிப்பு கேட்க வைப்பது என்று கதை நகர்கிறது
அப்பாஸ் கிராமம் வந்த பிறகு இருவரும், தங்களது பழைய கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் அந்த ஆற்றங்கரை ஓரக் காட்சிகளும், ஜார்ஜ் மரியம் சொல்லும் அவர் அப்பா சப்பானி பற்றிய கதையும் ,மனதை ஈரப்படுத்துகிறது.
இந்த படம் இளைஞர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை சொல்கிறது. இயக்குநர் அழகாக போரடிக்காமல் கதையோட்டத்துடன் கருத்தாக சொல்லியுள்ள விதம், படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தின் காமெடி , எமோஷன் கலந்த படம் இந்த படம் முழுக்க “happy” feel காமெடி மட்டும் இல்ல, family & . என்டர்டைன்மென்ட் மூவி
நடிகர் & நடிகைகள்
தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் ஜிவி பிரகாஷ் ஹிட் கொடுத்து நீண்ட காலம் ஆகிறது. அந்த குறையை போக்கி வைக்கும் விதமாக ஹேப்பி ராஜ் படம் இருக்கிறது. காதல், சலிப்பு ,விரக்தி, அப்பாவால் ஏற்படும் கேலியும், கிண்டலும் என்று வழக்கமான பாதையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹாப்பி என்கிற ஆனந்த் ராஜ் ,என பெயர் வைத்து தனது மகனை ராஜா வாக வளர்க்க ஹாப்பி ராஜையும் சின்ன குதிரை முட்டை என கலாய்க்க, நாயகன் நொந்து போவது என நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
பிரார்த்தனா நாதன் குதிரை முட்டை மருமகளாக முடியாது என்கிற காரணத்தை சொல்லியே ஹாப்பியின் காதலை பிரேக்கப் செய்து விட்டு பின்னர் நல்ல மாப்பிள்ளை அமையாமல் வருந்துகிறார்.
ஒரு ஐடி கம்பெனியில் ஹீரோயினாக ஸ்ரீகெளரி ப்ரியா அல்டர்ன் மாடர்னாக வந்து ,இருவருக்கும் காதல் மலர ,அந்த காதலுக்கு இருவரது அப்பாக்களும் எப்படி பிரச்னையாக மாற காவ்யா வாக புலம்பும் இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்.
ஸ்ரீகெளரி ப்ரியா
அப்பாஸ் வருகிற ஓபனிங் சீன் சிறப்பாக உள்ளது. படம் முழுக்க அவருடைய நடிப்பும் பக்கா தான்.சரியான தேர்வு அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் பெங்களூருக்குச் சென்று செய்யும் அலப்பறைகளும் அந்த “மலை மலை மருதமலை” பாடல் காட்சியில் இருந்து பிக்கப் ஆகும் படம் கடைசி வரை ஃபீல் குட் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கிறது.
படத்தின் வெற்றிக்கு இவர் தான் காரணம் குதிரை முட்டை என கலாய்க்கப்படும் ஜார்ஜ் மரியன் பெங்களூருக்கு தனது சொந்தக்காரர்களுடன் அப்பாஸை பார்க்க வர, அங்கே அவரை அசிங்கப்படுத்தும்காட்சி ஆனால், அதன் பின்னர் 2ம் பாதி முழுக்க ஜார்ஜ் மரியன் நடித்துள்ள நடிப்பு மற்றும் அவரை வைத்து இயக்குநர் சொல்லியிருக்கும் விஷயம் நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கான பாடமாகவே மாறியுள்ளது.ண அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
மொத்தத்தில் ஜி.வி. பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீகெளரி ப்ரியா, கீதா கைலாசம், மதுரை முத்து என முன்னணி நடிகர்களின் நடிப்பு மொத்தமும் படத்துக்கு பெரிய பிளஸ் ஆகவே உள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் “ஆடினே இருப்பேன்” பாடல் வைப் ஆக்குகிறது. பின்னணி இசை பெரிய பலமாக உள்ளது. பெங்களூர் மற்றும் கோவை அழகை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் மொத்த படத்தையே கலர்ஃபுல்லாக கொடுத்துள்ளார். ஒரு போட்டோ எடுக்கும் ஷாட்டில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருக்கும் காட்சி அழகு. எடிட்டர் செல்வா ஆர்.கே. முதல் பாதியில் பல வேலைப்பாடுகளை செய்து போர் அடிக்காமல் காப்பாற்றியுள்ளார். சப்பாணியின் மகன் முழுசா பொறந்ததே பெரிய விஷயம். என் மகன் ஊனமா பொறக்காததால இன்னொரு குழந்தை கூட பெத்துக்கல போன்ற வசனங்களும் சிறு வயதில் ஹீரோவாக தெரியும் அப்பாக்கள், மகன்கள் வளர்ந்தவுடன் வில்லனாக தெரிவது ஏன்? என்கிற கேள்வியை எழுப்பியுள்ள விதமும் அதற்கு வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் அட்டகாசம். அந்த ரயில் காட்சியும் படத்திற்கு பெரிய பிளஸ். இயக்குனர் செம ஐடியா இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
அப்பா மற்றும் மகன்கள் கொண்டாடும் விதத்தில் படம் வெற்றி பட்டியலில் இடம் பெற்றுள்ளது
ஓம் சிவா பிரகாஷ் சன்டை பயிற்சி அமைத்திருக்கிறார்.
ஐயப்பன் ஆர்ட் டைரக்டராக, பணிபுரிந்து இருக்கிறார். அருமையாக இருக்கிறது.
காஸ்ட்யூம் டிசைனராக பிரவீன் ராஜ், மணிச்சந்திராவின் நடன பயிற்சி சூப்பர்!!
மக்கள் தொடர்பாளர் ரேகா .
மொத்தத்தில் முதல் பாதி காமெடியாகவும் இரண்டாம் பாதி ஃபீல் குட்படமாகவும் வந்திருக்கிறது. வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் ஹாப்பி ராஜ்🌷
