கதை – கருப்பொருள்
தெய்வீக சக்திக்கும் தீய சக்திக்கும் இடையிலான போராட்டமே இப்படத்தின் பிரதானக் கதைப்பின்னணி.
நாயகி நயன்தாரா சென்னையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருக்கு இரவில் அடிக்கடி மைலாஞ்சி என்ற ஊர் குறித்த சித்திரங்களும், அமானுஷ்யமான விஷயங்களும் கனவுகளாகத் தோன்றுகின்றன.
இதற்கிடையில், நரபலி கொடுக்கும் கும்பலைப் பிடித்து மேலதிகாரியிடம் பாராட்டும் பதவி உயர்வும் பெறுகிறார் நயன்தாரா.
அதே நேரத்தில், மற்றொரு பெண் காவலருக்கு மைலாஞ்சி என்ற ஊருக்குப் பணியிட மாற்றம் கிடைக்கிறது. தனக்கும் மைலாஞ்சிக்கும் என்ன தொடர்பு என்ற ஆர்வத்தில், அந்த ஊருக்குத் தானே செல்வதாகக் கிளம்புகிறார் நாயகி.
அங்கு சென்ற பிறகுதான், முற்காலத்தில் மைலாஞ்சி ஊருக்கும் தனக்கும் இருக்கும் தொடர்பை அறிந்துகொள்கிறார்.
இதற்கிடையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் தீய சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.
அந்தத் தீய சக்திகளின் கொட்டத்தை மூக்குத்தி அம்மனாக நயன்தாராவும், மற்ற அம்மன்களாக குஷ்புவும் சினேகாவும் இணைந்து அடக்கினார்களா, இல்லையா? என்பதே படத்தின் கதை களம்.
நடிகர், நடிகைகளின் நடிப்பு
நயன்தாரா
நயன்தாரா அம்மன் மற்றும் காவல்துறை அதிகாரி என இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார். இரண்டுமே அசத்தலாக இருக்கின்றன.
அதிலும், அம்மன் வேடம் ஓம் சக்தியாக அவருக்கு மிகப் பிரமாதமாகப் பொருந்தியிருக்கிறது.
இரவில் வரும் அமானுஷ்யக் கனவுகளைக் கண்டு பயப்படுவது, தனக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை உணராமல் இருப்பது, மைலாஞ்சி என்ற பெயரை எல்லோரும் சொல்லச் சொல்ல அந்த ஊருக்குச் செல்ல ஆசைப்படுவது எனத் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் அம்மனாக அவதாரம் எடுத்து வில்லன்களைத் துவம்சம் செய்வது எனப் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார் நயன்தாரா.
மூக்குத்தி அம்மனாக வரும் நயன்தாரா, மொத்தத் திரைப்படத்தையும் தனது தோளில் சுமக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் மூக்குத்தி அம்மனாக அவர் வரும் காட்சிகள் அனைத்தும் பிளாஸ்ட்!
ரெஜினா கசாண்ட்ரா
வில்லியாகக் களமிறங்கி அனைவரையும் மிரள வைத்துவிட்டார்.
இவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் வேற லெவல். அதிலும் அவர் காட்டிய ஆட்டிட்யூட் செம!
அம்மனுக்கு இணையான வில்லி என்றால் அது இவர்தான் என்று சொல்லும் வகையில் கச்சிதமாக அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார்.
பைரா என்ற எதிர்மறைக் கதாபாத்திரம் படத்திற்குப் மிகப்பெரிய பலம்.
2000 வருடங்களுக்குப் பிறகு வெளியே வரும் சாத்தான் கும்பலின் தலைவியாக மிரட்டியிருக்கிறார்.
ஸ்டைலான நடிப்பு, கொடூரமான பார்வை, தன் கணவர் தன்னை விட்டுப் போய்விட்டார் என்ற கோபம், கொதிப்பு, அம்மன்களை எதிர்க்கும் தைரியம், துணிச்சல், உலகத்தையே ஆள வேண்டும் என்ற கர்வம் என அனைத்தும் ரெஜினாவுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன.
ரெஜினாவைத் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
துனியா விஜய்
முக்கிய எதிரியாகக் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டிவிட்டார்.
ஊர்வசி
மாலா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவின் அம்மாவாகச் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார்.
யோகி பாபு
நகைச்சுவையில் ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். மைலாஞ்சி ஊரின் பண்ணையாராக வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.
இடைவேளைக்குப் பிறகு திருமண வீட்டில் நடக்கும் கலகலப்பு வேற லெவல்!
மற்ற நடிகர், நடிகைகள்
- மைனா நந்தினி – முக்கியமான கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- சிங்கம்புலி – கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- அபிநயா – முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இனியா – சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- சினேகா – சிறப்புத் தோற்றம்.
- குஷ்பு – சிறப்புத் தோற்றம்.
மேலும் பல நடிகர், நடிகைகளும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு
இயக்கம் – சுந்தர்.சி
கதை மற்றும் இயக்கம்: சுந்தர்.சி
திரைக்கதை மற்றும் வசனம்: வெங்கட் ராகவன்.
ஹாலிவுட் பாணியில் இப்படத்தைப் பிரம்மாண்டமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
மொத்தமாகச் சுமார் 800 பேரின் உழைப்பு இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
VFX காட்சிகளில் அம்மனின் தெய்வீகத் தோற்றம், மகாசக்தியின் வெளிப்பாடு, அமானுஷ்ய சக்திகளின் உருவாக்கம், தீய சக்திகளுக்கும் அம்மனுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான புராண உலகக் காட்சிகள் என அனைத்தையும் திறம்பட உருவாக்கி வியக்கத்தக்க படைப்பாகக் கொடுத்திருக்கிறார்.
தெய்வீக நம்பிக்கை, தீய சக்திகளுக்கு எதிரான போராட்டம், நகைச்சுவை, உணர்ச்சிகரமான சம்பவங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
மைலாஞ்சி கிராமத்தின் அழகையும், CGI மற்றும் VFX காட்சிகளையும் ஒன்றிணைத்து, தரமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார்.
இசை – ஹிப் ஹாப் தமிழா ஆதி
இவருடைய இசை தியேட்டரில் பெண்களைச் சாமியாட வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்!
குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் அம்மன் பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது.
பின்னணி இசையும் அற்புதம். தெய்வீக உணர்வுகளையும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளையும் தனது இசையின் மூலம் மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பு – ஃபென்னி ஆலிவர்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. பேண்டஸி உலகத்தையும் இன்றைய நவீன உலகத்தையும் அழகாக இணைத்துச் செதுக்கியிருக்கிறார்.
கலை இயக்கம் – குரு ராஜ்
இவரது கலை இயக்கத்தைப் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம்!
அம்மன் சிலை வடிவமைப்பு, சாத்தான்களின் உருவாக்கம், அரண்மனை அமைப்பு என அனைத்திலும் கலை இயக்குநரின் உழைப்பு மிளிர்கிறது.
VFX மேற்பார்வை – ஸ்ரீரெங்கராஜ்
VFX மேற்பார்வைப் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இவரது குழுவினரின் கடுமையான உழைப்பு திரையில் நன்றாகத் தெரிகிறது.
சண்டைப் பயிற்சி – ராஜசேகர்.கே
இவருடைய சண்டைப் பயிற்சி படத்திற்குப் மிகப்பெரிய பலம்.
கிளைமாக்ஸ் காட்சி, நயன்தாரா போடும் சண்டை, வில்லன்கள் போடும் சண்டை என அனைத்துமே அனல் பறக்கின்றன.
மேலும், ஒப்பனையாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு உழைத்திருக்கிறார்கள்.
தயாரிப்பு மற்றும் வெளியீடு
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சக்திவேல் பிலிம்ஸ் சார்பில் இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டுள்ளது.
இறுதித் தீர்ப்பு
‘மூக்குத்தி அம்மன் 2’ பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடிக்கும். மிகப்பெரிய வெற்றிப் பட்டியலில் இந்தப் படம் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வாழ்த்துகள்!
கிளாசிக் சினிமா! 🙏
மக்கள் தொடர்பாளர்கள்: சதீஷ் & சிவா AIM
மதிப்பீடு: 4-/5
