நல்ல கதை, தெளிவான திரைக்கதை, கண்களுக்கு குளுமையான ஒளிப்பதிவு, மிரட்டலான பின்னணி இசை, சரியான நடிகர்கள் தேர்வு, கடுமையாக உழைத்திருக்கும் தொழில்நுட்பக் குழு என எல்லா அம்சங்களும் பொருந்தி ஒரு வெற்றிகரமான தொடராக வெளிவந்திருக்கிறது “முத்து என்கிற காட்டான்”
மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் வெப் சீரிஸ் தான் முத்து என்கிற காட்டான்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என எல்லா மொழியிலும் கலக்கி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெப் தொடரில் நடித்திருப்பது ஆச்சரியமான இனிமை கலந்த விஷயம் !!!இன்றைய கால நுடபத்தின்
பலம் அறிந்து தன்னை தயார் படுத்திக் கொண்டிருப்பது வரவேற்பு குறியது!
இந்த வெப் தொடரை காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த இயக்குநரான மணிகண்டன் தான் இயக்கி உள்ளார்.
இதனால் தான் என்ன வோ இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை பார்த்த பிறகு அந்த எதிர்பார்ப்பு சற்றும் குறையவில்லை.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆரம்பக் காட்சியிலேயே தலை துண்டிக்கப்பட்டு ஒரு பாறை மீது இருப்பது தொடர்பார்ப்பவர்களை அதிர்ச்சி குள்ளாக்கியது.
ஆனால் அவர் யார் என்ற கேள்வி எழும் பொழுது அவர் செய்யும் ஒவ்வொரு செயலும், கைதட்டலும் சபாஷ் போட வைக்கிறது. குறிப்பாக ஓட்டலில் சாப்பிடும்பொழுது வயதான ஒரு முதியவரை அந்த ஓட்டல் அதிபர் நடத்தும் விதம் கண்டு ,அந்த ஓட்டலையே 10 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி அந்த நபரை முதலாளிஆக்கி
அழகு பார்க்கும் இடம் கைதட்டல் ரசிக்கிறார்கள்.
பாலாஜி சக்திவேல் மற்றும் இளைஞர்கள், ரெக்கார்ட் டான்ஸ் ஆடும் நடிகைகளின் உடைய மாற்றுவதை பார்க்க வந்திருக்கும் பொழுது, அதை தட்டி கேட்டு அந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார்.
புழுக்கை வாங்கும் வியாபாரியாக வந்து ஏழை மக்களுக்கு குடம், அண்டா குண்டா ,கொடுக்கும் பொழுது ஏழைகளின் நாயகனாக காட்சி தருகிறார் .
இவர் யார்? இவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? என்ற கோணத்தில் விரியும் திரை கதையில், மக்கள் செல்வன்அம்சமாக பொருந்தி இருக்கிறார். இயல்பான நடிப்பில் சபாஷ் வாங்குகிறார்.
முத்து -. அவன் யார் என்று விசாரிக்க போனால் மலையாள படமான சார்லி போல ஒவ்வொரு ஆட்களும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். கடைசி வரை அவன் யார் என முழுக்க சொல்லாமல், அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு பாதியை மட்டுமே சொல்லி முடிவுக்கு வருகிறது காட்டான். சீரிஸ் முழுக்க நெறய நெகிழ வைக்கும் தருணங்கள் உண்டு. கடைசி 2 எபிசோடில் ஒரு கதை சொல்லி காரணம் சொல்லி முடிக்கிறார்கள். விஜய் சேதுபதி தவிர்த்து இதுல நம்மை கவர்வது 2 எபிசோட் வந்தாலும் கலைவாணி பாஸ்கர், பின்னர் ரிக்ஷா ஜேக்கப்ஸ் இருவருமே சிறப்பாக செய்து இருக்காங்க. .
காட்டான் என்பது மர்மம், வன்முறை மற்றும் உளவியல் கூறுகளை ஒரே நேரத்தில் கோர்த்து, நான் லீனியர் கதை சொல்லல் முறையில் வழங்கப்படும் ஒரு டார்க் கிராமத்து த்ரில்லர் சீரிஸ். விஜய்சேதுபதி இந்தத் தொடரை தன் தனித்துவமான ஸ்கிரீன் பிரசன்ஸால் தாங்கி நிறுத்துகிறார். அவரது தோற்றமே இந்தத் தொடரின் மிகப்பெரிய பலம். , அதிகார உணர்வை கொண்டு வருகிறார், கதைக்கு வேறொரு பரிமாணத்தை சேர்க்கிறார்.
வி.ஜே பார்வதி,
வடிவேல் முருகனின் மனைவியாக மாமியாரின் கொட்டத்தை அடக்கும் வாயாடி மருமகளாக அம்சமாக வந்த போகிறார். கணவனுடன் உடல் செய்யும் காட்சி சிறப்பு.
சிங்கம்புலி,
தங்க முடி என்ற போலீஸில் வேடத்தில் , கலகலப்பையும் தருகிறார்.
மிலிந்த் சோமன்,
வில்லன் வேடத்தில் மிரட்டி இருக்கிறார்
அபி நட்சத்திரா,
சிட்டுவாக சிறகடித்து இருக்கிறார் சிறப்பான நடிப்பு
முத்துக்குமார்
சித்தார்த்தன் என்னும் காவல்துறை அதிகாரியாக கலகலப்பாகவும் காமெடியாகவும் கருத்தாகவும் நடித்திருக்கிறார்.
மற்றும் ரிஷா ரெகார்ட் டான்ஸ் நடனக்காரியாக நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
மொத்தம் 10 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அனைவரும் காணலாம்
நல்ல கான்செப்ட், கரெக்டான கேஸ்டிங் உடன் வந்திருக்கிற கிரைம் சீரிஸ் இது. அனைவரின் நடிப்பும் சூப்பர், முக்கியமாக விஜய் சேதுபதி, முத்துக்குமார் மற்றும் வடிவேல் கோடாங்கி ஆகியோர் தனித்து தெரிகிறார்கள். பின்னணி இசை படத்திற்கு உறுதுணையாக உள்ளது. புலனாய்வு கதைக்கு தேவையான எல்லா அம்சங்களையும் ஒவ்வொரு எபிசோடின் ட்விஸ்டும் இதில்
நிறைய இருக்கிறது குறைத்து, விறுவிறுப்பான காட்சிகள்
தொடர்ந்து வெற்றி க்கு பயணித்துள்ளது
சுதேவ் நாயர் திடமான துணை நடிப்பை வழங்கி, முக்கியமான மோதல் காட்சிகளில் கதையை வலுப்படுத்துகிறார். தொடரின் இருண்ட மற்றும் கரடுமுரடான தொனி, வலுவான சூழல் உணர்வு மற்றும் காட்சி வடிவமைப்பு இவை அனைத்தும் பாராட்டத்தக்கவை. மர்மங்களும் திருப்பங்களும் உங்களை ஈர்த்துக்கொண்டே போகும், இருந்தாலும் சில பகுதிகள் சற்று குழப்பமாக தோன்றலாம். ஒட்டுமொத்தமாக, காட்டான் நம்பகமாக நிற்கும் ஒரு தரமான த்ரில்லர் தான். ராஜேஷ் முருகனின் இசை தொடருக்கு பெரிய பலம்.
நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்ஒளிப்பதிவு அருமை.
மணிகண்டன் தந்தை வாழ்க்கையில் நடந்த கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர் மணிகண்டனும் அஜித்குமாரும். பாராட்டுக்கள்
மொத்தத்தில் இந்த வெப் தொடர் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் உடன் கிளாசிக் சினிமா🌷
