காக்கி சர்க்கஸ் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள காக்கி சர்க்கஸ்” ஒரு நகைச்சுவை, கலந்த விறுவிறுப்பான அடுத்து என்ன? என்ற அம்சங்களுடன்! உருவாகி இருக்கிறது. வெற்றி தொடரில் இதுவும் இடம் பிடிக்கும்.

கதை களம்

கண்ணகி ஆண்டாள் புரம், கிளை சிறைச்சாலையில்
சிறை கண்காணிப்பாளராக இருப்பவர் முனீஸ்காந்த்(அன்பு செழியன்)
இவர். சிறைச்சாலைக்கு வரும் கைதிகளிடம் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுத்திறனை வளர்க்கிறார்.
அவருக்கு கீழ் பணிபுரியும் (அர்ஜீன்)
கைதிகளுக்கு ,அடி உதைதான் பாடம் கொடுக்கும் என்று நம்புபவர்.
அமைதியான அந்த கடற்கரை நகரத்தில் விசித்திரமான குற்றச் சம்பவம்,
நடக்கிறது கண்ணகி சிலையை வைத்து. அதன் முன் உண்டியலை வைத்து ,வருடம் தோறும் அதில் சேரும் பணத்தை எடுத்து கண்ணகி கோயில் விழாவுக்கு கொடுப்பது அந்த சிறைச்சாலையில் வழக்கம்.
ஆனால் திடீரென அந்த உண்டியலில் இருந்த பணம் காணாமல் போகிறது.
அந்த சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த சில்லறை திருடர்கள் யார்? என்று வலை வீசி தேடி ,போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான்.அவன்யார்? சாதாரண ஊர்மக்களான ,ரமா, சிந்து ,யூடியூப் கண்டெண்ட்க்காக
சிறைச்சாலையில் காணாமல் போன உண்டியல் பணத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுகிறார்கள்.
இந்த வலைக்குள், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும்
இவர்கள் நிலை என்ன?
கைதிகள் —
குழந்தை, மணி இவர்கள் இருவரில் திருடியது யார்? என சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும் இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.
என்பதை சிலிண்டர், திருட்டு கள்வனின் காதல், இப்படி விறுவிறுப்பாக நகைச்சுவையாக சொல்லி இருக்கிறது இந்த வெப் தொடர்.

நடிகர்& நடிகைகள்

முனிஷ்காந்த்,
அன்பு செழியன் என்னும் கதாபாத்திரத்தில் புத்தகம் எழுதி, புத்தகம் கைதிகள் படித்தால் திருந்துவார்கள் என்று, இந்த தொடர் முழுக்க புத்தகம் கையாக வந்து எல்லோருக்கும் புத்தகம் படிக்க சொல்லி அறிவுரை வழங்கும் ஒரு வித்தியாசமான நடிப்பை காண்பித்து மனதில் இடம் பிடிக்கிறார்.
ஆனால் நாயகன் குற்றவாளியை நெருங்கும் போதெல்லாம் முனீஸ் காந்த் “அவன் நல்லவன் என்று சொல்லும் பொழுது சிறிது சலிப்பும் ஏற்படுகிறது.

சுபாஷ் செல்வம்,
நாயகன் ,அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது காதலி ஸ்ரீதேவியை பஸ்ஸில் காதலிக்கும் பொழுது , உண்டியல் பணத்தை திருடியது இவன் தான்” என்று கண்டுபிடித்து அவனை பின்தொடர்ந்து அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க நினைக்கும் பொழுது ,முனீஸ் காந்த் குறுக்கே வந்து அவன் நல்லவன் “என்று சொல்ல எரிச்சல் அடைவதும் ,என சுபாஷ் செல்வம் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
இயல்பாக நடித்திருக்கிறார்.

ராஜேஷ் மாதவன்,
மனோஜ், என்ற கதாபாத்திரத்தில் தன் காதலிக்காக திருட ஆரம்பித்து, பின் ஈகோவுக்காக திருட நினைக்கும் அந்த கள்வனின் கதாபாத்திரம். உறுதியான பார்வை, சாய்ந்த நடை, என, தொடர் முழுக்க இவரின் ராஜாங்கம் ஓங்கி ஒலிக்கிறது.

கவுதமி நாயர்,
சிந்து என்ற கதாபாத்திரத்தில் யூடியூபராக நகைச்சுவை கலந்து நடித்திருக்கிறார்.

வின்சு ரேச்,
ஸ்ரீதேவி, என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் காதல் காட்சிகள் ரசிக்க வைத்தது . மற்றும் ,
சவித்திரி, அம்ருதா,
ஆகியோர் நடிப்பு நன்றாக இருந்தது.
அப்துல் லீ, வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்மருதுபாண்டியன்,
அந்த ஏரியா போலீஸ் அதிகாரியாக சில காட்சிகள் வந்தாலும், மனைவிசேலை எடுக்கும் பொழுது, ஸ்டேஷனுக்கு வருபவர்களிடம் உனக்கு “என்ன கலர் பிடித்திருக்கிறது” என்று கேட்க அந்த காட்சிகளில் கலகலப்பு .மற்றும் ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா சித்திரசேனன்
ஆகியோர் நடிப்பும் நன்றாக இருக்கிறது வித்தியாசமாக இருந்தது.
மலையாளத்தில் உருவான போர்ஷனை
தமிழில் விஜய் குமார் எழுதி இருக்கிறார்.

இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார்.
தொடர் முழுக்க நகைச்சுவையும் விறுவிறுப்பையும்
தந்து, நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பு தருகிறது— ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்லி இருக்கிறார்,
இயக்குனர்.
இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின் இதயம் ,என்பதை இயக்குனர் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்

நீரஜ் நவியின்,
ஒளிப்பதிவு அந்த கடற்கரை கிராமத்தை ,மிக அழகாக காட்டி இருக்கிறது.

அர்ஜுன் பாபுவின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.

உதவி எழுத்தராக, பணி புரிந்திருக்கும்
அசோக் சந்திரமோகன், சிறப்பாக எழுதி இருக்கிறார்.

அருண்ராஜ் எழுதிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
பின்னனி இசை, ட்ரெய்லர் மியூசிக் விபின்பாஸ்கர்,
கதைக்கு உயிரோட்டமாக இருக்கிறது இசை.

Production Designer: Hamza Vallithode
Sound Design: Sync Cinema
Sound Mix: Aravind Menon
DI: B2H
Colorist: Sivasankar.V
VFX: Vishwaa.Fx
Animation: Carmond Infinity Creative Studio
Action: Spear Sathish
Choreography: Sachin Reeko
Original Story: Abhiram S
Additional Dialogues: Vijayakumar
என இந்த வெற்றி தொடருக்காக, பலரும் உழைத்து இருக்கிறார்கள். இந்த உழைப்புக் கேற்ற “வெற்றி நிச்சயம் “கிடைக்கும்.
சிலிண்டர் திருட்டு ,
சிறையில் புத்தகம், நல்ல ஐடியா ,
கண்ணகி கோயில் சென்டிமென்ட்,
கேரள தமிழ் பார்டர் வைத்தது ,சிறப்பாக இருக்கிறது ,
கள்வனின்காதலியுன் அந்த காதல் காட்சிகள்
ரசிக்க வைக்கிறது.
வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் (‘Once Upon a Time in Kayamkulam’) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது

தமிழ் மற்றும் மலையாள ZEE5
காணலாம் நிச்சயமாக ஒரு நல்ல தொடர் பார்த்த திருப்தி அடைவீர்கள்

மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் &சிவா (AIM)