வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’.
இந்தப் படம் ஒரு குடும்ப செண்டிமெண்டாக சமுதாய நன்மைக்காக போராடும் ஒருவன் குடும்பம் ,எப்படி எந்த நிலைக்கு தள்ளப்படுகிறது என்பதை ஒரு விழிப்புணர்வு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கதை களம்
சேலம் மாவட்டம் பொன் வயல் கிராமத்தில் சாலை வசதி இல்லை .
குடி நீர் வசதி இல்லை. அங்கு வாழும் பெண்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.
மக்கள் தொடர்பு கட்சியை சேர்ந்த எம். எல். ஏ ஒய். ஜி மகேந்திரனிடம் பெரியவர் ஒருவர் முறையிட அவர் தனது மச்சான் மைம் கோபி (இன்பாவிடம்)
மக்களுக்கு நன்மை செய்து தரச் சொல்கிறார். ஆனால் இன்பா ஃபேக்டரி வைத்துக் கொண்டு பெண்களுக்கு வட்டிக்கு கொடுத்து வட்டி கட்ட முடியாதவர்களை தன்னுடைய இச்சைக்கு ஆளாக்கி துன்புறுத்துகிறார். அதே ஊரில் வாழும் செல்வராகவன் நாயகி, செல்வியை மணந்த பிறகு அவர் யோசனைப்படி செல்வி தாபா என்ற ஓட்டல் கடை நடத்துகிறார். அங்கு குடிக்க வந்த மைம் கோபி அவரது அடியாட்கள் பிரச்சனை ஏற்பட செல்வராகவனை , அடித்து உதைக்கிறார்கள். அதன்பிறகு அமுதா என்ற குழந்தை விஷ பாம்பு கடித்து விட்டது. என்று இறந்து கிடக்க, செல்வராகன் பதறி போகிறார் .
அடுத்து மைம் கோபி பேக்ட்டரியில் வேலை செய்த வள்ளி இறந்து போக, செல்வராஜன் குழப்பத்தில் ஆள்கிறார். அதன்பிறகு பெரிய இடி ஒன்று விழுகிறது .
செல்வராகவன். மனைவி தூக்கிட்டு சாகிறார் .அதற்கு காரணம் யார் ?
என்று தெரிந்த போது, செல்வராகவன் எப்படி மனிதன் தெய்வமாகி மிருகங்களை வேட்டையாடினார்!! என்பதுதான் இந்த படத்தின் கதை!
இந்த கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து படமாக்கி இருக்கிறார்கள்.
உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.
சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, இருக்கிறார்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்து
ஒரு முழுமையான குடும்பக் கதையாக உருவாகியிருக்கிறார் கள் அவ்வளவு இயல்பாக இருந்தது குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்த படம் நிச்சயம் ஒரு
மாற்றத்தை ஏற்படுத்தும். என்று எதிர்பார்க்கலாம்.
நடிகர் & நடிகைகள்
இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக, ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒரு கிராமத்து வெள்ளந்தியான மனிதன் எப்படி இருப்பாரோ !!அப்படி அச்சு அசலாக பொருந்தி இருக்கிறார். மனைவி செல்விமீது அளவற்ற பாசம். வைத்திருப்பது குழந்தை அமுதா மீது அன்பை பொழிவதும். ஹோட்டல் நடத்தும் பொழுது ஒரு முதலாளியாக வேலை வாங்குவதும். மனைவி இறந்த பிறகு கதறி அழுது துடிப்பதும், அதற்கு காரணமானவர்களை வெறிகொண்டு அடித்த உதைத்து சண்டையிடுவது ,என படம் முழுக்க அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் செல்வராகவன்.. சில காட்சிகளில் எமோஷனலாகவும், சில காட்சிகளில் என்ன செய்வது என்று தவித்தும் இருக்கிறார். ஆனால், அவர் செய்யும் கொலைகள் படத்தின் உச்சமான காட்சி!!
குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார்.
செல்வி ,என்ற கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து பொறுப்பான மனைவியாக கணவனை நேசிக்கும் பண்புள்ள ஒரு குணவதியாக, நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு இயல்பாகவும் அழகாகவும் இருந்தது. கௌசல்யா ,மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் இருவரையும் உறவுமுறை வைத்து சித்தி, சித்தப்பா, என்று கிராமத்து மனிதர்கள் எப்படி அழைப்பார்களோ? அப்படி படம் முழுக்க மனதில் நிறைந்து இருக்கிறார்.
தயரிப்பாளர் சதீஷ்
குமாரசாமி, என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் செல்வராகவன் உற்ற தோழனாக மாமாவாக அருமையாக நடித்திருக்கிறார். படம் முழுக்க இவர் வரும் காட்சிகளில் மனதுக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறார். கிராமத்து உறவுகள் எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்து. ஒரு துன்பம் வரும் போது தோள் கொடுத்து, நின்று உதவுவார்களோ? அப்படி நடித்திருக்கிறார் குணச்சித்திர நடிகராக இனி நிறைய படங்களில் அவரை பார்க்கலாம்.
நடிகை கெளசல்யா
மரகதம் என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார். நாயகியின் மரணத்துக்கு நான் தான் காரணம் .என்று கதறி அழும் பொழுது
மைம் கோபி இவரிடம் தவறாக நடந்து கொள்ளும் பொழுது சீறிப்பாய்ந்து சிங்க பெண்ணாக , சிறப்பாக நடித்தி ருக்கிறார்.
இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்
முக்கியமான கதாபாத்திரத்தில் , மைம் கோபி,
வில்லனாக மிரட்டி இருக்கிறார் .எம். எல். ஏ மச்சானாக, பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களை இச்சைக்கு அழைக்கும் கிராமத்து மனிதராக மிரட்டி இருக்கிறார். அவருடைய பார்வையின் உச்சம். பேச்சு, அவருடைய தோனி எல்லாமே இந்த படத்தில் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது.
ஒய்.ஜி.மகேந்திரன்
அந்த ஊரின் எம்எல்ஏவாக நல்ல அரசியல்வாதியாக வந்து செல்வராகவனுக்கு உதவி செய்யும் இடங்களில், மனதில் ஜம் என்று அமர்ந்து கொள்கிறார்.மற்றும்பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன், அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது, குறிப்பாக “தங்க ரத்தினமே” மற்றும் “கலங்காதே ராசா” போன்ற பாடல்கள் குடும்ப உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது. , பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்ப பாசத்தை நன்கு பிரதிபலிக்கிறது.
கே.ரவி வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ரோடு வசதிகள் இல்லாத, கரடுமுரடான பாதையையும், இயற்கை வளம் நிறைந்த சோலையாக காட்டி இருக்கிறார். நீர்நிலைகள், மற்றும் மைம்கோபியின் பேக்டரி, செல்வராகவனின் வீடு, எல்லா இடங்களிலும், இரவு நேரங்களில் நிலவை காட்டியது என்று கேமரா மேன் அசத்தி இருக்கிறார்.
தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இரண்டு மணி நேரம் படத்தை மிக சிறப்பாக செதுக்கியிருக்கிறார்.
பாக்யராஜ் வெள்ளையன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
ஆரம்ப காட்சியில் வரும் கல்யாண பாடலுக்கு ,மற்றும் காவல் நிலையம்,மைம் கோபியின் பேக்டரி, செல்வி தாபா, என்னும் ஓட்டல் சிறப்பாக அரங்க அமைப்பு செய்து கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தை
பல தரமான மற்றும் வெற்றி திரைப்படங்களை வெளியிட்டு வரும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
அதுவே இப்படத்திற்கு வெற்றி!!
மக்கள் தொடர்பாளர், ரேகா அவர்கள்
படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த படத்தைப் பார்க்க ஒரு காரணம் கேட்டால், நான் உடனடியாக செல்வராகவன் என்று சொல்வேன். அவருக்காக மட்டுமே நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். மைம்கோபி, வாழ்வில் இப்படி ஒரு வில்லனை நாம் பார்த்தது அதிர்ச்சி செய்ய வேண்டியதை அவர் கச்சிதமாகச் செய்கிறார். உண்மையில், படத்தில் உள்ள அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
மைம் கோபி வரும் முதல் காட்சியிலிருந்தே நீங்கள் அவரை வெறுக்கத் தொடங்கிவிடுவீர்கள். நாயகிக்கு நடக்கும் மிகவும் பயங்கரமான காட்சிகளில் ஒன்று வருகிறது. அதுவும்
மிகவும் அதிர்ச்சி
நடிப்பைப் பொறுத்தவரை, குஷி ரவி. அவரது முகபாவனைகள் மிகவும் ரசிக்க வைத்தது அவர் முகத்தில் தோன்றும் ஒரு சிறு புன்னகை கூட நமக்குள் பல உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதுதான் வெற்றி. அவர் மீது பரிதாபம் கொள்ளாமல் இருக்க முடியாது. அது அவரது கணவர் செல்வராகவன் குணாதிசயத்தின் ஒரு பகுதி போல் தெரிகிறது. மைம் அச்சுறுத்தலை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்று பாருங்கள். அவரால் திருப்பித் தாக்க இயலாது, ஆனாலும் அவர் அதைச் செய்கிறார். மறுபுறம், மரகதம் மிகவும் வசீகரமானவர். அவரது முகபாவனைகளைப் பார்ப்பது ஒரு விருந்தாக இருந்தது.
நிகழ்வுகளின் ஓட்டம் காரணமாக, இந்தப் படம் அதன் பன்முகத்தன்மை வாய்ந்த திரைக்கதைக்காகக் கருதப்படுகிறது.
இந்த வருடத்தின் சிறந்த படங்கள் இந்த படம் ஒன்றாக இருக்கும்.
இயக்குனர்
டென்னிஸ் மஞ்சுநாத்
சிறந்த கதை, திரைக்கதை, வசனம் எழுதி படம் பார்க்கும் இரண்டு மணி நேரமும் நம்மை கட்டி போட்டு விடுகிறார் .
அன்பான காதல் மனைவி, மனைவியின் மீது உயிரே வைத்திருக்கும் கணவர், அவருடைய கூட்டுக்குள் நல்ல பாம்பாக நுழையும் மைம் கோபி, இவர்கள் வாழ்க்கை எப்படி சின்ன பிண்ணாமகிறது என்பதை கதையாக பார்க்கும் பொழுதே பதறுகிறது மனசு இது நிஜமாக நடந்திருக்கும் போது மக்கள் பட்ட துன்பங்கள் வலிகள், வேதனைகள், பெண்கள் வட்டிக்கு வாங்கிவிட்டு பட்ட கஷ்டங்கள் கண் முன் தெரிகிறது. ஒரு நிஜமான படத்தை நம் கண் முன் காட்டிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
இது போன்ற உண்மைக்கு நெருக்கமான படங்கள் தமிழ் சினிமாவில் வரவேண்டும். சமுதாய மாற்றம் பெற வேண்டும். என்பது கிளாசிக் சினிமாவின் விருப்பமும் எண்ணங்களும். படம் வெற்றி அடைய வாழ்த்துக்களும்🌷
