TN 2026(தங்க நட்சத்திரம்) திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

தயாரிப்பாளர் கண்ணன் ரவி (கண்ணன் ரவி குரூப்ஸ்)

கதைக்களம்

ஒரு சாதாரண மனிதன் → பெரிய நடிகராக உயர்ந்து → பின்னர் அரசியலுக்கு வர முயற்சிப்பது தான் கதையின் மையம்.
இந்த பயணத்தில் வரும் புகழ், அதிகாரம், அரசியல் ஆசை ஆகியவற்றை சாடலாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
👍 படத்தின் பலம்
🔥 வித்தியாசமான கான்செப்ட்
சினிமா + அரசியல் கலவை மிகவும் ரிலேட்டபிள்
தமிழ்நாட்டின் நிஜ அரசியல்
கண் முன் கொண்டு வந்துள்ளது 👌
சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கண்முன் நிறுத்துகிறது இந்த படம்.
200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வரும் ஒரு நடிகர் ,அவரை சுற்றி நடக்கும், திரை மறை ஒரு ரகசியங்கள் என, படம் முழுக்க விறுவிறுப்பாக பயணிக்கிறது.
குல்கந்த் குமார்(நட்ராஜ்) வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து ஒரு பெரிய நடிகராக விரும்புகிறார். ஆனால், அவருக்கு துணையாக யாருமே இல்லாமல் தடுமாற, அவரின் முதல் படம் பிடித்துபோய், தம்பி ராமையா அவருக்கு ஆதரவாக பல உதவிகளை செய்கிறார்.
அடுத்த எம் ஜி ஆர்
நீ தான், என்று நடராஜை தட்டி கொடுத்து வளர்க்கிறார்.
நட்ராஜ் வளர்ச்சிகாக ,தன் சொத்தை விற்று முன்னேற்ற, அவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆகிறார்.
ஆனால் நட்டியின் கனவு நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். என்பதில் கவனம் செல்கிறது .

அதை தொடர்ந்து நட்ராஜ் நன்றாக வளர்ந்த பிறகு, தன் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்ற், கவர்மெண்ட் இவர் அரசியலுக்கு வருவாரோ ?என நினைத்து பல நெருக்கடிகளை தருகிறது. குல்கந்த் குமார் நட்ராஜ் புதிய கட்சி ஒன்றை தொடங்கும் போது
எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.
2026-ல் முதலமைச்சர் கனவு, அது நடந்ததா இல்லையா ? என்பதே மீதிக்கதை.

நடிகர் & நடிகைகள்

நட்டி நட்ராஜ் ,
சதுரங்க வேட்டை படத்தில் சிறப்பாக நடித்தது போல இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
படத்தில் அவரின் தோற்றம் சால்ட் & பெப்பர் தாடி,
ஸ்டைல் நடை,
உடல் மொழி,
மேலும் அவர் பேசும் வசனங்கள்
எல்லாம் ஒரு நடிகரை ஞாபகப்படுத்துகிறது.
அந்த
உச்ச நட்சத்திரத்தை கண் முன் நிறுத்தி அவரைப் போலவே நடித்து இருப்பது பாராட்டுக்குரியது.
நட்ராஜ் ,கண்டிப்பாக இந்த படம் அவருக்கு மைல் கல் தான், ஒரு நடிகரின் வளர்ச்சியையும், அவர் வளர்ந்த பிறகு எப்படி மாறுவார் என்பதையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து கலக்கியுள்ளார், அதிலும் இடைவேளையில் போலிஸ் தடுக்க அவர் இறங்கி நடந்து வரும் காட்சி எல்லாம் ரசிக்க வைக்கிறார்.

சிவலிங்கம், என்ற கதாபாத்திரத்தில் மன்றாடி யாராகவரும் தம்பி ராமையா, படம் முழுக்க கலக்குகிறார்.
தம்பி ராமையா, நட்ராஜுக்கு காட்பாதராக வந்து, கடைசியில் அவரையே தலைவர் என, அழைப்பது நாம் கோடம்பாகத்தில் நாம் பார்த்த பல முகங்களை நியாபகப்படுத்துகிறார்.
இந்தப் படத்தின் ப்ளஸ் என்றால் சந்தேகமே இல்லாமல் கதையையும், வசனத்தையும் சொல்லலாம். தான் ஒரு கைதேர்ந்த கதாசிரியர் என்பதை தம்பி ராமையா இதில் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அவர் ஏற்கனவே காமெடியில் பின்னி பெடலெடுப்பவர். அவருக்கு காமெடி காட்சிகள் எழுதுவதை பற்றி சொல்லியா தர வேண்டும். கரும்பு தின்ன கூலியா? என்பது போல் ஒவ்வொரு வசனத்திலும் பட்டாசை பற்ற வைக்கிறார்.
எம் எஸ் பாஸ்கர் இளவரசு இவர்கள் மூவரும் செய்ய உள்ள ஊட்டி கலகலப்புக்கு கேரண்டி.
மற்றும் சாந்தினி, பழைய நடிகைகளை ஞாபகப்படுத்துகிறார்.
யாஷிகா, ரெடின் கிங்ஸ்லீ. கல கலப்பு
,மற்றும் தலைவாசல் விஜய், சித்ரா லட்சுமணன் ,
இயக்குனராக ஜாவா சுந்தரேசன்,
மாமியாக விஜய் சந்திரசேகர் ,
இந்திரஜா ரோபோ சங்கர் ,
தேவி மகேஷ் ,
முத்துக்குமரன், லொள்ளு சபா மாறன், என நடித்திருக்கும் அனைவரும் படத்தின் வெற்றிக்கும், கலகலப்புக்கும், உதவியிருக்கிறார்கள்.

தர்புகா சிவாவின் பின்னணி இசை-& பாடல் கள் சூப்பர்.
பாடல்களை கார்த்திக் நேதா,
மோகன் ராஜன் ,
விக்னேஷ் ராமகிருஷ்ணா, எழுதி இருக்கிறார்கள் பாடல்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது

பல காட்சிகள் சமகால நடிகர் ஒருவரை நியாபகப்படுத்தினாலும், அதை பெரிய டேமேஜ் உருத்தல் இல்லாமல் ரசிக்கும்படி எடுத்து சென்றது.பாராட்டுக்குரியது.
இப்படத்தை உமாபதி ராமையா இயக்கியுள்ளார். ஆரம்ப காட்சியில் நட்டி கட்அவுட்டுக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்வது, போன்ற காட்சிகள் மற்றும் “தங்க நட்சத்திரம்” என ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்ற வரிகள், ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றுவது போன்ற டயலாக்குகள் இடம்பெற்று
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த காட்சிகள் பலருக்கும் விஜய் அரசியல் பிரவேசத்தை நினைவூட்டுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது
மேலும், “இனி உங்களை தவிர்த்து அரசியல் செய்தி கூட வராது” போன்ற வசனங்கள்
சர்ச்சையை கிளப்ப படம் பார்த்த பிறகு அப்படி எதுவும் இல்லை என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள் யாரையும் நோகடிக்காமல், யார் மனதையும் புண்படுத்தாமல் படம் எடுத்திருப்பது சிறப்புக்குரியது. இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமையாகவும் காட்சிகளை, பரபரப்பாக கொடுத்திருக்கிறார்.
ஆரல். ஆர். தங்கம்
படத்தொகுப்பு செய்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக பரபரப்பாக செதுக்கியிருக்கிறார்.
எம். கே .ராகுல் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து
இருக்கிறார்.
அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு, பாடல் காட்சிகளுக்கு, மிக சிறப்பாக அரங்கம் அமைத்திருக்கிறார்.
சாண்டி, பிரவீன் ஜீ
நடனம் ரசிக்க வைக்கிறது.
மகேஷ் மாத்யூசன்டை பயிற்சி அனல் பறக்கிறது.
காஸ்ட்யூம் டிசைனராக, நவா
ராம்போ ராஜ் குமார்.
பணி புரிந்திருக்கிறார்.
.
படத்தின் வெற்றிக்கு உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்

Colorist: Gs Muthu
Di & Vfx: White Lotus
Vfx Supervisor: Jeyaprasath
Recordist: K Jagan
Executive Producer: Umapathy Raja
Marketing & Promotion: Kv Mothi – Dec
Publicity Design: Thandora
Label: Saregama India Limited, A RPSG Group Company
என்று பலரும் இந்த படத்தின் வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் .

மக்கள் தொடர்பாளர்கள் சதீஷ் &சிவா AIM
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில்
இந்த திரைப்படம் தேர்தல் சூழ்நிலையில் பெரிய சர்ச்சையை கிளப்பி ,நடிகர் நட்டி நட்ராஜ் ஹீரோவாக பட்டைய கிளப்பி உளள படம், அரசியல் பின்னணியில் உருவாகியிருப்பதால் மக்கள் இடம் அதிக கவனம் பெற்றுள்ளது.
அந்த வகையில் இந்த படம் பரபரப்பாக பேசப்படும் படமாக வந்துள்ளது.: ‘200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு சந்தோஷம்; அதில் எனக்கு என்ன சந்தோஷம்’, ‘மனைவியுடன் பிரச்னை என்றால் டைவர்ஸ் செய்பவன் ஆண் இல்லை. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அனுசரித்து கடைசிவரை மனைவியுடன் இருப்பவன்தான் தமிழ்நாட்டில் ஆண்’, ‘தமிழ் ஒழுங்காக பேச வரவில்லையென்றால் நீ தமிழ்நாட்டில் பெரிய ஹீரோ’, என்பன உள்ளிட்ட பல வசனங்கள் படத்துக்கு பலம். முக்கியமாக தம்பி ராமையாஅவர் எழுதிய வசனங்களை எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உள்ளிட்டோர் பேசுகையில் அது வேறு ஒரு தளத்துக்கு சென்று மேற்கொண்டு சிரிப்பை வரவழைக்கிறது. மூன்று பேர் சேர்ந்து செய்யும் சண்டையும், அதற்கு பின்னணியில் பயன்படுத்தபட்ட பாடலும் ஸ்வீட் சர்ப்ரைஸ்.
அரசியல் சாட்டை / டிராமா வாக வந்துள்ளது.
இயக்கம்: உமாபதி ராமையா
நடிப்பு: நட்ராஜ் (Natty), தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் நடிப்பு நன்றாக இருந்தது.
⭐/ தங்க நட்சத்திரம்
🎭 2. நட்ராஜ் நடிப்பு
முழு படத்தையும் தாங்கும் அளவுக்கு நல்ல performance
ஒரு நடிகரின் வளர்ச்சி & மாற்றத்தை நன்றாக காட்டியுள்ளார் �
💬 3. வசனங்கள் & சாட்டை
பல punch dialogues ரசிகர்களை கவரும்
சில இடங்களில் political satire நன்றாக வேலை செய்கிறது
இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும். வாழ்த்துக்கள் உடன் கிளாசிக் சினிமா.🌷