Written & directed by : Vignesh Shivan.
Producer: Nayanthara
Produced and Presented by S.S. Lalit Kumar
புதுமை இயக்குனர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ,
உருவாகி உள்ள வெற்றி படம் .
LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)
கதை களம்
LIK ஆப் மூலம் இன்னார்க்கு இன்னார் என்பதை கண்டு பிடிக்கும் லவ் மீட்டரை எஸ்.ஜே. சூர்யா அறிமுகப்படுத்த பிரதீப் ரங்கநாதன் – கீர்த்தி ஷெட்டி காதலை அது பிரிக்கிறது. ஆப்பை விட மனித இதயத்துக்கு வேல்யூ அதிகம் என்பதை ஹீரோ நிரூபிப்பதே படத்தின் கதை. திரைப்படத்தின் முதல் பாதி, செம ஜாலியாக இருக்கிறது.இயக்குனர்,விக்னேஷ்சிவன் 2040-ல் தமிழ்நாடு எப்படி இருக்கும்!! என்பதை காட்டிய விதம், கீர்த்தி ஷெட்டி இன்ட்ரோ, ஓபன் ஃபிரெண்ட் யோகி பாபு காமெடி, அனிருத் இசையில் தீமா பாடல் மற்றும் பின்னணி இசை என எல்லாமே சூப்பர். படம் கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இல்லாவிட்டாலும் விக்கியின் கதை சொல்லும் பாணி படத்தை ரசிக்க வைக்கிறது”
“எல்.ஐ.கே ஒரு எதிர்கால பின்னணியிலான காதல், காமெடி திரைப்படம். சுவாரசியமான கருப்பொருள் மற்றும் களத்தைக் கொண்டிருந்தாலும், அதைத் திரையில்
சொன்ன விதம்
கலகலப்பான படமாக அமைந்தது கடைசியில் எமோஷனல் காட்சிகளை உணர்ச்சிக் குவியலாக்கி இந்த ‘படத்தை வெற்றி படமாக மாற்றி விட்டார் இயக்குனர்.
தமிழ் சினிமாவில் ஒரு கலகலப்பான அறிவியல் கதையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது.
இயக்குனர்
இயக்குனர் இன்றைய இளைஞர்களுக்கு எந்த மாதிரியான படத்தைக் கொடுத்தால் ரசிப்பார்கள் என்பது நன்றாகவே புரிந்திருக்கிறது. அதற்கேற்ற காட்சிகள், வசனங்கள் என படத்தை அவர்களைக் குறி வைத்து கொடுத்து வெற்றியும் பெற்றுவிட்டார்.
செல்போனால், மகளை இழந்த
கண்டிப்பான அப்பா சீமான்
மகன் செல்போனை பயன்படுத்த கூடாது என்று கண்டிஷன் போட்டு வளர்க்கிறார். இதுவே ஒரு புதுமையான விஷயம் . தனக்குப் பிடித்த காதலியை அந்த ஆஃப் மூலம் சேர முயற்சியில் இறங்குகிறார்.மகன் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா?
அந்த ஆப்பை உருவாக்கிய சூரியன் உடன் சவால் விட்டு ஜெயித்தாரா? இல்லையா?
என்பதை புதுமையான, சிந்தனை யோடு, சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
சூர்யாவின் மேக்கப்பும், ஹேர்ஸ்டைலும் வித்தியாசமாக காட்டி அவரை ரசிக்க வைத்தது இயக்குனர்..திறமை..
சீமான் வரும் காட்சிகள், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரே தெறிக்கும் காட்சிகளாக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய விதம் சிறப்பு!!
படத்தை ஜாலியாக குழந்தைகள் என்ஜாய் செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும்கெளரி கிஷன் உடனான ,லிப் லாக் காட்சி மற்றும் ஹீரோயின் அசிங்கமாக பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்!!
பிரதீப் ரங்கநாதன்
தொடர் வெற்றியை கொடுத்து வரும் வெற்றி நாயகன் ,
பிரதீப் ரங்கநாதன்,
இந்த படத்திலும் பக்காவாக, நம் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார்
ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் விதமாக லேசான கருத்துடன் ஜாலியான படமாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, படத்தையும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.
லவ்டுடே, டிராகன்,டியூட் படத்துக்குபின் அதே எனர்ஜியுடன் துறுதுறுவென நடித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரின் சின்ன சின்ன எக்ஸ்பிரஸன், குறும்புகள், காமெடித்தனமான நடிப்பு கதையை அவ்வளவு எனர்ஜி ஆக வைக்கிறது.
புதுமை நாயகன்” என்ற பட்டத்தை வழங்கலாம்.
கீர்த்தி வழக்கமான ஹீரோயினாக அல்லாமல் லவ், எமோஷனல் சீன்களில் நின்று விளையாடி இருக்கிறார். அவரின் டான்ஸ் மூவ்மெண்ட் செம கியூட். லவ்வராக வரும் பிரதீப் ரங்கநாதன் உடன் அப்பாவிதனமான நடிப்பில் தனி ரூட்டில் கலக்குகிறார்.
அழகு புயல் கீர்த்தி
பிரதீப் காதலியாக இருவருக்கும், இடையில் உருவாக்கும் மழை காதல், கதை
சுவராஸ்யமான பகுதி,அந்தக் காதல் தான் க்யூட்டாக அமைந்து ரசிக்க வைக்கிறது. அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் கீர்த்தி.
எஸ் ஜே சூர்யா காமெடி, சீரியஸ், வில்லத்தனம் என மூன்றிலும் பின்னி எடுத்து இருக்கிறார். அவர் சொல்லும் எதிர் கால சிந்தனை சூப்பர். அவர் நடிப்பும் இடைவேளைக்குபின் கிரிஞ்ச் ஆகிறது
நடிப்பு அரக்கனாக
சூர்யனாக வரும் சூர்யா, எல்.ஐ.கே வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அறிவியல் கண்டு பிடிப்பாளாராக
‘மாநாடு’ போன்ற வெயிட்டான கதாபாத்திரங்களில் இவரைப் பார்த்துதது போல, இந்த கதாபாத்திரங்களில் பார்க்க ரசிக்க வைக்கிறது
பசுமை நாயகன் அன்பு கடலாக சீமான்,
பிரதீப் அப்பாவாக, எங்கே அட்வைஸ் செய்வாரோ ?என நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு சாதாரண அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். மகள் பிரிவு பலரும் கண் கலங்க வைக்கும்படியான காட்சி உண்டு.
எதிர்காலத்தில் பசுமையான உலகம் வேண்டும் என்று போராடும் நிஜமான கதாபாத்திரம் பணத்திலும் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.
இவர்களுடன்
யோகி பாபு,ஜானி யாக,மாளவிகா, வாழைமீனாக, ஆனந்த்ராஜ், எச் ஏ.சுப்புவாக,
கெளரி கிஷன்
கல்கி என்ற கதாபாத்திரத்தில் பிரதீப் தோழியாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
யோகி பாபு . கௌரி கிஷன் படத்தின் கலகலப்புக்கு பொறுப்பேற்று அதை சரியாகவும் செய்திருக்கிறார்கள்
தொழில் நுட்ப கலைஞர்கள்
அனிருத் இசையில் பாடல்கள் பட்டாசு ரகம். பின்னணி இசையும் குறிப்பிடும்படி உள்ளது. முழு கதையும் 2040 களில் நடக்கிறது. அதனால் இசை அந்த காலத்திற்கு அழைத்து செல்கிறது.
படத்தின் பாடல்கள் விக்னேஷ் சிவன் அருமையாக எழுதி இருக்கிறார்.
ஒளிப்பதிவு செய்துள்ளார் ரவிவர்மன்
ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் 20040 உலகம் எப்படி இருக்கும் என்பதை விஎப் எக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து ஒரு விருந்தை கொடுத்திருக்கிறார்.
பிரதீப் ஈ ராகவ் படத்தை சிறப்பாக செதுக்கி இருக்கிறார்.
இடைவேளைக்கு முன் ஒரு பத்து நிமிடம் கத்தரி வைத்திருக்கலாம்.
பீட்டர் ஹெயினின்
சண்டை பயிற்சி கிளைமாக்ஸ் காட்சியில் ,அனல் பறக்கிறது.
இரும்பு கை மாயாவி போல நாயகன் ரோபோக்களை தாக்கி அளிக்கும் குழு வயதான ரோபோவை மன்னித்து விடுவது என்று அந்த சண்டை காட்சி எம்ஜிஆர் ரஹ்மானியில் சண்டை போட்டு இருக்கிறார் வித்தியாசமான சண்டை காட்சி ரசிக்க வைத்தது.
. இந்த படத்திற்கு திரைக்கு பின்னாலும் நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள்.
Costume designers: Praveenraja, Rinipant, jkatlierindia & shangreihan KS
Sound Mix: Suren G
Sound Design: Suren G, Alagiakoothan S
Colorist: Prasath Somasekar
DI: Knack Studios
VFX: Mango Post
Supervisor: Ramkumar Sundaram
Additional VFX: Prasad Studios, Lorven
Chief Costume Designer: Mohammed Subier
Post- Production: Guna
Choreography: Jani, Baba Baskar, Sathish Krishnan, Sandy, Anusha Vishwanathan, Shakthivel & Suren R.
Promo stills : Avigowariker
Stills : Akash
இவர்கள் அனைவரும் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள் நிச்சயம் வெற்றி பேசப்படும்.
மக்கள் தொடர்பாளர் யுவராஜ், அவர்கள் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ – சுருக்கமான விமர்சனம்
Love Insurance Kompany படம் Pradeep Ranganathan நடிப்பிலும், Vignesh Shivan இயக்கத்திலும் வந்த ஒரு ரொமான்ஸ் + சை-ஃபை கலந்த திரைப்படம்.
🎬 கதை & கருத்து
இந்த படம் ஒரு லவ் ஸ்டோரி மட்டும் இல்லாமல், எதிர்காலம் (future), டைம் ட்ராவல், காதல் ஆகியவற்றை கலந்து சொல்ல முயற்சி செய்கிறது. ஹீரோ தனது காதலை காப்பாற்ற எதிர்காலத்திற்கு செல்லும் கான்செப்ட் முக்கியம். �
film.at
👍 நல்ல அம்சங்கள்
புதிய கான்செப்ட் – வழக்கமான லவ் ஸ்டோரி அல்ல, sci-fi touch இருக்கு
பிரதீப் ரங்கநாதன் நடிப்பு – சில இடங்களில் relatable & entertaining
அனிருத் இசை – பாடல்கள், BGM நல்ல ரீச் தருகிறது
விசுவல் & ஸ்டைல் – colorful, youth audienceக்கு பிடிக்கும் மாதிரி இருக்கிறது.
வெற்றி பட்டியலில்
ல வ்இன்சூரன்ஸ் கம்பெனி 🌷
