சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் ஹாலிவுட் பாணியில் ஒரு திரில்லர் வெற்றி படமாக வந்திருக்கிறது..
எப்ஃஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
கதை களம்
தமிழ் திரையுலகில் ஆக்ஷன், திரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் ஹாலிவுட் பாணியில் ‘Mr. X’.
வந்துள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பு தான் Research and Analysis Wing (RAW / R&AW).
🔍
RAW என்பது இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை (External Intelligence Agency).
இது 1968-ல் உருவாக்கப்பட்டது.
இதை உருவாக்க முக்கிய காரணம்:
1962 Sino-Indian War
1965 Indo-Pak War
இந்த போர்களில் உளவு தகவல் குறைபாடு இருந்தது.
🧠
RAW-வின் முக்கிய பணிகள்:
வெளிநாடுகளில் இருந்து உளவு தகவல் சேகரித்தல்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்
அண்டை நாடுகளின் அரசியல் / இராணுவ நிலையை கண்காணித்தல்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நலன்களை பாதுகாத்தல்
🕵️♂️
RAW ஏஜென்ட் என்பது:
ரகசியமாக வேலை செய்யும் உளவு அதிகாரி
வெளிநாடுகளில் பல்வேறு அடையாளங்களில் (fake identity) பணியாற்றுவார்
பல நேரங்களில் அவர்களின் அடையாளம் வெளியே தெரியாது
இதற்கு தலைமை தாங்கி ,ஒரு குழுவாக வழி நடத்துகிறார். மஞ்சு வாரியார் இந்திரவர்மன் என்னும் கதாபாத்திரத்தில் அவருக்கு கீழ் வேலை செய்பவர்கள் கௌதம் ராமச்சந்திரன் என்னும் கதாபாத்திரத்தில் ஆர்யா .மற்றும் பொன்னுச்சாமி என்னும் கதாபாத்திரத்தில் காளி வெங்கட், ஆரியாவின் தோழராக வரும் யோகி, மற்றும் பலர் இவர்கள் கீழ் சென்னையில் ஹவாலா பணங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. அப்போதுதான் மஞ்சுவாரியாருக்கு, இந்திய அரசு, ராணா என்ற உளவாளியை பற்றி கண்டுபிடிக்கும் பொறுப்பையும் மிஸ்டர்எக்ஸ், என்னும் சரத்குமாரை பாகிஸ்தான், தங்கள் நாட்டுக்குள் சிறை பிடித்துக் கொண்டு செல்வதற்குள் அவரை மீட்க வேண்டும். என்ற பொறுப்பையும் கொடுக்கிறது. அந்த பொறுப்பை மஞ்சு வாரியார், ஆரியாவுடன் சேர்ந்து வீழ்த்த திட்டம் போடுகிறார்!! ஆனால் அந்த திட்டத்தை முறியடிக்க வருகிறார், கௌதம் கார்த்திக், இவரும் மஞ்சுவாரியாரால் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டவர், ஆனால் அவர் துரோகியாக மாறி பணத்துக்காக சரத்குமாரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்.இந்த பணி, நாட்டுக்கு உழைக்கும் போலீசாரும், ராணுவ வீரர்களும் கூட வெளியே தெரிந்து விடுவார்கள். ஆனால் நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக அகதிகளாக சுற்றித்திரியும் ரகசிய உளவாளிகள் பற்றி யாருக்கும் தெரியாது. ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் இந்தியாவில் 1965-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையில் வெவ்வேறு இடங்களில் நடந்த ஏழு உண்மை சம்பவங்களின் தொகுப்பாகும். இது நமது உளவாளிகளின் பெருமையை ஊர் அறியச்செய்யும்.பெருமைக்குரியபடம்.
20 /20உச்சி மாநாட்டில் பாம் வைக்க எதிரிகள் சூழ்ச்சி செய்ய , அதை ஆர்யா முறியடித்தாரா? ராணா யார் ? சின்ன வயதில் பிரிந்து போன ஆர்யா தங்கை அதிதிஎங்கே?
காமினி, என்ற பெயரில் எதிரிகளுக்கு உதவி செய்யும் ரைசா வில்சன் யார் ?
மஞ்சு வாரியாருக்கு எதிராக காய் நகர்த்தி அவரை மாட்டி விட பார்க்கும் ஜெயபிரகாஷ் (வாமண மூர்த்தி) எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்.
படம் முழுக்க ஆக்ஷன் அதிரடி திரைக்கதை செம ஃபாரஸ்ட் அதை சொன்ன விதம் பரபரப்பாக இருக்கிறது.ரஷ்யாவில் நடக்கும் அந்த சன்டை காட்சி ,
கல் பாக்கம் அனுமமின் நிலையத்தில், நடக்கும் சன்டை, அனல் பறக்கிறது.
நடிகர் &நடிகைகள்
ஆர்யா, கதாநாயகனாக
கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார் ஆரம்ப காட்சியில் தண்ணீருக்கு அடியில் 20 நிமிடம் அவர் இருப்பதை காட்டியதற்கும், கிளைமாக்ஸ் காட்சியில் , சம்பவம்
பொருத்தமான காட்சி.
நாயகி அனகா, உடன் அருமையான ரொமான்ஸ், கௌதம் கார்த்தி உடன், கடுமையான சண்டை, என்று ஒவ்வொரு பிரேமிலும் ஆர்யா அசத்தியிருக்கிறார் .
கௌதம் கார்த்திக், அமரன் சக்ரவர்த்தி என்ற வேடத்தில் சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்வதில் ஸ்டைலான நடிப்பை கொடுத்திருக்கிறார
பணத்துக்காக நாட்டையே காட்டிக் கொடுக்கும் வித்தியாசமான வில்லன் வேடம் நன்றாக பொருந்தி இருக்கிறது.
சரத்குமார்,
பரமேஸ்வர் சூரிய பிரதாப், என்ற கதாபாத்திரத்தில் தாய்நாட்டுக்காக உழைப்பதும், பின்னர் அவர் என்ன ஆனார் !!என்று அந்த கதாபாத்திரத்தில் ஒரு சஸ்பென்ஸ் வைத்து!! பல கெட்டப்புகளில்,
அவர் மகன் ,மகளை, பிரிந்து, கம்பீரமான சரத்குமாரை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.
மஞ்சு வாரியர்
இந்திராவர்மன் என்னும் கதாபாத்திரத்தில் ரா’ ஏஜெண்டுகளுக்கு தலைவியாக வந்து கம்பீரமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில், அதிரடியான சண்டைக் காட்சிகளில் ,அசத்தி இருக்கிறார், படம் முழுக்க மஞ்சு வாரியார் கம்பீரம்
இவர்களுடன், அனகா கீர்த்தனா, என்ற கதாபாத்திரத்தில்
மருத்துவராக வந்து ஆர்யாவுடன் அழகான காதல் செய்து நம் மனதையும் கவர்ந்து விடுகிறார்.
அதுல்யா ரவி, கௌதம் கார்த்திக், தோழியாக வந்து வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
ரைசா வில்சன்,
காமினி என்கிற கதாபாத்திரத்தில் சஸ்பென்ஸ் நிறைந்த கதாபாத்திரத்தில், கவர்ச்சியிலும் தனக்கான இடத்தை அழகாக செய்து இருக்கிறார்.
சஞ்சனா சிங்,
இவரும் ரா” ஏஜென்டில் பணிபுரிகிறார்.
காளி வெங்கட்
பொன்னுச்சாமி என்கிற கதாபாத்திரத்தில் கேன்சரால், தவிக்கும் தன் மனைவிக்காக உருகும் இவர் வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார்
மற்றும் ஜெயப்ரகாஷ், வாமன மூர்த்தி என்கிற மஞ்சுவாரியாருக்கு போட்டியாக வரும் உளவுத்துறை அதிகாரியாக நடிப்பிலும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார்.
மற்றும் யோகியாக வரும் ஆர்யாவின் நண்பர் .மற்றும் சரத்குமாரின், இரண்டு குழந்தைகள்.என
அனைவரும் தங்கள் நடிப்பின் மூலம் படத்துக்கு மெருகேற்றி இருக்கிறார்கள்.
.தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார். மனு ஆனந்த். ஒரு ஸ்பை, த்ரில்லர் படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு இவர் உதாரணமாக எடுத்திருக்கிறார். ,
ஒவ்வொரு காட்சியும் அசத்துகிறது. காட்சிகளுக்காக மெனக்கெட்டு. ரஷ்ய வரை சென்று படமாக்கி இருப்பது, குஜராத் பாலைவனம் ,மற்றும் டெல்லி, சென்னை, என ஒவ்வொரு இடங்களிலும் இவர் தேர்வு செய்த லொகேஷனும் தேர்வு செய்த நடிகர்களும், படத்தை சிறப்பாக தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
திப நினன் தோமஸ்
இசை, அதிரடியான சண்டை காட்சிகளுக்கு, மேலும் விறுவிறுப்பை கூட்டி பின்னனி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார் இசையமைப்பாளர்.
புரொடக்ஷன் டிசைனராக ராஜீவன் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு , ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்குள் பதிய வைத்திருக்கிறார்
ரஷ்யாவில் படமாக்கப்பட்ட அந்த சண்டை காட்சி, கிளைமாக்ஸில் படமாக்கப்பட்ட கல்பாக்கம் அணுமின் நிலையம். மற்றும் ஆர்யா, அனகாவின் காதல் காட்சி ,என ஒவ்வொரு காட்சியும் படத்திற்கு பிரம்மாண்டத்தை கூட்டுகிறது மிக அருமை .
பிரசன்னாவின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது .
படத்தை சிறப்பாக செதுக்கி இருக்கிறார். படத்தொகுப்பாளர்.
ஸ்டண்ட் சில்வா
சண்டை பயிற்சியாளராக படம் முழுக்க அதகலம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் ஹவாலா பணத்தை பிடிக்க ஆர்யா நடத்தும் யுத்தம். கார்த்திக் கௌதம் மற்றும் ஆர்யா போடும் சண்டைக்காட்சி. ரஷ்யாவில் நடக்கும் சண்டை காட்சி. சரத்குமார் போடும் சண்டைக்காட்சி, என படம் முழுக்க அதிரடி சண்டை காட்சிகளால் ரசிகர்களின் கைதட்ட லைஓங்கி ஒலிக்க செய்திருக்கிறார் ஸ்டண்ட் சில்வா.
சேகர் ,அமைத்த அரங்க அமைப்புகள் படத்திற்கு அற்புதமாக இருக்கிறது.
காஸ்ட்யூம் டிசைனராக
முத்துராமேனன்,
தீபாளி நூர், பணிபுரிந்து இருக்கிறார்கள்
திரைக்கதைக்கு உதவிய தியானாகா,
ஆனந்த் சங்கர் ,
ராம் எச் .புத்ரன்,
மற்றும் பிரவீன் கே
அனைவரும் ஒரு வெற்றிப் படத்துக்காக ,நிறைய ஆராய்ச்சி செய்து கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
VFX DIRECTOR – Sarath Vinu
VFX SUPERVISOR – Jobin Jacob
VFX – IDENT VFX LAB
SOUND DESIGN – Tapas Nayak
SFX – Vishnu Pc
என்று வி. எஃப் .எக்ஸ் பணியாளர்கள் கலர் கரெக்ஷன், செய்தவர்கள் ஒப்பனையாளர்கள், அனைவரும் இந்த படத்தின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள்.
மக்கள் தொடர்பாளர் ஏ .ஜான் அவர்கள் இந்த படத்தை மக்களிடம் சிறப்பான முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு, ஹாலிவுட் பாணியில் கொண்டு செல்ல, உழைத்த அத்தனை நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், மக்கள் தொடர்பாளருக்கும், வாழ்த்துக்கள் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பெறுகிறது வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா
ஆர்யா வெற்றிப் படங்களிலும், முக்கியமான இந்தப் படமும் நிச்சயம் இடம் பிடிக்கும்.🌷
