EXAM”வெப் சீரிஸ் விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (புஷ்கர் & காயத்ரி) தயாரிப்பில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடிப்பில் மே 15, 2026 முதல் Amazon Prime Video-வில் வெளியாகியுள்ள தமிழ் சஸ்பென்ஸ் திரில்லர் வெப் சீரிஸ் தான் ‘எக்ஸாம்’ (Exam).இந்த தொடரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விமர்சன கண்ணோட்டம் இதோ:🌟

கதைக்களம்

Genre: Crime Thriller / Social Drama
இயக்குனர்: A. Sarkunam
முக்கிய நடிகைகள்:
Dushara Vijayan
Aditi Balan
மற்ற நடிகர்கள்:
Abbas
Vasundhara Kashyap
📖 கதை என்ன?
இந்த series இந்தியாவின் competitive exam pressure-ஐ base பண்ணி எடுக்கப்பட்டிருக்கிறது.
Students எப்படி rank, reservation, family pressure, social inequality எல்லாத்தையும் சமாளிக்கிறாங்கறாங்க என்பதையும்
Exam எழுதுற மாணவர்களின்:
மன அழுத்தம்
ambition
survival struggle
moral dilemma
இவைகளை realistic-ஆ காட்டுவது இந்த series-ோட highlight.
🎬 ஏன் ஹைப் அதிகம்?
Dushara Vijayan performance ரொம்ப powerful
ஜான்சி, என்ற கதாபாத்திரத்தில் ஒற்றை ஆளாக முழுக்க சுமந்து இருக்கிறார் .அந்த பிளாஸ் பேக் காட்சியில் மிகவும் அசத்தலாக நடித்திருக்கிறார்.
வாத்து மேய்க்கும் ஜானகியின் மகளாக குடிசையில் பிறந்து வாழ்ந்தாலும் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு ஒரு லட்சிய பயணம் மேற்கொள்கிறார். ஆனால் அவர் நினைப்பது நடந்ததா!
என்பது தான் ஒன் லைன்….

Director Sarkunam usually emotional + realistic கதைகளுக்கு famous.இவர் எழுதி இயக்கிய வாகை சூடவா!! ஏழை குழந்தைகளுக்கு பள்ளி படிப்பை பற்றி பேசியது.இந்த வெப் தொடரில்
இந்திய education system pressure-ஐ bold-ஆ பேசி இருக்கிறார் . சூப்பர்

(Synopsis)போட்டித் தேர்வுகளில் (குறிப்பாக Regional Public Service Exam – RPSE) நடக்கும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு (Paper Leak) மற்றும் அதில் உள்ள அரசியல் ஊழல்களை மையமாகக் தொடர்ந்து செய்திகளில் வந்த ஆதாரங்கள் கொண்டு இந்த கதை பரபரப்பாக விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கிறார் .

தொடரில் ஆரம்பத்தில்
துஷாரா , மரமல்லியைகடத்துவது போல
காட்சியை ஆரம்பிக்கிறார்.
அவர் ஏன் (அதிதீபாலனை) மரமல்லியை கடத்துகிறார்? ஜான்சி பெயரில் உள்ள அவர், மரமல்லி என்ற பெயரில் ஏன் டிஎஸ்பியாக பதவி ஏற்கிறார்? அவருக்கு பின்னால் இருந்து இயக்கும் ஜெயச்சந்திரன், கதா பாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பாஸ் யார்? அவர்
கதாபாத்திரம் என்ன?
என்பதை 7 எபிசோடுகள் மிகவும் பரபரப்பாக
படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

மாணவர்கள் கல்வி யை சிதைக்கும்
ஒரு ஊழல் வலையமைப்பை உடைக்க ஜான்சி (துஷாரா விஜயன்)
மற்றும் அவரது டீம் மறைமலை ,மணி ,
ஜெயசந்திரன் என
இவர்களுடன் ஒரு யுத்தத்தை ஜான்சி
எடுக்கும் அதிரடி முயற்சிகளே, இந்த தொடரின் விறுவிறுப்பான திரைக்கதை.🎬 திரைக்கதை செம (Suspense Thriller): தேர்வு அறை பதற்றம், ஊழல் மற்றும் சஸ்பென்ஸ் என தொடர் முழுவதும் விறுவிறுப்பாக நகர்கிறது.
அதிதி பலனை தன்னுடைய வீட்டில் கட்டிப்போட்டு, வைத்துவிட்டு துஷாரா, ஒவ்வொரு காயை நகர்த்துகிறார்! அவர் போலியான டிஎஸ்பி என்று காவல் நிலையத்தில் இருப்பவர்கள் கண்டுபிடித்துவிட, அதற்குப் பிறகு என்ன நடக்கும்? துஷாரா மாட்டிக் கொள்வாரா? என்ற பதபதப்பையும்! வேகமான திரைக்கதையுடன் இந்த வெப் தொடர் முழுக்க என்டர்டெயின்மென்ட் மற்றும் எமோஷனல் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது
மற்றும் அதிதி பாலன் தப்பிக்கும் இடம், செம பரபரப்பு
அதேபோல அவரைக் காண வரும் அவரின் அம்மாவும், அவர் குழந்தையும், போலியான துஷாரா எப்படி சமாளிக்க போறார்!! என்ற பரபரப்பு!!
குழந்தைகள் பந்து விளையாடும் இடம்!! மேல் மாடிக்கு போகக்கூடாது, என்று சொல்லியும் வாய் பேச முடியாத அவரை ஏமாற்றிவிட்டு குழந்தைகள் உள்ளே போக, அங்கும் நடக்கும்காட்சிகள் செம விறுவிறுப்பு கதாபாத்திரங்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் சவாலான சூழலை எதிர்கொள்கின்றனர்

பொதுவாக சின்ன வயதிலேயே குமரேசன் ,நன்றாக படிப்பவர் மீன்விற்று பிழைக்கும் செந்தி, அவரை நன்றாக படிக்க வைக்க வேண்டும் .என்று கனவு காண்கிறார்! அந்த எபிசோட் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக சொல்லி இருந்தது .அடுத்து
ஒரு திகில் நிறைந்த கதையாக மாறுகிறது.
அந்த குமரேசன் இறுதியில் ஜெயித்துக் காட்டினாரா ?என்பது செம கிளைமாக்ஸ்.
இவரைப் போலவே
இந்த கதை கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வி யோடுகலந்து
இன்றைய இளைஞர்களின்
தேர்வு எழுதாமலே பாஸ் ஆகி விட வேண்டும்!! என்று பணக்கார இளைஞர்கள் நினைப்பதை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது .
அதற்கு எப்படி அந்த மாணவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடமிருந்து பணம் சம்பாதிக்கிறார்கள் இந்த இன்ஸ்டியூட் நடத்துபவர்கள் என்பதையும் சொல்லி இருக்கிறது.
ஏழை மாணவர்கள்
கனவுகளை சிதைக்கும் கல்வி முறையின் ஊழல்களை, தைரியமாக சொல்லப்பட்டிருக்கிறது.
சஸ்பென்ஸ், கிரைம் திரில்லர் மற்றும் புலனாய்வு கதை அம்சங்கள் கொண்ட வெப் சீரிஸ் விரும்புபவர்கள்.நிஜ வாழ்க்கையில் நடக்கும் தேர்வு முறைகேடுகள் பற்றி பேசும் சமூகப் படங்களை விரும்புபவர்களுக்கு விருந்து 🎥 ‘
சமூகத்தில் மலிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மை சட்டென்று ஈர்க்கும். பணியடுக்கில் தகுதியுள்ளவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதும், தந்திரம் தெரிந்தவர்கள் முன்னேறுவதும் நிறுவனம் மற்றும் அதிகார மையங்களில் ‘நியூ நார்மல்’ ஆகவே மாறிவிட்டது. காவல் துறையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இத்தொடரில் வரும் ஜான்சி துஷாரா விஜயன
சார்பட்டா பரம்பரை’ போல் இந்த தொடரில்,
கூர்மையான கல்வி அறிவு, உடன் திகழ அவர் நேர்மை, அவருக்கு எதிராக திரும்ப,அவருடன் சக தேர்வு எழுதிய மரமல்லி மற்ற வர்கள் திறமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, DSPஆக கண்காணிப்பாளராக உயர அவருக்கு சரியான பாடம் புகட்டுகிறார்.
இந்த நடிப்பில் துஷாரா விஜயன் அசத்தியிருக்கிறார்
ஏழை மாணவி பெரிய கல்விக்கு ஆசைப்படுவதும், அதற்காக சிரமப்பட்டு தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கும் பொழுது தவறு செய்யும் மரமல்லியை கண்டிப்பது,
அதனால் அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படுவது தொடரின் செம்ம வெயிட்டான பாகம்.

மர மல்லியாக , நடித்த அதிதி பாலனுக்கு
காட்சிகள் குறைவு என்றாலும் , அவர் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் துஷாராவும், அதிதியும், போடும் சண்டை காட்சிகள் அனல் தெரிக்கிறது .
கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அந்த சண்டை காட்சிக்கு.

ஜெயச்சந்திரனாக அப்பாஸ், ஜெய்லர் ஆக நடித்துள்ளார் நல்ல கதாபாத்திரம் மனதில் நிற்கும் படியாக நடித்திருக்கிறார் அவரின் முடிவு பரிதாபம். துஷாராவின் அம்மாவாக ஜானகி
வாத்து மேய்க்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி தன் மகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று போராடி உயிரை விடுவது சமூகத்தின் அவலம்.

மீன் பிடிக்கும் தொழில் செய்து,
நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று கனவில்
குமரேசன் கல்விக்காக ஏங்குவது, என்று சூர்யா நடிப்பில். பட்டடை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார். அவர் அம்மாவாக செந்தி ஒரே காட்சியில் வந்தாலும் அம்சமாக மனதில் நிற்கிறார்.
துசாராவின் ஜீப் டிரைவராக குட்டி புலி சரவணன்,
துசரா யார்? என்று தெரிந்த பிறகு அவருக்கு சல்யூட் அடிக்கும் காட்சி சிறப்பு.

காவல் துறை அதிகாரியாக வரும் இளங்கோவன் கதாபாத்திரத்தில் வருபவர். இன்னொரு காவல் துறை அதிகாரி சுதாகர். மற்றும் ரிப்போர்ட்டர் அகஸ்டிகேரக்டரில் வருபவர் ,என்று அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.

இயக்குனர்

தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் இந்த கதை எழுதி, இயக்கி இருக்கிறார் .
எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பாக சொல்லி இருக்கிறார் . இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண்ணாக நாயகியை காட்டிஇருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது
அவளை அழிக்க நினைக்கும் கும்பல்
என கதாபாத்திரங்களை வடிவமைத்து இருப்பது சிறப்பு.

முதல் பாதியிலேயே முடிச்சுகளை அவிழ்த்துவிட்டதால் (?) இரண்டாம் பாதியில் திரைக்கதை எப்படி போகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெறுமனே பார்வையாளர்களைப் பயமுறுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் குற்றத்தையும், குற்றத்துக்கு முந்தைய குற்றவாளியின் மனநிலையையும் ஆராய்கிற விதத்தில்
இயக்குனர் ,மற்றும் புஷ்கர் காயத்ரி கூட்டணியின் பொறுப்புள்ள எழுத்து பாராட்டுக்குரியது.
காட்சியின் தன்மையைப் பிரதிபலித்தது. திடீர் திடீரென வரும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் பதற்றமடையச் செய்கிறது. கதையின் சூழல் தெளிவாக மனதில் பதியும் வகையில் கதையோடு ஒன்ற வைத்திருக்கும்
ஒளிப்பதிவு
படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.
தயாரிப்பாளர்

.தயாரிப்பு: புஷ்கர் மற்றும் காயத்ரியின் தயாரிப்பு
சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது .”
சிறப்பு.புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் விறுவிறுப்பாக இருக்கிறது..

.
ஒளிப்பதிவாளர் மலைகளையும், காடுகளையும், உதகம் மலை போன்ற பகுதிகளில் படமாக்கி கண்களுக்கு குழுமையாக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் .

படத்தொகுப்பாளர்
படத்தை சிறப்பாக படத்தொகுப்பு செய்து இருக்கிறார் காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் .

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசை, அந்த தீம் மியூசிக், ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசையும், எமோஷனல் கலந்த பாடல்களும் இந்த தொடருக்கு பக்கபலமாக இருக்கிறது.

ஒப்பனையாளர்கள் துஷாராவுக்கும், அதிதீக்கும் அழகாக கதைக்கு நேர்த்தியான ஒப்பனையை கொடுத்திருக்கிறார்கள் .

ஆடை வடிவம் செய்தவர்கள் கச்சிதமான வடிவமைப்பில் நம்மை பிரமிக்க வைக்கிறார்கள்

மற்றும் வி. எஃப். எக்ஸ், கலர் கரெக்ஷன், செய்தவர்கள் என அனைவர் பங்கும் சிறப்பாக இருக்கிறது .

மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள் இந்த வெப் சீரிஸ்ஸை மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார் .

மொத்தத்தில் இந்த தொடர், வெற்றித்தொடர். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான தொடர். கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்💐