👉⭕~ நீதி கேட்டு கோர்ட் க்கு ,வரும் மக்களுக்கு நீதி கிடைக்கலைன்னா, இந்த கருப்பன் வருவான்என்ற என்ற ஆன்மீக சிந்தனையுடன், நீதி நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது இந்த கருப்பு”. மொத்த தியேட்டரையும் கோயிலா மாத்தி விட்டார் இயக்குனர் RJ balaji 💥
அந்த ஐயா கருப்பனே வாருமய்யா” னு அந்தாளு voice கேக்குறப்பலாம் நம்மல அறியாம புல்லரிக்குது அந்த மாறி வேளைப்பாடு. நம்ம சின்ன இசைப்புயல் சாய் நல்லா பண்ணிருக்காரு 💯
Interval க்குபிறகு படம் ரெக்கை கட்டி பறக்குது கிளைமாக்ஸ வச்சு செஞ்சுட்டார் 🔥
மொத்தத்துல நல்ல படம் ரொம்ப நாள் கழிச்சு சூர்யா fans க்கு,டீரீட், குடும்பத்தோட போய் பார் க்கலாம்💙
சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வந்த இந்த படம், மாஸ் எலிமென்ட்ஸ் + சமூக கருத்து இரண்டையும் கலந்து சொல்லி இருக்கிறது.
“கருப்பு” ஒரு கோர்ட்டு டிராமா மற்றும் சமூக அரசியல் கலந்த மாஸ் படம்.
படத்தின் முதல் பாதி வேகமாக போகிறது; சூர்யாவின் ஸ்கிரீன் பிரசென்ஸ் பெரிய பலம். �
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சமூக மெசேஜ் கொஞ்சம் அதிகமாக “விளக்கிக்” காட்டி இருக்கிறார்
திரிஷா – சூர்யா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல nostalgic feel கொடுக்கிறது. �
பின்னணி இசை மற்றும் கிராமத்து setting நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. �
நல்ல அம்சங்கள்
சூர்யாவின் performance
மாஸ் scenes & dialogues
courtroom/social issue angle
BGM
மாஸ் + கருத்துள்ள commercial படம்
சரி படத்தின் கதைக்களம் என்ன வாங்க பார்க்கலாம்🥅
ஏழுகிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் செல்வாக்கு படைத்த வழக்குரைஞர் பேபி கண்ணன் (ஆர் ஜே பாலாஜி). அந்த நீதி மன்றத்தில் சட்டத்தின் மூலம் நீதி பெற வரும் சாமானியர்களிடம் பணம் பிடுங்குவது, செல்வாக்கு படைத்தவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி பணம் பெறுவது என ஒரு லீகல் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார். இந்த நீதிமன்றத்தில் மகள் பினு (அனகா மாயா ரவி) சிகிச்சைக்காக நகையை விற்க சென்ற இடத்தில், நகையை பறி கொடுக்கிறார் அவளின் தந்தை (இந்திரன்ஸ்). போலீஸ் மூலம் திருடப்பட்ட நகை பிடிக்கப்பட்டாலும், அது நீதி மன்றத்தின் மூலம் திரும்ப வாங்க வேண்டும் என்பது அலுவல். இதற்காக பேபியை நாடுகிறார் பினுவின் தந்தை. ஆனால் அவரிடம் பணம் பிடுங்க நினைக்கும் பேபி அவரை அலைக்கழிக்கிறார். கையறு நிலையில் இருக்கும் பினுவின் தந்தைக்கு உதவியாக இவ்வழக்கில் ஆஜராகிறார் வழக்குரைஞர் சரவணன் (சூர்யா). அதன் பின் நடப்பது என்ன? சரவணன் யார்? என்பதை எல்லாம் மாஸ் + பக்தி கலந்து பரிமாறி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.
நவரச நாயகன் சூர்யா
கருப்பு (எ) சரவணனாக பக்கா மாஸ் காட்டுகிறார் சூர்யா. கெத்தாக வசனங்கள், எமோஷனல் காட்சி, வெறித்தனமான சண்டை என வின்டேஜ் சூர்யா திரும்ப வந்திருக்கிறார்
இன்ஸ்பெக்டராக கிளைமாக்ஸ் காட்சியில் துரைசிங்கமாக வரும் பொழுது திரையரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.
வேட்டை கருப்பு ஆகவும், காவக்கார கருப்பு ஆகவும் மக்களை காக்க அவரை அவதாரம் எடுக்கும் பொழுதெல்லாம் அதிர்கிறது.
சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். தீர்க்கமான பார்வை, உக்கிரமான வார்த்தைகள், நீதி தோற்றுப் போகும் பொழுது கண்கலங்கும் மனிதநேயம் என களைகட்டி நவரச நாயகனாக, நடிப்பில் பட்டை திட்டிய வைரமாக ஜொலிக்கிறார். அவருக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது.
சூர்யா சம்பந்தப்பட்ட ரெஃபரென்ஸ், லியோ ரெஃபரென்ஸ், சமகால ரெஃபரென்ஸ் என படத்தில் சேர்த்துள்ள ரெஃபரென்ஸ் எல்லாம் சுவாரஸ்யம் சேர்க்கிறது.
ஆர் ஜே.பாலாஜி
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி யா? நடிகர் பாலாஜி யா?
என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு இரண்டு துறையிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். 32 மாதங்கள் இந்த படத்திற்காக உழைத்து, இயக்குனராகவும் வெற்றி பெற்று இருக்கிறார். நடிப்பிலும் பட்டை தீட்டி ய வைரம் போல் ஜொலிக்கிறார்.
இயக்குனராக மாஸ் மொமண்ட், அதிரடி சண்டைகள், கலர்ஃபுல் விஷுவல் என பலவற்றை கலந்து கட்டி கொடுத்த விதத்தில் ஒரு ஃபெஸ்டிவல் மோட் சினிமா அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
நடிகராக, வில்லன் ரோலில் நடித்தாலும், ஹீரோ அளவுக்கு நிறைய காட்சிகளில் வருவது ஆர் ஜே பாலாஜி தான். வழக்கமான நக்கல் வசனங்கள் ஒரு பக்கம், அதில் கொஞ்சம் வில்லனிசம் மறுபக்கம் என கலந்து நடித்திருக்கிறார்.
சட்டத்தில் உள்ள நடைமுறைகள் மேல் விமர்சனத்தை வைத்து இருக்கிறார். இயக்குனர்.அதே சட்டத்தினால் எவ்வளவோ நன்மைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் பேசுகிறது படத்தில் சிறப்பு. கடவுள், பக்தி என படத்தின் ரூட்டை மாற்றாமல் நேர்மைக்கும், தீய எண்ணங்களுக்குமான மோதலாக படத்தை வடிவமைத்த விதமும் பாராட்டுக்குறியது.
தெய்வம் மனித ரூபத்தில் வந்து உதவும் கதையை, தெய்வமே வந்து உதவினால் என மாற்றி படத்தில் ஃபேண்டஸி சேர்த்த ஐடியா நன்று.
யோசித்த விதம் புதிதாக இருக்கிறது ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஒரு மாஸ் கமர்ஷியல் படமாக கொண்டாட்டமான அனுபவத்தை கொடுத்த இயக்குனர் ஆர் .ஜே பாலாஜிக்கு வாழ்த்துக்கள்💐
திரிஷா
நாயகி ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா கோர்ட் காட்சிகளிலும், சூர்யாவிடம் வரம் கேட்கும் காட்சியிலும் கவனிக்க வைக்கிறார்.
அழகிலும் நடிப்பிலும் குறைவில்லாத பர்பாமன்ஸ் காட்டும் திரிஷா படத்துக்கு மிகப்பெரிய பக்கபலம்.
மற்றும் இதில் நடித்த நடிகை, நடிகர்கள் இந்திரன்ஸ் + அனகா, தந்தை மகளாக படத்தின் எமோஷனல் பகுதிக்கு நடிப்பால் பலம் சேர்க்கிறார்கள். நட்டி நட்ராஜ் வில்லனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் சின்ன ரோலில் வந்தாலும் ஷிவதா” நடிப்பு மிக அழுத்தமாக இருக்கிறது. இவர்கள் தவிர ஸ்வாசிகா, மாறன், ஜார்ஜ் மரியான், வேலா ராமமூர்த்தி, மன்சூர் அலிகான் ஆகியோர் சின்ன சின்ன வேடங்களில் வந்து போகிறார்கள். சண்முகம் (எ) பேய் கதாபாத்திரத்தில் வரும் புதுகை பூபாலன் வரும் காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஆடுகளம் நரேன் நடிப்பு அருமை!
தொழில் நுட்ப கலைஞர்கள்
படத்தின் ஒளிப்பதிவாளர் இந்த படத்துக்கு மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறார் கருப்புசாமி” வரும் இடங்களில் கேமரா கோணம் சி.ஜி மற்றும் தொழில்நுட்பங்களும் மிரட்டி இருக்கிறார்.
பல காட்சிகளுக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் வலு சேர்க்கிறார் ஜி கே விஷ்ணு. மாஸ் காட்சிகள், கோர்ட் ரூம் விவாதங்கள் என எல்லா ஃபிரேம்களையும் கட்சிதமாக கொடுத்திருக்கிறார்.
இப் படத்தின் பேக் போன் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் பின்னணி இசை மற்றும் பாடல்களை சொல்லலாம். மாஸ் காட்சிகளில் எல்லாம் பில்டப் ஏற்றுவதே சாய் தான்.
சிறப்பான பாடல்களை தந்து ரசிகர்களை தியேட்டரில் கருப்புசாமி “ஆக ஆட வைத்திருக்கிறது இசை.
இப்படத்தின் வெற்றிக்கு பலமாக இருந்தது சண்டை காட்சிகள்விக்ரம் மோர் அமைத்துள்ள இடைவேளை சண்டைக்காட்சி சிறப்பு.
கிளைமாக்ஸ் சண்டை காட்சி அந்த கார் துரத்தல் சண்டை காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
i: 🥅படத்தொகுப்பாளர் கலைவாணன் பங்கு வெற்றிக்கு அதிக பலம் சேர்த்திருக்கிறது கருப்பு வரும் இடங்களில் சூரியா சரவணன் ஆக, இருக்கும் இடங்களில் இரண்டையும் கலந்து காட்டி காந்தாரா” பாணியில் செதுக்கியிருக்கிறார்.
🥅Produced by Dream Warrior Pictures
Producers : S R Prakash Babu & S R Prabu🥅
Executive Producer : Aravendraj Baskaran
Writers : Ashwin Ravichandran – Rahul Raj – T S Gopi Krishnan – Karan Aravind Kumar
❤️
Production Designer : Arun Venjaramoodu
Production Controller: Rajendran PS
🥅 சோபி- சாண்டி- அனுஷா- விசுவநாதன் நடன பயிற்சியாளராக கலக்கி இருக்கிறார்கள். அந்த கருப்பு நடன காட்சியில் ,பல ஆயிரக்கணக்கான நடன பயிற்சியாளர் பங்கு பெற்று பாடலுக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.
🥅 அதேபோல பாடல்களை பா விஜய்- விவேக் விஷ்ணு- அசல் கோளாறு-
ஆதேஷ் கிருஷ்ணா –
அருண் சீனுவாசன்
எழுதி இருக்கிறார்கள். பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது.
🥅🥅🥅 Stylist: Praveen Raja – Eka Lakhani – Divya. Nagarajan
பெருமாள் செல்வம், உடை வடிவமைப்பும்
வினோத் சுகுமாரின் ஒப்பனையும் மிகக் கட்சிதம். சூர்யாவுக்கு அந்த கருப்பு சாமி வேடத்தில் வரும் போது போடப்பட்ட ஒப்பனை கவனிக்கத்தக்கது.
🥅Color : Redchillies.color
Sr.Colortist : Ken Metzker
VFX Supervisor : Logaraj.C
VFX studios: Little hippo Studios, Spectre post, halohues studios, EFX magic, Realworks Studios, Sozo VFX, Focus VFX, Bhishma studios, Pix rocks VFX, ADFX Studio(Title animation).
SFX : Arun S Mani (Oli Sound Labs)
Sound Mix : Vinay Sridhar🥅
மக்கள் தொடர்பாளர் சதீஷ்குமார். (S2MEEDIA)
சிறப்பான முறையில் மக்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த கருப்பு, நீதிமன்றங்களில், தேங்கியிருக்கும் வழக்குகளை சீக்கிரம் முடிக்கவும், ஏழை ,எளிய, மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் ,என்ற நல்ல ஒரு சமூக சிந்தனையோடு, மாஸ், என்டர்டைன்மென்ட் படமாக வந்திருக்கிறது. நிச்சயமாக இப்படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும். வாழ்த்துக்கள் உடன் கிளாசிக் சினிமா💐
