🧶சட்டென்று மாறுது வானிலை ஒரு காதல்-த்ரில்லர் கலவையாக வந்திருக்கும் படம். இயக்குநர் பாபு விஜய் முதல் படத்திலேயே காதல், அரசியல், சஸ்பென்ஸ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொடுத்து இருக்கிறார்.இதில் ஜெய் , மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். �
படத்தில் ஜெய்யின் இயல்பான நடிப்பு படத்தை தாங்கி செல்கிறது.
முதல் பாதியில் வரும் காதல், மற்றும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
பின்னணி இசை மற்றும் சில த்ரில்லர் தருணங்கள் நல்ல ஈர்ப்பு தருகின்றன.
அரசியல் பின்னணி கொண்ட சஸ்பென்ஸ் ட்விஸ்ட் கொஞ்சம் புதுமையாக தெரிகிறது
கதை களம்
🧶படத்தின் நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் (ஜானகி)
இவரை திருமணம் செய்து கொண்டால் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்று தமிழக பெரும் புள்ளி அரசியல்வாதி ஒருவர் விரும்புகிறார். இவரது அப்பா அமைச்சர் பூவ ராகவன், ஜானகியை இரண்டாம் தரமாகவும் பெண் கொடுக்க சம்மதிக்கிறார்.
அதற்கு ஜானகியின் அம்மா தடை போட அவரை தள்ளி விட்டு கொலை செய்கிறார் பூவராகவன்.
பெரிய தொழிலதிபர் மகன் ஜானகியை மணந்தால் 300 கோடி ரூபாய் சொத்து கிடைக்கும் என்று அவரை அடைய சதித்திட்டம் போடுகிறார்.
இதை அடுத்து நாயகன் ஜெய் (சந்துரு) மீனாட்சி கோவிந்தராஜனை கண்டவுடன் காதல் கொண்டு ,அடுத்த நாளே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்கிறார்.
மூணாறு சென்று மூண் ரெஸ்டாரண்ட் ஒன்றில் தங்கி தங்கள் முதல் இரவை கழிக்கிறார்கள்.
அதற்கு பிறகு தான் கதைக்களம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும், சூடு பிடிக்கிறது . அடுத்து என்ன நடக்கும் ?என்ற பாணியில் கதை நகர தொடங்குகிறது
படத்தின் வில்லன் சக்கரவர்த்தி (கருடா ராம்)
தமிழக மற்றும், இந்தியாவில் உள்ள பெருநகரங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதியை கட்டி அங்கு வரும், ஹனிமூன் தம்பதிகளுக்கு பல இலவச சலுகைகளை கொடுத்து, இரவில் அவர்கள் உல்லாசமாக இருப்பதை வீடியோவாக எடுத்து வெளிநாட்டு அனுப்பி பலகோடி பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். இந்த சதி வலையில், நாயகன் ஜெய்ம், மீனாட்சி கோவிந்தராஜனும், சிக்கிக் கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள்!! என்ன நடந்தது? ஜெய் நண்பர்கள் ஆன, யோகி பாபு, கதிர், சத்தியன் எல்லோரும் எப்படி உதவினார்கள்? என்பது தான் படத்தின் பரபரப்பான திரைக்கதை.
மொத்தத்தில் காதல் + த்ரில்லர் கலந்த லைட் எண்டர்டெயின்மெண்ட் படம் பார்க்க விரும்பினால் இந்த படம் நிச்சயம் பார்க்கலாம். பெரிய அளவில் புதுமை இல்லாவிட்டாலும், சலிக்காமல் போகும் கமர்ஷியல் படமாக இருக்கிறது.
🧶
ஜெய் சந்துரு, என்ற கதாபாத்திரத்தில் முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சாரின், ரசிகராக அதே ஸ்டைலில் விஜய் சாரின், உடல் மொழிபாகத்துடன் நடித்திருக்கிறார் . அதாவது உடல் மொழி.. வசன உச்சரிப்பு ..இவற்றில் எல்லாம் அவரின் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை, முழுக்க வேறு ஒரு தளத்தில் பயணிக்க கதையின் நாயகனாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
.இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக டெக்னாலஜி மூலம் ஒருவரது அந்தரங்கம் எப்படி மற்றவர்களுக்கு விருந்தாகப்படுகிறது என்பதை விவரித்திருக்கிறார்.
மீனாட்சி கோவிந்தராஜன்
🧶அம்மாவை இழந்த பெண்ணாக, அப்பாவின் அரசியல் ஆசைக்கு இரண்டாம் தாரமாக முடியாமல் ,தன்னை விரும்பிய காதலனை காதலித்த பிறகு, வரும் பிரச்சனைகளை எதிர் கொண்டு ,வாழ முடியாமல் வாடி வதங்கும் ஜானகியாக, நன்றாக நடித்தி ருக்கிறார். முதல் பாதியில் இளமை துள்ளும் எழில் ஓவியமாக வருகிறார். இரண்டாம் பாதியில் கதைக்குத் தேவையான கனமான கதாபாத்திரத்தில் மெருகேற்றி இருக்கிறார்.
யோகி பாபு
🧶படத்தின் மிகப்பெரிய பலம் இவர்தான் யோகி என்ற கதாபாத்திரத்தில் ஐடி ஊழியராக ,
அங்கு வரும் பெண்களிடம் சொள்ளு விட்டுக்கொண்டு சொப்பனா என்ற பெண்ணை உஷார் செய்து கொண்டும் படம் முழுக்க கலகலப்பு ஏற்படுத்துகிறார். சில நேரம் ஜெய்க்கு வில்லனாக வந்து அவரை கடன் சுமையை ஏற்றி விடும் வில்லத் தனமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஜெய்க்கு நண்பனாக வரும் கதிர், கலகலப்புக்கும் உதவுகிறார் .
கருடா ராம் இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். டெக்னாலஜியுடன் தன்னுடைய ரெஸ்டாரண்டில் தங்க வரும் இளம் தம்பதிகளை அந்தரங்கமாக படம் பிடித்து, அயல்நாட்டுக்கு விற்பனை செய்யும் ஒரு மோசமான கதாபாத்திரத்தில் இவர் மிரட்டி இருக்கிறார்.
100 ரெஸ்டாரண்ட் வைத்திருப்பவர் அந்த பணமே வாழும் தலைமுறைக்கு போதும் இருந்தாலும், இப்படி ஒரு மோசமான செயலை செய்து 500 கோடி ,ஆயிரம் கோடிக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை இழந்து நிற்பவர் இந்த கதாபாத்திரம் மனதில் நிற்கும். இடைவேளைக்கு பிறகு, ஜெய்க்கும் இவருக்கும் நடக்கும் யுத்தத்தை காட்டியிருந்தாலே நன்றாக இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
ஸ்ரீமன், காவல்துறை அதிகாரியாக கிளைமாக்ஸ் காட்சியில் வந்து சில முடிச்சுகளை அவிழ்க்கிறார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
🧶அறிமுக இயக்குநர் பாபு விஜய் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சீடன் என்பதை தன்னுடைய படத்தில் கமர்சியல் கலந்து வைத்து அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
படத்தில் காதல்- திரில்லர்- சஸ்பென்ஸ்- சோசியல் மெசேஜ் என்று அனைத்தையும் கலந்து கட்டி தன் குருநாதர் பாணியிலேயே சொல்லி இருக்கும் 🧶விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது.
🧶ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் .
காட்சிகள் ஒவ்வொன்றும் பளிச்சென்று இருக்கிறது .பாடல் காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. மூணாறு படப்பிடிப்பு பரவசத்தையும், திகிலை, ஏற்படுத்தி இருக்கிறது.
Cinematography Team – Prabhu Dhayalan, Vijayan Chandran, Vikraman, H Andree Remo
🧶கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை, ரொமான்டிக் -மற்றும் திரில்லராக பயணித்து இருக்கிறது.
🧶 இந்த திரைப்படத்தை பிவி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபு விஜய் தயாரித்திருக்கிறார்.
Direction Team – U Bhaskar, Jose Fedrick PV, Rozar, Sharen S, Harini
🧶டார்லிங் ரிச்சர்ட்சன் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
Associate Editor- Karthik E L
🧶ஆர்ட் டைரக்டர் கண்ணன்
அந்த ஐ .டி ஆ பீஸ் மூணாறு ரெஸ்டாரன்ட் ,மற்றும் ஜெய் வீடு, நாயகியின் வீடு என்று எல்லாமே நன்றாக இருக்கிறது.
🧶முரளியின் சண்டை பயிற்சி சிறப்பாக இருக்கிறது.
🧶காஸ்ட்யூம் டிசைனராக கமலி
Sound Design & Mix: Tapas Nayak
🧶பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் சினேகன்- கிரிஷ் ஜி&
எம் .எஸ். கிருஷ்ண
அனைவரின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
🧶பாடல்கள் பாடியுள்ள தேனிசைத் தென்றல் தேவா, ஸ்ரேயா கோஷல் ,ஜெயராம் பாலசுப்பிரமணியம் ,
மதுரை சோல்ஜர்ஸ்
கிரிஸ் ஜி, எம் எஸ் கிருஷ்ணா, குரல் வசியம் செய்கிறது.
🧶காஸ்ட்யூமர் பெருமாள் செல்வம்.
நடனப் பயிற்சி சாண்டி.
ஒப்பனையாளர் அப்துல் ரஜாக்.
மக்கள் தொடர்பாளர்
சதீஷ் &சிவா (AIM)
சற்றென்று மாறுது வானிலை இன்றைய தொழில்நுட்பம் எவ்வளவு பெரிய ஆபத்துக்களை காட்டுகிறது என்பதை எடுத்துரைக்கிறது.
ஹனிமூன் செல்லும் இளம் தம்பதியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது.
வெற்றி மேகங்கள் தாலாட்டும் வானிலை🌷
