🧶Produced by AGS Entertainment
Producers : Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh
Creative Producer : Archana Kalpathi
Associate Creative Producer : Aishwarya Kalpathi
Executive Producer : SM Venkat Manickam
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி நடிப்பில் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பட்டியலில் இணைந்துள்ள திரைப்படம் பிளாஸ்ட்.
கதைக்களம்
🌄கராத்தே மாஸ்டராக இருக்கும் (ராஜாராமன்) அர்ஜுன், தன் மகள் ப்ரீத்திக்கு(நிலா) சிறு வயதில் இருந்தே கராத்தே கற்றுக்கொடுத்து ஒரு பெண் எப்போதும் துணிச்சலாகவும், யாருடைய துணையையும் நாடக்கூடாது என்றும் வளர்க்கிறார்.
நிலாவும் தன்னம்பிக்கை பெண்ணாக துணிச்சலாக வளர்கிறார்
👍 தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கிறார்.
தன் கண்முன் நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாமல் செல்லாமல், தட்டிக்கேட்கிறார். எதிர்த்து அடிக்க வருபவர்களை போட்டு பொளந்து எடுக்கிறார்.அதிரடியாக மறுபக்கம் வில்லன் ஜான் கொக்கே மிகவும் விலைஉயர்ந்த கனிமங்களை எடுக்க, கீழக்காடு என்ற கிராமத்தையே அழிக்க திட்டமிடுகிறார். இதற்காக அமைச்சரை சந்தித்து அனுமதி கேட்க, இந்த திட்டத்தின் முழு மதிப்பு 7,000 கோடி அதில் எனக்கு 1,000 கோடி தந்துவிடுங்கள் என கேட்கிறார். அதற்கான பணத்தை ஏற்பாடு செய்து, ஆப்ரஹாம் இடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறார் ஆபிரகாம் விபத்தில் மாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெரும்பொழுது அங்கிருந்து 18 போலீசாரை கொன்று விட்டு தப்பி விடுகிறார்.
ஆயிரம் கோடி ஹவாலா பணத்தை எடுக்க ஒரு நூறு ரூபாயை வைத்துக் கொண்டு துபாயில் அந்த பணத்தை மாற்றுவதாக திட்டமிடுகிறார்கள் ஆனால் அந்தத் திட்டம் தூள் தூளாக சிதைகிறது
, இதற்கிடையில் இந்த பிரச்சனையில்
தன் சித்தப்பா வைத்திருக்கும் மெடிக்கல் கடையில் நாயகி நிலா, கவனித்துக் கொள்ளும் போது அங்கு வரும் டோபியால் பிரச்சனை ஏற்படுகிறது.
கேங்ஸ்டருக்குள்
அர்ஜுன் குடும்பம் சிக்கிக்கொள்ள, இதன்பின் என்ன நடந்தது? அர்ஜுன் குடும்பம் இதில் எப்படி சிக்கினார்கள்? இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா?
அந்த ஆயிரம் கோடி மீட்கப்பட்டதா?
ஜான் கொக்கே வின் 7000 கோடி திட்டம் என்ன ஆனது?
18 போலீசாரை கொன்ற ஆபிரகாம் நிலை என்ன ஆனது?
காவல் துறை அதிகாரி அருணகிரி மகனை கடத்திய கும்பல் அவர்களை என்ன செய்தார்கள்?
என்பதை விறுவிறுப்பும், பரபரப்பும், நொடிக்கு நொடி ஆச்சரியப்படுத்தும்!! கதைக்களத்துடன் சொல்லி இருக்கிறது இந்த” பிளாஸ்ட்”
🧶படம் முழுக்க அதிரடி சண்டை காட்சிகள் தேவையான இடங்களில் சண்டை காட்சிகளை வைத்திருப்பதால் ரசிக்க முடிகிறது காருக்குள் நடக்கும் அந்த அதிரடி சண்டையும், மெடிக்கல் ஷாப்பில் நடக்கும் சண்டை, காட்சி வயதான பெண்மணி இடம் ஏமாற்றி பத்திரம்வாங்கும் குமரன் கோஷ்டியிடம் பிரீத்தி போடும் சண்டைக் காட்சி, அர்ஜுனனும், அபிராமியும், பிரத்தியும் சேர்ந்து போடும் சண்டைக் காட்சிகள் கிருபாகரன்( பவன்) இடத்திற்கே சென்று அவரை வெட்டி சாய்க்கும் அந்த சண்டை காட்சி கள்,என அனல் பறக்கிறது.
படத்தின் தலைப்பு போலவே, ஆரம்பத்தில் இருந்து படம் முழுக்க சண்டை காட்சிகள் எல்லாம் பிளாஸ்ட் தான். ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் நேர்த்தியாகவும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் எடுத்துள்ளனர். அதற்கு ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவுக்கு முதல் வாழ்த்துக்கள். ஒரு இடத்தில் கூட இப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் சலிக்கவோ, அல்லது முகம் சுழிக்கும் அளவிற்கோ இல்லை.
என்பது பாராட்டுக்குரியது 👍
🧶*ஆக்ஷன் கிங் திரை வாழ்க்கையில் 46 ஆண்டுகளாகி ஆக்ஷனில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். . ஆனால், இப்படத்தில் வரும் பல சண்டை காட்சிகளில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு கராத்தே மாஸ்டராக பின்னி பெடலெடுத்துள்ளார். சண்டைக் காட்சிகள் ஸ்டைல் ஆகவும் எதிரிகளை தீர்த்துக்கட்டும் பொழுது உறுதியாகவும் இருக்கிறார்.
🧶அர்ஜுனுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் ப்ரீத்தி முகுந்தன். நடிகை ப்ரீத்தி முகுந்தனுக்கு நடிகையாக இதுவரை பாராட்டுக்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பிளாஸ்ட் திரைப்படத்திற்கு பின் ஆக்ஷன் கிங் மகளாக நடித்த இவரை இனி ஆக்ஷன் பிரின்சஸ் என்று கூட அழைக்கலாம். அந்த அளவிற்கு இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.
, 🧶 ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் நடிகை அபிராமி. உடல் எடையை குறைத்து கடினமான சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ள அபிராமிக்கு பாராட்டுக்கள்.
🧶இவர்களை தவிர்த்து இப்படத்தில் கவனம் பெற்றவர் என்றால் அது, நடிகர் அர்ஜுன் சிதம்பரம் தான். பொன்னியின் செல்வன், நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன் சிதம்பரத்திற்கு கண்டிப்பாக பிளாஸ்ட் திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும். மேலும், மற்ற அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.
🧶ஜான் கொக்கே(வருண்) என்ற கோடீஸ்வரன் கதாபாத்திரத்தில்
மிரட்டி இருக்கிறார்
திலீபன் அருணகிரி என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்
🧶பவன் கிருபாகரன் என்ற கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் ஆக மிரட்டி இருக்கிறார்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
🧶அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் முதல் படத்திலேயே பேமிலி ஆக்ஷன் ட்ராமா கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை சிறப்பாகவும் நமக்கு வழங்கியுள்ளார். படத்தின் முதல் பாதி திரைக்கதை விறுவிறுப்பும் இரண்டாம் பாதி வேற லெவலில் இருந்தது.
சண்டை காட்சிகளை தாண்டி இப்படத்தில் Women Empowerment குறித்து இயக்குநர் பேசியுள்ளார். அது இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ப்ரீத்தி முகுந்தன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சந்திக்கும் துன்புறுத்தலை எப்படி எதிர்கொண்டார்? என்பதை காட்டிய விதம், பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள நினைப்பவர்களுக்கு கொடுத்த சரியான அடியாக இருக்கும். அதே போல், நமக்கு தெரிந்தவர்களுக்கு அநீதி நடந்தால் மட்டும் நாம் தட்டிக்கேட்க கூடாது, நமக்கு யார் என்றே தெரியாத ஒருவருக்கு அநீதி நடந்தாலும் அதை நாம் தட்டிக்கேட்க வேண்டும் என சொன்ன விஷயமும் கவனத்தை ஈர்த்துள்ளது
🧶ரவி பஸ்ரூர் பின்னணி இசை இப்படத்திற்கு பலம்.
🧶ஒளிப்பதிவு
அருண் ராதாகிருஷ்ணன்
காட்சிகளை துல்லியமாகவும் சிறப்பாகவும் ஒலி பதிவு செய்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடுகிறது.
🧶 எடிட்டிங் பிரதீப் இ. ராகவ்
செம விறுவிறுப்பாக செதுக்கியிருக்கிறார்.
🧶சண்டை காட்சிகள், அதை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு
படத்தின் பெரிய பலமே இவர்தான்.
🧶Production Designer : Veeramani Ganesan
🧶Costume Designer : Dinesh Manoharan
🧶Costumer : R. Muruganandham
🧶Makeup : Kuppusamy
🧶Production Executive : M. Senthil Kumar
🧶VFX : Harihara Sudhan
Sound Design : Sync Cinema
🧶மொத்தத்தில் Blast ஒரு முழுக்க முழுக்க “மாஸ் + எமோஷன்” கலந்த ஆக்ஷன் குடும்பத் திரைப்படம்.👍 அர்ஜுன் சர்ஜா மீண்டும் தனது பழைய ஆக்ஷன் அவதாரத்தில் திரும்பியிருக்கிறார்.👍 முதல் பாதி வேகமாக போகிறது; இரண்டாம் பாதியில் குடும்ப உணர்வுகளும் சென்டிமென்டும் சேர்ந்து படம் நன்றாக லேண்ட் ஆகிறது👍.
படத்தின் பலம்:
அர்ஜுனின் ஸ்கிரீன் பிரசென்ஸ் 🔥
பிரீத்தி முகுந்தனின் ஆக்ஷன் சீன்ஸ்🧶 surprise package
ரவி பஸ்ரூர் BGM👍 theatre-ல நல்ல impact கொடுக்குது👍
குடும்பம் + கராத்தே + ஆக்ஷன் mix audience-க்கு வேலை செய்கிறது👍
சில குறைகள்:
சில villain portions routine feel தரும்
runtime கொஞ்சம் நீளமாகத் தோன்றலாம்
சில scenes over-the-top mass style
மொத்தத்தில், “family audience-க்கும் mass ரசிகர்களுக்கும்” பிடிக்கும் commercial entertainer. பெரிய லாஜிக் எதிர்பார்க்காமல் பார்த்தால் நல்ல theatre experience.
TOp review-லும் படம் action-family entertainer என்று பாராட்டப்பட்டுள்ளது
வெற்றி பட்டியலில் ப்ளாஸ்ட்👍
