: ஈகோ ராமன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

இதுஒரு தமிழ் திரில்லர் திரைப்படம் . கணேசன் நாச்சிமுத்து இயக்கியுள்ள
இப்படத்தை
அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் கதை, களம். மிகவும் அருமையாக இருக்கிறது.
இப்படி ஒரு கதையை இயக்குனர் யோசித்ததற்காகவே பாராட்டலாம்🌄

கதைச் சுருக்கம்

🌄அறிவு (சிபி சந்திரன் ) ஒரு நேர்மையான, லட்சியம் மிக்க TNPSC தேர்வாளர்.
தினமும் ஐந்து கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வர சிரமமாக இருக்கிறது. என்று
அவனுக்கு அவனது தாய் ஒரு யமஹா பைக்கைப் வாங்கி தருகிறார்.
சிங்கர் டெய்லரான பனியன் கம்பெனியில் வேலை செய்யும் அந்த தாய் உடல் நிலை சரி இல்லாமல் போக,
பைக் டீவ்கட்ட முடியாத காரணமாக அறிவு அந்த பைக்கை இழக்க நேரிடுகிறது.
அவன் ஆசையாய் வளர்த்த ராசா என்னும் நாய் இறந்து கிடக்க, அவனது உலகம் சிதைகிறது.
அறிவு தனது மதிப்புமிக்க மோட்டார் சைக்கிளை மீட்டெடுக்க மேற்கொள்ளும் பயணத்தையும், அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் படம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது .

இன்னொரு புறம் அப்பய நாயக்கன்பட்டி பள்ளியில் ,தலைமை ஆசிரியராக இருக்கும் ரோபோ சங்கர் (கோவிந்த் ராமன் என்னும் ஈகோ ராமன்)

இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை உதாசீனப்படுத்துவது ,தன்னைவிட பெரிய வண்டியில் வருபவர்களை உற்றுப் பார்த்து ஈகோ கொள்வதும், சகுனம் பார்ப்பது, மூடநம்பிக்கை கொள்வது, தன் வண்டியில்தலித் மாணவன் கிறுக்கி விட்டான் என்று அந்த தலித் மாணவனை நடுக்காட்டில் கொண்டு விடுவது ,
தன் பைக் மீது ராசா என்னும் நாய் யூரின் போனதால், அந்த நாயை அடித்துக் கொள்வது, தன்னிடம் படித்த மாணவன் அறிவு தன் மகளை காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன் அவனது பைக்கை எரித்து சந்தோஷப்படுவது, இப்படி ஈகோ ராமனாக ரோபோ சங்கர் படத்தின் முதுகெலும்பாக நிற்கிறார்.
பொறமைப்பட்டு ஈகோ கொள்ளும் ஈகோ ராமன், நாயகன் அறிவு, இருவரும் ஒரு மையைப் புள்ளியில் எப்படி இணைகிறார்கள்!! என்பதை , சுவாரசியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
அதன் பிறகு, இருவருக்கும் நடக்கும் ஈகோ பிரச்சனையில் யார்? ஜெயிக்கிறார்கள்!!
என்பது தான் கதை .

👁️படத்தின் special என்ன?
சாதாரண “mass hero” story இல்லாமல், ஒரு middle-class youth struggle-ஐ emotional ஆக காட்டி இருப்பது சிறப்பு.
TNPSC aspirant background use பண்ணிருப்பது கொஞ்சம் realistic feel குடுக்குது.
Thriller touch இருப்பதால் suspense elements கூட இருக்கிறது
படம் கொஞ்சம் மெதுவாக போவது
இயக்குனர் மகேந்திரன் பாணியை காட்டுகிறது.

படம் முழுக்க கோயம்புத்தூர் பகுதியில் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
காதல் காட்சிகள், ஆரம்பத்தில் நாயகன் அதை சொன்ன விதம், டைட்டிலுக்கு முன்னே நூற்றுக்கும் மேற்பட்ட கட்சீன்கள், அம்மா சொல்லும் வசனம் ,”நாம் யாரையும் இங்கு மாற்ற வரவில்லை படித்து முன்னேறினால் எல்லாமே மாறும்” அதேபோல நாயகன் சொல்லும் வசனம் “மேலே இருக்கும் சூரியனை பார்த்தால் அழகாக இருக்கும். ஆனால் அதன் அருகில் சென்றால் நம்மை சுட்டு எரித்து விடும் அதேபோல நமது பிடித்தவர்கள் இடம் அதிகம் நெருங்காமல் பழக வேண்டும்” என்ற வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

நடிகர்கள்& நடிகை

🌄அறிவாக(சிபி சந்திரன்)
தாய் மீது பாசம் உள்ளவராக ,படித்து முன்னேற வேண்டும் என்ற அக்கறையோடு, வாழும் கிராமத்து இளைஞராக, காதலி ரேவதியிடம், பண்பும் பற்றும் பாசமும் கொண்ட வெள்ளந்தியான மனிதராக நடித்திருக்கிறார். மூடநம்பிக்கைகளை அறவே ஒதுக்கும் இவர் இன்றைய சமூக இளைஞர்களின் முன்னோடியாக திகழ்கிறார் சிறப்பான நடிப்பு.

🌄ரோபோ சங்கர்,
கோவிந்த ராமன் என்னும் ஈகோ பிடித்த ஈகோ ராமனாக, பள்ளியின் தலைமை ஆசிரியராக ஒதுக்கப்பட்ட மாணவர்களை, சீண்டத்தகாதவராக, மூடநம்பிக்கையின் கொண்ட வராக,ஒவ்வொரு காட்சியிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில்,அவர் முகத்திற்கு குளோசப் வைத்து இயக்குனர் இயக்கி இருக்கிறார். அவருடைய ஈகோ உடைந்து, ஒரு கண்ணில் கண்ணீரும், இன்னொரு கண்ணில் அன்பும் வழியும் அந்த காட்சி அற்புதம் !அறிவு தன் பைக்கை தொட்டான் என்பதர்க்காக, அந்த பைக்கை, தீ வைத்து கொளுத்துவதும், நாய் தன்னை துரத்தியதற்காக நாயை அடித்துக் கொள்வதும், ஒரு சைக்கோ பிடித்த மனிதராக நடித்திருக்கிறார். ரோபோ சங்கருக்கு பாராட்டுக்கள்

🪩மற்றும்
கீர்த்தனா, ஸ்ரீகுமார்கவிதா, ரமேஷ்,சேரன் ராஜ்,
அனைவரும் தங்கள் பாத்திரக்கடைப்புகளை அறிந்து உணர்ந்து நடித்திருக்கிறார்கள் சிறப்பாக இருக்கிறது.

🪩கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் கணேசன் நாச்சிமுத்து.
இவர் கமலஹாசனின் தீவிர ரசிகர், ரோபோ சங்கர் கமலஹாசனின் தீவிர
ரசிகர். இருவரும் இணைந்து ஒரு வெற்றி படத்தை வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு கதாபாத்திரம் கேள்வி கேட்கும் பொழுது, அதை பின்னோக்கி காட்சிகளை காட்டுவது வித்தியாசமாக இருக்கிறது. அதே சமயம் வசனங்கள் உரையாடல்கள் மூலம் இல்லாமல் காட்சிகளால் விஷயத்தை கொடுத்திருக்கிறார். சில காட்சிகளில் இயக்குனர் மகேந்திரனின் டச்” தெரிகிறது.
கிராமங்களில் படித்து உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு ஆசிரியர் கூட எப்படி ஒரு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்? வெள்ளை சேலை கட்டி வரும் பெண்ணை பார்த்து திரும்பி செல்வது, தலித் மாணவன் பிறந்தநாளுக்கு சாக்லேட் கொடுத்தால் அதை கசக்கி குப்பைத் தொட்டியில் போடுவது, என்பதை நாசுக்காக காட்டியிருக்கிறார்.
அதே சமயம் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும்நாயகன் அறிவை தட்டிக் கொடுத்து முன்னேற வைப்பது, அவன் உயிருக்கு போராடும் பொழுது தன் மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றுவது, என்ற நல்ல குணமும் அவருக்கு இருக்கிறது என்பதையும் பிளாஷ்பேக் காட்சியில் கருப்பு, வெள்ளையாக காட்டியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம் .
காதலி திடீரென ரோபா சங்கர் மகளாக இருப்பது கதையில் எதிர்பாராத திருப்பம். அதற்கு அவர் சொல்லும் விளக்கம் கிராமங்களில் இன்னும் ஜோதிடத்தை கேட்டுக்கொண்டு இப்படி தத்துகொடுக்கும் வேளையும் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள் ,என்பது நிதர்சனம் !!
அறிவு ,அம்மாவாக வருபவர் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் சிங்கர் டெய்லராக வேதனையின் விளிம்பில் இருந்தாலும், மகன் படித்து முன்னேறி விடுவான் என்று அவன் காலை அமுத்தி விடுவதும், அவன் கைகளைப் பிடித்து வருடுவது, தாய்மை அன்பை காட்டியிருக்கிறார் .
காதலுக்கு கிராமத்து பாணியில், தினமும் பஸ் ஸ்டாப்பில் காலை 9 மணிக்கு வந்து என்னை பார், அப்போது தான் உன்னை காதலிப்பேன் என்று காதலிசொல்வது ரசனையான விஷயம்.
இறுதியில் தன்னை அவமானப்படுத்திய ரோபோ சங்கரை நாயகன் வித்தியாசமாக பழி வாங்குவது ,படத்தின் வெற்றிக்கு வித்தாக அமைந்திருக்கிறது.

தமிழ்ப் படங்களில் மிகுதியான பாடல்களும் பக்கம் பக்கமான வசனங்களும் ஆதிக்கம் செலுத்திவருவதைக் கண்டு வெறுத்துப்போன இயக்குனர் குறைவான வசனங்கள், காட்சிப் படைப்பின் மூலம் பின்னணி இசை சேர்த்து, படத்தை கவனிக்க வைத்துள்ளார்.

எளிய கதை. மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்.சிபி, ரோபோ சங்கர், கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். அனைவரையும்விட ரோபோ சங்கர் ஒருபடி மேலேதான். அதுவரை, நடிப்புக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் காமெடியாக நடித்துக்கொண்டிருந்தார் ரோபோ அவரது ஒட்டுமொத்த நடிப்புக்கும் தீனிபோட்டது இந்தப் படம். கோபம், இயலாமை, வெறுப்பு, பாசம் என யதார்த்தமான நடிப்பில் சிகரத்தைத் தொட்டு ள்ளார் ரோபோ.

படத்தின் கதாநாயகி முகபாவங்கள், உடல்மொழிகள் கொண்டே காட்சியின் முழு உணர்ச்சியையும் பார்வையாளனுக்குக் கடத்தி இருக்கிறார் . குறிப்பாக, க்ளோசப் காட்சிகளில் தனது கண்களால் மட்டுமே சோகத்தைக் காட்டும் அந்த லைப்ரரி காட்சி சிறப்பு.
இப்படி ஒரு நல்ல படத்தை பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

🪩Music – Reymen Rodericks
அருமையான இசை, அருமையான பாடல்கள் படத்துக்கு புத்துணர்வை தருகிறது இசையமைப்பு.

🪩Executive producer – Arun V Ramasamy
Produced by Sudha G

🌄ஜினோ பாபுவின்
ஒளிப்பதிவு, அருமை கிராமத்து அழகு அள்ளி வந்திருக்கிறது.

🌄பிரபீன் படத்தொகுப்பு புதுமையாக இருக்கிறது. சொன்ன பாணியும் ரசிக்க வைக்கிறது.

🪩சுதன்,கண்ணப்பன்,
ரஷ்யா இவர்கள் ஒப்பணையாளராக பணிபுரிந்து இருக்கிறார்கள் அனைவருக்கும் கிராமத்து ஒப்பனை கச்சிதமாக இருக்கிறது.

🌄DI – Vineeth V Kartha
Costumer – Vadivelu Duraisamy

🪩ஆர்ட் டைரக்டராக
மாரிமுத்து, கமலி பணிபுரிந்து இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் இவர்களின் கைவண்ணம் சிறப்பாக இருக்கிறது.

🌄Casting – ABU Valayamkulam

🌄மற்றும் படத்திற்கு பக்கத்துணையாக பணிபுரிந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍 ஒரு எதார்த்தமான படத்தை சிறப்பாக கொடுத்ததற்கு அனைவரையும் பாராட்டலாம்.👍

🌄Pro – Venkat
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்👍

—————————————-
மொத்தத்தில் ,ஈகோ எல்லா மனிதர்களுக்குள்ளும் சில நேரங்களில் தலை தூக்கும்.🪩 அது கணவன் மனைவி உறவை பிரிக்கும்🌄 நல்ல நட்பை பிரிக்கும் 🌄குடும்பத்தில் அமைதியை குலைக்கும் 🌄அரசியலில் பேயாட்டம் ஆட வைக்கும் 🌄காதலர் காதலியிடம் புகுந்து அவர்களை தனித்தனியாக ஓட வைக்கும்🌄 பணி புரியும் இடத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று எள்ளி நகையாட வைக்கும்🌄 இப்படிப்பட்ட ஈகோவை தூக்கி எறிந்து. நல்ல மனிதநேயம் உள்ள மனிதனாக வாழ வேண்டும்👍 என்று அருமையான கருத்தை கூறும் இப்படத்திற்க்கு, தமிழக அரசு வரி விலக்கு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.🤓 படம் பல விருதுகளை குவிக்க வேண்டும்👍 என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது.👍

🪩 இப்படத்தை “ஹரி உத்ரா”புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது”
அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்🧶